ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
03 AUG, 2024 | 10:41 AM ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்று (03) மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று நடைபெறுகிற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதபவனி உற்சவத்தின்போதே அவர் ஆலயத்துக்கு விஜயம் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/190155
-
- 1 reply
- 542 views
- 1 follower
-
-
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு! நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற் போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்யச் சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதாக அதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவத…
-
-
- 8 replies
- 496 views
- 1 follower
-
-
02 AUG, 2024 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஏற்க வேண்டும்.இவரை பதவி நீக்கி அமைச்சர் ரமேஷ் பதிரனவை பொதுச்செயலாளராக நியமிக்கும் யோசனையைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பேன் என மின்சாரத்துறை மற்றும் சக்தி வலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைக் களமிறக்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும்…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 AUG, 2024 | 08:12 PM மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (2) உத்தரவு பிறப்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/190132
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 11:57 AM ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190076
-
-
- 6 replies
- 965 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இன்று ஆரம்பமானது. உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்றும் நாளையும் மட்டக்களப்பில் இடம்பெறும். இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் வெபர் மைதானத்தை நோக்கி விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் நடைபவணியாக வந்தடைந்தனர். வெபர் மைதான…
-
-
- 1 reply
- 341 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 10:33 AM 2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190064
-
- 4 replies
- 637 views
- 1 follower
-
-
கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது! வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில்…
-
- 2 replies
- 421 views
-
-
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் ரத்து. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்க…
-
- 1 reply
- 443 views
-
-
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 03:21 PM அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசு ஊழியர் சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கவனமாக பரிசீலித்து தொடர்புடைய எதிர்கால திருத்தங்களைச் செய்வதற்கு அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி, யு. ஆர். செனவிரத்ன தலைமையில் நிபுணர் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டதாகவும், மீளாய்வுகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட சம்பளக…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
02 AUG, 2024 | 02:15 PM முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஐங்கன்குளம் பகுதியில் யானையின் சடலம் இருப்பதாக விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானையின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவவில்லை. யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் மரணம் தொடர்பான க…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை ? – சுகாதார அமைச்சு. எதிர்வரும் ஜனவரி முதல், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உணவு சில நோய்களை குணப்படுத்தும் என்ற பிரச்சாரம் தவறானது என சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதி பணிப்பாளர் தெரிவித்தார். ஒருவர் வருடத்திற்கு…
-
- 0 replies
- 255 views
-
-
Published By: RAJEEBAN 02 AUG, 2024 | 11:28 AM இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவரீதியிலான உதவிகளை வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புவிசார் அரசியல் நகர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார். எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கை மரபுசார் மரபுசாராத அச்சுறு…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
தேர்தலின் பின் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய அபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்; நாட்டை பொறுத்தவரையில் இப்பொழுதும் எனக்கு ஒரு கரிசனை இருக்கிறது. அதாவது தேர்தலின் பின்னர் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. சிங்கள வேட்பாளர்களிடையே ஐம்பது சதவிகித வாக்கை பெறக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை. உண்மையில் அவர்கள் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் குறைவாகத்தான் பெறுவா…
-
- 0 replies
- 318 views
-
-
02 AUG, 2024 | 08:54 AM திருகோணமலை, தம்பலகாமம் - பத்தினிபுரம் கிராம மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த மயானத்தை பெற்றுத்தருமாறுகோரி ஆளுநரிடம் முறையிட்டிருந்தார்கள். இதனையடுத்து, அவருடைய பணிப்பின்பேரில் ஆளுநரின் ஆலோசகர் உட்பட ஒரு குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை (01) பத்தினிபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்கள். குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் ஆலோசகர் சிவராஜா, திருகோணமலை தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் நிக்களஸ், வனவளத்துறை அதிகாரிகள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 AUG, 2024 | 02:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்) நான் அமைச்சரவையில் இருந்திருக்காவிட்டால் 2024ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருக்காது. அது தொடர்பான தகவல்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவேன். நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எந்த பிரேரணைக்கும் நான் பங்காளியாகவில்லை. அதனாலே பலதடவைகள் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கப்பட்டேன். மஹிந்த ராஜபக்ஷ் பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார். நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். எமக்கு ஒரு நாடு …
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
3 விசேட குழுக்களை நியமித்தார் ஜனாதிபதி ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார். இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அந்த இரண்டு குழுக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான உயர்மட்ட குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மின்சார…
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மானிக்கத் திட்டம்! சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே, உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தோட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு முழு உரிமை வழங்குவது தொடர்பாக கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சகல வசதிகளுடனும் குறித்த கிராமங்கள் நிர்மாணிக்கப்படு…
-
- 0 replies
- 158 views
-
-
கடவுச்சீட்டு தொடர்பான அதிரடி அறிவிப்பு! மூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானவை என்ற அடிப்படையிலேயே 3 வர்ணங்களில் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1394430
-
- 0 replies
- 239 views
-
-
இளம் தமிழர் ஒருவர் பொதுஜனபெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல் 01 AUG, 2024 | 08:36 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இளம் தமிழர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் சிலருடன் இணைந்து செயற்படுகின்றோம், வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.…
-
-
- 5 replies
- 362 views
- 1 follower
-
-
01 AUG, 2024 | 05:10 PM (நா.தனுஜா) 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாகும். அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் விசனம் வெளியிட்டுள்ள…
-
-
- 7 replies
- 536 views
- 1 follower
-
-
எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை; எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் - காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மாவின் மனகுமுறல் Published By: VISHNU 01 AUG, 2024 | 06:31 PM எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதுமில்லை எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும்வரை நாங்கள் ஓய போவதுமில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மா தனது மனகுமுறலை வெளிப்படுத்தியிருந்தார். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 31 JUL, 2024 | 10:36 AM வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்களுடன் 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரி-56 ரக இரு துப்பாக்கிகள், ஒரு வாள், துப்பாக்கி ரவைகள் 60, மெகசீன் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் ஆயுதங்களையும் வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றில்…
-
-
- 5 replies
- 475 views
- 1 follower
-
-
சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி விளம்பரங்கள் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆனந்த ஜெயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார். “பொதுவாக உணவின் முக்கிய எதிர்பார்ப்புகள் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். நோய்களைக் குணப்படுத்துபவைகளை மருந்துகள் என்கிறோம். உண…
-
- 0 replies
- 513 views
- 1 follower
-
-
கேரளா – வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், சுமார் 180 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இரண்டு இலங்கை தமிழர்களும் அடங்குவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்து தமிழகத்தின்…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-