Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா ஆலோசனை குழுவின் தலைமைப் பொறுப்பில் சமித்ரி ரம்புக்வெல வியாழக்கிழமை, 02 மே 2013 17:30 ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடுகளை ஏற்பாடு செய்வது தொடர்பிலான ஆலோசனை குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான சமித்ரி ரம்புக்வெலவிற்கே தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2013/2014ஆகிய ஆண்டு கால பகுதியில் குழுக்களின் தலைமையை இவர் வகிப்பார். சமித்ரி ரம்புக்வெல்ல ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நியமனத்திற்காக ஆசிய பசுவிக் அரச குழுவின் அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த குழுவிற்கான உறுப்புரிமை இந்த வருடமே இலங்…

  2. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கையில் பொதுநலவாய மாநாடா ? இலங்கைக்கு எதிராக பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டை அங்கு நடத்துவது அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் ஒருவரான யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரிக்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்களில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தனது சொந்த மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தற்போதும் தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஏபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அ…

  3. கொடிகாமம் மாவீரர் இல்லமும் பறிபோகின்றது! வடக்கினில் தொடரும் இராணுவ நில ஆக்கிரமிப்பின் ஓர் கட்டமாக கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லமும் சுவீகரிப்பிற்குள்ளாகியுள்ளது. வறணி- கொடிகாமம் வீதியினில் குறித்த தென்மராட்சி பிரதேசத்திற்கான விடுதலைப்புலிகளது மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்தது.1996ம் ஆண்டு படையினரால் யாழ்குடாநாடு கைப்பற்றப்பட்டவேளை இம்மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் ரணில் -புலிகள் ஒப்பந்தத்தையடுத்து குறித்த மாவீரர் துயிலுமில்லம் மீளகட்டியெழுப்பப்பட்டிருந்தது.எனினும் 2008ம் ஆண்டினில் இராணுவத்தினால் அது மீண்டும் இடித்தழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையினில் தற்போது குறித்த மாவீரர் துயிலுமில்ல வளவினில் படைத்தளமொன்றை அமைத்து படையினர் ந…

  4. வலி. கிழக்கு மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தியது ஏன்? வலி.கிழக்குப் பிரதேசசபை கடந்த நான்கு நாள்களாக இருபாலை, கோப்பாய் கிராமங்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தைத் திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் குடிதண்ணீர் இன்றிப் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். பிரதேச சபையின் பவுசர் மூலம் இந்தப்பகுதி மக்களுக்குத் தினமும் இரண்டு தடவைகள் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அருகில் உள்ள நன்னீர் குழாய்க் கிணற்று நீர் மூலம் கடந்த சில வருடங்களாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடும் வறட்சியான இந்தக் காலத்தில் குடிதண்ணீர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளமை குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்…

    • 0 replies
    • 464 views
  5. "19 மே 2009க்கு முன்னதான நிலைப்பாட்டிற்கு TNAசெல்லுமானால் கட்சியைக் கலைத்துTNA யில் இணைவோம்" 01 மே 2013 தமிழ் தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென கூறட்டும் நாங்கள் எமது கட்சியை கலைத்து விட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று மாலை வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகளின் மத்தியில் ஒவ்வொரு தரப்பும் தம்மோடு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துவருகின்…

    • 2 replies
    • 418 views
  6. சிறீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் மறுபக்க கொலை ஆதாரங்கள் May 01, 20137:55 am தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையில் இன நல்லுறவை வலுப்படுத்தி இருதரப்பு நலன்களையும் பேணும் முகமாக, சிறீலங்கா முஸ்லீம் கொங்கிரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பை தனது அரசியல் இருப்புக்காக நிராகரித்தவர் ரவூப் ஹக்கீம். அதேவேளை, சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா சட்டத்துக்கு முரணாண வகையில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட போது நீதி அமைச்சராக இருக்கும் ரவூப் ஹக்கீம், பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் காத்தார். ஆனால், தீடிரென்று தமிழர் நலனில் அக்கறை உள்ளது போல், தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று உபதேசிக்க முற்படுகிறார். ச…

  7. -சுமித்தி தங்கராசா கொடுத்த பணத்தினை கேட்டு சென்ற இருவர்; மீது 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை துண்டி சந்தியில் இந்த சம்பவம் இன்று மதியம் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேகரம் பிரேமம்காந் (வயது 26) சதர்சன் நிரூபன் (வயது 27) குணசேகரம் பிரசாத் (வயது 24) வட்டுக்கோட்டைப் பகுதியசை; சேர்ந்த காந்தன் ஆகியோருமே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குணசேகரம் பிரேம் காந் என்பவருக்கு கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் கொடுக்க வேண்டியிருந்துள்ளது.அந்த பணம் தருமாறு கேட்டு …

  8. சிறிலங்காவுக்கான 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா [ புதன்கிழமை, 01 மே 2013, 01:54 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடையை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. சிறிலங்காவின் நீதி அமைச்சு அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற்திறனின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே அமெரிக்கா இந்த நிதியை மீளப்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் நீதித்துறையை தரமுயர்த்தும் நோக்கில், சட்டரீதியான தாமதங்களை தவிர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காகவே இந்த நன்கொடையை அமெரிக்கா வழங்கியது. சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக…

  9. ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடுகளை ஏற்பாடு செய்வது தொடர்பிலான ஆலோசனை குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நியோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான சமித்ரி ரம்புக்வெலவிற்கே தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2013/2014ஆகிய ஆண்டு கால பகுதியில் குழுக்களின் தலைமையை இவர் வகிப்பார். சமித்ரி ரம்புக்வெல்ல ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நியமனத்திற்காக ஆசிய பசுவிக் அரச குழுவின் அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த குழுவிற்கான உறுப்புரிமை இந்த வருடமே இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த குழு நியமிக்கப்பட்ட பின்னர் மிகக் குறைந்த வயதில் தலைம…

  10. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவப் பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன இதனால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றார்கள். வீடுவீடாகச் செல்லும் படையினர் குடும்ப விபரங்கள் முழுவதையும் கேட்டுப் பதிவதுடன் வீட்டுக்காரர்களின் தொலைபேசி இலக்கங்களையும் கேட்டுப் பதிவு செய்து வருகின்றார்கள். ஏன் பதிவு செய்கின்றீர்கள் என்று மக்கள் இராணுவத்திடம் கேட்டதற்கு உங்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் வழங்கவும், உதவித் திட்டங்கள் பல வழங்கவுமே இந்தப் பதிவுகள் என்று படையினர் மக்களிடம் கூறுகின்றார்கள். பதிவு என்று கூறி வீடுகளுக்கு வரும் படையினர் தனிமையில் இருக்கும் தமது பெண் பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் கிராமங்களில் பல மக்கள் அச்ச…

  11. மக்களின் எதிர்ப்பிற்கு பயந்த அரசாங்கம், மின் கட்டண உயர்வில் ஒரு அடி பின்வைத்துள்ள இந் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு குடும்ப ஆட்சியை விரட்டுவதற்கு அணிதிரள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்தார். பத்தரமுல்லையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்விற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான சலுகைகளை வழங்கி மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றியது போதும், உயர்த்திய மின்கட்டணத்தை உடனடியாக அரச…

  12. இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையை பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழி ஏற்படுத்தப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்ட மேதின நிகழ்வின்போது சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தனித்துவமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வினை மக்களோடு மக்களாக ஒன்றுசேர்ந்து அனுஷ்டித்து வருகின்றது. அந்தவகையில் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசுடன் ஒன்று சேர்…

  13. கடந்த வருடம் தங்காலை பகுதியில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் குழுஒன்றினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதுடன். மற்றுமொருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான விசாரணைகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்டன்ஸன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டன்ஸன் இது தொடர்பாக கருத்துதெரிவிக்கையில், இலங்கை ஒரு பாதுகாப்பு அற்ற நாடு இந்த நிலையில் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கொஞ்சமும் பாதுகாப்பு இல்லை.அத்துடன் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜைக்கு நியாயம் கிடைக்க…

  14. சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும், மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும், தமிழர் தாயகப் பிரதேசத்தில் தனியார், பொது நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் அரச படைகள் வெளியேற்றப்படவேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் வளாகத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: 1. அரச, அரச சார்பற்ற, தனியார் ஊழியர் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும் என்பதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அடித்தட்டு மக்களின் வருமானத்திற்கும், வாங்கும் சக்தி…

  15. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில் மலேசியாவில் உள்ள இளையவர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர் . 2009 ஆண்டு ஈழத்தில் தமிழ் மக்களை கொடுரமாக கொலை செய்த ராஜபக்சேவிற்கு ஆதரவளித்தும் ஐநா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவாகவும் செயல்பட்ட நஜிப் அப்துல் ரசாக்க்கு எதிராக போராட்டம் நடை பெற்றது . நஜிப் அப்துல் ரசாக் அவர்களை நாளை மறு நாள் நடை பெற இருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிப்பதாகவும் தமிழ் மக்கள் வாக்குகள் இனி வரும் காலங்களில் நஜிப் அப்துல் ரசாக் அவர்களுக்கு கிடைக்காது என்றும் மலேசியாவில் போராட்டம் நடத்தினர் . இதில் தமிழ் இன படுகொலைக்கு துணை நின்ற சோனியா காந்தி மற்றும் கருணா , மன்மோகன் சிங் , கருணா நித…

    • 0 replies
    • 348 views
  16. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் என்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றதோ அன்றைய தினத்தில்தான் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துப் பகுதி மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நேற்று கொழும்பு சோண்டர்ஸ் மைதானத்தில் (பிரைஸ் பார்க்) ஏற்பாடு செய்திருந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டன…

  17. தமிழ் மக்கள் தமது நிலப் பிரதேசத்தை ஆட்சி செய்கிற அதிகாரம் கிடைக்கும் வரைக்கும் போராடியே ஆகவேண்டும் என்று மே தினத்தில் அறைகூவல் விடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. "எமது இனம் விடுதலை அடைந்தால்தான் எமது தொழிலாளர்கள் விடுதலை யடைவார்கள்'' என்று கூறினார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா. கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றது. பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவை சேனாதிராசா "சர்வதேச நாடுகளால் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, இன்று மே தினம் கொண்டாடுகின்றார். இதுதான் ஆசியாவ…

  18. இலங்கையர்களை ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் இந்திய கும்பலை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை சட்டவிரோதமான முறையில் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் குறித்த கும்பல் ஈடுபட்டிருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. ராமநாதபுரம் பிரதேசத்தில் இந்த இருவர் அடங்கிய கும்பலை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.போலியான இந்தியக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து 71 போலிக் கடவுச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.சந்தேக நபர்களிடமிருந்து 11.5 லட்ச ரூபா இந்தியப் பணமும் மீட்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articl…

  19. நாட்டில் பௌத்த தலிபான்வாதம் உரவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக காலி பேராயர் ரேய்மன்ட் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பு போன்ற சிங்கள பௌத்த அமைப்புக்களினால் சிறுபான்மை மக்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து சில ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வேறும் வகையிலான வன்முறைகள் சமூகத்தில் உருவாகக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளின் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பெருமளவிலான பௌத்த அமைப்புக்கள் இனவாதத்தையோ குரோத உணர்வுகளையோ தூண்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒருசில அமைப்புக்கள் இனவாத அடிப்படையில் செ…

  20. முஸ்லிம் தமிழ் தேசிய ஐக்கிய ஒன்றியத்தின் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயருமான அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் அசாத் சாலியை சற்று முன்னர் கைது செய்துள்ளனர். அசாத் சாலியை கொலன்னாவையில் அமைந்துள்ள வீட்டில் வைத்து கைது செய்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு;ள்ளார். எனினும், எவ்வாறான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்தத் தகவல்கள் வெளியிடப்படவில்லை. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91345/language/ta-IN/article.aspx

  21. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலப் பகுதியின் விசாரணைக்கென விடுக்கப்படும் நான்காவது அழைப்பு இதுவென சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். கிளிநொச்சியில் படைத்தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒன்று தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக கூறியே இம்முறை மேலதிக விசாரணைக்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதாக சிறீதரன் மேலும் தெரிவித்தார். முன்னதாக நல்லூரிலுள்ள தனது வீட்டிற்கு சென்ற இருநபர்கள் தம்மை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரென அடையாளப்படுத்தி தம்மை பற்றிய விபரங்களை குடும்பத்தவர்களிடம் கோரிப் பெற்றிருந்த…

  22. இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான யுத்தம் தொடங்கிவிட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்திற்கு நாம் திரும்பத்திரும்ப எச்சரிக்கை விடுத்தோம். இனிமேலும் எச்சரிக்கை விடுக்கப்போவதில்லை. அரசாங்கத்தை நாம் விரைவில் கவிழ்ப்போம் என்றும் அவர் சொன்னார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பித்து விட்டது. அதற்காக சமயத்தலைவர்கள் மற்றும் சிவில் சமுகத்தினர் உட்பட பலத்துறைகளைச்சேர்ந்தோரும் வீதியில் இறங்கி போராடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். நியாயப்ப…

    • 2 replies
    • 1.1k views
  23. “சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறைவைக்கப்படிருக்கும் ஈழத்தமிழ் அகதிகலை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக்குடியுரிமை வழங்கு ! ” என்றமுழக்கங்களை முன் வைத்து மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி , பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் பேருந்து ரயில் முதல் தமிழகத்தின் தெருக்கள், ஆலைவாயிகள் கல்லூரிகள் என எங்கும் பிரச்சாரம் நடத்தின. ஒரு மாதம் நடந்த பிரச்சாரத்தின் முடிவாக சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து பேரணியும் டிஜிபி அலுவலக முற்றுகையும் அறிவிக்கப்பட்டது. தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமைகளை போராடித்தான் பெறமுடியும் என்று நிரூபித…

  24. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருனுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை விவகாரங்களை கருத்திற் கொண்டு மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சில நாடுகளும் மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் பிரித்தானியா மாநாட்டில் பங்கேற்பது உசிதமாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது. கமரூன் மாநாட்டில் பங்கேற்றால் அது பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளை உதாசீனம் செய்ததாக அர்த்தப்படும் என மனித உரிமை செயற்பாட்டாள…

  25. வழக்குகள் மூலம் உலகை உலுப்புங்கள்: வடக்கு மக்களுக்கு சுமந்திரன் அழைப்பு அரசாங்கம் பத்து வருடங்களாக உயர் நீதிமன்றத்தை ஏமாற்றி அதனை எவ்விதம் நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியாத விடயமல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (29) காலை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாம் சமாதனமான சூழ்நிலையில் போகவேண்டிய நிலையில் உள்ளோம். இன்றைக்கு நாங்கள் போராடுகின்ற முறைமைகளில் மாற்றங்கள் தேவை. இலங்கையில் உள்ள நீதிமன்றங்களை நிரப்பிய பின்னரே நாங்கள் சர்வதேச அரங்குக்கு செல்ல முடியும். ஆகையினாலே நீதிமன்றத்தை நம்பி நாங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.