ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
அமெரிக்காவுடன் முரண்பாடுகள் கிடையாது என அமெரிக்காவிற்கான இலங்கை தூதவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். சில விடயங்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய போதிலும், முரண்பாடுகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்யுள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது, புலி ஆதரவு அமைப்புக்களுக்கு எதிராகவும் அமெரிக்கா மெய்யான ஒத்துழைப்பை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பயிற்சி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அமெரிக்கா இலங்கைக்கு ஒத்தழைப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போதும் நல்லிணக்க முனைப்புக்களின் போதும் அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது…
-
- 2 replies
- 279 views
-
-
இந்திய ஊடகவியலாளர்கள் 19 பேர் கொழும்புக்கு சென்றுள்ளனர். இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் அழைப்பில் அங்கு சென்ற இந்திய ஊடகவியலாளர்கள் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீடமைப்பு திட்டம், இந்திய உதவியுடன் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை சந்தித்த இந்திய ஊடகவியலாளர்கள் 19பேரும் அமைச்சர் பசில் ராஜபக்சவையும் பாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்சவையும் நேற்றிரவு சந்தித்து உரையாடினர். ஒருவாரகாலம் தங்கியிருக்கும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கும் சென்று துறைமுகம், மத்தள மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஆகிவற்றையும் பார்வையிடவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. இன்று காலை…
-
- 2 replies
- 403 views
-
-
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் அறிய மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக மகிந்தரின் சர்வதேச ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அக்குழுவின் விபரம் வருமாறு: 01.மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம (தலைவர்) 02.டிமிங்கு படதுருகே பிரியந்தி சுரஞ்சனா 03.மனோ ராமநாதன் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்து ஆறு மாதங்களில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என குறித்த ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என ஆணைக்குழுவை நியமித்து மக்கிந்த தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நன்மை கருதி விசாரணை நடாத்தப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் எ…
-
- 1 reply
- 373 views
-
-
சிறிலங்கா அதிபரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, பிரதி பிரதம சங்கநாயக்கர் வண.எட்டம்பகஸ்கட சிறி கல்யாண திஸ்ஸ நாயக்க தேரர், ஆகியோரின் கூட்டுத் திட்டமிடலின் கீழ் வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போர் முடிவுக்கு வந்த பின்னர், நந்திமித்ரகம, நாமல்கம, செல்லிஹினிகம, பொகஸ்வெவ 1, போகஸ்வெவ 2 என்று ஐந்து கிராமங்கள் உருவாக்கப்பட்டு, சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இவற்றில் நாமல் ராஜபக்சவின் பெயரில், நாமல்கம என்ற சிங்களக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சிங்களக் கிரா…
-
- 0 replies
- 362 views
-
-
லொறி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் சிங்கப்பூரில் வைத்து இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் டுவாஸ் சோதனைச்சாவடியில் வைத்து லொறியொன்றினை சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகள் சோனையிட்டுள்ளனர். இதன்போது லொறி சாரதியின் ஆசனத்திற்கு அருகில் துணி ஒன்றால் மறைக்கப்பட்டிருந்த குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது. லொறியை செலுத்திச் சென்ற சாரதிக்கு வயது 54 எனவும் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்ணுக்கு வயது 29 எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இருவரிடம் குடிவரவு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பூர் குடிவரவு சட்டத்தின்படி சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்திருந்தால் 6 மாத சிறை தண்டனையும் மூன்று கசையடிகளும் தண்டனையாக பெ…
-
- 0 replies
- 404 views
-
-
கொரிய பிரதமர் சொங் வொன் ஹொங் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த மாத இறுதியில் கொரிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கைத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கொரியாவிடம் கோரியுள்ளது. கொரிய தொழிற்சந்தையில் இலங்கையர்களுக்கு அதிகளவு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95267/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 348 views
-
-
நான்கு இந்திய கைதிகள் வெலிக்கடையிலிருந்து தமிழகத்தின் திருச்சி சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு கைதிகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைதிகளில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் குறித்த நான்கு கைதிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 59 வயதான சத்தியசீலன், 55 வயதான ராமசாமி நாடார் ஜெயராஜ் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். பீ.ஆரோக்கியமேரி மற்றும் மாரிமுத்து கனகா ஆகிய பெண் கைதிகள் விசேட மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த நான்கு பேருமே போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய…
-
- 0 replies
- 312 views
-
-
விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தமது அரசியல் சக்தியாக கருதுகிறார் என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் தெரிவித்துள்ளார். சிலர் பிரிக்கப்பட்ட மாகாணத்தில் போட்டியிடக்கூடாது என்றும் மாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறுவதாகத் தெரிவித்த அவர் அவ்வாறு புறக்கணிப்பதன் மூலம் அரசாங்கத்திடம் காலம் காலமாக ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று காட்டப்பட்டு தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக…
-
- 0 replies
- 305 views
-
-
வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஏரிக்கரை பத்திரிகையாளர்களிற்கு அரச அதிகாரிகள் விளக்கமளிக்கும் நிகழ்வொன்று இன்று யாழ்ப்பாணத்தினில் நடத்தப்பட்டுள்ளது. தனது ஆட்சிக்கால சாதனை பற்றி விபரிக்க திட்டமிட்டிருந்த வடமாகண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தனது நிர்வாகத்திற்குட்பட்ட அனைத்து நிறுவனப் பணியாளர்களையும் அழைத்து இக்கூட்டத்தை கூட்டியிருந்தார். அரசினது அபிவிருத்தி தொடர்பில் உள்ளுர் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என கவலை கொண்டுள்ள ஆளுநர் அதனை தீர்த்துக்கொள்ள ஏரிக்கரை பத்திரிகைகளை அளைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் ஆளுநரது அடாவடி போதாதென்று தற்போது ஏரிக்கரை பத்திரிகைகளது ஊடகவியலாளர்களிற்கும்; கைகட்டி சலூட் வைக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள் ஆனால் வடக்கில் ஏரிக்கரை பத்திரி…
-
- 0 replies
- 285 views
-
-
ஈழத்தில் இருந்து ஒரு குரல் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கான விருப்பு வாக்கு! எங்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை: பா. உ சி.சிறீதரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கான விருப்பு வாக்கு, எங்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்திக் குறிப்பில் பிள்வருமாறு வெளியிட்டுள்ளார். பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய யாழ்ப்பாண மாவட்ட வாக்காளப் பெருமக்களே, வட மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராகவும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற…
-
- 2 replies
- 418 views
-
-
பிரபாகரனின் மறு அவதாரமாகவே இன்று விக்கினேஸ்வரன் உருவெடுத்துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லியனகே தெரிவித்துள்ளார். பொதுபாலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விக்கினேஸ்வரனின் செய்கைகளும் பேச்சுக்களும் திருப்தி தருவதாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லியனகே இவரை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக கோரிக்கை விட வேண்டும் எனவும் தெரிவித்தார். குருவைக்கல்லு என்ற தமிழ்ப்பெயரே இன்று குருணாகல் என்று திரிபடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் குருணாகல் அத்துகல்புர எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். …
-
- 8 replies
- 832 views
-
-
இலங்கையை சுற்றியுள்ள கடற்சூழல் கழிவுப் பொருட்களால் மாசுபடுத்தப்படுகின்றது இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் எதிர்நோக்குகின்றன என சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜெகத் குணசேகர தெரிவித்துள்ளார். இந்து சமுத்திர சூழல் மாசடைதலை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைபடத்தில் இலங்கையைச் சுற்றி அழுக்குகள் படிந்த ஒரு மாசு வளையம் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை கடற் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜெகத் குணசேகர, இலங்கையை சுற்றியுள்ள கடற்சூழல் விவசாய இரசாயனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் மாசுபடுத்தப்படு…
-
- 0 replies
- 397 views
-
-
சிறிலங்கா அதிபரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, பிரதி பிரதம சங்கநாயக்கர் வண.எட்டம்பகஸ்கட சிறி கல்யாண திஸ்ஸ நாயக்க தேரர், ஆகியோரின் கூட்டுத் திட்டமிடலின் கீழ் வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போர் முடிவுக்கு வந்த பின்னர், நந்திமித்ரகம, நாமல்கம, செல்லிஹினிகம, பொகஸ்வெவ 1, போகஸ்வெவ 2 என்று ஐந்து கிராமங்கள் உருவாக்கப்பட்டு, சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இவற்றில் நாமல் ராஜபக்சவின் பெயரில், நாமல்கம என்ற சிங்களக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சிங்களக் க…
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர், யுத்தம் நடைபெற்ற இடத்தினை பார்வை இடுவதற்கு பல தடவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச்சபையின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை அவர்கள் முயற்சி மேற்கொண்ட போதும் அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. ஏனென்றால் போர் நடைபெற்ற பகுதிக்கு அவர் சென்றால் அங்கு நடைபெற்ற போரின் அவலங்கள் வெளிவந்துவிடும், இதனால் இன அழிப்பு நடைபெற்றது உலகிற்கு தெரிந்து விடும் என்று இலங்கை அரசாங்கம் பயந்து இருந்து. இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் வன்முறைகள், படுகொலைகள். இவற்றுக்கான சாட்சியங்கள், மற்றும் சான்றுகள் அழிக்கப்படுவதற்கும் மறைக்கப்பட்வதற்கும் நான்கு ஆண்டுகள் இலங்கை அரசுக்கு தேவைப்பட்டது. இதற்ககாவே நவநீதம் பிள்ளை அவர்க…
-
- 0 replies
- 236 views
-
-
அனுராதபுரத்தில் இருந்து 1300 சிங்களக் குடும்பங்களை மன்னார் மாவட்டத்தில் உள்ள கொண்டைச்சிக்கும் கொக்குப்படையானுக்கும் இடையில் குடியேற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்�கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிறப்பு மீள்குடியேற்றத் திட்டம் என்ற பெயரில், 4 கி.மீ பிரதேசத்தில் இடம்பெற்று வரும் இந்த சிங்களக் குடியேற்ற நடவடிக்கை முசலிப் பிரதேச மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடியேற்றத்துக்காக சுமார் 400 ஏக்கர் வரையிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலத்தில் சிங்களக் குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் காணியும், வீடு ஒன்றும் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மகாவிலாச்சிய, நொச்சியாகம போன்ற கிராமங்களில் இருந்து முச…
-
- 0 replies
- 236 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக் கழக சித்திரமும் வடிவமைப்பு துறையினைச் சேர்ந்த 2ம், 3ம், 4ம் வருட மாணவர்கள் எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கப்படாமல் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டிருக்கும் விரிவுரைகளை ஆரம்பிக்கக் கோரி நேற்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வடையாளப் போராட்டமானது மலை 4.30 மணிவரைக்கும் தொடர்ச்சியாக இடம்பெற்றது. எனினும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடைபெற்ற இம்மாணவர்கள் போராட்டத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. எனினும் தமக்கான நீதி வழங்கப்படும் வரைக்கும் போராட்டம் தொடர்ச்சியா மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ' 20 நாட்களுக்கும் அதிகமாக கைவிடப்பட்ட…
-
- 0 replies
- 164 views
-
-
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட சம்பவம். தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில…
-
- 3 replies
- 601 views
-
-
அரசின் குள்ளநரித் தனங்கள் வெளிப்படுகின்றன : ஐ.தே.க. அரசின் கோமாளிகளான விமல் மற்றும் சம்பிக்க ஆகியோரின் செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்தின் குள்ளத்தனமான செயற்பாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தம் தொடர்பில் அதில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் விஷத் தன்மையானவை அதனை அரசாங்கம் உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி பல நாடகங்களை விமல் மற்றும் சம்பிக்க போன்ற கோமாளிகள் அரங்கேற்றினர். …
-
- 1 reply
- 331 views
-
-
இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் இலங்கை பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா அமைப்பின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். பொது பலசேனா வின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம்இ கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் …
-
- 1 reply
- 4.1k views
-
-
புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதி கடந்த 30 வருடங்களாகப் புனரமைக்கப்படாமையால் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்ற இப்பிரதேச மக்கள் இவ்வீதியூடாகப் பயணிக்கின்றபோது தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு பகுதிகளிலிருந்து விவசாயிகள் உற்பத்திகளைப் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவுக்கு எடுத்துச் செல்வதற்கு தூரம் குறைவாகக் காணப்படுகின்றமையினால் இவ்வீதியையே பயன்படுத்துகின்றனர். இதேபோல் முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம், முல்லைத்தீவுப்பகுதிகளிலிருந்து கடலுணவுகளை ஒட்டுசுட்டான் பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கும் இவ்வீதியையே பயன்படுத்துகின்றனர். இதேவேளை மாங்குளம்மற்றும் வவுனியா பகுதிகளு…
-
- 1 reply
- 502 views
-
-
மத்திய வங்கியின் பிராந்திய காரியாலயம் கிளிநொச்சியில் அமைக்கப்படுவதன் ஊடாக இப்பகுதி பொருளாதார கேந்திர நிலையமாக விரைவில் மாற்றம் பெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் உத்தேச வடமாகாண அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும உரையாற்றுகையில்: கிளிநொச்சி மாவட்டம் தற்போது பல பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்டு முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. கடந்த யுத்த காலங்களில் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போ…
-
- 3 replies
- 407 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள், தமக்கான விரிவுரைகளை ஆரம்பிக்க கோரி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (13) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுண்கலை பீட சித்திரமும் வடிவமைப்பும் துறையை சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 20 நாட்களாக விரிவுரைகள் நடைபெறவில்லை எனவும் அவற்றை மீள ஆரம்பிக்க கோரியுமே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது துறைக்கு நிரந்தர விரிவுரையாளர்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நியமிக்கபடவில்லை. எமது இணைப்பாளரின் சொந்த முயற்சியினால் எமது துறை சார்ந்தவர்களை வருகை விரிவுரையாளர்களை நியமிக்கப்பட்டிருந…
-
- 1 reply
- 315 views
-
-
வடமாகாணசபை தேர்தலில் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது தமிழ் மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27747
-
- 1 reply
- 487 views
-
-
முஸ்லிம்களின் மத கலாசார அடிப்படை உரிமைகளை நசுக்குவதனை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் மதத் தீவிரவாதிகள் அரசின் ஆதரவுடனேயே கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=27757
-
- 1 reply
- 324 views
-
-
கிரான்ட்பாஸ் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளில் திருப்தி - ஹக்கீம் கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திருப்தியளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அக் கட்சியின் உயர் மட்டக் குழு ஒன்று நேற்று (12) கூடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தமது கட்சியினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இக் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்…
-
- 3 replies
- 316 views
-