ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
கட்டாக்காலி நாய்களை அழிக்கின்ற நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை அறிந்த நாய்கள் அவசரமாக மாநாடு ஒன்றை நடத்தின. மாநாட்டில் வீட்டுநாய்களும் தெருநாய்களும் கலந்து கொண்டிருந்தாலும் தெரு நாய்களே அதிகமாக பங்கேற்றன. உயர்ரக நாய்கள் பகிஷ் கரித்தது போல மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நாய்க்கூட்டத்தலைவர் கூட்டத்தை ஆரம்பித்தார். அன்புக்குரிய எனதருமை சகோதர நாய்களே! மனிதர்களுக்கே நன்றியின் பெருமையை உணர்த்திநிற்கும் என் இனமே எங்கள் குல தெய்வமாகிய வைரவப் பெருமானை ஒரு நிமி டம் வணங்கிக்கொள்வோம் என்றார். அடுத்தாக வீதிவிபத்துக்களிலும் நீர் வெறுப்பு நோயினாலும் மரணித்து போன எங்கள் உறவு களுக்காக மோகன ராகத்தில் அபரக் கீதம் இசைப் போம் என்றார். த…
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கையில் குறிப்பாக வடக்கில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ நெருக்குவாரங்கள், மற்றும் சட்டவிரோதமான குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன. இவைகளை தடுத்துநிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்றுக்காலை நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்க…
-
- 1 reply
- 419 views
-
-
இலங்கையில் அமுலிலுள்ள பெற்றோலிய அகழ்வுக்கான சட்ட மூலத்தில் திருத்தத்தை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், புதிய சட்ட வரைபுகள் ஜனாதிபதியின் அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த புதிய சட்ட வரைபின் மூலம், இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்காணிப்பு நடவடிக்கைகளை சர்வதேச தரங்களுக்கு அமைய மேற்கொள்ள முடியுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். தற்போது இலங்கையில் பெற்றோலிய வள ஆய்வு நடவடிக்கைகளை கெய்ன் இந்தியா எனும் எண்ணெய் அகழ்வு நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும், பெற்றோலிய வளங்கள் காணப்படும் என இனங்காணப்பட்ட இதர பகுதிகள் விரைவில் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். http://tamil.da…
-
- 1 reply
- 457 views
-
-
இலங்கையுடன் ஒன்றிணைவதற்கான தேவை இருக்கின்றது - அஷோக் காந்தா! [sunday, 2013-01-27 09:23:42] இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து இருப்பதற்கான தேவைப்பாடு உள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா குறிப்பிட்டுள்ளார். இந்தியவின் 64வது குடியரசு தின நிகழ்வுகள் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்பிட்டார். இருநாட்டுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பட்டு வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் இலங்கையும் பொது வராலாற்றுக்கு உரிமை கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். http://www.seithy.com/listAllNews.php?newsID=74708&category=TamilNews&language=tamil
-
- 4 replies
- 665 views
-
-
இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் புத்த சாசனத்துக்குப் பொறுப்பான அமைச்சரே பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பௌத்த மத விவகாரங்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களின் மதங்களான இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களின் விவகாரங்களுக்கும் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். தற்போது நாட்டின் பிரதமரான டி.எம். ஜயரத்னவே புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சராக பதவி வகிக்கின்றார். புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சராக உள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ன இந்த நிலைமையில், பல்லின சமூகங்களும் வாழ்கின்ற நாட்டில் எல்லா மதங்களையும் உள்ளடக்கும் விதத்திலேயே நாட்டின் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு அமைய வேண்டும் என்று அரசாங்கத்தில் பங்காளிக் கட்ச…
-
- 0 replies
- 395 views
-
-
அவிசாவளை புனித மரியாள் தேவாலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த மாதா திருச்சொரூபம் இனந்தெரியாதோரினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் 150 ஆவது வருட நிறைவையொட்டி அவிசாவளைஎட்டியாந்தோட்டை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த 13 அடி உயரமான மாதா திருச்சொரூபமே இவ்வாறு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயமானது 1863 இல் கட்டப்பட்டது. 1896 இல் தேவாலயமும் இன்றைய புனித மரியாள் பாடசாலை உள்ள இடமும், ஆலயத்துக்குப் பின்னாலுள்ள இறப்பர் தோட்டக் காணியும் ஆங்கிலேயர் அரசால் ஆலயத்துக்கு உரித்தாக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேவாலயத்தின் முப்பொன் விழாவையொட்டி சுமார் 13 அடி உயரமான மாதா திருச்சொரூபம் ஸ…
-
- 0 replies
- 510 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் பெப்ரவரி 8ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகாயாவுக்கு செல்லவுள்ளார். இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. புத்தகாயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில், சிறிலங்காவில் அமைதி மற்றும், அபிவிருத்திக்காக வழிபாடு நடத்தவே மகிந்த ராஜபக்ச புத்தகாயா வரவுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தப் பயணத்தின் போது. பீகார் மாநில முதல்வர் நித்தீஸ்குமாரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சென்றிருந்த சி…
-
- 6 replies
- 657 views
-
-
13ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு முடிவுகட்டிவிட்டே அரசு ஜெனிவா இராஜ தந்திரச் சமருக்குச் செல்ல வேண்டும். இல்லையேல், நாட்டை இரண்டாகக் கூறு போடுவதற்கான நிலை உருவாகும் அபாயம் உள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. தலைகீழாக நின்று முயற்சி செய்தாலும் அமெரிக்காவின் இலங்கை விரோதப் போக்கை மாற்றியமைக்கமுடியாது என்றும் அந்த இயக்கம் சுட்டிக் காட்டியுள்ளது. சுவிஸ் தலைநகர் ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் வருடாந்த கூட்டத் தொடர் குறித்து கருத்து வெளியிடும்போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். மனித உரிமைகள் விவகாரத்தை மையப்படுத்தி இலங்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்க…
-
- 0 replies
- 798 views
-
-
ஏழுநாள் விஜயமாக இலங்கை வந்துள்ள மூவரடங்கிய அமெரிக்க தூதுக்குழுவினரிடம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட வேண்டும் என்ற யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளைக் கூட அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்னும் இராணுவம் வடபகுதியில் இருந்து குறைக்கப்படவில்லை என்றும், காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்னும் மக்களின் கண்ணீர் துடைக்கப்படவில்லை என்றும் அவர் எடுத்துக் கூறியிருக்கின்றார். சுமார் ஒரு மணி…
-
- 2 replies
- 430 views
-
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் (ஈ.பி.டி.பி) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்காக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார். தனக்கும் தனது கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உதயன் பத்திரிகையினால் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டதாகவும் இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான தனக்கு உதயன் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாவினை நஷ்டஈடாக வழங்க வேண்ட…
-
- 1 reply
- 444 views
-
-
வட மாகாண சபை தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அமையவே நடத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. வடமாகாணத் தேர்தல் நடாத்த வேண்டுமாயின் 1981 ஆம் ஆண்டு உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் மூவின மக்கள் மீள்குடியேறிய பின்னரே நடத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எனினும் வடக்கில் இருந்து விரட்டப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள குடியேற்றாமல் வடமாகாண சபைத் தேர்தலை அரசு நடத்துமாயின், வடக்கில் தமிழ் மக்கள் மாத்திரமே வாழ முடியும் என்ற நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டு விடும். வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியது ஆனாலும் அதற்கு முன்பாக வடக்கில் இருந்து இடம்பெ…
-
- 0 replies
- 475 views
-
-
வடக்கில் மாத்திரமல்ல தற்போது தெற்கிலும் இராணுவமயப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்ற பாரதூரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அரச பிரதிநிதிகள், இராணுவத்தின் அறிக்கை தொடர்பான அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும், இந்த அனைத்து நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாது தவிர்க்க அரசாங்கம் முயற்சித்து வருவதை உணர்த்துகின்றது. அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக அரசாங்கம், நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் உறுதிமொழியை வழங்கி விட்டு, மீண்டும் அதனை செயற்படுத்த …
-
- 0 replies
- 429 views
-
-
இன்னமும் காணாமல் போனோர் பற்றிய விவரங்கள் எமக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இந்த விவகாரத்தில் அரசு அக்கறை எடுத்திருந்தால் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்வதை தடுத்திருக்க முடியும். இலங்கையில் இன்னமும் போர் ஓய்ந்துவிடவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விடவும் இப்போது மக்கள் மீதான அரசின் கெடுபிடிகளும், இறுக்கமான நடைமுறைகளும் அதிகரித்தேயுள்ளன. மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரை தாம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து மூன்று வருடங்கள் கழிந்த பின்னரும் கூட இன்னமும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் நீடிக்கவே செய்கின்றன. இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது அமெரிக்க உயர்மட்டக் குழு. யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த 8 பேர் அடங்கிய அமெரிக்க வெளிவிவகார உயர…
-
- 1 reply
- 715 views
-
-
மலையக தோட்டப் பகுதிகளில் வீட்டு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமூக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மலையக தோட்டங்களில் வாழும் மக்கள் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருப்பதே இதற்கான காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். தோட்டத்தில் உள்ள ஆண்கள் மதுபானத்திற்கு பெருபாலும் அடிமையாகி இருப்பது, சமூக அழுத்தங்களுக்கு ஆளாகி இருப்பது இந்த வீட்டு வன்முறைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. தோட்டங்களில் வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக மலையக குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தோட்டங்களில் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTyp…
-
- 0 replies
- 364 views
-
-
யாழ்ப்பாணத்தில் தற்போது இறுக்கமானதொரு சூழ்நிலை உருவாகியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் நிலைவரங்கள் தொடர்பில் யாழ். ஆயருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது, நிலைமை ஓரளவுக்கு சுமுகமாகக் காணப்பட்டது. ஆனால் 5 மாதங்களின் பின்னர் நிலைமை மாற்றமடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57820-2013-01-28-04-40-21.html
-
- 0 replies
- 465 views
-
-
நயினாதீவு நாக விகாரைக்கு செல்லும் இறங்குதுறை நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. நாகவிகாரை விகாராதிபதியின் ஏற்பாட்டில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் இவ் இறங்குதுறை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57646-2013-01-24-09-32-29.html
-
- 8 replies
- 794 views
-
-
January 26, 2013 உலக சினிமாவின் தரத்திற்குள் கால் பதித்துள்ள முதலாவது தமிழ் தயாரிப்பு.. தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் வெளியான மறு நாளே எழுதும் விமர்சனம் தமது தொழிலை பாதிக்கிறது என்ற கோரிக்கையால் விஸ்வரூபத்திற்கான உண்மை விமர்சனத்தை எழுத பத்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் விஸ்வரூபத்தைப் பார்த்த பிறகு அதுபற்றி உடனடியாக எழுதாவிட்டால் அதுவும் தொழிலைப் பாதிக்கும் செயலே என்ற உண்மையை அப்படம் ஏற்படுத்திவிட்டது. இதுவரை டண்டுணக்கா.. டணக்கு ணக்கா என்றிருந்தலே போறும் என்றிருந்த இந்திய தமிழ் சினிமாவை ஒரே இழுவையாக இழுத்து, மலையின் உச்சிக்கு ஏற்றியிருக்கிறார் கமல். காதல் பாட்டுக்கள் இல்லை, வில்லனுக்கு மரணமில்லை, கிளைமாக்ஸ் இல்லை…
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ்.பல்கலை. மாணவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் விடுதலை! [Monday, 2013-01-28 08:13:55] பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வெலிகந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் எஞ்சிய இரண்டு மாணவர்களும் அடுத்த மாதமளவில் விடுதலை செய்யப்படுவர்கள் என இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்களை விடுவிப்பதற்கான கால எல்லை இறுதி செய்யப்படவில்லை. மாணவர்களுடைய செயற்பாடுகளைப் பொறுத்து அடுத்த மாதத்தில் எந்நேரமும் அவர்கள் விடுவிக்கப்படலாம் என யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கொழும்பிலிருந்து செயற்படும் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாத இ…
-
- 0 replies
- 229 views
-
-
மீன்பிடி எல்லைகள் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒப்பந்தம் 28 ஜனவரி 2013 மீன்பிடி எல்லை நிர்ணயம் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளது. பாக்கு நீரிணைப் பகுதியில் இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் வீ.நாரயணசாமி தெரிவித்துள்ளார்.இந்த உத்தேச ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பான உத்தேச யோசனைகளுக்கு இ…
-
- 1 reply
- 402 views
-
-
அமைச்சரவையில் இன்று மாற்றம் By General 2013-01-28 20:01:26 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முக்கிய சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள வைபவத்தில் ஆறு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பார்கள் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக தற்போதைய அமைச்சரவையில் ஆறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அந்தவகையில் நான்கு புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதுடன் ஏற்கனவே இருக்கின்ற அமைச்சுக்கள் சிலவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.virakesari.lk/article/local.php?v…
-
- 2 replies
- 344 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட உள்ளது? 28 ஜனவரி 2013 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட உள்ளது? ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானமொன்றை நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவையின் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அமர்வுகளின் போது இலங்கைக்கு கடுமையான நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான தீர்மானங்களை அமெரிக்கா நிறைவேற்ற முயற்சிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் க…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் கடும்போக்குவாதமும் தீவிரமடைந்துவருவதாகவும் அதனால் மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த அமைப்பு சுமத்துகின்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மறுக்கிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைக் காலங்களாக நாட்டில் நடந்துவரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் முஸ்லிம் தலைவர்கள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக பிபிசி தமிழோசையிடம் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். முஸ்லிம்கள் மத்தியில் மத அ…
-
- 12 replies
- 903 views
-
-
புத்தர் பார் என்ற பெயரில் களியாட்ட விடுதி: இருவருக்கு விளக்கமறியல் By Hafeez 2013-01-25 11:05:36 ‘புத்தர் பார்’ என்ற பெயரில் களியாட்டம் விடுதி ஒன்றை நடத்திய இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலுத்கம மொரகல்ல சினமன் கார்டன் என்ற உல்லாச விடுதியில் மேற்படி களியாட்ட விடுதி காணப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விடுதியின் முகாமையாளர்களான கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த யு.டீ.ஏ. சமன்குமார மினுவாங்கொட ஹல்மில்லேவ என்ற இடத்தைச் சேர்ந்த முஹம்மட் பஸீல் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட…
-
- 3 replies
- 420 views
-
-
முன்னாள் நீதியரசர் ஷிராணிக்கு முக்கிய பதவி வழங்க சர்வதேச நிறுவனங்கள் அழைப்பு! மஹிந்த அரசால் திட்டமிட்டு குற்றப்பிரேரணையூடாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு சர்வதேச ரீதியில் முக்கிய பதவிகளை வழங்குவதற்கு பல சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், மேற்படி அழைப்புகள் தொடர்பில் ஷிராணி பண்டாரநாயக்க இறுதித் தீர்மானமொன்றை எடுக்கவில்லை என்றும், இவை குறித்து அவர் சாதகமாகப் பரிசீலித்து வருகிறார் என்றும் தெரியவருகிறது. சர்வதேச நீதித்துறை ஆணைக்குழு உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் தமது நிறுவனங்களில் பதவியேற்குமாறு ஷிராணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் …
-
- 2 replies
- 731 views
-
-
Quiet Efforts of Jaffna University Vice-Chancellor Succeed in Two Undergrads Being Released After “Rehabilitation” By D.B.S.Jeyaraj Prof. (Ms.) V. Arasaratnam Two of the four Jaffna University undergraduates held at the Protective Accommodation and rehabilitation Center(PARC) at Welikanda have been released on Tuesday January 22nd 2013. Rehabilitation Commissioner-General Brigadier Tharshana Hettiarachchi confirmed to the media that the two students — Jaffna University Student Council President V.Bavananthan and Science Faculty third year student and union member S.Solomon were released today 22nd. They were released after undergoing “rehabilitation” at Weli…
-
- 14 replies
- 1k views
-