Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1மாத காலத்திற்குமுன் காணாமல்போன மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாகமீட்பு 04 ஜனவரி 2013 காரைநகரில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மன நிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் இன்று காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் சங்கானை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இராசதுரை கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரில் உள்ள பாலகாட்டுப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரது படைமுகாமிற்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து இந்த இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டமையினால் தெல்லிப்பளை மனநல வை…

    • 4 replies
    • 832 views
  2. கொழும்பில் வன்முறைகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக ஆருடம் - சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு! [Friday, 2013-01-04 12:14:47] அதிகார மோதல் உக்கிரமடைந்துள்ளதால், போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக ஆருடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய ராஜபக்ச பல உத்திகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்காக கோத்தாபயவின் விசுவாசியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மக்கள் எழுச்சி கொள்ளச் சாத்…

  3. இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான 22 இணையத்தளங்கள் (subdomains) பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் மூலம் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன. வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான இணையத்தளங்களே (subdomains) இவ்வாறு உருக்குலைய செய்யப்பட்டள்ளன. இதில் பொது சேவை ஆணைக்குழு, விளையாட்டு துறை, வேளாண்மை துறை, சுகாதார உள்ளிட்ட அமைச்சின் தளங்களும் உள்ளடங்குகின்றன. இணையத்தளங்களை உருக்குலைய செய்யமுடியாது என்று விடுக்கப்பட்ட சவாலையடுத்தே இந்த இணையத்தளங்களை உருக்குலைய செய்ததாக தெரிவித்துள்ள பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் இணையத்தளங்களுக்குள் உள்நுழைய முடியாதவகையில் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. http://tamil24news.com/news/?p=37780

    • 3 replies
    • 921 views
  4. சம்பந்தனுக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை; பிரதி சபாநாயகர் கூறுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சாட்சியம் அளிக்கச் சென்றமையால் அவர்கள் நாடாளுமன்றச் சிறப்புரிமையை மீறி நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார்கள் என்ற குற்றச் சாட்டு முன்வைப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடாளு மன்றத்தின் நிலையியற் கட்டளையின் 17ஆவது சரத்தின்படி நாடாளுமன்றத்தை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கினார்கள் என…

  5. இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்து செல்கிறது - ஐநா இலங்கையில் இடம்பெயர் மக்கள் மீள்குடியேறுவதற்கு இன்னமும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் இடம்பெயர்ந்து வாழும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப வேண்டுமாயின், கூடுதலான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமேன ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான பிரதிநிதி அன்டானியோ குட்டாரஸ் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு திரும்புவது உசிதமானது என புகலிடக் கோரிக்கையாளர்கள் மனதில் நம்பிக்கை ஏற்படக் கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ´தி இந்து´ பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் கு…

  6. வடக்கு கல்வி நடவடிக்கையில் இராணுவ தலையீட்டுக்கு கடும் எதிர்ப்பு இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கென இராணுவத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று தமக்குரிய பாடநேரங்கள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடிய…

    • 0 replies
    • 305 views
  7. என்ன கொடுமை சரவணா..! முருகனை சந்திக்கத் தடை! வேலூர் சிறையில் உள்ள ராஜிவ் கொலையாளி முருகனை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு டிசம்பர், 8ம் திகதி வேலூர் மாவட்ட எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் பொலிஸார் சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முருகனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று, நான்கு சிம் கார்டு, மெமரி கார்டு, இரண்டு, "சிடி´க்களை சிறைத்துறை விஜிலன்ஸ் பொலிஸார் பறிமுதல் செய்தனர். பாகாயம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், முருகனிடம் பறிமுதல் செய்த கையடக்கத் தொலைபேசி மூலம் அடிக்கடி இலங்கை…

    • 0 replies
    • 388 views
  8. நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ‘லெப்டொஸ் பைரோஸிஸ்’ எனும் எலிக்காய்ச்சல் அபாயம் தோன்றியுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் மருத்துவ ஆலோசனைகளின்படி நடந்துகொள்ளுமாறும் தொற்றுநோய் வைத்திய பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, காலி போன்ற மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ள மேற்படி தொற்றுநோய் வைத்திய பிரிவு, ஆரம்பத்திலேயே உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெறும் பட்சத்தில் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது. எலிகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட சில விலங்குகளின் சிறுநீரிலிருந்து வெளியாகும் கிருமிகள் நீருடன் கலந்துவிடுவதால் பொதுமக்களுக்கு இந்த …

  9. ஆட்கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் கனேடிய அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இவ்வார இறுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெறும் என இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவென கனடாவின் குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லினப்பண்பாடு அமைச்சர் ஜேசன் கென்னி இலங்கை வரவுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் குறிப்பிட்டார். கனடாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இலங்கை – கனடாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. 2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகளை ஏற்றிய படகு கனடா சென்றது. அதில் 340 பேரின் புகலிடக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. 13…

  10. இந்தியாவிலிருந்து திரும்புவதை மக்கள் சாதகமாக பரிசீலிக்கும் நிலைமையை உருவாக்குவதற்கு அம்மக்களின் தாயகமான இலங்கையின் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிறைய இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரோனியோ குட்டெறஸ் கூறியுள்ளார். 'வாழ்க்கை நிலைமை, வேலை, கல்வி, சுகாதாரம், சொத்து, பாதுகாப்பு என்பவற்றுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இயலுமான சகலவற்றையும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இணைந்து மக்கள் தாமாக இலங்கைக்கு திரும்பிவர வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இவ்விர…

  11. தந்தையின் அரசியல் பலத்தை பயன்படுத்தி பிரயோசனங்களை பெற்றுக்கொள்ள தாம் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது தந்தை ஜனாதிபதி என்பதால், 20 அல்லது 30வருடங்களின் பின்னர், தான் நாட்டின் தலைவராக முடியும் என சிலர் கூறுகின்றனர். எனினும் அவ்வாறான தேவை தமக்கு இல்லை எனவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். அவ்வாறான தேவை இருக்குமாயின் 15 நாட்கள் அம்பாந்தோட்டை உள்ள கிராமங்களிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மாதம் 8 நாட்கள் உணவு, குடிநீரின்றி அலைந்து திரிய வேண்டிய தேவை தமக்கு இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமங்களுக்கு சேவை செய்வதற்காகவே ஜனாதிபதி, தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http…

    • 3 replies
    • 508 views
  12. தமிழர் திருநாளில் யாழிற்கு செல்லவுள்ள மகிந்த! ஜன 4, 2013 தைப் பொங்கலுக்கு மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு யாழ் பொது மருத்துவமனையின் புதிய கட்டிடம் ஒன்றினை திறந்து வைக்கவுள்ளார். இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.மேலும் நயினாதீவு நாக பூசணி அம்மன் கோவிலுக்கம் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் அவர் ஈடுபடவுள்ளார். பன்னாடுகளின் கண்துடைப்பிற்கான சில வேலைத்திட்டங்களை மகிந்த வடக்கில் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/25675/64//d,fullart.aspx

  13. புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய அம்பகாமம் காட்டில் பயிற்சியில் ஈடுபட்ட சிப்பாயை கரடி கடித்தது:- 04 ஜனவரி 2013 மாங்குளம் அம்பகாமம் பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் முன்னர், நிலை கொண்டிருந்த பெரிய காட்டு பகுதிக்கு போர் பயிற்சியில் ஈடுபட சென்றிருந்த இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரை கரடி ஒன்று கடித்து காயப்படுத்தியுள்ளது. 5 நாட்கள் போர் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக இராணுவ குழுவொன்று முல்லைத்தீவு பகுதியில் உள்ள இந்த காட்டிக்கு சென்றுள்ளது. இராணுவ அதிகாரி கடித்த கரடி பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டது. கோப்ரலின் முகம் மற்றும் வலது கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Article…

  14. சிறிலங்காவின் இனப்பிரச்சினையில் 2012 நவம்பர் 27 என்பது ஒரு வித்தியாசமான மைல்கல்லாக காணப்படுகிறது. இந்த நாளன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர் தின நிகழ்வைக் கொண்டாடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி ஒன்றினுள் அத்துமீறி நுழைந்தனர். இதற்கு மறுநாள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் நால்வரை சிறிலங்கா காவற்துறையின் கீழ் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைதுசெய்தனர். இதனுடன் தொடர்புபட்ட வேறு 40 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.…

  15. நாட்டில் சிறிய குழுவொன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்தை உருவாக்குவதற்கு முயல்கிறது. மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் குழுவின் அடிப்படை நோக்கமாகும் என்று தெரிவித்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், இதனைத் தடுப்பதற்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையினரையும் இணைத்துக்கொண்டே செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ரி.பி. ஜாயா பவுண்டேசன் கொழும்பு முஸ்லிம் பெண்கள் கற்கை நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த ரி.பி.ஜாயாவின் நினைவுதின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2350

    • 2 replies
    • 622 views
  16. எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது. அந்த தேர்தலின் போது, நாட்டில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்று உருவாகும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று ரோம் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஐ.தே.க ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆண்டில் பல்வேறு முன்னேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை ஐ.தே.ன நடத்தும் என்றும் என்றும் ரண…

    • 5 replies
    • 600 views
  17. பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி, இலங்கைக்கு எதிராக மேலும் இரண்டு போர்க்குற்ற வீடியோ படங்களை தயாரித்து வருவதாக திவயின இனவாத பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இந்த வீடியோவுக்காக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற 8 விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், இலங்கைக்கு எதிராக பொய் சாட்சியங்களை வழங்கியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. தமிழ் கன்னியாஸ்திரி, வன்னியில் இருந்த புலிகளின் ஊடாகவியலாளர், புலிகளின் செயற்பாட்டாளர், வன்னியில் இருந்த புலிகளுக்குரிய வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இவ்வாறு பொய் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். இந்த இரண்டு வீடியோ படங்களும், மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் தயாரிக்கப்படுவதா…

  18. இராணுவத்தினர் பாடசாலைகளில் கற்பிப்பதாக பிழையான பிரச்சாரம் 04 ஜனவரி 2013 இராணுவப் படையினர் சீருடையில் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிழையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.கிளிநொச்சி தமிழ் பாடசாலைகளில் இராணுவப் படையினர் சீருடைகளில் சிங்கள மொழியைக் கற்பித்து வருவதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.எனினும், இந்தப் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வி வலயத்தில் கணிதம், விஞ் ஞானம் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க போதியளவு ஆசிரியர்கள் இல்லை என வலயக் கல்வி அதிகாரிகள் அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.இதன் அடிப்படையில்…

  19. மத்தியகிழக்கு எண்ணெய் விநியோகத்துக்கான பாதுகாப்பான பாதையை பெற்றுக் கொள்வதற்காக, முத்துமாலை மூலோபாயத்தின் மூலம், ஹொங்கொங்கிற்கும் சூடானுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் துறைமுகங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறது. இவ்வாறு Trumpet.com ஊடகத்துக்காக அன்ரூ மில்லர் எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் தலையீடு தொடர்பாக அமெரிக்காவின் கவலை அதிகரித்து வரும் நிலையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் தலையீட்டை ஆதரித்துள்ளார். கடந்த டிசம்பர் 13ம் நாள், சிறிலங்காவின் தென்பகுதி நகரான காலியில் 28 நாடுகளின் கடற்படைப் பிரதிநிதிகள் பங்கேற்ற கடல்சார் கருத்தரங்…

  20. சிறிலங்காவில் 90 வீதமான மக்கள் நாளாந்தம் ஏதேனும் ஒரு மருந்தை பயன்படுத்தி வருவதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பல்வேறு வகையான மருந்துகளை எந்தவித மருத்துவ ஆலோசனையும் இன்றி கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது என்றும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அரசாங்க மருத்துவமனைகளில் மாதம் தோறும் 45-50 மில்லியன் ரூபா பெறுமதியான பரசிற்றமோல் வில்லைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.com/view.php?20130104107536

  21. புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் இம்மாதம் 14 ஆம் திகதி முதல் சர்வதேச தொலைத்தொடர்பு சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளனர் என்று இன்று (04) வெளியான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை பிரதான தளமாகக் கொண்டு செயற்படவுள்ள இந்தத் தொலைத் தொடர்புச் சேவை ஊடாக சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் நேரடியாக அவர்கள் தொடர்புகளைப் பேணக் கூடியதாகவிருக்கும். இந்த சர்வதேச தொலைத்தொடர்புச் சேவைக்கான தொலைபேசி இலக்கங்களை சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர் என்றும் திவய்ன தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=73253&category=TamilNews&language=tamil

  22. இலங்கையின் தலைமை நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என, இலங்கை அரசியல் சாசனத்துக்கு நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கத்தின் மூலமாக, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தொடுத்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது. நீதி பரிபாலனை அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பினால் மட்டுமே நீதிபதி எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என்று விளக்கமளித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழிமுறை பின்பற்றப்படவில்லை என்றால் நாட்டுடைய மொத்த நீதித்துறையின் அதிகாரத்துக்குமே பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது.…

  23. உக்ரேனியர் ஒருவர் இலங்கையர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளார் 04 ஜனவரி 2013 உக்ரேனிய பிரஜை ஒருவர் இலங்கையர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல் உறுப்புக்களை சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் செய்ததாக உக்ரேனிய பிரஜை ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை, கொஸ்டரிக்கா மற்றும் ஈக்வடோர் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு உடல் உறுப்புக்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் ஆரோக்கியமான இளைஞர் யுவதிகளின் உடல் உறுப்புக்களுக்கு விலை பேசி, அவற்றை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் குறித்த உக்ரேனியர் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உடல் உற…

  24. கிளி- ஆனந்தபுரம் ஐயனார் பாடசாலையில் புகுந்த ராணுவம் அதிபருடன் மல்லுக்கட்டியது: 04 ஜனவரி 2013 கிளிநொச்சியிலிருந்து குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் கிளிநொச்சி ஆனந்தபுரம் ஐயனார் பாடசாலையில் சீPருடையில் சென்ற ராணுவத்தினர் பாடசாலை அதிபரிடம் மல்லுக் கட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் இந்தப் பாடச்hலைக்குச் சென்ற ராணுவத்தினர் நேர அட்டவணையை தம்மிடம் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதுடன் தாம் மாணவர்களுக்கு சிங்களம் கற்பிக்கப் போவதாகவும் கோரியுள்ளனர். தொடர்ந்து அதிபருடன் வாக்குவாதம் இடம்பெற்ற போது கல்வித் திணைக்கள அதிகாரிகள் தற்செயலாக பாடசாலைக்கு சென்றுள்ளனர். அங்கு இடம்பெற்ற வாய்மூல தர்க்கங்களின் பின் உரிய அனுமதியின்றி இவ்வாறு பாடசாலைக்குள் நுழைவதை அ…

  25. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக சாட்இசியளிக்க ஷிராணி முயற்சி; பதில் நீதியரசரை உடன் நியமிக்குக! – விமல் Published on January 4, 2013-3:11 am · பதில் பிரதம நீதியரசர் ஒருவரை உடனடியாக நியஇமிக்இகும்படி ஆளும் மக்கள் சுதந்திரக் முன்னணியின் பங்காளிக் கட்சிஇயான தேசிய சுதந்திர முன்னணி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்இஷவிடம் கோரிக்கை விடுத்இதுள்ளது. அத்துடன் ஜெனிவாவில் நடைபெஇறவுள்ள மனித உரிமை மாநாட்இடில் இலங்கைக்கு எதிராக சாட்இசியாளராகச் செல்வஇதற்கே பிரதம நீதியரசர் முயற்சிக்கின்றார் என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்இனணிஇயின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகஇவியலாளர் மாநாட்இடில் கருத்து வெளிஇயிடும்போதே அக்கட்சியின் தலைவர் அமைச்சர் விமல் வீர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.