Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனாவின் செயலாளர் பாணந்துறையில் நடைபெற்ற பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் மகோன்னத அரசியல் தலைவராகத் திகழ்ந்த அன்னாரை அவமதிக்கும் செயலென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எந்தவித அடிப்படையோ ஆதாரமோ அற்ற பொய்களையும், அவதூறுகளையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இவ்வாறான பொய்களையும் பரப்பி, அவர்களை தவறாக வழிநடத்த எத்தனிப்பதை பொதுபல சேனா என்ற …

  2. பிக்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு பிக்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். மாதுளுவாவே சோபித தேரர், பாணகல உபதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மத தலைவர்கள் அண்மையில் இந்திய தூதுவரின் இல்லத்தில் அவரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் இது தனிப்பட்ட ரீதியிலான சம்பவம் எனவும் இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்புகள் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை…

  3. அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும், பிளேக் எச்சரித்துள்ளது போன்று சிறிலங்கா தொடர்பான அனைத்துலகப் பொறிமுறை ஒன்றைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் சிறிலங்கா அமைச்சர் டியு. குணசேகர தெரிவித்துள்ளார். போர்க்கால உரிமைமீறல்கள் குறித்து நம்பகமான- சுதந்திரமான விசாரணையை சிறிலங்கா நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர, “எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகாண வேண்டும். அதற்கு அனைத்துலகத் தலையீடு தேவையில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்…

  4. சிறிலங்காவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் ஒன்று பாரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. நேற்று முன்தினம் மாலேயில் இருந்து சிறிலங்கா வந்த யு.எல்- 114 என்ற விமானம், மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றபோதே, இந்த விபத்து நேரிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்தல விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தின் முன்புறத்தில் தாக்கியது. இதனால் விமானத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்தன. விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், சிற…

  5. இலங்கை எதிர்ப்புப் போராட்டங்கள், பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வருவதன் எதிரொலியாக எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எதிராக ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு இந்திய மத்திய அரசே முழுப்பொறுப்பேற்கவேண்டும் என்று சிங்கள கடும்போக்கு அமைப்புகள் நேற்று மிரட்டல் பாணியில் எச்சரிக்கை விடுத்தன. இறைமையுள்ள நாடான இலங்கையைத் தமது தலையாட்டி பொம்மையாக்க தமிழ்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எம்மால் ஒருபோதும் அனுமதிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது எனத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிங்கள ராவய அமைப்பின் தலைவருமான அக்மீமன தயாரத்ன தேரர், இவ்விவகாரம் இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.…

  6. IPL இல் அணிகளில் சென்னையில் சிங்களவர்கள் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பும்.. சென்னை சுப்பர் கிங்ஸில் இலங்கை வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்ற செய்தி வருந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்.. தனது வருமானம் பறிபோன நிலையில்.. முத்தையா முரளிதரன்.. விளையாட்டில் அரசியல் வேண்டாம் என்று கொண்டு.. வழமையான தமிழினப் படுகொலை செய்யும்.. சிங்கள அரசுக்கு இந்திய ஊடகங்களில்.. வக்காளத்து வாங்கித் தள்ளியுள்ளார். முரளியின் இந்த நடவடிக்கை.. கண்டிக்கத்தக்க ஒன்றாகும். அப்பாவி தமிழ் மக்கள் பலவழிகளிலும் இன்று சிங்களத்தால் துன்பப்படும் இன்றைய நிலையில் பிரித்தானியா கூட சிறீலங்கா குறித்து தனது பிரஜைகளுக்கு எச்சரித்துள்ள நிலையில் முரளியின் இந்த சுயநல உளறல்.. அவரின் சுயநலத்தை அப்படியே படம…

  7. தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம்.[வீடியோ] பிரிவு: தமிழ் நாடு தனித் 'தமிழீழம்' நாடு அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் தொடரும் மாணவர்கள் போராட்டம் பற்றி சிறப்பு விவாதம் நடைபெற்றது. பின்னர் சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அவர் முன்மொழிந்த தீர்மானத்தில், தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இல்லாமல், உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்கள…

    • 0 replies
    • 398 views
  8. காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை மாணவர்கள் சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் மாணவர்களை தாக்கி உள்ளனர் . இதில் 30 மாணவர்களுக்கு …

    • 1 reply
    • 2.9k views
  9. இன்று காவல்துறையின் கடும் பாதுகாப்பை மீறி மாணவர்கள் சென்னையில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜபக்ச உருவபொம்மையை வைத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராஜபக்ச உருவபொம்மையை எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் சென்னை மயிலாப்பூரில் ஒரு பூங்காவில் காவலில் வைக்கப்பட்டனர். மாணவர்கள் கூறுகையில் : தமிழக மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத இந்திய அரசை கண்டித்து தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு சார்பாக அகில இந்திய வானொலி ந…

    • 0 replies
    • 466 views
  10. இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கத் தயார்! - ஜனாதிபதி மஹிந்த [Tuesday, 2013-03-26 09:03:25] வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த பிறந்த மண்ணின் உரிமை இருக்கின்றது. உங்களுக்கு வேறு நாடு இல்லை, உங்களது தாய் நாடு இதுவாகும். இந்த நாட்டை எழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம். உங்களில் எவரையும் இந்த தாய் நாட்டின் தங்கியிருப்பவர்களாக்க திட்டமிடவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள். இந்த காணிகளை மீளவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போரின் போது இழக்…

  11. அசாத் சாலியை கைது செய்ய பொலிஸார் தீவிரம்! [Wednesday, 2013-03-27 07:30:24] பொலிஸார் தன்னைக் கைது செய்ய முயற்சிப்பதாக முஸ்லிம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். தம்மைக் கைது செய்வதற்காக நேற்று முன்தினம் காவல்துறையினர் வீட்டுக்குச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தான் தமது சட்டத்தரணி ஊடாக பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் கடந்த வாரம் அசாத் சாலிக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகளுக்கு அசாத் சாலி சமுகமளிக்கவில்லை. அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்ப…

  12. அனைத்துலகப் பொறிமுறை என்று பூச்சாண்டி காட்டுகிறாராம் பிளேக் [ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 01:04 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும், பிளேக் எச்சரித்துள்ளது போன்று சிறிலங்கா தொடர்பான அனைத்துலகப் பொறிமுறை ஒன்றைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் சிறிலங்கா அமைச்சர் டியு. குணசேகர தெரிவித்துள்ளார். போர்க்கால உரிமைமீறல்கள் குறித்து நம்பகமான- சுதந்திரமான விசாரணையை சிறிலங்கா நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார். இது குறித்து கருத்து வெளியிட…

  13. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறை வேறியுள்ளது. தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் கனகாத்திரம் பற்றிய ஆய்வுகளை ஒரு புறம்தள்ளி வைத்துவிட்டு, இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி இலங்கை அரசு சிந்திக்குமாக இருந்தால், அத்தீர்வு பற்றி இலங்கை அரசு அமெரிக்கப் பிரதிநிதிகளுடனேயே பேச வேண்டும். தமிழ் மக்களுக்கு அரசு கொடுக்கும் அதிகாரங்கள் என்ன? அவை எவ்வாறு அமுல்படுத்தப் படும் என்றவாறான விடயங்களை எல்லாம் அமெரிக்காவிடம் எடுத்துக் கூறவேண்டும். இலங்கை அரசு முன்வைக்கின்ற தீர்வுகுறி த்து அமெரிக்கா தமிழ்த் தரப்புக்களின் ஆலோ சனைகளை, அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து தீர்வைச் செம்மைப்படுத்த வேண்டும்.…

  14. பட்டி மண்டபம் ஒன்றில் திண்டுக்கல் லியோனி கூறிய கதை இது. ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் தான் வைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் கவிழ்த்து விடுவதில் மகிழ்ச்சியடைந்தான். இதனை அவதானித்த ஒரு பெரியவர் அருகில் நின்ற இன்னொருவரிடம் ஐயா! இந்தச் சிறுவனுக்கு என்ன பெயர் என்று கேட்டார். அதற்கு சுப்பிரமணிய சுவாமி என்று பதில் அளித்தார் அந்த நபர். பெரியவர் சிரித்துக் கொண்டே நினைத்தேன். இந்தப் பையனுக்கு சுப்பிரமணிய சுவாமி என்று தான் பெயர் இருக்கும் என்று. பெரியவர் கூறியதைக் கேட்ட மற்றவர், பெரியவரே ஏன் அப்படி நினைத்தீர்கள் என்று வினவ, அவன்தானே எல்லாவற்றையும் கவிழ்த்து போடுகிறான். அப்படியானால் அவனுக்கு சுப்பிர மணிய சுவாமி என்று தானே பெயர் இருக்கும். திண்டுக்…

    • 0 replies
    • 818 views
  15. பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச் செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது. இத்தகவலை பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீட்டர் ஹோரக்ஸ் வெளியிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடையில் தடுக்கப்படுவது மற்றும் வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது போன்றவை தொடர்ந்து நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது. "இலங்கையில் எமது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டுவரும் நேயர்களுக்கு இந்த சேவை தரப்படுவதில் ஏற்பட்டிருக்கும் இத்தடை குறித்து நாங்கள் வருந்துகிறோம், ஆனால் எங்களது நிகழ்ச்சிகளை குறிவைத்து இது போன்ற இடைஞ்சல்கள் நடப்பது, அந்த நேயர்கள் எங்கள் மீது…

    • 1 reply
    • 468 views
  16. கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அம்மையார் பங்கேற்க மாட்டார் என லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்திய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில், இங்கிலாந்து மகாராணியார் பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் அப்பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்…

    • 2 replies
    • 883 views
  17. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது! வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை குறைக்கப்பட்டமையானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் நசுக்கப்படும் செயற்பாடாகும் என்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்’ தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்த்துள்ளதாவது, ‘1983ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் 2ஆவது தடவையாகவும் குறைக்கப்பட்டுள்ளமையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலை நசுக்கும் ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகிறோம். முதலாவதாக யாழ் மாவட்டத்தில் 11ஆக இருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தற்போ…

    • 0 replies
    • 360 views
  18. இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனஅழிப்பு, மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பாகத் தயாரிக்கப் பட்டுள்ள அறிக்கைகளையும் அவை பற்றிய ஆய்வுகளையும் உடனடியாகப் பகிரங்கப் படுத்துமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தின் இன அழிப்பைத் தடுப்பதற்சிறப்பு ஆலோசகர் Adama Dieng அவர்களை வேண்டும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டையொன்றை உடனடியாக தொடங்கியுள்ளது. ‘இன அடிப்படையிலான பாரிய மனித உரிமை மீறல்களும், அனைத்துலக சட்ட விதிகளுக்கு மாறான குற்றங்களும் இடம்பெறுமிடத்து அவை பற்றிய தகவல்களைச் சேகரித்து, அத்தகைய குற்றங்கள் இன அழிப்பாக மாறாது தடுப்பதற்காக செயலாளர் நாயகத்தின் ஊடாக ஐநாவின் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை போலக் கொண்டு வரவேண்டிய பொறுப்…

  19. -சுபுன் டயஸ் வெலிக்கடை சிறைக் கலவரத்தை ஆராய்ந்த மூன்று அங்கத்தவர் குழுவால் தயாரிக்கப்பட்ட 100 பக்க அறிக்கை இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவுள்ளது. கலவரத்துக்கு காரணமாக இருந்தவர் யாராக இருப்பினும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது. கலவரத்தின் போது சிறைக்காவலர்களின் நடத்தை, கலவரத்துக்கு இட்டுச்சென்ற சூழல், கைதிகளால் எவ்வாறு வெளியே வர முடிந்தது, ஆயுத களஞ்சியசாலை எவ்வாறு கலவரக்காரர்கள் வசமானது, என்பன பற்றிய விளக்கங்கள் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. வெலிக்கடை சிறைக்கலவரம் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்றது. இந்த அறிக்கையின் முழுப் பகுதியும் பொதுமக்…

  20. தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் ஸ்ரீ மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் கொடியேற்ற வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. சிவலோகநாதக் குருக்கள் இக்கொடியேற்ற நிகழ்வை முதன்மைதாங்கி நடத்திவைத்தார். (படங்கள்: ஷண்) http://tamil.dailymirror.lk/--main/61794-2013-03-26-15-48-41.html

  21. முஸ்லிம்களின் போராட்டத்தை முடக்குவதில் ராணுவம் தீவிரம் கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, மார்ச் 25, 2013 சிறிலங்காவில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடாவடிகளைக் கண்டித்து இன்று (25) நாடளவிய ரீதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கடையடைப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் வர்த்தகர்கள் ஒத்தாசை வழங்கக் கூடாது என்று அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். கடைகளை மூடுவதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்றும் இது ஒரு சிலரின் அவசர முடிவு எனவும் அவர் கூறியுள்ளார். கடைகளை மூடி எதிர்ப்பைக் காட்டுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையானது அரசியல் இலாபம் தேடும் ஒரு முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் இன்று திங்கட்…

  22. -எம்.சுக்ரி அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது தேசத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு அல்ல, அது தமிழர்களை இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2013ஆம் ஆண்டுக்கான தேசத்தின் மகுடம் கண்காட்சி நிகழ்வு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் தமிழர்களை இன அழிப்புச் செய்த இராணுவ வெற்றியை வெற்றி விழாவாக அறிவித்த இலங்கை அரசாங்கம், அதனை கொண்டாடும் நி…

  23. இலங்கையில் மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற்று வருவதாக பிரித்தானிய தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக தேசப்பற்றுசார் நிலைப்பாடுகள் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகளுக்கு குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பலை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஏனைய வெளிநாட்டு ராஜதந்திர அலுவலகங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா வெளியிட்டிரு…

  24. அரசியல் தீர்வுத்திட்டப் பேச்சு விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க, அரச தரப்பு பேச்சுக்குழு மறுசீரமைக்கப்படவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, அமைச்சர் பீரிஸ் தலைமை வகித்து முன்னெடுத்த எந்தத் திட்டம் வெற்றியளித்துள்ளது என்று கேள்வியெழுப்பிய அவர், பேச்சு குழம்பினால் தனக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தலையை பாதுகாக்க முனைபவர்களை வைத்துக்கொண்டு பேச்சை முன்னெடுப்பது சிக்கல்தான் என்றும் தெரிவித்தார். அத்துடன், தீர்வுத்திட்டப் பேச்சுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தீர்வுத்திட்டப் …

    • 1 reply
    • 535 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.