ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
தமிழர்கள் வாக்கு ரணிலுக்கே; ஐ.தே.க. உறுதி! ஆதவன். எதிர்வரும் அரசதலாவைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்தப்பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: சஜித்பிரேமதாஸவையோ அல்லது அநுரகுமார திஸாநாயக்க வையோ நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாரில்லை. கடந்த அரசதலாவைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே சஜித் பிரேமதாஸவுக்குத் தமிழ்மக்கள் ஆதரவு வழங்கினார்கள். எனினும், அவரால் வெற்றிபெற முடியவில்லை…
-
- 0 replies
- 253 views
-
-
”தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும்” - மனோ கணேசன் தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குண்டர்கள் அந்த சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் செல்லமுத்து என்பவரது மகன்கள் மூலம் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி…
-
- 0 replies
- 152 views
-
-
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனை 21 Apr, 2024 | 01:04 PM உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றுக்கான பிரார்த்தனை மற்றும் ஐந்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. (படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்) …
-
- 5 replies
- 403 views
-
-
21 APR, 2024 | 08:14 PM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதை மூன்று சர்வதேச விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன. குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எதிர்க்கட்சிக்கு கிடையாது. ஏனெனில், முஸ்லிம் வாக்குகளை இழக்கக் கூடாது என்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு எதிராக செயற்படவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரண…
-
- 1 reply
- 177 views
- 1 follower
-
-
நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளரு…
-
-
- 11 replies
- 694 views
- 2 followers
-
-
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி PrashahiniApril 21, 2024 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று ஐந்தாவது வருட நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று (21) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றன. பிரதான அஞ்சலி நிகழ்ச்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் தலைமையில் அவரது கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கொல்லப்பட்ட உறவினர்களுடைய புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய கி…
-
- 1 reply
- 182 views
-
-
21 APR, 2024 | 07:21 AM (நா.தனுஜா) ஜப்பான் வெளிவிவகார ஹயாஷி யொஷிமஸா எதிர்வரும் மேமாத முற்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா ஏற்கனவே கடந்த ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கைக்கான அவரது முதலாவது விஜயமாக அது அமைந்திருந்தது. அதன்போது கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஹயாஷி யொஷிமஸா, அனைத்துக் கடன்வழங்குனர் ந…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
கிழக்கின் ஆளுநராக நஸீர் அஹமட்? ரணில் திட்டமிடுவதாக தகவல் April 21, 2024 முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹபீஸ் நசீர் அஹம்மட்டை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளார் என்று ஜனாதிபதி தரப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கு வசதியாக கிழக்கின் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநராக நியப்படவுள்ளார் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது. நசீர் அஹமட் 2012 இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கிழக்கு மாகாண சபைக்குள் நுழைந்தார். கிழக்கின் முதலமைச்சராக பதவிவகித்தார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் நுழைந்த அவர் மொட்டு அரசுடன…
-
- 0 replies
- 180 views
-
-
மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது - பாரிஸ் கிளப் 21 Apr, 2024 | 07:22 AM (இராஜதுரை ஹஷான்) கடன் மறுசீரரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போன்று இலங்கையின் கடன் நிலைபேறான தன்மைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.தற்போதைய மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது.என பாரிஸ் கிளப்பின் இணை தலைவரும் பிரான்ஸ் பல்தரப்பு விவகாரம்,வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி கொள்கை திணைக்களத்தின் உதவி செயலாளர் விலியம் ரூஸ் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவில் வொஷிங்டனில் இடம்பெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அரையா…
-
- 0 replies
- 178 views
-
-
இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அணுகும் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 21 Apr, 2024 | 01:35 PM (லியோ நிரோஷ தர்ஷன்) தென்னிந்திய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதை விட இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்தினால் பொருளாதார ரீதியில் தென்னிந்தியாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, இந்தியா உடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அனுகுவதாகவும் குறிப்பிட்டார். இலங்கையின் சமகால பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர்…
-
- 0 replies
- 243 views
-
-
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி! adminApril 21, 2024 யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21.04.24) இடம்பெற்றது. ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன பங்கேற்றது. ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி ஒன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடாத்தப்பட்டது. இந் நடைபவனி யாழ் போதனா வைத்தியசாலையில்…
-
- 0 replies
- 150 views
-
-
யாழ் பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதியாக, பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு! adminApril 20, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு இன்று பிற்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பீடாதிபதி தெரிவுக்காக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், கணக்கியல் துறை சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி, விஞ்ஞான பீடத்தின்…
-
- 0 replies
- 165 views
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையானது ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பாதைகளை மாற்றுவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் நிலை காரணமாக பாதுகாப்புக் கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐரோப்பாவுக்கான விமான சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விமானத்திற்கு கூடுதல் எரிபொருள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமானம் சுமந்து செல்லும் எடையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை லண்டன் செல்லும் விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புறப்படும் எனவும் இதனால்…
-
- 0 replies
- 145 views
-
-
யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இ…
-
- 2 replies
- 309 views
-
-
மாறாத சுவடுகளாக மாறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வடுக்கள்! இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தன. 10 தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 272 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானார்கள். இதேவேளை ஐந்து ஆண்டுகளாக புலனாய்வாளர்கள், வழக்கறிஞர்கள…
-
- 1 reply
- 136 views
-
-
(இனியபாரதி) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள் குற்றச் சாட்டுகின்றனர். அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக…
-
- 5 replies
- 498 views
- 1 follower
-
-
ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவ…
-
-
- 6 replies
- 725 views
-
-
கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article…
-
- 1 reply
- 273 views
-
-
12 APR, 2024 | 09:41 PM யாழ். செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை அமைச்சர் நேரல் சென்று பார்வையிட்டுள்ளார். …
-
-
- 15 replies
- 823 views
- 1 follower
-
-
வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பத…
-
- 1 reply
- 440 views
-
-
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு காணியை உரித்தாக்குங்கள் : தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு வலி.வடக்கு பிரதேச செயலாளருக்கு கடிதம் 21 APR, 2024 | 06:33 AM ஆர்.ராம் வலிகாமம் வடக்கு தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியை விகாரைக்கு உரித்தாக்குவதை உறுதி செய்வதோடு அதற்குப் பதிலாக அப்பகுதி தமிழ் மக்களுக்கு வேறு இடத்தில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு ஒருமாத கால அவகாசத்துடன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அ…
-
- 0 replies
- 189 views
-
-
கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் அந்த சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த மூன்றாவது மயக்கவியல் வைத்திய நிபுணர்களும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்…
-
- 1 reply
- 340 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 APR, 2024 | 03:55 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்…
-
- 2 replies
- 295 views
- 1 follower
-
-
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10,000 பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களின் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார். ஒரு வீட்டிற்கு 28 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதேச செயலகங்கள் மற்றும் தோட்ட நிர்வாகங்களின் ஊடாக இந்த வீட்டுத் திட்டத்திற்குத் தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், அதன் நிர்மாணப் பணிகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள் 10,000 வீடுகளையும் மக்களுக்குக் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். h…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-