Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் நகரில் புகைப்படம் எடுப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் தடை விதித்துள்ளனர். ஜனாதிபதியின் வருகையினை ஒட்டி நகர் எங்கும் இராணுவத்தினரும், பொலிஸாரும் நிறுத்தப்பட்டு வீதித் தடைகளும் போடப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. யாழின் முக்கிய இடங்களில் புகைப்படம் எடுக்கக் கூடாது என பாதுகாப்பு தரப்பு எச்சரித்துள்ளதுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அழிக்கப்பட்ட சம்பவம் இன்று நடைபெற்றது. அத்துடன் இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் இடங்களை புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். இன்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் பதாகை கட்டிக் கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர் ஒருவரினால் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதனை அவதானித்…

  2. சிங்கள மொழி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தமிழில் நடப்பதால், தன் மீதான வழக்கை சிங்கள மொழியைப் பயன்படுத்தும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிங்களர் ஒருவர் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பண மோசடி செய்ததாக தன் மீது வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளதாக கொழும்பு அருகே வசிக்கும் சிங்களர் ஒருவர் இந்த மனுவில் தெரிவித்துள்ளார். தானும் தனது சட்டத்தரணிகளும் சிங்கள மொழி மட்டுமே அறிந்தவர்கள் என்பதால் வவுனியா நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு விசாரணையை சிங்கள மொழியில் செயலாற்றும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரியிருந்தார…

  3. ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை எதிர்ப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப்போரில், தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதற்கு எதிர்‌ப்பு தெரிவித்து, சர்வதேச நாடுகளின் நெருக்கடியின் பேரில் கடந்தாண்டு நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆதரவு அளித்தன. இதன்காரணமாக, இலங்கை தமிழர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கைபணிந்தது. ஆனால், தற்போது அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில், சமீபத்தில் நடைபற்றெ சுதந்திர தின உரையில் கூட அதிபர் ராஜபக்சே, இலங்கை தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழ…

    • 2 replies
    • 522 views
  4. -நவரத்தினம் வவுனியா, இறம்பைக்குளத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண வைபவத்தின்போது பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த உணவகத்தின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்ள்ளது. வவுனியா நீதிவான் நீதிமன்றில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் சி.கிரிதரனினால் கடந்த மாதம் 28ஆம் திகதி தாக்ககு எடுத்தக்கொள்ளப்பட்டபோதே உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா காசுப்பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் நீதிமன்றம் விடுவித்தது. அத்துடன், வழக்கை மே மாதம் மாதம் 30ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதிமன்…

  5. மாத்தளை மனித புதைகுழியின் சூத்திரதாரி கோத்தபாய ராஜபக்‌ஷ செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 12, 2013 உள் நாட்டில் மக்களை மிரட்டும் மிகப்பெரும் மனித புதைகுழியான மாத்தளை வைத்தியசாலை புதைகுழியானது கோத்தபாயவின் நேரடி பார்வையில் கொல்லப்பட்ட ஜேவிபி உறுப்பினர்களது சடலங்களே என தகவல் கசிந்துள்ளது. 1988/89 காலப் பகுதிகளில் மாத்தளை மாவட்டத்தின் இராணுவப் பிரதானியாக பணியாற்றியவர் இன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவே.அன்றைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட புரட்சியை முறியடித்து மக்களைக் காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு என பிரதி கல்வியமைச்சரான நந்தமித்திர எக்கநாயக்கா தெரிவித்துள்ளார். நான் அப்போது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந…

  6. இலங்கையின் தற்போதைய முன்னேற்றகரமான நிலைமை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை அரசாரங்கத்துக்கு மரபு சாராத மற்றும் சிறப்பு நிதி உதவி எதையும் வேண்டி நிற்கவில்லை என்பதால் இலங்கைக்கு நேரடியாக அல்லது மறைமுகமான வரவுசெலவுத்திட்ட உதவி எதையும் நிதியம் கருத்திலெடுக்காது விடக்கூடும். இப்போது இலங்கை வளர்ச்சியடைந்து சர்வதேச மூலதன சந்தைகளிலிருந்து கடன்பெறும் ஆற்றலை கொண்டுள்ளது. எனவே வரவுசெலவு திட்டத்துக்கு யாதாயினும் உதவி தேவையெனில் இலங்கையால் அவ்வாறான சந்தை மூலங்களிலிருந்து இலகுவாக பெற்றுகொள்ள முடியும். எனவே வரவுசெலவு திட்ட நிதி திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்கவேண்டியதில்லை. மேலே கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாட்டை கவனத்திலிருந்து இலங்கையின் அதிகாரம் வா…

  7. ஐந்தரை வயது சிறுமியை பலியெடுத்தது ஸ்கானர் இயந்திரம் - நவலோகா வைத்தியசாலையில் சம்பவம்! [Monday, 2013-02-11 22:02:13] நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார். வலியால் வருந்துவது போல சில அறிகுறிகள் காணப்பட்டதால் ஜனவரி 31இல், தனது மகளை கொழும்பு, நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். 'தனது மகளை பார்வையிட்ட வைத்தியர், இரத்த பரிசோதனைகளையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையையும் பெறுமாறு கூறினார். தனது மகள் புத்தினி கௌசல்யாவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ ஸ்கானிங…

    • 7 replies
    • 721 views
  8. பாதுகாப்பு வலயங்கள் படைகளுக்கே உரியது; அடித்துக் கூறினார் யாழ்.படைத் தளபதி வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கும் பிரதேசங்கள் படைகளுக்குரியவை. அந்தப் பிரதேசங்கள் மக்கள் பாவனைக்காக ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டா. அவற்றைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நேற்று அடித்துக் கூறினார் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. யாழ்.நகரிலுள்ள சிவில் நிர்வாக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பலாலியில் படையினரால் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்த…

  9. ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம்-1 – ஈழத் தமிழர்கள் - குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தம்மை அறியாமலேயே ஒரு மிகப்பெரிய உளவியல் போருக்கு உள்ளாகிக்கொண்டு இருப்பதாக அண்மையில் என்னுடன் பேசிய ஒரு தென்னிலங்கை இராணுவ ஆய்வாளர் தெரிவித்தார். தென்னிலங்கையில் செயற்பட்டு தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவரும் அந்த சிங்கள இராணுவ ஆய்வாளர் குறிப்பிடும்பொழுது, ஈழத் தமிழர்களை -குறிப்பாக புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பணியகம் ( Directorate of psychological Operations) ஏற்கனவே உளவியல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் கூட அந்த ஊடக…

    • 11 replies
    • 1.5k views
  10. புனர்வாழ்வு என்ற பெயரில் மூதூரில் குடும்பத் தலைவர்கள் கைது! [Tuesday, 2013-02-12 07:38:48] மூதூர் கிழக்கு பிரதேசத்தில் 2006 ஏப்ரலில் நடத்தப்பட்ட யுத்த நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த பல தமிழ்க் குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் மற்றும் உறவினர்களுடனும் தங்கியே வாழ்கின்றனர். இந்நிலையில், அண்மையில் அவர்களில் ஏழு பேரை புனர்வாழ்வுக் கொடுப்பதாக கூறி கொழும்பிலிருந்து வந்த சிறப்பு புலானாய்வுப் பிரிவுக்குழு கைது செய்து கூட்டிக்கொண்டு சென்றதை அடுத்து கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைப்பறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அகதிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகவலை திருகோணமலை மாவட்டத்தின் ம…

  11. இன்று ஜனாதிபதி யாழிற்கு விஜயம்; பரபரப்பானது யாழ்குடா! [Tuesday, 2013-02-12 07:40:26] ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். நகர் துரித கதியில் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. இன்று ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் இவர்கள் பல முக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர். துரையப்பா விளையாட்டு அரங்கில் ஜனாதிபதி தலைமையிலான குழு வந்து இறங்குகிறது. அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலை உட்பட ஜனாதிபதி செல்லவுள்ள முக்கிய இடங்களும் துரித கதியில் காப்பெற் இடப்பட்டு வீதியின் இரு மருங்குகளும் சுத்தம் செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. வைத்தியசாலையின் உட்புற வெளிப்புற சுழலில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் நிறைந்து காணப்பட்…

  12. விஸ்வரூபம் திரைப்படம் சிறீலங்காவின் உண்மையான ரூபத்தையே வெளிப்படுத்துகிறது. பிப் 12, 2013 கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் சிறீலங்காவின் பல உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது. கமல்ஹாஸன் எழுதி, இயக்கி நடித்திருக்கு இப்படத்தில் சிறீலங்காவினால் கடந்த 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை சம்பந்தமான காட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. தீவிரவாத அமைப்பின் தொடர்பான காட்சிகள் என்றும், அது முஸ்ஸிங்களுக்கு எதிரானவை என்று தெரிந்து தெரிவித்து சிறீலங்கா அரசு நாட்டில் திரையிடுவதற்கு தடைவிதித்திருந்தது. எனினும் தற்போது, அதிலுள்ள சில காட்சிகள் நீக்கிவிட்டு திரையிடுவதற்கு அனுமதிவழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா அமைச்சர் ஒரு தெரிவிக்கையில், கழுத்து…

  13. மாவீரனின் விதைநிலத்தில் தேசவிரோதிகள் மிலேச்சத்தனம் - கல்லறை இடிக்கப்பட்டு தேசியக் கொடி வீசியெறியப்பட்டது! பிப் 12, 2013 வீரத்தமிழ்மகன் முருகதாசனின் விதைநிலத்தில் நிறுவப்பட்டிருந்த கல்லறை தேசவிரோதிகளால் இடித்து அகற்றப்பட்டு அங்கு பறக்கவிடப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடி வீசியெறியப்பட்டுள்ளது. (10.02.2013 ஞாயிறு – தமிழீழ தேசியக் கொடியுடன் கல்லறை) இந்நிழற்படத்தில் முருகதாசனின் கல்லறைக்குப் பின்புறமாக தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்தது பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை அவ்விடத்திற்கு சங்கதி-24 இணையத்தளத்தின் பிரித்தானிய செய்தியாளர் சென்ற பொழுது அங்கு வீரத்தமிழ்மகன் முருகதாசனின் கல்லறை இடிக்கப்பட்டு, அவ்விடத்தில் கே.பி குழு கைக்கூலிகளால் கொண்டு வரப்…

  14. கொமன்வெல்த் சிக்கல் முற்றுகிறது – ஆதரவு கோரி டாக்கா விரைகிறார் பீரிஸ் [ செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013, 00:55 GMT ] [ தா.அருணாசலம் ] கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்தும் விவகாரத்தில், ஏற்பட்டுள்ள சிக்கலில், பங்களாதேசின் உதவி கோரி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை டாக்காவுக்குப் பயணமாகவுள்ளார். கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பொறுப்பு தற்போது பங்களாதேசிடமே உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடக்கவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையிலேயே, பங்களாதேசின் ஆதரவைப் பெறுவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், டாக்கா செல்லவுள்ளார். …

  15. தூதுவரை திருப்பி அழைத்தது சவூதி By V.Priyatharshan 2013-02-11 04:15:19 இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக பதவி வகித்துவரும் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை சவூதி அரேபிய அரசு மீள அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசானா நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய அஹமட் ஜவாத் இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அழைக்கப்பட்டார். எனினும் பதவிக்காலம் முடிவடைந்ததனாலேயே தான் திருப்பி அழைக்கப்பட்டதாக ஜவாத் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே ஜவாத் திருப்பி அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இலங்கைக்கான சவூதி அ…

  16. இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய நாடாளுமன்றில் விவாதிக்க தமிழகக் கட்சிகள் தீவிரம் ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து, இந்திய நாடாளுமன்றின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதங்களை முன்வைக்க தமிழகக் கட்சிகள் தயாராகி வருவதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றின் இரு சபைகளின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த இரண்டு கட்சிகளும் கீழ், மேல் சபைகளில் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தி.மு.க பிரதிநிதிகளுடன் முன்னாள் அமைச்சர் ஸ்…

  17. இந்தியாவுடன் இருந்த நல்லுறவுகளை நிறுத்துவதற்கு காலம் வந்துள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்? இந்தியாவுடன் இருந்த நல்லுறவுகளை நிறுத்துவதற்கு காலம் வந்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர்களை அழைத்து தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மதியம் கொழும்பில் உள்ள அமைச்சர்களை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பில் 11 அமைச்சர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. சீனா இலங்கையுடன் இருப்பதால் எதற்கும் அஞ்ச வேண்டாம் எனவும் தமது பிரதேசங்களில் இந்தியாவுக்கு எதிராக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார். தான் இவ்வாறு கூறியதை அமைச்சர் தொண்டமானுக்கு கூறவேண்டாம் எனவும் அவர்…

  18. வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தமிழில் நடப்பதால், தன் மீதான வழக்கை சிங்கள மொழியைப் பயன்படுத்தும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிங்களர் ஒருவர் செய்திருந்த மனுவை இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பண மோசடி செய்ததாக தன் மீது வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளதாக கொழும்பு அருகே வசிக்கும் சிங்களர் ஒருவர் இந்த மனுவில் தெரிவித்துள்ளார். தானும் தனது சட்டத்தரணிகளும் சிங்கள மொழி மட்டுமே அறிந்தவர்கள் என்பதால் வவுனியா நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு விசாரணையை சிங்கள மொழியில் செயலாற்றும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரியிருந்தார். ஆனால் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மொழிப…

    • 0 replies
    • 337 views
  19. உதயன் பத்திரிகை நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவனனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்தார். யாழ். பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதலுக்கு ஹத்துருசிங்க பொறுப்பேற்ற வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபன் தெரிவித்த கருத்தொன்று உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றங்கள் அனைத்திற்கும் இராணுவத்தின் …

  20. செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த வடமாகாணசபைத் தேர்தலை, அரசு எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலையும், மேல் மாகாண சபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சர்வதேச நாடுகள், வடமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த வருடம் வரவுசெலவு திட்டச் சமர்பிப்பின்போது, வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும், இந்த மாத இறுதியில் இடம் பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டும…

    • 9 replies
    • 1.2k views
  21. சர்வதேச நாடுகளை அனுசரித்து இந்த இராஜதந்திரப் போரில் தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வெற்றிபெற வேண்டும். அல்லது அணிதிரண்டுவரும் சர்வதேச நாடுகள் விரக்தியடைந்துவிட நேரும். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த இராஜதந்திர நடவடிக்கையில் செயலாற்றி வருவது முக்கியமானதொன்றாகும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சிவராம் நினைவுப் பணிமன்றம் ஏற்பாடு செய்த ஐந்தாவது நினைவுக் கருத்தரங்கு சுவிஸ் சூரிச் மாநகரில் நேற்று சனி மாலை இடம்பெற்றது. ஊடகவியலாளர் கனகரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு இனப்பிரச்சினையும் சமகா…

  22. அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவோம் என சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்து அதனை ஏமாற்றிவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உண்மையான நிலைப்பாடு தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. இதுதான் அவரது உண்மையான நிலைப்பாடு. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது. திருகோணமலையில் இடம்பெற்ற சுதந்திரதின வைபவத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையினூடாகவே அவரது இந்த உண்மையான நிலைப்பாடு வெளிப்படத் தொடங்கியுள்ளது என்று தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சர்வதேசத்திடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நாடாக இலங்கை மாறியுள்ளது எனத் தெரிவித்த அவர், அனைத்து மக்களும் அரசியல் உரிமைகளைக் கையாளும் வகையில் அதிகாரங்கள்…

  23. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி தாக்கப்பட்டது, இதனால் ஆத்திரம் அடைந்த சிங்கள வெறியர்கள் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள இந்திய தூதர அதிகாரி வீட்டை சூறையாடினார்கள். வீட்டில் இருந்த வீடியோ மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து இலங்கை அரசு அதிகாரி கூறும்போது, இந்திய தூதரக அதிகாரி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த சென்றவர்கள் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர், தற்போது, இந்திய தூதரக அதிகாரி வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார். http://www.eeladhesam.com/index.php?option=com_c…

  24. சவூதி அரேபியாவுக்கான தூதரைத் திருப்பி அழைத்துக் கொண்ட சிறிலங்காவுக்கு பதிலடியாக, சவூதி அரேபியாவும் கொழும்புக்கான தனது தூதரை திருப்பி அழைத்துள்ளது. கடந்த மாதம் றிசானாவுக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், றியாத்தில் இருந்த தனது தூதுவரை சிறிலங்கா அரசாங்கம் திருப்பி அழைப்பதாக அறிவித்தது. இந்தநிலையிலேயே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கொழும்பில் இருந்த தனது தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜம்மாஸை சவூதி அரேபிய அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20130211107763

  25. யாழ் - கண்டி வீதியின் ஒரு பிரதேசம் கீழிறங்கியது திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013 20:43 0 COMMENTS -மொஹொமட் ஆஸிக் யாழ் - கண்டி ஏ9 வீதியின் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுமார் 60 அடி அளவிலான பாதை இன்று திங்கட்கிழமை மாலை கீழ் இறங்கியது. கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையிலான வீதியே கீழிறங்கியுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய இந்த பிரதேசம் பொல்கொல்லை வாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினாலேயே கீழிறங்கியுள்ளது என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/58716-2013-02-11-15-17-09.html

    • 2 replies
    • 747 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.