Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னித் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புவதாக மும்மொழிகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலாநிதி சுனிமல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 80 வீதத்திற்கும் மேற்பட்ட வன்னித் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கருத்துக் கணிப்பொன்றின் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இலங்கை மும்மொழி நாடாக மாற்றமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் மும்மொழிக் கொள்கை அமுல்படுத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாக கலாநிதி சுனிமல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEdi…

    • 4 replies
    • 675 views
  2. லண்டன் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிப்பு என்கிறது திவயின முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை பௌத்தர்கள் நிறுத்தவிடின் ஜிகாத்தின் ஊடாகவே பதில் லண்டனில் வாழும் முஸ்லிம் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். எனினும் இலங்கை முஸ்லிம்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவதை இலங்கை பௌத்தர்கள் நிறுத்தவில்லை என்றால், ஜிகாத் அமைப்பின் ஊடாகவே பதிலளிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் அமைதியை விர…

    • 2 replies
    • 769 views
  3. பேரினவாத செயற்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மந்த நிலையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் கடந்த இரண்டு தினங்களாகக் களை கட்ட ஆரம்பித்துள்ள. பொதுவாக முஸ்லிம் பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மிக மந்த நிலையிலே இருந்தன. நேற்றும் இன்றும் மடவளை,அக்குறணை போன்ற முஸ்லீம் பிரதேசங்களில் சிங்கள் மக்கள் தமது புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகப் பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்வதையும் நகரில் கூடுதலாக சனநடமாட்டத்தையும் காண முடிந்தது. கடந்த வாரங்களில் கூடுதலான அளவு பொருட்களைக் கொள்வனவு செய்து ஹலால் பிரட்சினை காரணமாக மந்த கதியில் இடம்பெற்ற விற்பனையால் உற்சாகமிழந்து காணப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் இன்று உற்சாகத்துடன் காணப்பட்டனர். http://www.virakesari.lk/article/lo…

  4. நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்களின் இந்த உரிமைப்போராட்டத்துக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரஜைகள் குழுவின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் கொக்கிளாய் பங்குத் தந்தை,தமி்ழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,செல்வம் அடைக்கல நாதன்,தமிழ்தேசிய மக்கள் …

  5. சம்பந்தனின் முதலைக் கண்ணீரை முஸ்லிம்கள் நம்பக்கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தற்போது நாட்டில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றினை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மொஹமட் முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக சில குழுக்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளால் முஸ்லிம் பாரிய இன்னல்களை சந்தித்ததாகவும் அதன்போது சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக…

  6. 'தமிழ் நாட்டு திரைப்படங்களை தடை செய்யவும்' செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013 12:24 தமிழ் நாட்டு திரைப்படங்களை தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை ராவண சக்தி அமைப்பினால் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக நடிகர்கள் அண்மையில் ஈடுபட்டனர். இதனால் இவர்களின் படங்கள் இலங்கை காட்சிப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என ராவண சக்தி அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான மகஜரொன்று இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன பிரதிநிதிகளிடம் ராவண சக்தி அமைப்பினால் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. இதேவேளை, தமிழ் நாட்டு நடிகர்களை அழைப்பதற்கான திட்டமொன்றை இலங்கை கலைஞர்களுக்கான தேசிய இயக்கம் மேற…

  7. ஈழ ஆதரவு மாணவர் போராட்டம் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகரவுள்ளது. இதுதொடர்பான தகவலை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்து கொண்டுள்ளோம். அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌன…

  8. இலங்கைப் பிரச்னையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாரும் தனிமைப்படுத்திவிட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகையின் ஏற்பாட்டின் பேரில் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியது: இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்திலிருந்து இலங்கைத் தமிழர்கள் பக்கம் காங்கிரஸ் உறுதியாக நின்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. 1983ல் இருந்து இலங்கைத் தமிழர்களுக்குத் துணையாக நின்றுள்ளோம். ராஜீவ் காந்தியை இழந்துள்ளோம். அந்த இழப்பு ஏற்பட்டது தமிழ் மண்ணில்தான்.அந்த இழப்புக்கு யார் காரணம் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது.காங்கிரசை பொருத்தவரை இலங்கை…

  9. இந்தியாவில் இன்று இருப்பது மன்மோகன் சிங் என்ற தவளையின் தலைமையிலான பலவீனமுற்ற ஆட்சியாகும். வெகுவிரைவில் இந்தியா துண்டு துண்டாகப் பிரியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. ஜே.ஆர். சூரியப் பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெகுவிரைவில் சீனா பலமுள்ள நாடாக பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு உயரும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உற்பத்தி வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சூரியப் பெரும எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற பல தலைவர்கள் காணப்பட்ட இந்தியா இன்று பலவீனமடைந்துள்ளது. எதிர்காலத்தில் துண்டு துண்டாகப் பிர…

    • 6 replies
    • 1.2k views
  10. சிறிலங்காவில் தற்போது விஸ்வரூபமாக வளர்த்து வரும் மாத்தளை புதைகுழி விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் 150 பேரின் மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 1986 - 90 காலப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளவர்களின் சடல எச்சங்களே என்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜேவிபி கிளர்ச்சியின் போது, கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களே இவை என்று கருதப்படுகிறது. மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு சமீபமாக, சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதைக் கூடம் ஒன்று 1989- 1990 கால…

    • 9 replies
    • 1.7k views
  11. விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷேவே நடத்தலாம் என்று கூறுகிறார் இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் இலங்கையின் இறுதிப்போரின் போது நடந்த போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரும் சர்வதேச நாடுகள், அப்படியானதொரு விசாரணையை, இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியளித்த காலத்திலிருந்து துவங்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோதாபயவின் இந்த கோரிக்கையானது, இலங்கைக்குள்ளும் சர்வ…

  12. வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும் என்றும் அந்த பிரதிநிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற குழவினருடன் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்…

  13. நான்காம் கட்ட இறுதிப் போரில் சிறிலங்கா இராணுவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இந்த ஆண்டின் மிகப்பெரிய பொய்யை சிறீலங்கா இனஅழிப்பு இராணுவத்தின் தளபதி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டவிரோதமான செயற்பாடுகள் காரணமாகவே பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் பொய்யை அடுக்கியுள்ளார். சிறிலங்காவின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட புனைவு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றங்கள் புரிவதிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடுக்கவும் சர்வதேச சமூகம் தவறி விட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேசஅழு…

    • 1 reply
    • 739 views
  14. "ஹலால் சான்றிதழை நிறுத்தி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் பொதுபலசேனாவின் முயற்சியை பாராட்டுகிறேன்" ஹலால் சான்றிதழை இரத்துச் செய்து விட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்ட முயற்சியை பாராட்டுவதாகவும் எனினும் அமைச்சொன்றின் செயலாளர் கூறியதால் மாத்திரம் அந்த போராட்டத்தில் இருந்து, அந்த அமைப்பு விலகி கொண்டதானது இலங்கையின் பௌத்த மக்களை கவனத்தில் கொள்ளாது மேற்கொண்ட காட்டிக்கொடுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஹலால் முற்றாக நீக்கி கொள்ளும் வரை அதற்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்க முடியும். இலங்கையின் பெருபான்மை பௌத்த மக்களுக…

  15. வடக்கு தேர்தலும், 4 விடயங்களும் 2013 ஏப்ரல் மாதம் 09 செவ்வாய்க் கிழமை- பி.ப 07:37 வட மாகாண சபை தேர்தலை நடத்தும் போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய 4 விடயங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அந்த கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதுகுறித்து விபரித்தார். வடமாகாண சபைத் தேர்தலை ஜுலை மாதமளவில் நடத்த வேண்டியது அத்தியாவசியமாகும். தேர்தலுக்கு முன்னர் காவல்துறை ஆணைக்குழுவும், தேர்தல் ஆணைக்குழுவும் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அதேவேளை, வடமாகாண சபை தேர்தல் நடைபெறுமாயின் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் எதிர்கட்சி பொதுசெயலாளர் திஸ்ஸஅ…

  16. வட மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என்பதனாலேயே தொடர்சியாக அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளாமல் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், "வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனாலோ தொடர்ந்து அரசாங்கம் வட ம…

  17. -எஸ்.கே.பிரசாத் அரசியல் தீர்வை காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் இணையுமாறு தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற குழுவிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் யாழ்; இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே இதனை ஈ.பி.டி.பி.வலியுறுத்தியுள்ளது. இச்சந்திப்பின் போது, இராணுவத்தினரின் செயற்பாடு பற்றி இந்தியக் குழுவினர் கேட்டுக்கொண்டனர் என்று தெரிவித்த யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் 30 வருடங்களுக்கு பின்னர் மக்கள் சமாதானத்தை அனுபவித்து வருகின்றனர். கடந்த 3 வரு…

  18. இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்சே இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையில், கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் (முன்னாள்) நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இலங்கை அதிபர் ராஜபக்சே, 'இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது' என்று கூறியிருந்தார். இந்நிலையில், தனி ஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற…

  19. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை இந்திய முன்னின்று உருவாக்கவேண்டும் இவ்வாறு உருவாக்கப்பட்ட பின்னரே இறுதித் தீர்வு குறித்து தீர்மானிக்க முடியும் என்று இந்திய நாடாளுமன்ற குழவினரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற குழவினருடன் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில…

  20. போரின் இறுதி 5 நாட்கள் பற்றியே கேள்வி கேட்கின்றனர் – சிறிலங்கா அதிபர் விசனம் [ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 00:20 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவில் 30 ஆண்டுகளாகப் போர் நடந்த போதும், இறுதி 5 நாட்களில் என்ன நடந்தது என்றே ஜெனிவாவில் கேள்வி எழுப்புகின்றனர் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்துள்ளார். கல்கமுவவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “ நாம் நாட்டுக்காக எதைச் செய்த போதும் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களுமே எஞ்சியுள்ளன. விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்தாலும், இப்போது ஜெனிவாவில் எம்முடன் போர் ஆரம்பித்துள்ளது. இங்குள்ளவர்களும் சென்று சாட்சியமளிக்கின்றனர். 30 ஆண்…

  21. சிறீலங்கா சுதந்தரக்கட்சியை பலப்படுத்தல் என்ற பெயரில் பிள்ளையானையும் கருணாவையும் பின்தள்ளிவிட்டு பின்னர் அவர்களை படுகொலை செய்யும் முயற்சியில் மகிந்தர் ஈடுபட்டுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில, மகிந்தரின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக பிள்ளையானோ கருணாவோ ஈடுபட்டால், இந்தவிதமான தயக்கமுமின்றி, விவேகமான முறையில் போட்டுத் தள்ளுவதற்கான உத்தரவை இரகசிய நடவடிக்கைகளுக்கான விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு கோத்தபாய வழங்கியுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது. கருணா இனி தேவைப்படமாட்டார், அதேவேளை, போர்க்குற்றங்களின் சாட்சியாக மாற வேண்டிவந்தால் தமக்கு தலையிடியாக இருக்குமென்பதால், அவரை படுகொலை செய்யும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டாயிற்று…

  22. இரண்டு மகன்கள் கொல்லப்பட்டதை கோத்தபாயவிடம் கேட்குமாறு ராணுவ அதிகாரி கூறினார் - ஒரு தாயின் அவலம் : 10 ஏப்ரல் 2013 மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது இரண்டு மகன்கள் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில் இருந்த ரெஸ்ட் ஹவுஸ் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் மூன்று தினங்களுக்கு பின்னர், தனக்கு காட்டிய பெயர் பட்டியலில், தனது இரண்டு மகன்களின் பெயர்கள் சிகப்பு மையினால் வெட்டப்பட்டிருந்ததாகவும் மாத்தளையை சேர்ந்த கே.பி. கமலாவதி என்ற தாய் தகவல்களை வெளியிட்டுள்ளார். புல்மோட்டையில் வசித்து வந்த அவர், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 4 மாதங்களுக்கு முன்னரே மாத்தளைக்…

  23. இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் தமக்கு அமைத்து தரப்பட்ட வீடுகளினுள் மழைக் காலத்தில் இருக்க முடியாத அளவிற்கு ஓடுகள் உடைந்து நீர் உட் புகுவதகாவும், அவ்வேளைகளில் வீடுகளினுள் தாம் குடை பிடித்து கொண்டு இருப்பதாகவும் மக்கள் தமது குறைகளை யாழ். சென்றுள்ள இந்திய பாராளுமன்ற குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். ​ இதன்போது உங்களுக்கு எப்பவுமே எதிலுமே குறைகூறுவதே வேலை என மக்களை யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தடுத்து நிறுத்தினார். ​ இன்று (10) காலை யாழ். மகேந்திரபுரம் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்ற குழவினர் இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். ​ இதன் போதே இந்திய வீடுதிட்டத்தின் கீழ் அமைத்துக் கொடுக்கப்பட்டு…

  24. ஏப்ரல் 09, 2013 at 5:31:18 PM தமிழர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், இலங்கையில் மீண்டும் உள்நாட்டு போர் வர வாய்ப்புள்ளதாக, இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், மனித உரிமை விவகாரத்தில், இலங்கைக்கு எதிரான அனைத்து வழிமுறைகளும் பரிசீலிக்கப்படும் என்று, இலங்கைக்கான அமெரிக்க தூதர் சைசன் தெரிவித்துள்ளார். மறுவாழ்வு மற்றும் பொறுப்பேற்பு பிரச்னைகளை சரியாக அணுகாத சமூகங்கள் மீண்டும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் அதே போர்ச் சூழலைச் சந்தித்த வரலாறுகள் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமானது என்றாலும், இலங்கை நிலைத்திருக்க இது அவசியம் என்றார். மனித உரிமை விவகாரத்தில், இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொ…

  25. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு முன் இலங்கை 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இதனை நிராகரிக்கின்றோம். அத்தோடு இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனையும் நிராகரிக்கின்றோம் என வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது. இந்தியா, அமெரொல்லா, பிரிட்டனுடன் மட்டும் எமது பேச்சுகள் வரையறுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=3912

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.