Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை கண்டித்தும் வேலை வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்ப வேண்டாம் எனக் கோரியும் தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொழும்பு நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான பிக்குகள் ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் பேரணியாக சென்றனர். சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் சவூதி அரேபியாவினால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கிறோம், இனிமேலும் இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, சவூதிக்கு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தே…

  2. கோலாலம்பூர் மலேசியாவை இழிவாகப் பேசிய இலங்கையின் பிரதித் தூதுவர் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலேசியர்கள் இலங்கைத் தேசியக் கொடியைக் கிழித்தும் எரித்தும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கை அரசுக்கு எதிரான பதாகைகள் தாங்கியவாறு டிசம்பர் 27 ஆம் திகதி கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை இலங்கையின் பிரதித் தூதுவர் சுனில் விக்கிரமசிங்க துர்வார்த்தைகளால் பேசியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுனில் விக்கிரமசிங்க மலேசியர்களையும் மலேசிய அரசியல் எம். பி. யையும் துர்வார்த்தைகளால் பேசியுள்ளதாக குற்றஞ்சாட்டியே இலங்கைத் தூதரகத்தின் முன்னால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …

  3. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுக்கு நேர்மாறாகச் செயற்பட்டவாறு ஐ.நா.வுக்கு கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றாதுள்ள இலங்கைதரப்பு இன்று ஐ.நா.வையும் அதன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் திட்டித் தீர்க்கின்றது. இவர்களுக்கு இன்று நவநீதன் காய்ச்சல் பிடித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரப்பகிர்வு ஐக்கிய இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோகணேசன் மேலும் கூறியதாவது, 13 ஆம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் அபிவிருத்தி செய்து அரசியல் தீர்வு காண்பது, வட மாகாணசபை தேர்தல், காணாமல் போனோர் விவகாரம், சரணடைந்தோர் விவகாரம், கைது செய்து வைக்கப்பட்டிருப்போரது வழக்குகளை துரிதப்படுத்துவது,…

  4. சுவிசில் அகதித்தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 2000 ஆயிரம் தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடலாம் என்ற அச்சம் நீடித்தவரும் நிலையில் இவ்விவகாரத்தினை எதிர்கொள்வதற்கான ; அகதிதஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான ஒருங்கிணைவுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான உயிரச்சுறுத்தல்கள் சிறிலங்கா அரசினால் நீடித்த வரும் நிலையில் இவ்விவகாரத்தினை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வது குறித்தும் மற்றும் பல்வேறு வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான ஓருங்கிணைவுக் கூட்டமாக இது இடம்பெறுகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை ( 26.01.2013) மாலை 3.30மணிக்கு FIMM Suisse, Speichergasse 39, 3011 Bern எனும் இடத்தில் இக்கூட்டம் இடம்பெறுகின்றத…

    • 10 replies
    • 762 views
  5. சிறிலங்காவின் கொலைக்களமான வன்னியில் மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள்...! [ புதன்கிழமை, 23 சனவரி 2013, 10:00 GMT ] [ நித்தியபாரதி ] இவ்வகையான போர்ச் சுற்றுலாத் திட்டமானது சிறிலங்காவில் வாழும் இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டையோ அல்லது உள்ளுர் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தையோ ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும். இவ்வாறு THE TIMES OF INDIA வெளியிட்டுள்ள Frances Harrison* எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள சிறிலங்காவின் கொலைக் களங்களின் மேற்பரப்புக்களில் மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் …

  6. தடைப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசு-தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுவார்தைகளுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தினை வகித்துக் கொள்வதற்கான முன்முயற்சியாக பேர்லினில் இரகசிய மாநாடொன்றினை தென்னாபிரிக்கா ஏற்பாடு செய்துவருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள அரசின் நலன்களை பேணியாவாறு ஓன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றினை காணும் நிகழ்சி நிரலுடன் சிறிலங்கா அரச தரப்பு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை தனித்தனியாக அழைத்து தென்னாபிரிக்கா ஏற்கனவே பேசியிருந்தது. இந்நிலையில் தனது மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்திற்கான புறச்சூழலை ஏற்படுத்தும் ஓர்அங்கமாக புலம்பெயர் தமிழ்அரசியல் தரப்புடனான பேச்சுக்களை தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங…

  7. டக்ளஸ் தலைமையில் இந்தியா நோக்கி கடல் பேரணி... இலங்கை தேசிய கடற்றொழிலாளர்கள் மகாசம்மேளனத்தினுடைய முதலாவது தேசிய மாநாடு ஜனாதிபதி தலைமையில் அலரிமாளிகையில் நேற்றையதினம் (22) மாலை இடம்பெற்றது. கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி மகாசம்மேளன மாநாட்டில் நாடுமுழுவதிலிருந்தும் கடற்றொழில் சம்மேளனப் பிரதிநிதிகள் பங்குகொண்டனர். இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு தமிழ்பேசும் கடற்றொழிலாளர்கள் சார்பாக உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற நிலமையினையும் கடற்றொழில் தடை என்ற சூழ்நிலைமையினையும் மாற்றி எமது தாயகத்தில் சுதந்திரமாக கடற்றொழில் மேற்கொள்வ…

  8. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் நாளை செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மேற்படி மாணவர்கள் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர். இவர்களுக்…

  9. தமிழ் தேசிய இனத்தின் தலைவர் யார் என்ற கேள்விக்கு மேதகு வே .பிரபாகரன் என பதில் கூறியிருக்கிறார்கள் சிறார்கள். ஆம் தமிழகத்தின் காவேரி பாசன பகுதியில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் மருதம்கமழ்வெளி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் வினாடி வினா போட்டியில் இவ்வினா கேட்கப்பட்டிருந்தது. யாருடைய தலையீடுமின்றி சிறியவர்களின் வாயிலிருந்து பிரபாகரன் என பதில் வந்துள்ளது. நாம் இந்தியர்கள் என்றார்கள் எம் பாட்டன்மார்கள். இல்லை நாம் திராவிடன் என்றார்கள் எங்கள் தகப்பன்மார்கள். இல்லை நாம் தமிழர் என மார்தட்டி சொல்கிறார்கள் இன்றைய இளைஞ்சர்களும் சிறார்களும். இந்தியனாகவும் திராவிடனாகவும் வாழ்ந்தவர்கள் இப்பொழுதுதான் தமிழனாக தனது சுயத்தின்பால் வாழ தொடங்கி உள்ளார்கள். திராவி…

  10. நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை மேலும் கட்டுமீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுவதற்கு நான் விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இனவாதத்தை தூண்டுவதன் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எத்தனிக்கும் அத்தகைய சக்திகளுக்கு எந்த வெளிச்சக்திகளிடமிருந்து உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வு துறையா இங்கு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட பேராளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங…

  11. அமெரிக்கா உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம்; தேசிய சுதந்திர முன்னணி எச்சரிக்கை அமெரிக்கர்களுக்கு இLogoutலங்கைக்கு வருவதற்கு தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட முற்பட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையான சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்தநாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி …

  12. இலங்கை அரசின் மின்தளங்கள் சில தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன கடந்த வார இறுதியில் இலங்கை துறைமுக அதிகார சபையின் மின்தளம் இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களின் மின்தளங்கள் (ரூபவாஹினி, வன் சிறிலங்கா) வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்கள மின்தளம் இதில் தொலைக்காட்சி நிறுவனங்களின் தரவுகளும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தரவுகளும் கசியவிடப்பட்டுள்ளன. தளங்களின் முக பக்கம் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் நிர்வாகத்தின் பகுதிகள் களவாடப்பட்டு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. http://www.dailymirror.lk/news/25208-govt-web-sites-hit-in-spate-of-attacks.html முன்னைய செய்தி: சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் மின்வலை தளம் தாக்கப்பட்டது http://www.yarl.com/forum3/in…

  13. புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் ஒன்று இன்று யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதாக அதன் இணைப்பாளர் மேஜர் ஏ.சி. ஜெகத்குமார தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2672

    • 0 replies
    • 446 views
  14. ஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் டெசோ அமைப்பின் அடுத்த கூட்டம் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மாங்களை ஐ.நா.விடம் ஸ்டாலின் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தனர். முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு ஈழத்தை முழுவதுமாக சிங்களமயமாக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றி வருகிறது. 89 நகரங்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக அறிக்கை விடுத்திருந்த கருணாநிதி, இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ம…

    • 0 replies
    • 267 views
  15. நுவரெலியாவில் தமிழரின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வு: சிங்களவரின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி By General 2013-01-22 10:32:32 நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டில் சிங்கள் மக்களின் சனத்தொகை 46.2 வீதமாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 46.6 ஆகக் காணப்பட்டது. ஆனால் தற்போது சிங்கள் மக்களின் சனத்தொகை 39.59 வீதமாக காணப்படுவதாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 57.69 காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கள ம…

  16. வரலாற்றுப் புகழ் மிக்க இராமநாதன் சிலைக்கு சமாதி கட்டும் நிகழ்வு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் மிகவும் அமைதியான முறையிலும், கன கச்சிதமாகவும் நடைபெற்று வருகின்றது. மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள பழைமையான பிரதான கட்டடத்தில் அமைந்துள்ள வாசலில் சுமார் ஆறு அடி பீடத்தில் ஆறு அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த தமிழர்களின் தலைவரும் சிங்கள மக்களாலும் நேசிக்கப்பட்டவருமான இராமநாதனின் சிலை காணப்பட்டது. தற்போது குறிப்பிட்ட சிலை அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு இராமநாதனின் வீட்டு வளாகத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிலையின் அரைப் பங்கு நிலத்தின் கீழ் மறைக்கப்பட்ட நிலையிலும், குழியினுள் புதைந்த நிலைமையிலும் சிலை வைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொ…

    • 0 replies
    • 578 views
  17. இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக அமெரிக்கா அறிவிப்பு 23 ஜனவரி 2013 இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகளவு முதலீடு செய்வதற்கு விரும்புவதாக அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எந்தத் துறைகளில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் காணப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ள விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய விரும்புவதாக தூதுவர் சிசன் தெரிவித்துள்ளார். http:…

  18. நாட்டில் தொற்றா நோய்களினால் நாள்தோறும் 650 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2013 ஆம் ஆண்டை தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாகலும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தொற்றாத நோய்களினால் நாடு தற்போது பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய புள்ளிவிபரங்களை வைத்து நோக்கும் போது எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கையில் மொத்த சனத்தொகையின் 50 வீதமாக உயர்வடையும் எனவும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. மேலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கம், உடல்நலம் குறித்து உரிய முறையில் கவனத்திற் கொள்ளாமை ம…

  19. கைதாவுள்ள 1400 போராளிகளுள் கே.பி.யும் உள்ளடங்குகிறாரா?: ஆனந்த சங்கரி புதன்கிழமை, 23 ஜனவரி 2013 12:05 '1400 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் கைது செய்யப்பட உள்ளார்கள் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். 'இக்கூற்றில் எதுவித உண்மையிருப்பின் இதுவரை கைது செய்தவர்கள் எத்தனை பேர் என்பதையும் எத்தனை பேர் கொல்லப்பட்டார…

  20. ஈடு இணையற்ற வீரர்களுக்கு எல்லாம் வீரர் திலகம் பிரபாகரன் - சென்னை புத்தகக் காட்சியில் வைகோ பேச்சு! [Wednesday, 2013-01-23 08:43:59] சென்னையில் நடைபெற்று வரும் மாபெரும் புத்தகக் காட்சி நிறைவுக்கு வருகின்ற இந்நிலையில் நேற்று வைகோ அவர்கள் சென்னை புத்தக காட்சியில் உரையாற்றினார். இந்தியாவில் நடந்த கொடுமைகளைச் சித்தரிக்கலாம் ஆனால் ஓராயிரம் கொடுமைகள் அல்லவா ஈழத்தில் நடந்து விட்டது. ஆகஸ்ட் 4! சுதுமலையில்...! தமிழனுக்கு தரணியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஈடு இணையற்ற வீரர்களுக்கெல்லாம் வீரர் திலகமான பிரபாகரன் சொன்னார்....., இந்தசிங்கள இனவாத பூதம் ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் என்று. அங்கு வைகோ ஆற்றிய உரையின் சிறு பகுதி இணைக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifN…

  21. யாழ் மாவட்டச் செயலகம் கடற்படையினரின் விடுதியில் குத்தாட்டம் ஜன 23, 2013 தமிழர் தாயகத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் இதுவரை தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கையில் யாழ் மாவட்டச் செயலகம் பெருந்தொகை நிதியைச் செலவுசெய்து கடற்படையினரின் விடுதியொன்றில் குடியும் குடித்தனமும் நடத்தி குத்தாட்டம் போட்டிருக்கிறது. யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையிலேயே அண்மையில் மேற்படி விடுதியில் இந்த குத்தாட்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள 15 பிரதேச செயலர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மற்றும் மாவட்டச் செயலகத்திலுள்ள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். வன்னி மக்க…

  22. விரைவில் வரலாம் “குப்பைக்கும் வரி” திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் தற்போது பெரும் நெருக்கடியாகியுள்ளநிலையில் எதிர்காலத்தில் நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வசிப்பவர்களிடமிருந்து குப்பைக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். தினமும் 800 மெற்றிக் தொன் குப்பைகளை அகற்றுவது கொழும்பு மாநகரசபைக்கு இலகுவான விடயமல்ல. கடுவலை நகரசபை ஒரு நாளைக்கு 80 மெற்றிக் தொன் திண்மக்கழிவை சேகரிக்கின்றது. ஏனைய பெரிய நகரங்களும் இவ்வாறே நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. இவற்றை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் வரி நிர்ணயம் செய்வது தவிர்க்கமுடியாதது என அவர் கூறினார். 23 ஜனவரி 2013, புதன் 11:15 மு.ப http://www.onlineuth…

  23. சிறிலங்கா இராணுவத்தை இலக்கு வைத்து தொந்தரவு கொடுக்கிறது அமெரிக்கா – கோத்தாபய குற்றச்சாட்டு [ செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2013, 04:30 GMT ] [ கார்வண்ணன் ] தவறான தகவல்கள் மற்றும் தவறான ஊகங்களின் அடிப்படையில், அமெரிக்க அரசாங்கம் சிறிலங்காவை தொந்தரவு கொடுத்து வருவதாக சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். நான்காவது கட்ட ஈழப்போரில் 53வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார் என்ற அடிப்படையில், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்க இராணுவ நிகழ்ச்சித் திட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியே கோத்தாபய ராஜபக்ச கோபத்துடன் இவ்வாறு கூறியுள்ளார். “போரின் போது மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க 53 வது டிவிசனின…

  24. அமெரிக்கா பயிற்சி வழங்குவதற்கு மறுத்தால் சீனாவிடம் பெறுவோம்: கோத்தபாய By General 2013-01-19 10:30:11 இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானல் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது இலங்கைக்கு பெரிய சவாலான விடயம் அல்ல. எமது இராணுவத்திற்கெதிராக இதைத்தவிர அமெரிக்காவினால் வேறு எதனையும் செய்ய முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெரும் துயரங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அமைதியை சீர்குலைக்க இலங்கையை சூழ பல சக்திகள் செயற்படுகின்றன. இவற்றை எதிர்கொண்டு நாட்டின் அமைதியை தொடர்ந்தும் பாதுக்காக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2615

  25. சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது. ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துள்ளார். இதன்போதே, பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார். அத்துடன் ரிசானா நபீக்கின் சகோதரருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்திலும் தொழில் வாய்ப்பு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.