Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் எண்பதுவீதம் - சர்வதேச நாணய நிதியம். அதனால் இலங்கை கேட்ட கடன் மறுப்பு என சர்வதேச நாணய நிதியம் கூறியது. ஆறு மாதத்திற்கு முதல் இலங்கை ஆறு பில்லியன்களை கேட்டதாகவும் தாம் அதை நிராகரித்து விட்டதாகவும் சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறியது. அதிகரித்துவரும் கடன் ஒரு ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது. 2010 இலும் 2011 இலும் 8 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2012 இல் 7.2 வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது 6 வீதமாகவே இருந்தது. 2013 இல் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். காரணம் இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளிகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் பொருளாதாரமும் ஆகும். IMF pro…

    • 3 replies
    • 1.3k views
  2. புனர்வாழ்வு முகாமில் தமிழினி புனர்வாழ்வு முகாமில் தமிழினி வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்தபோது இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டது. சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர். 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைந்துகொண்டார். 27.05.2009 அன்று வவுனியா நலன்புரி முகாமில் கைது செய்யப்பட்ட தமிழினி கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு கடுமையான விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமய வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்…

  3. கோலாலம்பூர், மலேசியா

    • 10 replies
    • 1.1k views
  4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்க வாசகர், உலக தமிழர் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பின்வரும் மூன்று கோரிக்கைகள் தொடர்பில் அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவையாவன: 01. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் போன்றன தொடர்பில் அனைத்துலக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 02. சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பளிக்கக் கூடிய அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். 03. தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான கருத்து வாக்கெடுப்பொன்று அனைத்துலக சமூகத்…

  5. -எஸ்.ரூபன், எஸ்.கே.பிரசாத் 'வலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உண்ணாவிரத நிகழ்வின் போது இடம்பெற்ற தாக்குதலானது, வடபகுதியில் தமிழ் மக்கள் எவ்வாறான நெருக்கடிக்குள் வாழ்க்கின்றனர் என்பதையும் அவர்கள் மீதான அழுத்தத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது' என்று இன்று காலையில் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 'எதிர்கட்சியிக் குழுவானது யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது வலி. வடக்கில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்வினில் உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின் அந்நிகழ்வினை குழப்பும் முகமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றதினை நாம் அறிந்தோம். இவற்றிலிருந்து தமி…

  6. கடந்தகால போர், வன்முறைகளால் காணாமல் போனவர்கள், மரணித்தவர்களுக்கான சர்வமத பிரார்த்தனை நேற்று மாலை கரித்தாஸ் எகெட் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. எகெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வு, இறைவணக்க பஜனையோடு ஆரம்பமாகி நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு பெரிய பள்ளிவாயல் மௌலவி எம்.எம்.நளீம் பலாஹி, மட்டக்களப்பு மறைக்கல்வி நடு நிலைய இயக்குனர் அருட்தந்தை ரி.ஜூலியன், பல்சமய ஒன்றிய செயலாளர் விஸ்ணுமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சர்வமத பிரார்த்தனையை யேசு சபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம், எகெட் நிறுவக உத்தியோகத்தர், எஸ…

  7. பலாலி விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறுகிறார். எனவே இன்றுள்ள எதிர்க்கட்சி நாளை அரசமைத்தாலும் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் ச.யேசுதாஸ் தெரிவித்தார். வலி.வடக்கு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு, ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். போரின் பின்னர் இங்கு சுதந்திரம் நிலவுவதாகச் சொல்கின்றார்கள். அப்படியானால் இந்தப் போராட்டத்தில் ஏன் மக்களை விரட்ட வந்தீர்கள்? என்ன ஜனநாயகம் நாட்டில் இருக்கிறது? என்ன பாதுகாப்பு இந்த நாட்டில் இருக்கிறது? இங்குள்ள ப…

  8. மீண்டும் சந்திப்புக்கு அழைத்தார் மகிந்த – 'பொறி'யில் சிக்குவாரா சம்பந்தன்? [ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 00:50 GMT ] [ தா.அருணாசலம் ] ஜெனிவா கூட்டத்தொடர், கொமன்வெல்த் மாநாடு பான்ற நெருக்கடிகளில் சிக்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அவற்றில் இருந்து விடுபடும் உத்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்துள்ளார். கண்புரை நீக்க சத்திரசிகிச்சைக்காக இரா.சம்பந்தன் இந்தியா சென்றிருந்தபோது, கடந்த 5ம் நாள் அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் இரா.சம்பந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்போது நாடு திரும்…

  9. புதிய வடிவில் 'உடரட்ட மெனிக்கே' வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013 12:48 புதிய வடிவில் 'உடரட்ட மெனிக்கே' வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013 12:48 0 COMMENTS -எஸ்.சுவர்ணஸ்ரீ நவீன வசதிகளுடன் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட புதிய ரயில் நேற்று 14ஆம் திகதி முதல் உடரடமெனிகேயாக தனது ரயில் சேவையினை ஆரம்பித்துள்ளது. இந்த ரயில் கடந்த காலங்களில் விசேட ரயில் சேவையாக கொழும்பிலிருந்து 8.10 இற்கு புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்ததுடன் குறிப்பிட்ட சில ரயில் நிலைய தரிப்பிடங்களிலேயே நிறுத்தப்பட்டது. எனினும் இன்று குறிப்பிட்ட ரயில் உடரட மெனிகேயாக ரயில் சேவையில் இணைந்து கொண்டதன் பின் உடரடமெனிகே நிறுத்தபட்ட சகல ரயில் தரிப்பு நிலையங்களிலும் இது நிறுத்தப்படும் என்று ரய…

  10. மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையை வரவேற்கின்றோம்: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற ஐ. நா. சபையின் மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையை வரவேற்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நம்பகரமானதும், பக்கச்சார்பற்றதுமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அண்மைய அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இன்னமும் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்பது தெளிவாகியுள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்ன…

  11. கொமன்வெல்த் நெருக்கடியை சமாளிக்க புது முயற்சி - பங்களாதேசை வளைத்துப் போட 5 பில்லியன் ரூபா [ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 00:31 GMT ] [ கார்வண்ணன் ] கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்துவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, பங்களாதேசின் உதவியை நாடியுள்ள சிறிலங்கா அரசாங்கம், அந்த நாட்டை வளைத்துப் போட உடனடியாக 25 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருள்களை அங்கிருந்து கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக கனடா உள்ளிட்ட நாடுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து வரும் ஏப்ரலில் லண்டனில் கூடவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது…

    • 4 replies
    • 759 views
  12. ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு ஆதரவளிக்கவில்லை – பாகிஸ்தான் பிரதம நீதியரசர் 15 பெப்ரவரி 2013 இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு ஆதரவளிக்கவில்லை என பாகிஸ்தான் பிரதம நீதியரசர் இப்திகார் மஹ்மூட் சௌத்ரி தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்ட ரீதியானது என தாம் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஜூரிகள் பேரவை அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது. எனினும், பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு தாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கவில்லை என பாகிஸ்தானின் பிரதம நீதியரசர் இப்திகார் மஹ்மூட் சௌத்ரி …

  13. கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றில் இரு குழுக்களிடையே நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோதலில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தும்முள்ள பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்குள்ளேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் பான்ஸ் தோட்டம் கொழும்பு7 முகவரியைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெயகுமார் சுரேன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த களியாட்ட விடுதியில் நேற்று அதிகாலை 2.30 தொடக்கம் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மோதலில் உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையி…

  14. மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1455 கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2013 - 18:01 ஜிஎம்டி தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் முருகனும், தண்டனை குறைக்கப்பட்ட அவரது மனைவி நளினியும். இந்தியாவில் 1455 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி, ஆசிய மனித உரிமைகள் மையம் என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் கடந்த 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 4,321 தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பளிக்கப்பட்டு, அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்புடைய விடயங்கள் இந்தியா அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண த…

  15. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்க தவறியுள்ளன - சோபித தேரர்! [Friday, 2013-02-15 13:30:08] நாட்டின் எதிர்க்கட்சிகள் பொறுப்பின்றி செயற்பட்டு வருவதாக கோட்டே ஸ்ரீ நாக விஹாரiயின் விஹாராதிபதி மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான முறையில் பதில்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.மக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் உரிய முறையில் செயற்படுவதே சிறந்த ஜனநாயக நாடுகளின் பண்பியல்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கம் பிழையான வழியில் சென்றால் அ…

  16. ஊழியர் சேமலாபநிதி குறித்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி [ வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013, 04:31.05 PM GMT ] ஊழியர் சேமலாபநிதி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சொந்தமான பணம் சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான கே. சிறிபவன் மற்றும் ஜீ.ஏ.ரட்நாயக்க ஆகியோர் இந்த மனுவை பரிசீலைனக்கு எடுத்துக் கொண்டனர். 11 தொழிற்சங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள ஊழியர்களுக்கு உரிமை இர…

  17. இறுதி யுத்தத்தின்போது பொது மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைக் காட்டும் சாட்டலைட் படங்கள் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 தொலைக்கட்சி வெளியிட்ட நிகழ்ச்சி குறித்து இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையம் , ராணுவம் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று அளித்த பரிந்துரையை அடுத்து, இலங்கை ராணுவத்தால் நியமிக்கப்பட்ட ராணுவ நீதிமன்றம் இன்று தனது அறிக்கையை ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனெரல் ஜகத் ஜயசூர்யாவிடம் சமர்ப்பித்துள்ளது. சானல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களங்கள் என்ற நிகழ்ச்சியில் வெளியான தகவல்களில், போரின் போது குண்டு வீச்சால் ஏற்பட்ட பொதுமக்களின் உயிர்ச்சேதங்கள…

    • 3 replies
    • 694 views
  18. Former LTTE cadres contribute to Economic Development Former LTTE cadres recruited to the Civil Security Force recently are contributing to the Economic Development of the country by engaging in agricultural activities in Kilinochchi. Pictured here harvest of corn cultivated by them. சிவில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து சிங்கள அரசால் 'புனர்வாழ்வு அளிக்கப்படும்' போராளிகளையும் ஈடுபடுத்தி உள்ளது. http://www.dailymirror.lk/caption-story/25772-former-ltte-cadres-contribute-to-economic-development.html தொடர்புபட்ட செய்தி : அறுவடை செய்யும் படையினர் http://www.yarl.com/forum3/index.php?showtopic=116986

    • 0 replies
    • 507 views
  19. இருபது வயதான பல்கலைக்கழக மாணவரான ஏரோநாட்டிற்க் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் கபிலன் அவர்கள் விண்வெளிப்படிப்பு காரணமாக விண்வெளிக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் உங்கள் அமோக வாக்குகளுக்காக காத்திருக்கிறார். இவருடன் இருபது மாணவர்கள் போட்டியில் உள்ளார்கள். அனைவரும் வாக்குப்பதிவின் மூலமாகவே தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் கபிலன் மாத்திரமே ஈழத்தமிழர் எனும் பெருமையுடன் உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கிறார். https://www2.axeapollo.com/en_CA/5031/kabilan-thuairajah உங்கள் பேஸ்புக் மூலமாக அவருக்கு வாக்களித்து எங்கள் தமிழர்களின் முன்னேற்றப்பாதையில் மீண்டும் ஒரு சாதனையை இந்த கனடா மண்ணில் நிலை நாட்ட உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறார். எத்தனையோ சாதனைகளை நிலைநாட்டியுள்ள எமது தம…

  20. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற விண்ணப்பிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் 15 பெப்ரவரி 2013 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பம் செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டமையினால் ஏற்றுமதியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சலுகைத் திட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை மேம்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறிய காரணத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. சலுகைத் திட்ட இழப்பினால் ஏற்கனவே…

  21. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை போன்றவற்றின் நட்டங்களை குறைக்கும் வகையில், இலங்கையில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் சூத்திரமொன்றை தயாரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் ஜோன் நெல்ம்ஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த இரு வலுத்துறையுடன் தொடர்புடைய பிரதான துறைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதன் கட்டாயம் குறித்து அரசாங்கத்துக்கு நாம் பரிந்துரை செய்துள்ளோம் என்றார். கடந்த ஆண்டை பொறுத்தமட்டில், இலங்கை மின்சார சபை நாட்டில் நிலவிய கடும் வரட்சியின் காரணமாக பெரும் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது. மின்சார சபைக்கு அவச…

    • 5 replies
    • 533 views
  22. ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையைத் தொடர்ந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதரத் தடையைக் கோரும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்திய அரசினைக் கோருகின்றது. இந்த விடயத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசாங்கம் பின்பற்ற வேண்டும் எனவும் நா.தமிழீழ அரசாங்கம் கேட்டுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்திய அரசும் உலக நாடுகளும் ஐநா மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடை களை விதிக்கும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதனை நா.தமிழீழ அரசாங்கமும் வலியுறுத்துவதோடு உலக நாடுகள் முதல…

    • 2 replies
    • 597 views
  23. இலங்கையின் உள்நாட்டு செயற்பாடுகளை சர்வதேசத்தினர் விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது இது எமது கொள்கை ரீதியான தீர்மானமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் வெளியார் இலங்கை வருவதை அனுமதிக்க முடியாது. இது எமது நாட்டின் இறைமையை மீறும் செயலாகும். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் எவ்வாறான நிலைமை வந்தாலும் நாங்கள் அதனை எதிர் கொள்வோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூற…

  24. 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பேராசை பிடித்த அரசாங்கம். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமாயின் மாகாணசபை, பொதுத்தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என உடைத்து தேர்தல் நடத்த முடியாது. இந்த ஆட்சியை மாற்றுமளவிற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். புதிய ஆட்சியைப் பெற்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நான் தயாராக இருக்கின்றேன்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்த உண்ணாவிரத போராட்டம் இன்று யாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்…

  25. 'மீண்டும் எங்களை பழைய நிலைக்குத் தள்ள அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வுலி. வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 'பலாலி விமானத்தளம் விஸ்தரிப்புக்கான 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு படையினரால் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் விமானத்தள விஸ்தரிப்புக்காகவும் துறைமுறை விஸ்தரிப்புக்காகவும் 2 ஆயிரம் ஏக்கர் நில கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால் 24 கிராம …

    • 0 replies
    • 486 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.