ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
மடுவுக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பம் மடுவுக்கான புகையிரத சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மதவாச்சியிலிருந்து மடுவரையான 43 கிலோமீற்றர் கொண்ட புகையிரதப்பாதை 81.34 மில்லியன் டொலரில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகையிரதப் பாதையை மீள நிர்மாணிப்பதற்காக இந்திய நிறுவனமொன்று நிதியை வழங்கியுள்ளது. அதன்படி மடுவிற்கான முதலாவது புகையிரத சேவை அநுராதபுரத்திலிருந்து காலை 9.00 மணிக்குப் புறப்பட்டு மடுவை வந்தடைந்தது. இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, பிரதியமைச்சர் றோஹன திசாநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் அமைச்சர்கள் பலரும் பயணத்…
-
- 0 replies
- 656 views
-
-
பௌத்த தர்மத்தை இல்லாதொழிக்க சதித்திட்டத்தை முன்னெடுத்து வரும் கடும் போக்கு இந்துத்வ அமைப்பான சிவசேனா அமைப்பிற்கும் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையே தொடர்புள்ளதாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சாட்டினார். நோர்வேயிடம் நாம் பணம் பெற்றோம் என்ற குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அடுத்த நிமிடமே எமது அமைப்பை கலைத்து விட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவோம் என்றும் தேரர் தெரிவித்தார். கொழும்பில் சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொது பலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே கலகொட அத்தே ஞான சார தேரர் இதனைத் தெரிவித்தார். தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அமைச்சர் விமல் வீரவன்ச தேசபற்று …
-
- 0 replies
- 522 views
-
-
இலங்கையில் இயங்கிவரும் முஸ்லிம் அடிப்படையான இயக்கங்களான அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத் மற்றும் தௌபீக் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து அதனோடு தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுமென பொது பலசேனா தெரிவித்தது. பாகிஸ்தான் ‘‘பாபுல்’’ விற்பனையை தடை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் எமது சிங்கள இளைஞர்கள் சிந்திக்க முடியாத மன நோயாளர்களாக மாறிவிடுவார்கள் என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது. கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே பொதுபலசேனா இவ்வாறு தெரிவித்தது. இங்கு உரையாற்றிய இவ் அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர், பொதுபலசேனாவை பயங்கரவாத அமைப்பு என்றும் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்கின்றார்களெ…
-
- 0 replies
- 405 views
-
-
யுத்த சூனியப் பிரதேசம் என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படத்தினை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடவும் இது குறித்து விவாதமொன்றை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை மனித உரிமை கண்காணிப்பகம், சர்வசேத மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடி குழு ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ் ஆவணத் திரைப்படம் திரையிட்டதன் பின்னர் இடம்பெறவுள்ள குழு விவாதத்தில் ஐரோப்பிய நிறுவனங்களின் அலுவலக பணிப்பாளர் நிக்கொலஸ் பெகர், சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் அலன் கீனன், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் லோட் லீச…
-
- 0 replies
- 408 views
-
-
வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வுகூறியுள்ளது. எதிர்வரும் நாட்களில் வடக்கில் நிச்சயமாக தேர்தல் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் வேலாயுதம் தெரிவித்துள்ளார். எனவே, சவால் விடுத்ததனைத் போன்று விமல் வீரவன்ச ஆளும் கட்சியிலிருந்து வெளியேறி பதவி துறப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே தினக் கூட்டத்தில் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை அரசாங்கத்திற்கு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91731/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 333 views
-
-
யுத்தத்தில் உயிரழிந்தோரை நினைவு கூறும் வகையில் வவுனியாவில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த நூற்றுக் கணக்கான தமிழ் மக்களை நினைவு கூர்ந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய அரசியல் தலைர்கள், யுத்தத்தில் சொந்தங்களை இழந்தவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களும் புள்ளி விபரங்களை வெளியிட்டிருந்தன. எனி…
-
- 0 replies
- 442 views
-
-
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் மலையகத்தின் பல பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தில் மூன்றும் பேரும், தலவாக்கலையில் ஒருவரும், நாவலப்பிட்டியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குகின்றார். மலையகத்தின் பல பகுதிகளில் இடைவிடாது பெய்த மழை காரணமாக அநேகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மண் சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஹட்டன், டிக்கோயா, தலவாக்கலை, சாமிமலை, மஸ்கெலியா, நுவரலியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.…
-
- 0 replies
- 297 views
-
-
கழுதைகள் தொடர்பாக தமிழில் பல பழமொழிகள் உள்ளன. 'கழுதை கெட்டால் குட்டிச்சுவர்' என்பது முதல் 'கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டதைப் போல' என்பது வரை சில 'கழுதை மொழிகள்' இதற்குள் அடங்குகின்றன. இவ்வாறான கழுதை மொழிகளில் 'கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவலக்குரல் ஒழிய ஆங்கேதும் இல்லை!' என்பதையும், 'கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைக்கு அஞ்சலாமோ' என்பதையும் இலங்கை தொடர்பான பதிவுக்காக செய்தி வீச்சு இன்று தெரிவு செய்கின்றது. போருக்குப் பின்னரான நல்லிணக்கம், இயல்புநிலை என கொழும்பு அதிகார மையம் சில 'காட்சிப்படுத்தல்களை' மேற்கொண்டாலும், மறுபுறத்தே P.T.A என்ற நாசகாரத்தனம் வாய்ந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அது மீண்டும் தீவிரமாக சுழற்சிக்கு விட முனைகிறது. இது கழுதைக்கு உபதேசம் காத…
-
- 0 replies
- 538 views
-
-
சிவராம் படுகொலை வழக்கு விசாரணை எட்டு ஆண்டுகளுக்கு பின் இன்று ஆரம்பம் ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதற்தடவையாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் சடலம் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது. சிவராம் கொலை தொடர்பில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற நபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊடகவியலாளர் குசல் பெரேரா நீதிமன்றத்தில் சாட்ச…
-
- 3 replies
- 957 views
-
-
சிறீலங்காவின் கொழும்பில் பள்ளிவாசல் மீது தாக்குதல்! மே 14, 2013 கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதன் அண்மையிலிருந்த வர்த்தக நிலையம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இந்தத் தாக்குதல் காரணமாகப் பள்ளிவாசலுக்கும் வர்த்தக நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது. இது தொடர்பில் இருவர் வெல்லம்பிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியோர் மது போதையில் காணப்பட்டனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.http://www.sankathi24.com/news/29536/64//d,fullart.aspx
-
- 0 replies
- 632 views
-
-
யாழில் அடை மழை; மினி புயலினால் 25 வீடுகள் சேதம் திங்கட்கிழமை, 13 மே 2013 09:43 -என்.நவரத்தினராசா,-கு.சுரேன்.-சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினி புயல் காற்று காரணமாக மல்லாகம், கோணப்புலம் முகாமிலுள்ள 25 இற்கும் மேற்பட்ட தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் முறிந்து விழுந்த நிலையிலும காற்றினால் கூரைகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் இத்தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதேவேளை, யாழ். மாவிட்டபுரம், மாவை கலட்டி பகுதியில் பனை மரமொன்று முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது. இந்த அசம்பாவித…
-
- 1 reply
- 606 views
-
-
போருக்கு பின்னர் வன்னியில் எவரும் காணாமல் போகவில்லை - போனிபஸ் பெரேரா 14 மே 2013 போருக்கு பின்னர் வன்னியில் எவரும் காணாமல் போகவில்லை எனவும் எவராவது அவ்வாறு காணாமல் போயிருந்தால், அவர் யார், எங்கு வைத்து காணாமல் போனார் என்பதை தெரிவித்தால், தான் அரசாங்கத்தின் சார்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான கலந்துரையாடல்களுக்கு தயாராக இருப்பதாக வன்னி இராணுவ கட்டளைத் தளபதியும் காணாமல் போனவர்கள் தொடர்பான அதிகாரியுமான மேஜர் ஜெனரல் போனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். போருக்கு பின்னர், வன்னியில் எவரும் காணாமல் போகவுமில்லை கடத்திச் செல்லப்படவுமில்லை. அவ்வாறு நடந்துள்ளது என எவராவது கூறினால் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். காணாமல் போதல், கடத்தல் சம்பவங்கள் குறித்து அரசாங்…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கை: “அமெரிக்காவுடன் டீல் பண்ணுறதை விட, ஆபிரிக்கா போகலாமுங்க!” திங்கட்கிழமை, 13 மே 2013 13:15 “இலங்கை, அமெரிக்கா பிரிட்டன் போன்ற மேலை நாடுகளுடன் டீல் பண்ணுவதைவிட ஆபிரிக்க நாடுகளுடன் டீல் பண்ணினால், அதிக பலன் கிடைக்கும்” இலங்கையின் வெளியுறவு அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்கா பிரிட்டன் போன்ற மேலை நாடுகள் தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தங்களையே கொடுத்து வருகிறன. இந்த நாடுகளுடன் உறவினை வைத்துக் கொள்வதால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆனால், ஆபிரிக்க நாடுகள் இலங்கையின் நலனில் அக்கறை கொண்டுள்ளன. ஆபிரிக்க நாடுகளுடன் உறவினை நீடிப்பதன் ஊடாகமூலம் இலங்கை சிறந்த அனுகூலங்களை பெற்றுக் …
-
- 3 replies
- 2.6k views
-
-
விடுதலை செய்யப்பட்ட போதிலும் அசாத் சாலியை தொடர்ந்தும் கண்காணிக்குமாம் புலனாய்வுப் பிரிவு! [Monday, 2013-05-13 18:54:11] கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டாலும் தொடர்ந்தும் அவரது செயற்பாடுகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களை ஆயுதப்போராட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார் அதன் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்ததாக பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டிருந்தார். …
-
- 3 replies
- 492 views
-
-
பதிவு விவகாரத்தில் தான் முரண்பாடு, தேர்தலை எதிர்கொள்வதில் இணக்கப்பாடு [ திங்கட்கிழமை, 13 மே 2013, 01:13 GMT ] [ தா.அருணாசலம் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்து கொள்வது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்களில் இறுதி முடிவு எட்டப்படாத போதிலும், வடக்கு மாகாணசபைத் தேர்தலை ஒரே அணியாக எதிர்கொள்வது என்று இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழரசுக் கட்சியை ஏனைய நான்கு கூட்டணிக்கு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. தமிழரசுக் கட்சி அதற்கு பின்னடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மன்னார…
-
- 3 replies
- 495 views
-
-
பவித்திராதேவி மின் கட்டணத்தை அதிகரித்ததால் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அச்சமடைந்துவிட்டார்.அதனால் பிரிட்டிஷ் பிரதமரைத் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட அவர்,”கெமரூன், நமது நாட்டு மின்கட்டணத்தைவிட இலங்கையின் மின் கட்டணம் அதிகரித்துவிட்டது.நான் இலங்கைக்குச் சென்றால் எனக்கும் அதற்குப் பணம் செலுத்தவேண்டி ஏற்படும் அதனால் இலங்கைக்கு நான் செல்லவில்லை” என்று கூறியுள்ளார். இவ்வாறு இலங்கையில் இடம்பெறவிருக்கும் பொது நலவாய மாநாட்டில் பிரிட்டிஷ் மகாராணி பங்கேற்காதமைக்குரிய காரணத்தை எடுத்துக் கூறியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. எலிசபெத் மகாராணிக்கே இலங்கையின் மின்கட்டணத்தை செலுத்த முடியாதெனில் ,அயல் வீட்டிலுள்ள எலிசபெத் எவ்வாறு செலுத்துவார்? எலிசபெத் மகாராணி கூட இலங்க…
-
- 0 replies
- 759 views
-
-
இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாசேனன் மன்னரின் பெயரை அழிவுகளை ஏற்படுத்தும் புயலுக்கு பயன்படுத்தாது, பிசாசுகளின் பெயர்களை பயன்படுத்தியிருந்தால் மிகவும் நல்லது. இதனை விடுத்து எதற்காக இலங்கையை ஆட்சி செய்த மன்னரின் பெயரை சூட்டினர் எனவும் வரலாற்றை அறியாதவர்களின் வேலையாகவே தாம் இதனை கருதுவதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=82620&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 446 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் ஆறு குதிரைகள் இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இந்த குதிரைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் எஸ்.பி.பட் இந்த குதிரைகளை இலங்கை இராணுவத்திடம் கையளித்தார். இலங்கை இராணுவத்தில் முதற் தடவையாக குதிரை படையை உருவாக்குவதற்காவே பாகிஸ்தானிய அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு குதிரைகளினதும் பெறுமதி ஒரு கோடி ரூபாயாகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67028-2013-05-13-11-56-43.html
-
- 0 replies
- 372 views
-
-
மொரிசியஸ் நாட்டில் அந்நாட்டு தமிழ் மக்களால் முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நாளை யொட்டி மொரிசியஸ் நாட்டில் உள்ள தமிழ் ஆலயங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக பூஜைகளும் அதன் பின் மொரிசியஸ் பாராளுமன்றம், இந்திய, அமெரிக்க தூதராலயங்ககளை நோக்கி எழுச்சி பேரணியும் நடைபெற்று, மே 18 ஆம் திகதி உலகத் தமிழ் மக்களுடன் சேர்ந்து மே 18 நினைவேந்தலும் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு ஒழுக்கு செய்து நடத்துகிறது. அத்துடன் மே 18 ஆம் திகதி Beau Bassin என்னும் இடத்தில் இருந்து எழுச்சி பேரணி Plaza வரை சென்று அங்கு சிறி லங்காவில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக நினைவு தூபி ஒன்று திறந்து வைக்கப்படுகிறது. மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும், ம…
-
- 0 replies
- 475 views
-
-
இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது என பிரியாவிடை பெற்றுச் செல்லும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமையை, இலங்கைக்கு எதிரான தீர்மானமாக கருதக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் விருப்பங்களுக்கு எதிரான வகையில் இந்தியா ஒரு போதும் செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய இலங்கை அடிப்படை விருப்பங்களுக்கு இடையில் இடைத்தொடர்பு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையுடனான உறவுகளில் எவ்வித விரிசலும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில சந்தர்ப்பங்களில் சில விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடு காணப…
-
- 0 replies
- 246 views
-
-
நிதி திரட்டியதாக நிரூபித்தால் 2 மணத்தியாலத்தில் அமைப்பை கலைக்க தயார் - பொதுபல சேனா பொதுபல சேனா அமைப்பானது நோர்வே, அமேரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிடம் நிதி திரட்டியதாக நிரூபித்தால், இரண்டு மணிநேரத்துக்குள் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவதாக அதன் செயலாளர் கலபோடஎத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விமல் வீரவன்ச பொதுபல சேனா அமைப்பு மேற்கத்தைய நாடுகளில் நிரட்டியதாக கூறியதாகவும், அதனை அவர் நிருபிக்கும் படி தாம் சவால் விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். தமது அமைப்பு மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து ஐந்து சதத்தைக் கூட பெறவில்லை எனவும் தேரர் கூறியுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் விமல் வீரவங்ச இந்தியாவின் சிவசேனா அமைப்புடன் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகம் இருப்ப…
-
- 1 reply
- 354 views
-
-
அரசியலுக்குள் பிரவேசிக்கும் உத்தேசம் இல்லை! - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதியரசர் விக்னேஸ்வரன்!! 'தற்போதைக்கு அரசியலுக்குள் பிரவேசிக்கும் உத்தேசம் எனக்கு இல்லை. வடக்கில் முதலமைச்சர் பதவியை விரும்பியதுமில்லை. சமூகப் பணிகளில் ஈடுபடவே நான் விரும்புகின்றேன். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டிய அறிவுரைகளை வெளியிலிருந்து நான் வழங்கிக்கொண்டிருப்பேன்' என முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்குள் பிரவேசிக்கவுள்ளார் எனவும், அவரை வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசித்து வருகின்றது எனவும் அண்மை நாட்களாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நி…
-
- 4 replies
- 805 views
-
-
விமல் வீரவன்ச ஏன் இன்னும் அரசாங்கத்தில் இருக்கிறார் ? வடக்கில் தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சொல்லும் விமல் வீரவன்ச, இப்போதே தனது பதவியிலிருந்து விலக முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார். வட மாகாண சபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், வடக்கில் தேர்தல் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எனினும் தற்போதும் அரசாங்கத்திலேயே வீரவன்ச இருப்பதாக கே.வேலாயுதம் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (13) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=38…
-
- 2 replies
- 375 views
-
-
யாழில் சட்டவிரோத மண் அகழ்வால் மக்கள் சிரமம் யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு வெங்கி ராயன் வயல்வெளிகள் பெருமளவான பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மண் அகழ்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப் பகுதியில் உள்ள வயல் நிலங்கள், வயல் வரம்புகள் முதலானவற்றில் உள்ள மண்களை வெட்டி, உழவு இயந்திரங்கள் மூலமாக வெளியிடங்களிற்குக் கொண்டு சென்று விற்கப்படுகின்றன. தொடர்ந்து இவ்வாறு மணல் அகழ்வதனால் கடல்நீர் வயல் நிலங்களிற்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவராக மாறும் அபாயம் உள்ளது. மேலும் இவ் உழவு இயந்திரங்கள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளிலும் மணல் ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளின் துணையுடன் வீதியினைக் கடந்து செல்வதனைக் காணமுடிகின்றது. எனவே குறித்த பகுதிகளில் தொடர்ந்தும…
-
- 1 reply
- 840 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை அடுத்து பெய்துவரும் அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. அட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ரயில் நிலைய ஊழியர்களின் விடுதி மீது மண் மேடு சரிந்து வீழ்ந்தமையால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அட்டன் நகரை அண்டிய பல பிரதேசங்களில் பெய்தகடும் மழைக்காரணமாக வீடுகளினுள் வெள்ளம் உட்புகுந்தமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அட்டன் நகரின் அபுசாலி பூங்காவுக்கு அருகிலுள்ள பாதையில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் மூன்று வாகனங்கள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. டிக்கோயா நகரில் ஒரு பகுதியில் …
-
- 0 replies
- 359 views
-