ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
Published By: VISHNU 18 JUL, 2024 | 09:18 PM எமது நிலப்பரப்பையோ அல்லது கடற்பரப்பையோ இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு அக்கறைகளுக்கு எதிரான விதத்தில் மூன்றாம் தரப்பொன்று பயன்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சீனாவுக்கு சொந்தமான ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் தரித்து நின்று ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி கோருவதும், அதனை அனுமதிப்பது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென இந்தியாவுக்குச் சார்பான தரப்புக்கள் மறுதலிப்பதுமான சம்பவங்கள் கடந்த ஓரிரு ஆண்டுகளில் சில தடவைகள் பதிவாகியிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் ச…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
தனது ‘சிங்கபாகு’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியமை தொடர்பாக, திரைப்பட இயக்குநரும் இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் (FDGSL) தலைவருமான சோமரத்ன திஸாநாயக்க திரையரங்குகளில் போன்கள் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். . “தேவையற்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். திரையரங்குகளில் மொபைல் போன்களை தடை செய்வதுதான் நாம் செய்ய முடியும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏன் பின்பற்ற முடியாது ” என்று திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “ஒரு திரைப்படத்தை ரசிக்க மக்கள் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் உணர…
-
- 2 replies
- 571 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் வைத்திய நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வைத்தியசாலையை அண்டிய வீதியோரத்தில் பாடசாலை முடிந்தவுடன் மகளை ஏற்றி வந்த தந்தையும் மகளும் தெருவில் நின்ற நாய் ஒன்றுடன் மோதுண்டு இருவரும் காயங்களுடன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இந்தநேரம் கடமையில் இருந்த தாதியர்கள் "வைத்தியர் இல்லை" எனக் கூறியுள்ளதோடு ஒரு மணி நேரம் காத்திருந்தும் அவர்கள் காயத்துக்கு மருந்து அளிக்காமலும் அவர்களை உள்ளேயும் எடுக்காமல் காத்திருக்க வைத்துவிட்டு கடமை பொறுப்புணர்வு இன்றி செயல்பட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு குறைபாடுகள் இந்நிலையில், ப…
-
- 2 replies
- 415 views
- 1 follower
-
-
சுழிபுரம் - பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவமானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேற்படி ஆலயத்தின் திருவிழாவானது கடந்த 05.07.2024 அன்று ஆரம்பமாகி, 12 தினங்கள் வெகு சிறப்பாக திருவிழாக்கள் இடம்பெற்றன. 13ஆவது நாளான நேற்றையதினம் பொங்கல் உற்சவம் இடம்பெற்றது. ஆலயத்தின் கிரியை ஆலயத்தின் கிரியைகளை சிவசிறி குகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பக்தர்கள் காவடி, பாற்செம்பு, கற்பூரச் சட்டி, அங்கப் பிரதிஷ்டை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். குறிப்பாக பக்தர் ஒருவர் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து தூக்குக் காவடி எடுத்து, 130 கிலோமீட்டர்கள் தூரம் தாண்டி வந…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 18 JUL, 2024 | 01:33 PM தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள பெறமுடியாமையினால் மனமுடைந்த குடும்ப பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். உறவு முறையான இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்த போது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்று, தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார். பண உதவியை பெற்றுக்கொண்ட பெண், பணத்தினை மீள செலுத்தாத நிலையில், வங்கியில் கடன் பெற்ற பெண் பண நெருக்கடிக்குள்ளாகி, மனவுளைச்சலில் காணப…
-
- 1 reply
- 536 views
- 1 follower
-
-
சட்டவிரோத மீன்பிடித்தலால் ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் பாலூட்டிகளின் உயிர்கள் பெரும் ஆபத்தில் உள்ளன. தற்போது சிலர் பொட்டம் ட்ரோலிங் போன்ற சட்டவிரோத யுக்திகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆமைகள், டொல்பின்கள் போன்ற விலங்குகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேற்கு கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகளின் உடல்களை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இறந்த ஆமைகளில் பெரும்பாலனாவைக்கு சுவாசிப்பதில் சிரமம், ஷெல் வெடிப்பு மற்றும் காயங்களால் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை அதிகாரிகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான மு…
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை! இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1375370
-
-
- 17 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வது ஒரு இனமாக பின்னடைவாகும்- சித்தார்த்தன் எம்.பி தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் தங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் குறித்தான விடயம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றி்ன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புளொட் அமைப்பின் தலைவர் காலமாகி 38 வருடங்கள் முடிந்து விட்டது. இந்த 38 வருடங்களுக்குள் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும் கூட என்ன காரணத்திற்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதப் போராட…
-
- 1 reply
- 375 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 JUL, 2024 | 09:45 AM கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை வெள்ளிக்கிழமை (19) முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் நலனுக்காகவும் செயல்முறையை சீரமைக்கவும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
16 JUL, 2024 | 10:30 AM ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை (16) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவருடன் மேலும் மூவர் வருகைதந்துள்ளதுடன் அவர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். இதன்போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள்…
-
- 3 replies
- 392 views
- 1 follower
-
-
17 JUL, 2024 | 05:20 PM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இன்று புதன்கிழமை (17) திறந்துவைக்கப்பட்டது. அத்தோடு, வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வாகன தரிப்பிடம், நலன்புரிச் சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதி பல காலமாக இயங்காமல் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி எஸ்.செந்தூரனின் கடின முயற்சி காரணமாக இந்த விடுதி மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டது. வைத்திய அதிகாரி எஸ்.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய சுகாதார அமைச்சின்…
-
-
- 2 replies
- 226 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வடக்குகிழக்கு தமிழர்களை தனித்துவமான தேசமாக அங்கீகரிக்கும் தீர்வை முன்வைக்கவேண்டும் - தேசிய கிறிஸ்தவ மன்றம் வேண்டுகோள் Published By: RAJEEBAN 17 JUL, 2024 | 08:31 PM இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வடகிழக்கில் உள்ள தமிழர்களை தனித்துமவமான தேசமாக அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஐக்கிய இலங்கைக்குள் குறிப்பிடத்தக்க சுயாட்சியையும், அதிகாரப்பகிர்வையும் வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளது. இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்த வருடம் பிற…
-
- 2 replies
- 314 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 04:43 PM 1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (17) விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையில் 24,000 பேர் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள். வெகுவிரைவில் 3,500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் 3,000 பேர் வைத்தியர்களாக வெளியேறுகின…
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:59 PM தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) திறந்துவைக்கப்பட்டது. கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உருவச்சிலையினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்து…
-
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 12:43 PM சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (17) விஜயம் செய்தனர். இதன்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை விடுதிகள், சத்திரசிகிச்சை பிரிவுகளையும் போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் அமைச்சர் குழுவினர் பார்வையிட்டனர். அத்தோடு, குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்ததுடன் ஞாபகார்த்தமாக மர…
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 01:15 PM லைன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. லைன் குடியிருப்புகளை, “பெருந்தோட்ட புதிய குடியேற்ற கிராமங்களாக” (New Settlement Villages in the Plantation Sector) அறிவிக்கும் உத்தேசம் கொண்ட தனது அமைச்சரவை பத்திரம் இல. PS/CM/SB/297/2024 தொடர்பில் கலந்து உரையாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாடியது. இந்த சந்தர்பத்தில் தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி உரையாற்றியதாவது, …
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
தனது மகன் நூறு ரூபாய் பணத்தைத் திருடினான் என்ற சந்தேகத்தில் தந்தையால் மகனுக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தந்தையைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம்(15) இக்கொடூரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, தனது சட்டைப் பையில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்து கோபமுற்ற தந்தை தன் மகன் அதனை எடுத்திருக்க கூடும் என்ற சந்தேகத்தில் மகனுக்குச் சூடு வைத்துள்ளார். அடுத்த நாள் பாடசாலைக்குச் செல்ல முடியாதென்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் மகன் கூறியதையடுத்து பாடசாலைக்குச் செல்லா விட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதால் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான். பாடசாலை சென…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்! அனுராதபுரத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி அனுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1392491
-
-
- 6 replies
- 532 views
-
-
, அம்பாறை நூருல் ஹுதா உமர்- முஸ்லிம்களின் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் எனும் சிங்கத்தின் ஆளுமைகளை கண்டு அவரின் பாசறையில் வளர்ந்த நாங்கள் இப்போது நடக்கின்ற சில்லறை அரசியலை பார்த்து, முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு பயந்து ஒடுங்குபவர்களாக இருக்க முடியாது. இருக்கவும் மாட்டோம். அப்படியான ஒரு வீர தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது தலைவரின் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க வேண்டும் அல்லது தலைவரின் மகனை அமைச்சராக்க வேண்டும் என்று அல்ல. அப்படியான கொள்கையில் அவர் வாழவும் இல்லை. இந்த மண்ணில் நாங்கள் அடிமைகளாக எங்களுடைய உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, நிம்மதியாக வாழ்வதற்கான பயத்தில் இருந்த போது தான் ஒரு பாதுகாப்பு கேடயமாக முஸ்லிம் காங்கி…
-
- 0 replies
- 219 views
-
-
Published By: RAJEEBAN 16 JUL, 2024 | 10:56 AM முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா யுத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மிகைப்படுத்தப்பட்டவை என சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார். 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் யுத்தத்தின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்றதை நிராகரிக்காத அவர் ஒருசம்பவம் குறித்து நான் விசாரணையை ஆரம்பித்தேன் எனினும் பதவியிலிருந்து நீக்கப…
-
-
- 6 replies
- 527 views
- 1 follower
-
-
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி, 0-30 இற்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 இற்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுக்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 3…
-
- 4 replies
- 319 views
- 1 follower
-
-
ட்ரம்பின் நிலை அநுரவுக்கும் ஏற்படலாம்! -வாகமுல்லே உதித்த தேரர். ”தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயகாவுக்கும் ட்ரம்பின் நிலை ஏற்படலாம்” என்பதால் அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னனியின் அழைப்பாளர் வாகமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினால் கண்டியில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதித்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகக் களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதே நிலைமை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனு…
-
- 1 reply
- 220 views
-
-
இலங்கையில் (Sri Lanka) இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை ஆட்பதிவு திணைக்களத்தின் (Department for Registration of Persons) ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கூறியுள்ளார். அடையாள அட்டை அந்தவகையில், தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/digital-nic-card-to-be-launched-in-sri-lanka-1721140094?itm_source=parsely-special
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
முதலாளிமார் சம்மேளனத்தின் 1350 ரூபா சம்பள முன்மொழிவை நிராகரித்தார் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 10:18 AM 1,700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1,350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பை வெளியிட்டு வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் 1,700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்டங…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 09:23 AM பல இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து கடத்த முயன்ற ஜப்பானிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (16) காலை இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தின் நுழைவாயிலில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் மூத்த பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் இவர்களின் உடைமைகளை சோதனையிட்டுள்ளார். இதன் போது, இந்த தம்பதியினர் ஜப்பானிய பிரஜைகள் என அடையாளம் காணப்…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-