ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தமிழ் மக்கள் கூடுதலாக வசிக்கும் இடங்களிலுள்ள பாடசாலைகளில் பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் போன்று தமிழையும் இரண்டாவது மொழியாக அறிமுகம் செய்யுமாறு வட அமெரிக்கா தமிழர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்து வருகின்றதாக சம்மேளனத்தின் பணிப்பாளர் ஆர்.போர்செழியன் கூறினார். இது தொடர்பில் அவர் இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது, 'அமெரிக்க தமிழ் அக்கடமி பல பாடசாலைகளில் தமிழ்மொழி, கலாசாரம் என்பவற்றை கற்பித்து வருகின்றது. இதற்கென பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழியுடன் இசை, சண்டைக்கலை என்பனவும் கற்பிக்கப்படுகின்றன. 45 பாடசாலைகளிலுள்ள 5,000 மாணவர்களுக்கு 500 தொண்டராசிரியர்கள் தமிழ் போhதித்து வருகின்றனர். குடிவந்த தமிழர்கள், இளம் தலைமுறையினர் தமது கலாசார பாரம்ப…
-
- 1 reply
- 613 views
-
-
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாய செய்கைகளைக் காட்டியும், வீட்டுக் கடன், வாகங்களை லீசிங் கடன் என அதிகளவான வங்கிக்கடன்களைத் தனியார் வங்கிகளிலும் அரச வங்கிகளிலும் பெற்றுக் கொண்டு, அவற்றை மீளச் செலுத்த முடியாத நிலையில் கடன்பட்டோர் தலைமறைவாகி வருவதால் இவர்களைத் தேடி வங்கி உத்தியோகத்தர்கள் வீடுவிடாக செல்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு விவசாயிகள் வங்கிகளில் சில கமக்கார அமைப்புக்களின் துணையுடன் தவறான தகவல்களை வழங்கி அதிக வங்கிக் கடன்களைப் பெற்று அவற்றைத் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்று வரை குறித்த கடன்களை மீளச் செலுத்தாமல் இருப்பதாக வங்கியாளர்கள் குறிப்பிடுகின்றனர் வங்கிகள் பல தடவைகள் கடனாளிகளுக்கு அறிவித்தல்களை வழங்கியபோதும் அவர்கள் எந்தவித தொடர்புகளையும் …
-
- 0 replies
- 473 views
-
-
-அழகன் கனகராஜ் நாமிருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளோமே தவிர அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்து வேண்டிய நேரத்தில் எம்மால் வெளியேறவும் முடியும் என்பதுடன் 13 ஆவது திருத்தத்தை நாமே தடுத்து நிறுத்தினோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன், வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். மலையக தேசிய முன்னணி கொழும்புஇ நிப்போன் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட் டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் பதிலளிக்கையில், 13 ஆவது திருத்தத்தில் எவ்விதமான மாற்றங்களையும் செய்யக்கூடாது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது மலைய மக்களின் பிரச்சின…
-
- 0 replies
- 661 views
-
-
-சுமித்தி தங்கராசா வடமாகாண சபை தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு தேவையெனவும், கண்காணிப்பு குழுவை நியமிப்பது தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்தவுள்ளதாகவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் நடந்த இந்த சந்திப்பின் போது வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக எம்முடன் ஆராய்ந்தனர். இந்தியாவின் அழுத்தம் காரணமாக…
-
- 0 replies
- 433 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா வடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு( ஈபிடிபி) 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களில் தமது கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்த…
-
- 0 replies
- 526 views
-
-
-எஸ்.கே.பிரசாத் எமது கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் எல்லை மீறிய மீன்பிடிப்பதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்தியாவில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருத்து வெளியிடப்பட…
-
- 0 replies
- 272 views
-
-
உண்மை நிலவரங்களைக் கண்டறிவதற்காக உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள பிரித்தானிய நாடாளுமன்றக்குழு இன்று முற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=24043
-
- 0 replies
- 303 views
-
-
244 அரச நிறுவனங்கள் தொடர்பான கோப் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டி யூ குணசேகரவினால் இந்த அறிக்கை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=24036
-
- 0 replies
- 350 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டை குழப்பும் நோக்கில் புலம்பெயர்ந்துள்ள புலி ஆதரவர்கள், பிரிட்டனிலுள்ள பொதுநலவாய நாடுகளுக்கான விவகார அமைச்சரான அல்ஸ்டெயார் பேர்ட் உள்ளிட்ட கென்சர்வேர்டிவ் உறுப்பினர்கள் குழுவிற்கு மேக்கிறீன் மெக்கர் என்ற விடுதியில் விசேட இரவு விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், http://tamilworldtoday.com/?p=24028
-
- 0 replies
- 361 views
-
-
பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு இலங்கைக்கு வருமாறு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மீன்பிடித்திணைக்கள ஆலோசகரான அந்தோனிமுத்துவிடமிருந்தே இந்த அழைப்பிதழ் வந்திருப்பதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை ஓகஸ்ட் முதல் வாரத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/76113-2013-07-23-14-33-38.html
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கை தனது இராணுவ நுட்பங்களை உகண்டாவுடன் பகிரவுள்ளது.அத்துடன், உகண்டா மக்கள் பாதுகாப்பு படைக்கு விசேட பயிற்சியையும் வழங்கவுள்ளது என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. உகண்டா ஜனாதிபதி யொவரி முஸெவனி உகண்டாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். என்ரபே அரச மாளிகையில் நடந்த கூட்டத்தில் உகண்டாவுக்கான உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதனும் கலந்துக்கொண்டார். உகண்டா ஜனாதிபதியும் கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பு உட்பட இருபக்க உறவுகளையிட்டு உரையாடினர். இந்த சந்திப்பின் போது உகண்டா பாதுகாப்புக்கான ராஜாங்க அமைச்சர் ஜேஜே ஒடொங் மற்றும் லெப்டினன் ஜெனரல் சார்ள்ஸ் அன்ஜினா ஆகியோ…
-
- 0 replies
- 215 views
-
-
இராணுவத்தினர் வெளியேறிய காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதமளவில் காணி அமைச்சு உரிய காணி உரிமையாளர்ளுக்கு இந்த ஆவணங்களை வழங்கும் பணிகளை ஆரம்பிக்கும் என யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். காணி உரிமையாளர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த 16 முகாம்களில், 13 முகாம்களிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=88279&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 260 views
-
-
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்த சங்கரி கிளிநொச்சி மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=23990
-
- 4 replies
- 692 views
-
-
மஷூர் மௌலானாவின் அகவை 80 விழாவில் 2013.02 21ந் திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ்சங்க மன்டபத்தில் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆற்றிய தலைவருரை மஷூர் மௌலானா அவர்களின் அகவை எண்பது நிறைவு விழா 2013ம் ஆணடு பெப்ரவரி 21ந் திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ்சங்க மண்ட்டபத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதியரசல் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆற்றிய தலைவருரையை என் நண்பரும் ஊடகவியலாளருமான வரதராஜன் நியூசிலாந்தில் இருந்து அனுப்பி வைத்தார் காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. இந்த விழாவின் நாயகன் மஷூர் மௌலானா அவர்கள் பற்றிய எனது நினைவையும் இங்கு பதிய வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. 2006ல் மீண்டும் உக்கிரமடைந்த போரின் போது கிழக்கில் திருகோணமலையில் இர…
-
- 2 replies
- 497 views
-
-
15மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய ரயில் நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். வட மாகாணம் உட்பட ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். யுத்தம் காரணமாக சேதமடைந்த வட வகுதிக்கான ரயில் பாதை புதிதாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சுமார் 23 வருடங்களுக…
-
- 0 replies
- 405 views
-
-
பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த காலங்களில் எமது முன்னோர்களால் பனம் பொருள்கள் அழகு சாதனப் பொருள்களாகவும், மருந்துப் பொருள்களாகவும் பயன் படுத்தப்பட்டு வந்தன. எனினும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப அவை ஒரு காலத்தில் கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் பனம் பொருள்கள் ஊடாகக் கிடைக்கக் கூடிய நன்மைகளை இழக்க நேரிட்டுள்ளது. இதனை மீளப் பயனடையச் செய்யும் நோக்குடன் சவர்க்காரம், முகப்பூச்சு(கிறீம்), சம்போ, பற்பசை போன்ற அழகு சாதனப் பொருள்களை…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்தின் உயரதிகாரிகளும் பங்குபற்றினர். கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் பங்குப்பற்றினர். இந்த சந்திப்பின் போது யுத்தத்திற்கு பின்னரான வடமாகாணத்தின் நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. போருக்கு பின்னரான காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை மற்றும் வ…
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கலவரத்தின் தாக்கம் இன்றும் தொடருகிறது. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பழிக்கு பழி : பலர் பலியில் முடிந்தது யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களை சிங்கள இனவெறி அரசாங்கமும் அதன் படைகளும் கொன்று குவித்த பின்னர் தமிழ் மக்களின் சனத்தொகை மிகவும் குறைவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம்பெற்று வருகின்றமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற இந்த கருக்கலைப்பு விடயத்தில் பொலிஸாரோ சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமையானது இந்தக் கருக்கலைப்புகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வழிகாட்டலில்தான் இடம்பெறுகின்றது என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டுவதாக கல்விமான்களும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத கருக்கலைப்புச் செய்யப்பட்ட சில தாய்மார் குருதிப்பெருக்கால் உயிரிழந்த சம்பவ…
-
- 0 replies
- 334 views
-
-
இதேபோலொரு ஜூலையில்தான் 1983இல் ஈழப்போராளிகளான குட்டிமணி மற்றும் தங்கத்துரை வெலிக்கடை சிறையில் வைத்து கண்கள் பிடுங்கி சித்திரைவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். அந்தப் படுகொலை நடந்ததின் பின்னர் ஈழப்போராட்டத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் உருவாகின. எழுச்சிகளும் வீழ்சிகளும் மாறிமாறி நிகழ்ந்திருக்கின்றன. இதைப்போலவே இந்த வருட ஜூலையில் விடுதலை கோரி போராடிய நிமலரூபன் சிறைச்சாலைக்குள் வைத்து நாராய் கிழிக்கப்பட்டு மிகக்கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். சிங்கள அரசின் தொடரும் அநீதி ஆட்சியில் ஜூலை மாதங்கள் எல்லாமே ஈழத் தமிழினத்திற்கு படுகொலை மாதங்களாக மனவடுவை தருகின்றன. கறுப்பு ஜூலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து இந்த ஜூலையுடன் முப்பது வருடங்களாகின்றன. கறுப்பு லை…
-
- 0 replies
- 423 views
-
-
இலங்கைப் பிரச்சினைகளுக்கு இலங்கையரே தீர்வைக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23862
-
- 6 replies
- 947 views
-
-
உகண்டா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பை மேம்படுத்தவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உகண்டாவுக்கு வருகை தந்துள்ளதாக உகண்டாவின் முன்னணி நாளேடான நியூவிஷன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து உகண்டாவுக்கான உயர் ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் தெரிவிக்கையில், அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு உகண்டா வந்துள்ள ராஜபக்ஷ நாட்டில் ஐந்து தினங்கள் தங்கவுள்ளதாகவும் அங்கு தங்கியிருக்கும் காலத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடும் பொருட்டு ஜனாதிபதி முசவெனி பாதுகாப்பு படைகளின் தளபதி ஆகியோரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்றை அவருக்கு கிட்டவுள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுவொன்றையும் அவர் சந்திக்…
-
- 12 replies
- 669 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமந்தா பவர் என்பவரே இவ்வாறு அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட தூதுவர் ஆவார் மேலும், http://tamilworldtoday.com/?p=23986
-
- 0 replies
- 396 views
-
-
ஈழத்தமிழர்களின் வரலாற்றில்... 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து... தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் "கருப்பு ஜூலை' என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர். அந்த "கருப்பு ஜூலை' நிகழ்ந்து தற்போது 30 வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை. அன்று என்ன நடந்தது? எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திவிட்டனர் என்றபோதிலும், அந்த ஆயுதங்களின் வலிமையை, சிங்கள அரசு 1983 ஜூலை 23 அன்றுதான் உணர்ந்தது. பெரிய அளவில், இராணுவ வீரர்களின் மீ…
-
- 0 replies
- 364 views
-
-
-மொஹொமட் ஆஸிக் பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்று வெகுவிரைவில் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'பௌத்த விகாரைகள் மற்றும் பிக்குகள் தொடர்பான முறைப்பாடுகள், பிணக்குகள் போன்றவற்றைக் கையாள பொதுநீதிமன்றங்களுக்கு செல்லாமல் தீரத்துக் கொள்ள இந்நீதிமன்றங்கள் உதவும். அத்துடன் பௌத்த மதகுருக்கள் கௌரவமிழக்காத வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு இத்தகைய நீதிமன்றங்கள் வழிவகுக்கும்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/75…
-
- 3 replies
- 506 views
-