Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கண்டியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் கொள்ளையடிப்பதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஹிஜாப் உடை அணிந்திருந்த இந்த இராணுவ உயர் அதிகாரி விளையாட்டு துப்பாக்கி மற்றும் கத்தியுடன் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பெண் போன்று பாசாங்கு பண்ணிய இவரை வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கிப்பிடித்தனர். கொத்மலையில் பணியாற்றும் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/58391-2013-02-06-11-24-10.…

  2. பா.கிருபாகரன், டிட்டோ குகன்: பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருக்காமை தொடர்பில் ஆராய்வதற்காக சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் இடைநிறுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று மேற்படி சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா பேச ஆரம்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரோசி கருணாநாயக்கவே முதலில் பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் பற்றி ஒழுக்கப் பிரச்சினை கிளப்பினார். ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ரவி கருணாநாயக…

  3. மண்டைதீவில் பாரிய கடற்படை முகாம் ஒன்று கடற்படையினரால் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக கடற்படை ஓரமாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்படையினர் மணல் அகழ்வை மேற்கொண்டு வருகின்றனர். மண்டைதீவில் தெற்கு பிரதேசத்தில் இந்த மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தீவுப் பகுதியை அபிவிருத்தி செய்கின்றோமென்று தெரிவித்து தீவகத்தின் வளங்கள் தொடர்ச்சியாக சுரண்டப்பட்டு வருகின்றது. அப்பிரதேசத்தில் பொதுமக்கள் மண் அகழ்வதற்கு பிரதேச சபையும் பிரதேச செயலகமும் தடைவிதித்து வரும் நிலையில் கடற்படையினர் சுதந்திரமாக மணல் அகழ்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை வடமாகாண ஆளுனரின் உத்தரவில் பிரதேச சபையும் பிரதேச செயலகமும் பாராமுகத்துடன் செயற்பட்டு வருகின்றன. http://www.…

  4. இழந்த பதவியை மீளப்பெற மேர்வினுக்கு உதவுவாரா விஷ்ணு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி முன்னாள் அமைப்பாளரான மேர்வின் சில்வா இழந்த பதவியை மீண்டும் பெறும் நோக்கில் உத்பலவர்ண விஸ்ணு தேவாலயத்தில் இன்று விசேட பிராத்தனையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது 59 பிக்குகள் பிரித் ஓதி மேர்வினுக்கு ஆசி வேண்டியுள்ளதுடன் 108 தடவை செத் கவி பாராயணமும் இடம்பெற்றுள்ளது. இதன்போது இடம்பெற்ற விசேட பூஜைகளில் பல இடங்களிருந்தும் வந்த மக்கள் கலந்துகொண்டுள்ளனர். களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவலவின் கொலையின் பின்னர் மேர்வின் சில்வாமீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். http://www.virakesari.lk/article…

  5. நேசக்கரம் இணையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நேசக்கரம் இணையம் கடந்த 2வாரங்கள் வரையில் செயலிழந்து போயிருந்தது. 03.02.2013 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது என்பதனை வாசகர்களுக்கும் நேசக்கரத்தோடு இணைந்துள்ள அனைவருக்கும் அறியத் தருகின்றோம். www.nesakkaram.org தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் : Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org

    • 15 replies
    • 727 views
  6. அதிரடி தாக்குதல்களுக்கான தயாரிப்புப் பணிகளில் மீண்டும் புலிகள்? February 3, 2013, 12:30 am|views: 792 வடதமிழீழம் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் அதி உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த தமிழ் மக்களின் வீடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், பாரம்பரிய நிலங்களை நிரந்தரமாக்கும் முயற்சிகளிலும் சிங்களர் படைகள் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, புதிய காப்பரண்களையும் அமைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படைகள் தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதிதாக தாம் அமைத்து வரும் புதிய பாதுகாப்பரணை மையப்படுத்தி குரும்பசிட்டி-கட்டுவன்-தெல்லிப்பழை-காங்கேசன்துறை வரை இப்புதிய முக்கரங்க பாதுகாப்பு நில அமைக்கப்படுவதாக …

  7. எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முஸ்லீம் அமைப்புக்கள் சில தயாராகிவருகின்றன. முஸ்லிம் மக்களுக்கு அரச அமைச்சரான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, எதுவித உதவிகளையும் செய்யவில்லை என யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான முஸ்லிம் சம்மேளன தலைவர் கே.எம்.நிலாம் ஏற்கனவே குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். 'யாழ். மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், மீண்டும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேறியுள்ளனர். அவ்வாறு மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களினால் புறக்கணிக்கப்பட்டு…

  8. இலங்கைத் தமிழர்களின் சுயாட்சி உரிமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்திருக்கிறார். தமிழருக்கு சுயாட்சி கிடைப்பதை அவர் அடியோடு விரும்பவில்லை. நேற்றுமுன்தினம் திருகோணமலையில் நடைபெற்ற இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வில் அவர் ஆற்றிய உரை இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளிதழான "நியூயோர்க் ரைம்ஸ்". ஜனாதிபதி மஹிந்தவின் சுதந்திர தின உரையை கடுமையாக விமர்சித்துள்ள அந்த நாளேடு அவரது உரையின் முக்கிய பகுதிகள் குறித்து விளக்கத்தையும் அளித்துள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை உள்ளது எனவும், இன மற்றும் மொழி ரீதியான எந்தப் பிரிவினைகளுக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றும் ஜனா…

  9. வணங்காமண் நிவாரணக் கப்பல் தொடர்பான நிதி சேகரிப்புச் சர்ச்சைகள்..! பிப் 6, 2013 கப்டன் அலி என்ற சிரியா நாட்டுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஜரோப்பிய நாடுகள் மற்றும் ஜக்கிய இராச்சியம் வாழ் தமிழர்கள் சேகரித்த உலர் உணவுப் பொருட்கள்,உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றிக் கொண்டு 2009 யூன் மாதமளவில் இலங்கைக்குச் சென்றது. வணங்காமண் என்று இந்தப் பயணத்திற்காகப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பலில் சுமார் 894 மெ. தொன் நிவாரணப் பொருட்கள் இருந்தன. அந்தக் கப்பலில் 13 ஊழியர்கள் இருந்தனர். ஜஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழவின் உறுப்பினர் கிறிஸ்டன் வூச்னன் ஜக்கிய இராச்சிய குடியுரிமை பெற்ற உதயணன் தவராஜசிங்கம் ஆகியோரும் அதில் பயணித்தனர். நிவாரணப் பொருட்கள்…

  10. மரீன் டிரைவ் வீதியை விஸ்தரிக்க நடவடிக்கை : நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல By V.Priyatharshan 2013-02-06 15:01:29 கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான மரீன் டிரைவ் வீதியை தெஹிவளை வரை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மரீன் டிரைவ் வீதி ஏற்கனவே வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் வரை விஸ்தரிக்கப்பட்ட நிலையில் இதனை தெஹிவளை வரை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரண்டாவது கட்ட நடவடிக்கையாக தெஹிவளையிலிருந்து மொரட்டுவை வரை விஸ்தரிப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் மொரட்டுவையிலிருந்து ப…

  11. அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி பிரதம நீதியரசருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை விசாரிப்பதற்காக முழுமையான நீதியரசர் குழு நியமிக்கப்படவுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே கடந்த 1 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே முழுமையான நீதியரசர் குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தாம் சம்பந்தப்பட்டிருப்பதால், தாம் அதனை விசாரணை செய்ய…

    • 0 replies
    • 301 views
  12. பழைய பல்லவி பாடும் அரசுக்கு 25ம் திகதிக்குப் பின் காத்திருக்கிறது இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சைனக்கு அரசியல் தீர்வு காண்பதாக 2009 இலும், மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக 2012 இலும், ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கிய இரண்டு உறுதி மொழிகளையும் இன்று மீறிவிட்டது. இந்த உண்மையை வெறும் பொய்களால் திரையிட்டு மறைக்க முடியாது என்பதை இந்த மாதம் 25ம் திகதியிலிருந்து தொடங்கும் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு செல்லும் இலங்கை தூதுக்குழு தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு க…

  13. நாட்டில் சிங்களவர்களை விட முஸ்லிம்கள் அதிகமில்லை ; எஸ்.பி இலங்கையில் சிங்களவர்களை விட முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திளில் எந்தவிதமான உண்மையுமில்லை என உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற சுதந்திரத் தின வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 1962, 1983, 1993, 2011 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம் மக்களின் சனத்தொகை வீதம் அதிகரித்துள்ளதாகவும் சிங்கள மக்களின் சனத்தொகை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவர்களது எண்ணிக்கையில் …

  14. யாழ். நகரத்தின் எல்லையான நாவற்குழியில் நிரந்த சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக ஆரம்பமாகியுள்ளன. இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஈ.பி.டி.பி ஆதரவுடனும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் இந்தக் குடியேற்றப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிரந்தர சிங்களக் குடியிருப்பில் குடியேறியுள்ளவர்களுக்கு காணிகளைச் சொந்தமாக வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைசசர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். 2010ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறும் நோக்குடன் 54 குடும்பங்கள் சிங்களக் குடும்பங்கள் திடீரென வந்து யாழ். தொடருந்து நிலையத்தில் தங்கின. ஒரு மாதத்தின் பின்னர் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி நாவற…

  15. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகவே செயற்படுவோம் – மீண்டும் பிரித்தானியா உறுதி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், அனைத்துலக மன்னிப்புச்சபை எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் பதிலளிக்கையில், “அரசியல் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமான பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தும். அரசியல்தீர்வு அடிப்படையானது. அது இலங்கையில் உள்ள…

    • 2 replies
    • 1.3k views
  16. எரிக் சொல்ஹெய்ம் காத்திரமான யோசனைகளை முன்வைக்கவில்லை என்கிறது அரசாங்கம் - விக்கிலீக்ஸ் 05 பெப்ரவரி 2013 விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள் இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் காத்திரமான யோசனைகளை முன்வைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கானத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை அடிப்படையாக் கொண்டு, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும், இலங்கை சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபாலவிற்கு இடையில் நடைபெற்ற…

    • 2 replies
    • 478 views
  17. இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆசியாவின் சிங்கம் என பெயரிடுவது அவருக்கு வழங்கும் கௌரவமாகும் என ஈரானுக்கான இலங்கை தூதுவர் பைசால் ராஷின் கூறியுள்ளார். ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெற்ற இலங்கையின் 65 வது சுதந்திரத் தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் எந்த பேதங்களும் இன்றி சுதந்திரத்தினத்தை கொண்டாடுகின்றனர். பலருக்கு இந்த நிலைமை மறந்து போயுள்ளமையானது நாட்டின் துரதிஷ்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இலங்கையில் உள்ளவர்கள் அனைவரும் எவ்வித பயமும் இன்றி அனைத்து இடங்களுக்கும் செல்ல முடிந்துள்ளது. பயங்கரவாதத்த…

    • 2 replies
    • 281 views
  18. ஐ.நா.சபையில் 9 நாடுகளே இலங்கைக்கு ஆதரவு; சர்வதேச நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்கிறார் வசந்த பண்டார ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபை மாநாட்டின்போது, இலங்கைக்கு ஆதரவாக 9 நாடுகள் மட்டுமே வாக்களிக்கும். அதனால் சர்வதேச நெருக்கடிகளை இலங்கை சந்திக்க நேரிடும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலர் வசந்த பண்டார தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அரசு பிளவுபடும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவுள்ளது. அதனை இந்தியாவும் ஆதரிக்கவுள்ளது. அவ்வாறானதோர் நிலையில் இலங்கைக்கு ஆதரவாக சீனா…

  19. திண்மக் கழிவிலிருந்து மின் சக்தியினை உருவாக்குவதற்கான திட்ட உடன்படிக்கை கைச்சாத்து கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவுகளை சக்தி (ஈஸ்டெர்ன் வேஸ்ட் டு எனர்ஜி பிரைவெட் லிமிட்டட்) நிறுவனத்தினருக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மேற்படி நிறுவனத் தலைவர் பிராங் ஓங்க் ஆகியோர் உடன்படிக்கை பத்திரத்தில் ஒப்பமிட்டு கைமாற்றிக் கொண்டனர். திண்மக் கழிவிலிருந்து மின் சக்தியினை உருவாக்குவதற்கான திட்டத்தினை மேற்படி நிறுவனம் செயற்படுத்தவுள்ளது. இத்திட்டமானது 2013 ஜனவரி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை …

  20. வீதி அபிவிருத்திப் பணிகள், முகாம்களிலிருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்புதல் போன்ற செயற்பாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் அல்ல. அவற்றைவிட அரசியல் தீர்வைக் காண்பதுதான் அடிப்படைத் தேவை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரிட்டனின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் எலியார்ட் பர்ட். இணையத்தளத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், சித்திரவதைகள் உட்பட்ட மனித உரிமை மீறல்களை பிரிட்டன் கண்காணிப்பதாகவும், இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரிட்டிஷ் அரசு மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுமென்றும் குறிப்பிட்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டைக் கொ…

  21. இன்று (06 - 02 - 2013) புதுவை ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா வரும் இன அழிப்பு போர்க்குற்ற வாளி ராஜபக்சேவைக் கண்டித்து இன்று நண்பகல் நாம் தமிழர் கட்சியினர் முன்னறிவிப்பின்றி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் நிலையப் பகுதி முழுவக்டும் பரபரப்பாகக் காணப்பட்டது. அப்போது அங்கு வந்து சேர்ந்த காவலர்கள் நாம் தமிழர்களை கைது செய்ய முற்பட்டபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டதால் காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து கொண்டு சென்றனர். ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டனம் செய்ய, அவரது வருகையை தடை செய்ய நாம் தமிழர் கட்சியினர் இன்று முன்னறிவிப்பின்றி தொடர் வண்டி மறியல் போராட்டத்தில்…

  22. பயங்கரவாதிகளுக்கு நிதி வழக்குவதை தடுக்கும் சட்டமூலத்தை கொண்டு வரும் முன்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து அரசாங்கம் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்கம் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கருது வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். போருக்கு பின்னர் அரசாங்கம் கைப்பற்றிய விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான பணம் மற்றும் தங்கம் தொடர்பில் எவ்விதமான குறிப்புகளும் இல்லை. கே.பியிடம் இருப்பதாக கூறப்பட்ட கோடிக்கணக்கான பணம் தொடர்பாகவும் எதனையும் அரசாங்கம் வெ…

  23. மார்ச் மாத ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதுடன் பொலிஸ் அதிகாரத்தையும் வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையான திவயின இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்றும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஊடாக சிறிலங்கா அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 41 கோரிக்கைகளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக…

  24. மண்டைதீவில் மணல் அகழும் கடற்படையினர்! பிப் 6, 2013 யாழ் மண்டைதீவு தெற்கு கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். சிறீலங்கா கடற்படையினரின் தொடரான இவ்வாறான செயற்பாடுகளால் குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.இதனால் இந்த கிராமம் பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பெறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பெறுப்பற்று இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். மக்கள் தங்களின் தேவைகளுக்காக சொந்த காணிகளில் இருந்து மணல் அகழ அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிறீலங்கா கடற்படையினர் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பெருமளவு மணலினை அகழ்து கொண்டு செல்கின்றார்கள். இத…

  25. இரகசியமாக இந்தியாவுக்கு போயிருந்த சந்திரிக்கா குமாரதுங்க அங்கு என்ன பேசினார்? - இந்திய ஊடகங்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம்! [Wednesday, 2013-02-06 13:21:27] இந்திய அரசாங்கத்துடன் பேசும்படி எதிர்க் கட்சிகள்தான் சந்திரிக்கா பண்டார நாயக்காவை அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் இந்தியாவுக்கு இரகசியமாகப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அங்கு உயர் மட்ட தலைவர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளார். எனினும் சந்திப்புக்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்திய ஊடகங்கள் கூட இந்த விடயத்தை பொருட்டாகப் பார்க்கவில்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணத்தை அடுத்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.