Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் எவரும் காணாமல் போகவில்லை என்று இலங்கை இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை கூறியிருப்பது குறித்து அமெரிக்கா மிகுந்த விசனம் அடைந்திருப்பதாக இலங்கை வந்துள்ள அமெரிக்க தூதுக்குழுவினர் தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் கடந்த வருடம் ஐநா மனித உரிமை பேரவையின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய அமெரிக்க தூதுக்குழுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திருக்கிறார்கள். அது குறித்துக் கூறுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறை…

    • 2 replies
    • 1.4k views
  2. அமெரிக்க உயர்மட்டக் குழுவின் சந்திப்புகள் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகளால் கண்காணிப்பு [ திங்கட்கிழமை, 28 சனவரி 2013, 00:26 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவின் சந்திப்புகளை, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுச் சேவைகள் கடுமையாகக் கண்காணித்து வருவதாக, கொழும்பு ஊடகத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் குறித்து கடுமையான கண்டனங்களை அமெரிக்கா தெரிவித்திருந்த பின்னணியிலேயே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி உதவிச்செயலர்களான ஜேம்ஸ் மூர், விக்ரம் சிங், ஜேன் சிம்மர்மன் ஆகியோர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட…

  3. மார்ச் மாதம் இடம்பெறும் மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக செயற்பட ஆபிரிக்க ஒன்றியம் தீர்மானம்! [sunday, 2013-01-27 15:09:33] ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 27 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்க நாடு ஒன்றும் செயற்படவுள்ளன என்று அரசுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக திவய்ன ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்கா நாடொன்றும் இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் திரட்டிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். சம்பந்தன் தலைமைய…

  4. தமிழர் பகுதிகளுக்கு விரைவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் - இந்தியா நம்புகிறது? [ செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2013, 16:18 GMT ] [ அ.எழிலரசன் ] சமத்துவமான, நீதியான, கௌரவமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தமிழர்தரப்புடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தமிழர் பகுதிகளுக்கு அர்த்தமுள்ள அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்துடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். புதுடெல்லியில் இன…

  5. இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்திய துணைதூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியன் வங்கியியைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதன் போது, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியினால் வெளியிட்ட வாழ்த்து செய்தியும் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கத்தினரால் வாசிக்கப்பட்டது. http://onlineuthayan.com/News_More.php?id=797261794327108864

    • 7 replies
    • 752 views
  6. ஈழத்தமிழர் நலனிற்காக 47 நாடுகளிடம் கோரிக்கை முன்வைக்க டெசோ திட்டம் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பதற்காக ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு 12.8.2012ல் டெசோ மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் ஈழத்தமிழர் நல்வாழ்விற்காக எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஐ.நா சபை துணைப்பொதுச் செயலாளர் யான் லியா சன், ஜெனிவா மனித உரிமை ஆணையத்தலைவர் நவநீதம் பிள்ளை ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி ஈழத்தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டு சமத்துவம், அமைதி நிறைந்த வாழ்வு மேற்கொள்ள இலங்கை அ…

  7. சிறிலங்கா மீது அடுத்தடுத்து சைபர் தாக்குதல் – ஒவ்வொன்றாக முடங்கும் அரச இணையங்கள் [ வெள்ளிக்கிழமை, 25 சனவரி 2013, 11:20 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அரசின் பாதுகாப்பு, பொருளாதார முக்கியத்துவம்மிக்க இணையத்தளங்களை முடக்கும் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சிறிலங்கா அரச இணையத்தளங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மறைமுகப்போரின் ஒரு கட்டமாக, சிறிலங்கா முதலீட்டுச் சபையின் இணையத்தளம் இன்று முடக்கப்பட்டுள்ளது. டவி ஜோன்ஸ் என்ற ஊடுருவல்காரரால், சிறிலங்கா அரசின் இணையத்தளங்களை முடக்கும் போர் நடத்தப்பட்டு வருகிறது. சிறிலங்கா முதலீட்டுச்சபையின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 2000 இற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் விபரம் மற்றும் ஏனைய முக்கிய ஆவணங்கள்,…

    • 7 replies
    • 977 views
  8. கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பு சிறிலங்காவிடம் இருந்து பறிக்கப்படலாம் என்று எழுந்த அச்சத்தை அடுத்து, அதனைத் தடுத்து நிறுத்தும் அவசர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன, அவசர அவசரமாக, கடந்தவாரம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு முன்னதாக, சிறிலங்கா விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கனடா அழுத்தம் கொடுத்து வருகிறது. கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்தக் கூடாது என்று கனடா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த வாய்ப்பு ப…

  9. நாடாளுமன்றத்தில் இருக்கும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று அரசாங்கம் எண்ணி பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், அமெரிக்க ராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார். போருக்குப் பிந்திய நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்கு இன்று யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க ராஜதந்திரரிகள், ஆயர் இல்லத்தில் சந்தித்து இங்குள்ள நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடபகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை பெரும் பி…

    • 2 replies
    • 399 views
  10. புலம் பெயர் தமிழர்கள் வழங்கும் அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு சர்வதேசம் செயற்படக் கூடாது. புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளில், தங்களது நாட்டு அரசுக்கு இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கின்றனர். எனவே இந்த அழுத்தங்களினால், எமது நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஒரு போதும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவ காரங்களில் சர்வதேச தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சில நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அ…

    • 3 replies
    • 539 views
  11. ஓய்வூதியத்தையும் இழந்தார் ஷிராணி பண்டாரநாயக்க! By General 2013-01-27 11:46:03 முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை பாராளுமன்றம் ஒருவரை சேவையிலிருந்து நீக்க தீர்மானிக்கும் விடத்து அவர் ஓய்வூதியம் பெறும் தகமையை இழக்கிறார் என ஓய்வூதியத் திணைக்களத்தின் பொது பணிப்பாளர் டி. சுவர்ணபால தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியினால் பணி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை முன்னாள் பிரதம நீதியரச…

  12. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்டக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் குழுவினர் யாழ். ஆயர், சமூக பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளைச் சந்தித்து யுத்தத்தின் பின்னர் தற்போதைய நிலைமைகளை ஆராய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் பணியகத்தின் கீழ் பணியாற்றும், பிரதி உதவி இராஜாங்கச் செயலாளர்கள் விக்ரம்சிங், ஜேம்ஸ் மூர், ஜேன் சிம்மர்மன் ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்தனர். இதேவேளை, அமெரிக்க உயர்மட்டக் குழுவினர் முதன்முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதனையடுத்து ஐக்கி…

    • 0 replies
    • 642 views
  13. இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை அடுத்த மாத நடுப்பகுதியில் ஐ.நா.வில் வெளியிடப்படும்: ஜெனீவா தகவல்கள் By General 2013-01-27 10:53:22 இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் முதலாவது அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கை என்ற நீதியில் அறிக்கையொன்று வெளிவந்திருந்தது. கடந்த மார்ச் மாதம் மனித உரிமை பேரவையால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் மீள்பதிப்பீடாக இந்த அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அது எதிர்வரும் வாரங்களில் இலங்கை…

  14. முல்லைத்தீவு எல்லை கிராமங்கள் சிங்களமயம்-தமிழர் வெளியேறும் நிலையில்! ஜன 27, 2013 முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டு தொழில் வளங்கள் சுரண்டப்படும் நிலையில் மிகப்பெரும் வாழ்வாதார நெருக்கடியினை தமிழர்கள் எதிர்நோக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இதனால் பூர்வீக வாழ்விடங்களை விட் டு வெளியேறும் நிலை தோற்றுவிக்கப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 1984ஆம் ஆண்டு இந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 27வருடங்களின் பின்னர் 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டனர். இந்த மக்களுடைய வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் கடல்வளம் முழுவதும் 1984 ஆம் ஆண்டின் பின்னர் குடியேறிய சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப…

  15. இந்திய மீனவர்களின் அத்து மீறலை கண்டித்து மன்னார் தொடக்கம் கொக்கிளாய் வரை நடைபயணம்! ஜன 27, 2013 இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்று மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் வரைக்கும் நடைபயணம் ஒன்றை நடத்த வடபகுதியில் உள்ள மீனவர்கள் தீர்மானித்துள்னர். பேரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்வில் வடபகுதியில் உள்ள கடற்றொழில் சங்கங்கள் அனைத்தும் கலந்துகொள்ளவுள்ளது. சுமார் 300 மீனவர்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். மேற்படி அமைப்பினால் இதற்கு முன்னர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை நடத்ததியிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்றும் மேற்படி நடைபயணப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள மீனவர்கள்…

  16. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை By General 2013-01-23 10:59:29 முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவத…

  17. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றி பேச அமெரிக்க ராஜதந்திரிகள் இலங்கை விஜயம் அமெரிக்க ராஜதந்திரிகள் நாளை (26) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அமெரிக்க ராஜதந்திரிகள் மாலைதீவிற்கும் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர், ஜேம் ஸிம்பர்மன் மற்றும் துணை பாதுகுhப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உயர்மட்ட ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்களை அமெரிக்க ராஜ…

  18. தமிழ் இனத்தை அழியாமல் காப்பதற்கு பிரபாகரனை தவிர வேறு தலைவர்கள் இல்லை - சீமான் பேச்சு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:- தமிழ் படித்தால் மட்டுமே வேலை, தமிழில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற நிலை மிக விரைவில் வரும். நாங்கள் தமிழுக்காக போராடுவது அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழை காக்கவே தவிர, மற்ற மொழிகளை அழிப்பதற்காக அல்ல, தமிழ் இனத்தில் பிறந்து தமிழுக்காக போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான். தமிழை வளர்க்கவும், தமிழ் இனத்தை அழியாமல் காக்கவும் வேறு ஒரு தலைவர் தமிழ் இனத்தில் இருந்தது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு தமிழ் மொழியை பற்றி கவலை இ…

  19. ஜெனிவாவில் மற்றொரு பிரேரணை உறுதி! - கூட்டமைப்புடனான சந்திப்பில் அமெரிக்க பிரதிநிதிகள் கருத்து இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை மதியம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜெனிவாவில் கடந்தமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமை குறித்து அமெரிக்கா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த அலட்சியப்போக்கிற்கு எதிராக இம்முறை கடுமையானதொரு பிரேரணையை கொண்டுவரவுள்ள விடயத்தையும் அமெரிக்க பிரதிநிதிகள் கோடு…

  20. அவுஸ்திரேலியாவின் எதிர்க் கட்சி பிரதித் தலைவர் இலங்கை விஜயம் அவுஸ்திரேலியாவின் எதிர்க் கட்சி பிரதித் தலைவர் ஜூலி பிஷப் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வரும் இவர் இலங்கையில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது . நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி பிரதித் தலைவருடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பேச்சாளர் மைக்கல் கீனனும் இலங்கை வரவுள்ளார். அவுஸ்திரேலிய லிபிரர் கட்சியின் பேச்சாளர் பிஷப் இலங்கையில் தமிழ் பிரதேசங்களிற்கான விஜயத்தை மேற்கொண்டு அவர்களுடன் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. குறிப்பாக இவர் யாழ்ப்பானத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு தமிழ்த் தலைவர்கள…

  21. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உயர்மட்டக் குழுவுடன் சந்திப்பைத் தவிர்த்தார் மஹிந்த! இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மூவரடங்கிய அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவினருடனான நேற்றைய சந்திப்பை சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர், ஜேம் ஸிம்பர்மன் மற்றும் துணை பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தனர். இந்தக் குழுவினர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பர் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் இந்தச் சந்திப்பை மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துள்ளார். இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்ப…

  22. ஈரானிய சரக்குக்கப்பல் தப்பிச்சென்றுவிட்டது வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 22:26 உயர்நீதிமன்றத்தின் உத்தரவின பிரகாரம் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சரக்குக்கப்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 கடல் மைலுக்கு அப்பால் தப்பிச் சென்று விட்ட ஈரானியக் கப்பலை ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களின் பிரகாரம் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கப்பலுடன் தொடர்பு கொண்டு நிறுத்துவதற்கு முயற்சித்த போதிலும், எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எம்வி அமினா என்ற அந்தக் கப்பல், ஜேர்மனியின் டிவிபி வங்கி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட உத்தரவுக்கு அமைய, 2012 ஆம் ஆண்டு ட…

  23. சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களிலும் மூக்கை நுழைக்கிறது சீனா [ சனிக்கிழமை, 26 சனவரி 2013, 06:00 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சீனர்களுக்கான சிறப்புத் தேயிலையை, சீனாவே சிறிலங்காவில் உற்பத்தி செய்து கொள்ளவுள்ளது. சிறிலங்காவுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு சிறிலங்கா முதலீட்டுச்சபை அனுமதி அளித்துள்ளது. எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சீனாவின் யுன்னான் டியன்ஹொங் குழுமத்தைச் சேர்ந்த யென்ஹொங் அனைத்துலக நிறுவனம் இந்த சிறப்புத் தேயிலையை உற்பத்தி செய்யவுள்ளது. இந்த கூட்டுமுயற்சி நிறுவனம், உயர்தரம் வாய்ந்த சீன சிறப்புத் தேயிலையை உற்பத்தி செய்து, சீன சந்தைக்கு அவற்றை ஏற்றுமதி செய்யவுள்…

    • 2 replies
    • 398 views
  24. 1970 ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யமாக இருந்த, சங்கரன் அவர்களுக்கு சொந்தமான சுபாஷ் ஹோட்டல், இராணுவத்தினரால் மீள கை அளிக்கப்பட்டு, அவரது மகன் ஹரிகரன் அவர்களால் புனர் அமைக்கப் பட்டு, தனது தந்தை யின் நண்பரும் நீண்ட கால வியாபார ஆலாசனை யாளருமாக இருந்த நிஹால் ஸ்ரீ அமரசேகர என்பாரினால் இம்மாதம், குத்து விளக்கு ஏற்றப்பட்டுதிறந்து வைக்கப் பட்டது. 36 அறைகள் கொண்ட தாக உள்ள இந்த பழம் பெரும், யாழ்ப்பாணத்தின் பெயர் சொல்லும் நினைவு ஸ்தாபனம் பல அரசியல் மற்றும், வெளிநாடுகளில் இருந்து யுத்தத்திற்கு முன்னர் வந்த VIP களை, உபசரித்து இருக்கின்றது. சுபாஷ் என்றால் யாழ்பாணம் என அன்று சொல்ல வைத்த இந்த நிறுவனம் மீண்டும் வளர வாழ்த்துவோம்.

    • 2 replies
    • 935 views
  25. சிறிலங்காவானது தனது ஆடை ஏற்றுமதிக்கான சந்தையை சீனாவில் விரிவுபடுத்திய போதிலும் கூட தொடர்ந்தும் சிறிலங்கா ஆடை ஏற்றுமதியானது வீழ்ச்சியடைந்துள்ளதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "சிறிலங்காவின் இவ்வாண்டு ஆடை ஏற்றுமதியானது கடந்த ஆண்டை விட வீழ்ச்சியடைந்துள்ளது" என சிறிலங்கா ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் திரு.யோகன் லோறன்ஸ் தெரிவித்துள்ளார். "சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியானது நவம்பர் 2012 வரை ஏழு சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன" எனவும் யோகன் லோறன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இவரிடம் வினவியபோது "ஆடை ஏற்றுமதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய சந்தை வாய்ப்புக்களை…

    • 5 replies
    • 945 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.