ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் கோயில்போரதீவு முருகன் ஆலயத்தில் நேற்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் வாயில் முன் கதவு உடைக்கப்பட்டு இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது அங்கு கூடிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் பொதுமக்கள் திருடர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளைகள் மற்றும் விக்கிரக உடைப்புக்கள் என்பன …
-
- 0 replies
- 607 views
-
-
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் இதுவைர 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு 36 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் 37 படகுகளும் காணாமற் போயுள்ளன. காலி, கொழும்பு, பேருவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்துச் சென்ற படகுகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன. கடற்பகுதியில் உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மீட்புப் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து இன்றும் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.ph…
-
- 0 replies
- 436 views
-
-
எட்டு வருடங்களுக்கு முன்னர் எட்டு வயதுடைய பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 58 வயதுடைய வயோதிபருக்கு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிவான் சமல் விக்ரம ஆராச்சி 60 வருட சிறைதண்டனையும் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி ரிதிகம என்ற இடத்திற்கு 8 வயது பாடசாலை சிறுமியை அழைத்துச் சென்று தேவாலய வளவில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக பெற்றோரின் முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அதே கிராமத்தைச் சேர்ந்த வை.சுகத்தபால சுனில் (வயது 58) என்பவரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்தனர். மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் சந…
-
- 0 replies
- 427 views
-
-
இனம் தெரியாதவர்களால் ஆலைய கோபுர சிற்பங்கள் சேதமாக்கப்பட்டன- திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கோபுரத்தில் 13 சிற்பபாவைகள் இனம்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆலைய தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த செயலை நேற்று முன்தினம் இரவுக்கும் நேற்று காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் மேற்கொண்டிருக்கலாம் எனவும் இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய அறங்காவலர் சபை தெரிவித்துள்ளது. கிழக்கில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்படுவதும் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் பாதுகாப்பு தரப்பினருக்கும் இவற்றுக்கும் எந்த வித தொடர்புகளும் இல்லை என கிழக்கின் பாதுகாப்பு உயர்ம…
-
- 0 replies
- 320 views
-
-
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாடுகள் அறுப்பதையும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் முற்றாகத் தடை செய்ய நுவரெலியா மாநகர சபை தீர்மானித்துள்ளது. நுவரெலிய மாநகர சபைக்கு மேற்படி பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளதுடன் மாநகர சபை மேயர் பிரதி மேயர் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளித்ததால் வாக்கெடுப்பு இன்றி பிரேரணை நிறைவேறியது. http://www.virakesari.lk/article/local.php?vid=5130
-
- 2 replies
- 686 views
-
-
வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் தமது நிலத்திற்காக போராடிக் கொண்டிருக்கையில் அப்பகுதியில் பெளத்த விகாரைகளை இலங்கை இராணுவத்தினர் நிர்மாணித்து வருகின்றனர். மேலும், http://tamilworldtoday.com/?p=15251
-
- 2 replies
- 453 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டும்! இலங்கை தமிழர்களுக்கு கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவைகள் கிடைத்திட இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய மக்களவை உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார். அமெரிக்கா மக்களவை குழு அமைப்பு அழைப்பு விடுத்ததை ஏற்று அமெரிக்கா சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பைஜெயந்த் பாண்டா, சுப்ரியா சுலே, உதய்சிங், பிரதாப்சிங் பஜ்வா, பிரேம்தாஸ், பக்தசரண்தாஸ் உள்ளிட்ட எம்.பி குழுக்கள் அரசு முறை பயணமாக ஒரு வார காலம் அமெரிக்கா சென்றுள்ளனர். அதோடு, அங்குள…
-
- 4 replies
- 569 views
-
-
எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த மையம் கடந்த 04ஆம் திகதி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. படங்கள் : http://tamilworldtoday.com/?p=15275
-
- 0 replies
- 405 views
-
-
அமைச்சரவை அந்தஸ்துள்ள 65 அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களின் செலவுகளுக்கு 2012ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 28.7 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15288
-
- 0 replies
- 377 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லுமுகமாக 70 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கிறிஸ்மஸ் தீவுகளின் அருகில் மூழ்கியதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். நீரில் மிதந்த 9 சடலங்களை சனிக்கிழமை பகல் வேளையில் அவதானித்த அதிகாரிகள் தேடுதலை ஆரம்பித்தனர். இந்த அகதிகள் படகின் வருகையினை எச்.எம்.எஸ். எனும் படகு உறுதி செய்துள்ளது. நீரில் மூழ்கிய படகானது கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தீவினை நோக்கி பயணித்ததாகத் தெரியவருகிறது. இதேவேளை, மூன்று விமானங்கள், எச்.எம்.எஸ். எனும் படகு மற்றும் இரண்டு வர்த்தக கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இப்பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டாம் படகு விபத்து இதுவாகும். கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற படகு விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்தனர். மேலும் கட…
-
- 0 replies
- 409 views
-
-
13ஆவது திருத்தச்சட்டத்தில் இரண்டு திருத்தங்களை எப்படியாவது கொண்டு வரவேண்டு என்ற அவசரம் அமைச்சரவையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் சிறுபான்மை சமூகங்களுக்கென இருக்கும் அடிப்படைக் காப்பீடுகளை 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி விடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்பப் பெறுவது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த விடயம் அணுகப்படுவதை என்னால் உணர முடிந்தது. இது 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படை உயிர்நாடியையே அகற்றும் செயல். எனவே இதில் எமக்கு உடன்பாடில்லை. 13ஆவது…
-
- 0 replies
- 440 views
-
-
பொதுபலசேனாவின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை பதுளை வலீஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் போது 13 ஆவது அரசியல் திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற பிரேரணை முன் வைக்கப்பட்டு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்படி மாநாட்டின் ஏற்பாட்டாளர் மேற்கொண்டு வருகின்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=5134
-
- 0 replies
- 363 views
-
-
அரசாங்கம் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இன்று நாட்டை அராஜக நிலைக்கு உள்ளாக்கி வருகிறது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார காலியில் தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கம் பாரதூரமான சிக்கலுக்குள் சென்றுள்ளது. மாகாண சபை முறைமை ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஜனாதிபதி முறைமை தேவையற்றது என தெரிவித்து, அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ கதிர்காமத்திற்கு நடைபயணம் சென்றார். எனினும் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ளவர்கள், தற்போது, முற்றாக ஜனாதிபதி முறைமையை பாதுகாத்து கொண்டு வரையறையின்றி, தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் அளவுக்கு மாற்றிக் கொண்டு…
-
- 2 replies
- 329 views
-
-
எதிர்க்கட்சிகளுக்கு நிமால் சிறிபாலடி சில்வா எச்சரிக்கை உறுப்பினர்களை தெரிவு செய்யாமல் எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவை அலட்சியப்படுத்துமாயின் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று சபைமுதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குவுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவுசெய்து அறிவிக்குமாறு, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 19 உற…
-
- 2 replies
- 481 views
-
-
இலங்கைக்கு சீனா வழங்க முன்வந்துள்ள 2.2 பில்லியன் டொலர் கடனில், இராணுவத் தளபாடங்களை வழங்கும் இணக்கப்பாடும் உள்ளடங்கியுள்ளதாக பாதுகாப்புத்துறை இணையத்தளமான strategy page தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15245
-
- 0 replies
- 270 views
-
-
•மிச்சேல் ஜே சிசன் உலகின் பல்வேறு கொந்தளிப்பு பிரதேசங்களில் பணியாற்றிய மூத்த இராஜதந்திரி. அவரது வருகை இலங்கைக்கு நெருக்கடியாக அமையலாம் என்று அரசாங்கம் எற்கனவே எதிர்பார்த்திருந்தது. ஆனால்இ கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்ற சிறிது காலம் வரை அமெரிக்கத் தூதுவர் பெரிதாக எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. அது அரசாங்கத்துக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்தது. ஆனால்இ இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்த பின்னர்இ அமெரிக்கத் தூதுவர் வெளியிடும் கருத்துகள் அரசாங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் உயர் பாதுகாப்பு வலயம்இ படைகளை நிறுத்துவதுஇ முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தன. …
-
- 1 reply
- 799 views
-
-
மாகாண சபைக்கு எதிராக சிங்கள பௌத்த, பேரினவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து புதிய அமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=15089
-
- 4 replies
- 649 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது. இலங்கையில் உள்ள பிரபல வெளிநாட்டு வங்கி ஒன்றில் மாத்திரம் 56 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. புலிகள் அமைப்புக்கு இந்த பணத்தை வைப்புச் செய்த ரெஜி என்ற விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர் பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையினரால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் புலிகளின் வங்கி கணக்கில் இருந்த பணம் அரசுடமையக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92637/lan…
-
- 3 replies
- 605 views
-
-
'எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாம் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அது ஒரு ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக இருக்க முடியாது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய தூதுக் குழுவினர், இன்று பிற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது 'இலங்கையின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் விட்டுக்கொடுக்க முடியாது' என இந்திய ராஜ்யசபா எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவ…
-
- 5 replies
- 838 views
-
-
நீதி, சமாதானத்தை நிலைநாட்ட அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துள்ளது பயங்கரவாதத்தை தோற்கடித்து நாடு சட்டத்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் நீதியையும் சமாதானத்தையும் பலப்படுத்த அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டத்தின் முன்னிலையில் சகலரும் சமம் என தெரிவித்த அவர் கே.பி.க்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால் அதனைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் பாரிய குற்றவாளிகளுக்கும் ஐ. தே. க. மன்னிப்பு வழங்கியது என தெரிவித்த அமைச்சர் தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினருக்குக்கூட அரசாங்கம் …
-
- 0 replies
- 398 views
-
-
வட மாகாண தேர்தலுக்கு தயார் - தேர்தல்கள் ஆணையாளர் வட மாகாண தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதும் திகதி குறிப்பிடப்படும் என்று தெரிவித்த அவர் வடமாகாண தேர்தலை செப்டெம்பரில் நடத்துவது உறுதியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 243 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரமுடியுமே தவிர, அரசியல் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முடியாது. அரசியல் தீர்வுக்கான 'மந்திரக்கோல்' இந்தியாவிடம் இல்லை என்று இந்திய தூதுக்குழு தமிழ் மக்களுக்கு தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கில் சமூகப் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதுக்குழுவின் தலைவரான பாரதீய ஜனதா கட்சியின் ரவிசங்கர் பிரசாத், வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு அடிப்படை உதவிகள் அவசியமானவை என்றும் அதை செய்து தர இந்தியா தயாராக உள்ளதாகவும் ஆனால் அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்தியாவிடம் அப்படிப்பட்ட '…
-
- 13 replies
- 982 views
-
-
13ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்தியா முக்கிய பேச்சுகளை நடத்துமென இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு நேற்றுக்காலை புதுடில்லியிலுள்ள "ஜன்பத்' இல்லத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்தது. அமைச்சர் ஆறுமுகனுடன் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மதியுகராஜா, அனுஷியா சிவராஜா ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமியும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இங்கு விரிவாகப் பேசப்பட்டதுடன் தமிழ் மக்கள…
-
- 1 reply
- 554 views
-
-
முல்லைத்தீவு கொக்கிளாய் கிராமத்தில் தனியார் மற்றும் அரச காணிகளில் அமைக்கப்பட்ட பெளத்த விகாரையினை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 1984 ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் மக்களிடைய நிலங்களை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் சிங்கள மக்களுக்காக தனியாருக்கும் மற்றும் அரசாங்க வைத்தியசாலைக்கும் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் பெளத்த பிக்கு ஒருவரால் அடாத்தாக பிடிக்கப்பட்டிருந்தது. இன்நிலத்திற்கு சொந்தமான தமிழர்கள் வழக்கு தொடர இந்த நிலையில் அவர்கள் அச்சுறுத்தபட்டதுடன், நீதிமன்றத்தை நாடாமலும் தடுக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குறித்த நிலத்தில் குடிசை அமைத்துக் கொண்ட பெளத்த பிக்கு அந்த நிலத்தில் அரச மரத்தின் கீழ் இருந்த…
-
- 1 reply
- 348 views
-
-
யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட பாடசாலைகளில் 86 பாடசாலைகள் இன்னமும் மீளஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளன. அதிகளவான பாடசாலைகள் இராணுவ உயர்பாதுகாப்புவலயம் காரணமாகவும் மீள்குடியேயற்றப் பிரச்சினைகள் காரணமாகவுமே திறக்கப்படாதநிலையில் மூடுண்டு காணப்படுகின்றன. வடமாகாணத்தில் மொத்தமாக ஆயிரத்து 55 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் தற்பொழுது 969பாடசாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. பெருமளவான பாடசலைகள் இராணுவத்தால்இன்னமும் விடுவிக்கப்படாத நிலையிலேயே மீள இயங்க முடியாத நிலையிலுள்ளன. வலிகாமம் கல்வி வலயத்தில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக மாத்திரம் 17பாடசாலைகளும் தீவகத்தில் 16 பாடசாலைகளும் திறக்கப்படாத நிலையில் தொடர்ந்துமூடப்பட்டுள்ளன. இந்த தகவலை வடமாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கல்…
-
- 0 replies
- 356 views
-