ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இலங்கையில் சிவில் யுத்தம் இடம்பெற்ற மூன்று தசாப்த காலத்திற்குள் இலங்கையில் வாழ் அனைத்து இன மக்களுக்கும் எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவுள்ளதாக மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மட்டுமன்றி யுத்தம் நிலவிய ஒட்டுமொத்த காலப்பகுதிக்குள் இடம்பெற்ற அனைத்து மனித உரிமைகள் நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படுமென சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடலின் போது நவிபிள்ளை தெரிவித்துள்ளதாக அவரது பிரதிநிதியான ரொரி முன்கவன் தெரிவித்துள்ளார். விசேடமாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் கிழக்கின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த காலப்பகுதியில் பௌத்த பிக்குமார்களை கொலை செய்தமை ஆயிரக் கணக்கா…
-
- 1 reply
- 765 views
-
-
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசேப்பு இன்று கொழும்பில் சந்தித்துப் பேசவுள்ளார். கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. வன்னி மற்றும் மன்னார் பிராந்தியத்தின் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக, கலந்துரையாடுவதற்கே, மன்னார் ஆயருக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, அரசியல் கைதிகள், மீள்குடியேற்றம், காணாமற்போனோர் மற்றும் போருக்குப் பின்னர் உள்ள மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து, நவநீதம்பிள்ளையிடம் மன்னார் ஆயர் விபரித்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, முள்ளிக்குளம் பிரதேசத்தில் மீள்குடியேற…
-
- 1 reply
- 638 views
-
-
மத வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் மிருகபலி பூசைக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் வருடாந்தம் நடத்தப்படும் மிருகபலி பூசையைத் தடுக்க வேண்டும் எனக் கோரி பௌத்த பிக்குகள் சிலர் தாக்கல் செய்த மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கு மேலாக கோயிலில் பலிபூசை நடத்த கோயில் நிர்வாகம் விருப்பினால் அதற்கு இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் (இறைச்சிக் கடைக்கான அனுமதிப் பத்திரம்) என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டாலும், பொலிஸார் விருப்பினாலோ, தேவை …
-
- 0 replies
- 423 views
-
-
மெட்ராஸ் கஃபே - ஏன் எதிர்க்கவேண்டும்? நேற்றிலிருந்து இணைய உலகம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஜான் ஆப்ரஹாம் என்ற மலையாளி நடித்த, இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சொல்லும் 'மெட்ராஸ் கஃபே' படத்தினால் ஏற்பட்டதுதான் அந்த சூடு. 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை' என்ற மாவோ கூற்றுக்கேட்ப தமிழர்கள் சற்று எதிர்ப்புணர்வுகளைக் குறைத்து சகஜமாக இருக்கமுற்பட்டாலும் இந்த வட இந்தியர்கள் விடமாட்டார்கள் போல. சில வாரங்களுக்கு முன்னால் 'மெட்ராஸ் கஃபே' முன்னோட்டம் வெளிவந்தபோதே தமிழுணர்வாளர்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். இடம்பெற்றிருந்த வசனங்களும், காட்சிகளும் அப்படி. உடனே தமிழகத்தில் மாணவ அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் படம் வெளியாவதற்கு முன்…
-
- 42 replies
- 3.2k views
-
-
“மீண்டும் வன்னியில் காட்சிதர மாட்டாரோ பிள்ளை” புற்றுக்குள் பதுங்கிய பாம்புகள் மீண்டும் வெளிக்கிழம்பின! நவநீதம்பிள்ளை வடக்கு பயணத்தை முடித்துத் திரும்பியவுடன் புற்றுக்குள் பதுங்கிய பாம்புகள் கிளம்பியதுபோல இராணுவத்தினரும் வெளியில் வந்து தமது வழமையான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். வடக்கிற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சென்றதை முன்னிட்டு இராணுவத்தினர் கடந்த இரண்டு நாட்களாக முகாம்களுக்குள் முடங்கியிருந்ததுடன் தமது காவலரண்களையும் உரு மறைப்புச் செய்தனர். வழமையாக காவலரண்களில் இருந்து மக்களின் அன்றாடச் செய்றபாடுகளை கட்டுப்படுத்துவதுடன் கிராமங்கள் மற்றும் வீதிகள் ஊடகவும் அடிக்கடி ரோந்துப் பணிகளிலும் ஈடுபடுவது வழக்கமாகும். நவநீதம்பிள்ளையின் பரசன்னத…
-
- 0 replies
- 552 views
-
-
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீபிள்ளை மூதூர் பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். முதூர், கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமிக்குச் சென்ற அவர், அங்குள்ள மக்களின் நிலைமையை நேரில் கேட்டறிந்து கொண்டார். முகாமிலிருந்த மக்களில் சிலர் காணாமற் போயுள்ள தமது உறவுகள் மீள வருவதற்கு வழி செய்து தருமாறும் நீண்ட காலமாக சொந்த வாழிடத்தில் குடியமர முடியாது தவிக்கும் தம்மை மீளக்குடியமர்த்துவதற்கு ஆவணம் செய்யுமாறு கண்ணீர் விட்டழுது கோரினர். சம்பூருக்கு அண்மையில் உள்ள கூனித்தீவு, நவரெட்னபுரம் மற்றும் சுடைக்குடா மக்களை மீள்குடியேற்றியது போன்று எங்களையும் மீள் குடியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர். எங்களுக்கு எமது சம்பூ…
-
- 1 reply
- 436 views
-
-
பொலிஸ் திணைக்களம் புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் செய்த முதலாவது கடமை நாய்களுக்கு திருமணம் செய்துவைத்தமையாகும். என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது நல்லதொரு உதாரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார். உயர்ந்து செல்லும் வாழ்க்கை செலவினால் எங்களுடைய இளைஞர்கள் கூட தேன்நிலவுக்காக நுவரெலியாவுக்கு செல்லமுடியாதுள்ளபோது புதிய அமைச்சின் கீழ்வந்த பொலிஸ் திணைக்களம் முதல் வேலையாக, நாய்களுக்கு திருமணம் செய்து அவற்றை தேனிலவுக்காக நுவரெலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுதான் ஆசியாவின் அதிசயம். பொலிஸ் திணைக்களம் ஓர் இளைப்பாரிய இராணுவ அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டு…
-
- 2 replies
- 308 views
-
-
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இவ்விபத்தில், கிரான் பகுதியைச் சேர்ந்த சின்னக் கண்ணன் ( 14 வயது), ஜனிதன் ( 12 வயது) மற்றும் கௌசல்யன் ( 11 வயது) ஆகிய சிறுவர்களே காயமடைந்துள்ளனர். இராணுவத்தினருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பவுஸர் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது, குறித்த சிறுவர்கள் வீதியைக் கடக்க முற்பட்டுள்ளனர். இதன்போது பவுஸரில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில் படுகாயமடைந்த சிறுவர்கள் மூவரும் சந்திவெளி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டத…
-
- 0 replies
- 389 views
-
-
கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சில அகதிமுகாங்களுக்குச் சென்றுள்ளார். அங்கு மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். கிளிவெட்டி அகதிமுகாமிற்கும் உப்பாறு இறால் குழி அகதிமுகாமிற்கும் அவர் சென்றார். அகதிமுகாமில் உள்ள குழந்தைகள் நவநீதம்பிள்ளையை வரவேற்கக் காத்திருந்தனர். அத்துடன் அங்கு நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட பந்தல்களில் மக்கள் அவருக்காக காத்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் அந்த மக்கள் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அங்கு சென்ற நவநீதம்பிள்ளையிடம் தமது அகதிமுகாம் வாழ்க்கை குறித்தும் சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்ற வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்தனர். காணாமல் போனவர்கள் பிர…
-
- 0 replies
- 486 views
-
-
48 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் நாட்டுக்குள் பிரவேசித்த காரணத்தினால் குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 35 ஆண்களும் பெண்களும் 13 சிறுவர் சிறுமியரும் இந்தக் குழுவில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 1300 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இதுவரையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1100 பேர் பலவந்தமான அடிப்படையில் நாடு கடத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய வீசா இன்றி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போர் நாடு கடத்தப்படு…
-
- 0 replies
- 386 views
-
-
புற்றுக்குள் பதுங்கிய பாம்புகள் மீண்டும் வெளிக்கிழம்பின! நவநீதம்பிள்ளை வடக்கு பயணத்தை முடித்துத் திரும்பியவுடன் புற்றுக்குள் பதுங்கிய பாம்புகள் கிளம்பியதுபோல இராணுவத்தினரும் வெளியில் வந்து தமது வழமையான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். வடக்கிற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சென்றதை முன்னிட்டு இராணுவத்தினர் கடந்த இரண்டு நாட்களாக முகாம்களுக்குள் முடங்கியிருந்ததுடன் தமது காவலரண்களையும் உரு மறைப்புச் செய்தனர். வழமையாக காவலரண்களில் இருந்து மக்களின் அன்றாடச் செய்றபாடுகளை கட்டுப்படுத்துவதுடன் கிராமங்கள் மற்றும் வீதிகள் ஊடகவும் அடிக்கடி ரோந்துப் பணிகளிலும் ஈடுபடுவது வழக்கமாகும். நவநீதம்பிள்ளையின் பரசன்னத்தை முன்னிட்டு அவர் சென்ற இடங்களில் எங்கும் இராணுவத்தினர…
-
- 0 replies
- 880 views
-
-
-எஸ்.எச்.அமீர், வடமலை ராஜ்குமார் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பேசுவேன் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீபிள்ளை தெரிவித்துள்ளார். "எனது விஜயத்தின் இறுதியில் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்திக்கவுள்ளேன். இதன்போது சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து பேசுவேன்" என அவர் குறிப்பிட்டார். சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாது மாற்று இடத்தில் குடியேற்றப்பட்டதனால் நீங்கள் எதிர்நேக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நான் அறிவேன் என அவர் மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/80607-2013-08-28-13-04-57.html
-
- 0 replies
- 354 views
-
-
கடந்த வருடம் அவுஸ்ரேலியாவிற்கு அகதிகளாக சென்று கொண்டிருந்த ஈழ அகதிகளின் படகு நடுக்கடலில் வெடிப்புக்குள்ளாகி மூழ்கும் தருவாயில் இருந்த வேளையில் அதே வழியால் வந்த கப்பலால் அந்த 46 அகதிகளும் காப்பாற்றப்பட்டு துபாயில் தரையிறக்கப்பட்டார்கள். துபாயில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அந்த அகதிகளில் 7 பேரைத் தவிர மீதி உள்ள 39 பேரையும் அகதிகளாக ஏற்றுக் கொண்டது. ஏற்றுக் கொள்ளப்பட்ட அகதிகளில் 12 பேர்களை அமெரிக்காவிற்கும், 8 பேரை சுவீடனுக்கும் அனுப்பி வைத்து விட்டு மீதி உள்ள 19 பேருக்கும் எந்தவிதமான பதிலும் கூறாமல் பல மாதங்களாக காக்க வைத்து விட்டு திரும்பவும் இலங்கைக்கே அனுப்ப முடிவெடுத்த நிலையில்... மனித உரிமைகள் காப்பகம், புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள், நாடு கடந…
-
- 0 replies
- 347 views
-
-
நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் : சீமான் இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை வழங்குவார் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வந்துள்ளார். இவர், இறுதிக்கட்ட போர் நடத்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பார் என்ற தகவல் மிகுந்த ஆறுதலாக உள்ளது. தமிழினம் திட்டமிட்டு இன…
-
- 8 replies
- 511 views
-
-
தமீழீழ அரசியல் கலாட்டா.. தமிழீழத்தில் அரசியல் இன்று தமிழ்நாட்டை மிஞ்சிய கோமாளிக்கூத்து போட்டுக்கொண்டிருக்கிறது.. அன்மையில் ஊரில் இருந்து நன்பரொருவர் அனுப்பிய ஈ-மெய்ல்லில் கிடைத்த படமொண்டை உங்கலுடன் பகிர விரும்புகிறேன்.. நீங்களும் இனையுங்கள்..
-
- 1 reply
- 726 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமது வேட்பாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தேர்தலில் இருந்து விலகுவது குறித்து ஆராய்ந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், இன்னும் இரண்டு தினங்களில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். காரைநகரில் தமது அலுவலகம் ஒன்று கடந்த வாரம் திறக்கப்பட்டு சில மணி நேரங்களில் தாக்கப்பட்டதாகவும் ஐ.தே.க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மக்கள் வாக்களிப்பதற்கு சுதந்திரமான நிலை காணப்படவில்லை எனவும், இதனால் தேர்தலில் போட்டியிடுவது அர்த்தமற்றது எனவும் அந்தக் கட்சியினர் தெரிவித்…
-
- 0 replies
- 309 views
-
-
திருகோணமலைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விஜயம் செய்ததையடுத்து அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உறவினர்கள் இன்றுக்காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆணையாளர் நவநீதம் பிள்ளை இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடி காணாமல் போன தமது உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். http://www.sankathi24.com/news/32611/64//d,fullart.aspx
-
- 0 replies
- 364 views
-
-
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வருவதற்கு, நவநீதம்பிள்ளை அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகப் படைகள் கொடுமைகளை இழைத்த போது, நவநீதம்பிள்ளை மௌனமாகவே இருந்தார். 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காவை ஐ.நா குறிவைத்து தாக்கி வருகிறது. அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று நவநீதம்பிள்ளை கோரியுள்ளார். ஆனால், அமெரிக்காவில், பிரித்தானியாவில், இந்தியாவில் இன்னும் பல நாடுகளில் தீவிரவா…
-
- 0 replies
- 446 views
-
-
அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோட்டே நாக விஹாரைக்கு விஜயம் செய்த சிசன், சோபித தேரரை சந்தித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக நிலைமைகளை சோபித தேரர் விளக்கியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95830/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 393 views
-
-
"யாழ்ப்பாணச் சண்டியர் இராமனாதனை இன்று மாலைக்குள் கைது செய்யாவிடின் தேர்தலிலில் இருந்து விலகுவோம்" சர்வானந்தன் குழுவினர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயனின் தந்தையாரான இராமநாதனை இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். "யாழ்ப்பாணச் சண்டியர் இராமனாதனை இன்று மாலைக்குள் கைது செய்யாவிடின் தேர்தலிலில் இருந்து விலகுவோம்" சர்வானந்தன் குழுவினர் யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் நேற்று (27.08.13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தொடர்புடைய அங்கையனின் தந்தை இராமநாதனை இன்று மாலைக்குள் கைது செய்யாவின் தேர்தலில் இருந்து ஒதுங்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அறுவர் அறிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 387 views
-
-
"வடக்கின் அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை" வட மாகாண பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப்பணிகள் மகிழ்ச்சி அளித்தாலும் அதனை மதிப்பீடுசெய்வதற்காக நான் இலங்கை வரவில்லை. உள்நாட்டில் மனித உரிமைகளின் தற் போதைய நிலைவரத்தை மதிப்பீடு செய்வதே இலங்கைக்கான எனதுபயணத்தின் நோக்கமும் கடமையும் ஆகும் என்று ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக் காட்டியுள்ளார். யாழ்.நூலகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (27.08.13)காலை சென்ற ஆணையாளர் நவநீதம்பிள்ளை நூலகத்தைபார்வையிட்டதுடன் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிமற்றும் பிரதி செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் ஆகியோரின் தலைமையில் வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள…
-
- 0 replies
- 455 views
-
-
சாவகச்சேரி நகரப்பகுதியில் ஆழும் கூட்டணி வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டிருக்கும் இரண்டு வேட்பாளர்களுடைய ஆதரவாளரிடையே துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதாகவும் ஒருவர் காயமடைந்தநிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட உள்முரண்பாடே இச்சம்பவத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சாவகச்சேரி நகரப்பகுதியில் நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் நகர்ப்பகுதி பதற்றநிலையில் காணப்படுவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. http://www.sankathi24.com/news/32599/64//d,full…
-
- 3 replies
- 757 views
-
-
நவிப்பிள்னையை வரவேற்ற சந்திரசிறி கொலையாளி: காணாமல்போன ஒருவரின் தாயார்- குளோபல்தமிழ் விசேடசெய்தியாளர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரை வடக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சந்திரசிறி வரவேற்ற பொழுது காணாமல் போன ஒரவரின் தாயார் அவரைக் கொலையாளி என்று ஏசியுள்ளார். நவநீதம்பிள்ளை சென்ற சில இடங்களுக்கு அவரும் சென்று அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் அளித்தார். நவநீதம்பிள்ளையுடன் சென்ற சந்திரசிறியை கண்ட காணாமல் போன ஒருவரின் தாயார் அவரைக் கொலையாளி என்று ஏசினார். யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்திரசிறி பதவி வகித்த காலத்திலேயே தனது பிள்ளை கடத்தப்பட்டதாகவும் சந்திரசிறியின் கட்டளையின் கீழே தனது மகன்…
-
- 0 replies
- 259 views
-
-
தன்மானத் தமிழா…….நீ தலை நிமிர்ந்து வாடா!……………..ஈழ மண்மீது அரசாள உனக்கென்ன தடையா………………….. எங்களின் உரிமையை வென்றிட வாடா. போராட்ட வடிவம் மாறினாலும் தமிழன் போராட்டம் மாறாது ………………..வீழ்ந்தாலும் விதையாக வீழ்கின்றவன் தமிழன்………………….. எஸ்.ஜி.சாந்தனின் கணீர் குரலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எழுச்சி கீதம். பாராளப்பிறந்த தமிழன் இவன் பரம்பரையே வீட்டுக்கு வாக்களிப்பவர்!! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற…
-
- 1 reply
- 539 views
-
-
தமிழ் மக்கள் சிங்கள மக்கள் அனைவரையும் பகையாகப் பார்க்குமாறு பயிற்றப்பட்டுள்ளார்கள். நல்ல காலம் வருகுது! நல்ல காலம் வருகுது! நவநீதம் பிள்ளை வருகிறார்! சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளி’ என்று உடுக்கடித்துப் பாடாத குறையாக நவநீதம் பிள்ளையின் வருகையைத் தமிழ் மக்களின் விடிவுகள் தொடர்புபடுத்திப் பலவும் பேசவும் எழுதவும்படுகின்றன. பகற்கனவுகளையே ஆகாரமாக்கி எங்கள் அரசியல் உயிர்பிழைக்கிறது. நவநீதம் பிள்ளையின் வருகை, போர்க்குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களையும் பற்றிய ஒரு நேரடி விசாரணை என்ற அளவிற்கூட, அவர் இங்கு தங்கியிருக்கக் கூடிய சில நாட்களுள் எதைச் சாதிக்க இயலும் என்ற கேள்வி எழுகிறது. நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி என்றும…
-
- 0 replies
- 356 views
-