ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143471 topics in this forum
-
பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங், வயது 38,முன்னால் காவல் துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்பு தான் இவரது குறிக்கோள். ராஜபக்சே வருகையை கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின் , அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் , தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமைகளை கொடுபதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 150,000 தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிகோளோடு செயல் பட்டு கொண்டு இருக்கும் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொட…
-
- 5 replies
- 618 views
-
-
ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது இந்தியா உணர வேண்டும் -கருணாநிதி சிங்கள அரசு செய்து கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்லாமல், அவற்றை எல்லாம் மீறியே இலங்கையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவுக்கும் பிறகு, நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக் கொண்டு, ராஜபக்சேவின் சுய உருவத்தையும் குணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் உலக அமைப்புகளின் உதவியோடு காப்பாற்றிட முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தீவின் 65ஆவது விடுதலை நாள் விழா, திரிகோண மலையில் நடைபெற்றபோது, அந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை …
-
- 3 replies
- 599 views
-
-
அமெரிக்க வர்த்தகக் குழு இலங்கைக்கு விஜயம் வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013 10:11 பல்துறை அமெரிக்க வர்த்தகக் குழுவொன்று இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இம்மாதம் 8ஆம் அல்லது 9ஆம் திகதிகளில் கொழும்புக்கு வருகின்றது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் முதன்முதலில் இக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர். கல்வித்துறை, வடிவமைப்பு ஆலோசனைச் சேவைகள், மற்றும் பொறியியல், உணவு தொழில்கள், சுகாதாரம், விமானசேவை ஆதரவு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய கம்பனிகளை உள்ளடக்கிய 3சி வர்த்தகக் குழுவே இலங்கைக்கு வருகின்றது. இக்குழுவினர் முன்னர் இந்தியாவின் சென்னை மற்றும் கொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டனர். அமெரிக்க தூதரகம் இருதரப்பு வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கு முயல…
-
- 6 replies
- 483 views
-
-
கோட்டாவின் கூற்றுக்கு இந்தியாவும் ஐ.சி.ஆர்.சியும் பதிலளிக்கவேண்டும்: கூட்டமைப்பு -அழகன் கனகராஜ் இறுதி யுத்தத்தின் போது புலிகள் சரணடைந்திருந்தாலும் சாதாரண மக்கள் சரணடைந்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். என்பதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் கூற்றுக்கு இந்தியாவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் பதிலளிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரு அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் முன்னுக்கு பின் முரண்படுகின்றன என்பதனால் இவைத்தொடர்பில் சர்வதேச…
-
- 3 replies
- 603 views
-
-
அமைச்சர் ரிசாத் பதியூதீன் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு எந்தவித அறிவிப்பினையும் வழங்காது, ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அமைச்சர் பதியூதீன் செஷ் வரியை விதித்துள்ளார். அதன்படி எந்த அடிப்படையில் ரிசாத் செஷ் வரியை அறவீடு செய்தார் என ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டில் தற்போது ஏற்றுமதியினைக் கண்டு வரும் தேயிலை கைத்தொழிலை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால் சிறு தேயிலை ஏற்றுமதியாளர்க அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். எமது நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமான வழிகளில் ஒன்றான தேயிலை ஏற்றுமதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்…
-
- 6 replies
- 553 views
-
-
பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதலுக்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும் என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார். யாழிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் விநியோக பணியாளர் இன்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போதே சரவணபவன் இதனை தெரிவித்தார் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து கருத்து தெர…
-
- 9 replies
- 570 views
-
-
தமிழக சட்டசபையில் இன்று (07) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) பேசியதாவது:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதில் ஏற்படும் இழப்புகளுக்கு இலங்கை அரசிடம் நஷ்டஈடு பெறும் வகையில் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் கடந்த முறை தீர்மானம் கொண்டு வந்தபோது, மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அந்த தீர்மானத்தின் கருத்துக்களை வலுவிழக்கச் செய்து ஆதரித்தது. இந்தமுறை கொண்டுவரும் தீர்மானம் உறுதியானதாக இருக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எந்த அதிகார பகிர்வும் தரமாட்டேன் என்…
-
- 1 reply
- 354 views
-
-
அரசியலமைப்பின் பிரகாரம் நூற்றுக்கு 100 வீதம் முன்னெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எவரும் தலையிடமுடியாது என்று அரசாங்கம் அறிவித்தது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார் . முன்னதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மா உள்ளிட்ட குழுவினருக்கு விஸா நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்மைப்பில் வெளி…
-
- 0 replies
- 395 views
-
-
சிரானிக்கு உயர் பதவி ஒன்றை வழங்கத் துடிக்கும் மகிந்த பிப் 7, 2013 பதவி நீக்கப்பட்ட தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு மகிந்த உயர் பதவி ஒன்றை வழங்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி நீக்கப்பட்ட நாள் முதல் ஷிரானி பண்டாரநாயக்காவுடன் தொடர்புகொள்ள அரசு தரப்பு முற்பட்டபோதிலும், அவர் அதனை விரும்பவில்லையெனவும், பின்னர் மகிந்த நேரடியாக தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு வரி இல்லாத பெறுமதியான புதிய வாகனம் ஒன்று தற்போது வழங்கப்பட்டுள்ளதெனவும், விரைவில் புதிய பதவி வழங்கப்படுமெனவும் கொழும்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவருக்கு ஆதரவாக தாமும் மக்களும் நடத்திய போராட்டங்களை ஷிரானி பண்டாரநாயக்கா மறந்து செயற்படுவதாக மூ…
-
- 6 replies
- 637 views
-
-
இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு மேலோங்கி இருப்பதுவே நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவரில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழுவினர் முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான மூல காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், வீணான சந்தேகங்கள் களையப்பட வேண்டுமென்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக நோக்கும் குறுகிய பார்வை அகற்றப்பட வேண்டுமென்றும் கூறினார். ஜேர்மன் சமஷ்டி குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஜார்ஜன் மொர்ஹார்ட், நீதியமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நீதியமைச்சில் இன்று வியாழக்கிழமை (07) முற்பகல் இடம்பெற்ற போது, தூதுவர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்…
-
- 0 replies
- 221 views
-
-
கடந்த மாதம் இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பாக அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவுஸ்திரேலய எதிர்க்கட்சி தலைவி ஜீலியா பிஷோப் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஸ்கொட் மார்சன் கெனன் மற்றும் நான் கடந்த வாரம் இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பாபாக கண்காணிக்க மக்களை சந்திக்க, இலங்கையில் சரியான முறையில் கொள்கைகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பன தொடர்பாக ஆராய்வதற்கே அங்கு விஜயம் செய்தோம். இவ் விஜயமானது மூன்று பகுதிகளாக ஒழுங்குச்செய்யப்பட்டிருந்தது. முதலாவது பகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் நாங்கள் மக்களை சந்திப்பதையே பெரிதும் விரும்பினர். அத்துடன் எங்களை மக்களிடம் அழைத்துச்சென்றனர். இலங்கை தேசமானது …
-
- 0 replies
- 375 views
-
-
புயலாக வீசும் வடக்கின் வசந்தம் - யாழ் ஏழாலையைச் சேர்ந்த இளைஞரைக் காணவில்லை- உறவினர் முறைப்பாடு 07 பெப்ரவரி 2013 வடக்கில் இலங்கை அரசு கூறிக்கொள்ளும் வடக்கின் வசந்தம் புயலாக வீசிக்கொண்டிருக்கும் நிலையினில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மனிதஉரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காணாமல் போன இளைஞரது குடும்பத்தவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கை சேர்ந்த குறித்த இளைஞரான 25 வயதுடைய வரதராஜா ஜெகதிஸ் என்பவரே காணாமல்போயுள்ளதாக இவரது குடும்பத்தவர்களினால்; முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் திருநெல்வேலி கலட்டி வீதியில் உள்ள வாகன திருத்தகத்தில் வேலைபார்த்து வந்த நிலையிலேயே நேற்று புதன…
-
- 1 reply
- 368 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார். கொழும்பில் இருந்து விமானத்தில் செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் வழிபாடு நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். இரவு பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார். பின்னர் ரேணிகுண்டாவுக்கு காரில் செல்கிறார். அங்கு இருந்த விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய போரி…
-
- 1 reply
- 364 views
-
-
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு தொடர்பாக அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இதேவேளை இம்மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைகளுக்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஊடகத் துறை அமைச்சரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. அதேவேளை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் உள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 426 views
-
-
அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ரணில் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன முரண்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.வதந்திகளின் அடிப்படையில் முரண்பாடுகள் வெடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துள்ளதாகவும், சிங்கள மக்கள் அழிவடைந்து வருவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.போர்த்தகேயர் காலத்தில் பின்னரே முஸ்லிம்கள் நாட்டுக்கள் பிரவேசித்ததாகக் குறிப்பிடப்படுவதாகவும், போர்த்துகேயரை நாட்டக்குள் அனுமதிக்க வேண்டாம் என 8ம் பராக்…
-
- 0 replies
- 318 views
-
-
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறித்து கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மாவிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளார். கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை சிறிலங்காவில் இருந்து இடம்மாற்றுவது தொடர்பான யோசனைகளை கனடா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதையடுத…
-
- 3 replies
- 825 views
-
-
புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற பகுதியில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் இப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இலங்கைக்கான இவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/58439-2013-02-07-06-41-05.html
-
- 6 replies
- 560 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை தனி ஈழமே என்ற கோரிக்கைக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வலு சேர்க்கிறார் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்பதற்காகவே, கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து இலங்கையின் மறுவாழ்வு பணிகளுக்கு ஆதரவு கொடுத்தோம். 2010-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 1½ ஆண்டுகளில் வரலாறு காணாத படுகொலைகளும், சித்ரவதைகளும் இலங்கை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசியல் குழுக்களுடனான மோதல் என்றில்லாமல், இலங்கை ராணுவமே களத்தில் இறங்கி, இனப்படுகொலை செய்தது. அரச பயங்கரவாதம் என உலக நாடுகள் இதனைக் கண்டித்தன. நாகர…
-
- 1 reply
- 425 views
-
-
அதிகரித்துள்ள வாழ்க்கை செலவை கண்டித்து ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கம், லேக் ஹவுஸ் சுற்றவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. http://tamil.dailymirror.lk/--main/58417-2013-02-06-14-25-02.html
-
- 2 replies
- 372 views
-
-
பொதுநலவாய நடுகளின் கொள்கைகளை இலங்கை பின்பற்றாத பட்சத்தில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என சர்வதேச மனிதவுரிமைகள் கண்ணகாணிப்பகம், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நியதிகளை மீறிச் செயற்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ் விடயம் குறித்து, மனித உரிமை கண்காணிப்பகம், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவருக்கு, கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது. மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் காத்திரமான மேம்பாட்டை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில், இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்தக் கூடாது என அக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட …
-
- 1 reply
- 350 views
-
-
தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு சிறிலங்காவும் உதவி! February 7, 2013, 1:14 am|views: 290 2011ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து, அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவும் உதவி செய்ததாக Open Society Foundations எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங்கால் தயாரிக்கப்பட்டு இவ்வமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் எனும் பெயரில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற சட்டவிரோத கைதுகள் மற்றும் சித்திரவதைகளுக்கு சிறிலங்காவ…
-
- 2 replies
- 595 views
-
-
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்ட 44 பேரும் தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது கணவனை பார்வையிட்டுத்திரும்பிய பெண் ஒருவர் தான் எதிர்நோக்கிய சிரமங்களை இவ்வாறு விவரிக்கிறார். கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் எனது கணவரும் கைது செய்யப்பட்டார். நாங்கள் வன்னியில் இருந்து வந்ததைத் தவிர நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. எந்த ஒரு அறிவித்தலும் இல்லாது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட…
-
- 0 replies
- 275 views
-
-
சாதிப்பதற்கு ஊனம் ஒருபோதும் தடையல்ல; 3ஏ சித்தி பெற்ற வாழ்வக மாணவன் தர்மதன் ஊனமென்பது எதற்கும் தடையில்லை எதையும் முயற்சித்தால் நாம் சாதித்து காட்ட முடியும். கலைப்பிரிவில் 3ஏ சித்திபெற்று மாவட்ட நிலையில் 4ஆவது இடத்தைப் பிடித்து சாதித்த சுன்னாகம் வாழ்வக மாணவன் சொர்ணலிங்கம் தர்மதன் கூறுகின்றார். தனது இரு கண்களில் பார்வையை இழந்த நிலையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் விடாமுயற்சியுடனும் கற்றேனென உதயனுக்கு வழங்கிய செவ்வியில் மிகவும் உருக்கமாக தெரிவித்தார் அவர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: யாழ். மாவட்டத்தில் என்னைப் போன்ற விசேட திறமையுள்ள மாணவர்களுக்கு கற்றலை தொடர்வதற்கான போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. சாதாரண மாணவர்களுடன்…
-
- 8 replies
- 651 views
-
-
தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூரில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் விநியோகிப்பதற்கு எடுத்துச்சென்ற பத்திரிகையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளுக்கும் எரியூட்டப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த விநியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/58422-2013-02-07-01-44-39.html
-
- 5 replies
- 589 views
-
-
படையினரின் எறிகணைத்தாக்கதலில் கைகளை இழந்த தமிழ்பெண் கால்களால் கணணிகற்றுக்கொடுக்கம் ஆசானாக திகழ்கின்றார் சிறீலங்காப் படையினரின் போர் நடவடிக்கையின் போது தனது இரண்டு கைகளையும் இழந்த செபஸ்ரியான் செல்வநாயகி என்ற பெண் கால்களால் கணணியினை இயக்கி பலருக்க ஆசானாக திகழ்கின்றார்! வெற்றிலைக்கேணி முள்ளியானை சொந்த இடமாக கொண்ட இவர் சிறீலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் 1990ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22 ஆம் நாள் எனது இரு கைகளையும் இழந்துள்ளேன். 14 அகவையில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பராமரிப்பில் வளர்ந்தேன். பின்னர் என்னை பராமரித்தது படித்து ஆளாக்கியது கணணிதுறையில் சிறப்ப தேர்ச்சி யடைய கற்றுக்கொடுத்ததும் விடுதலைப்புலிகள் தான் இன்றும் அவர்கள் மூலம்…
-
- 8 replies
- 887 views
-