Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தும் முடிவில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. திவிநெகும சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதால், அது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. முன்னதாக, உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தாலும், கருத்து வாக்கெடுப்பை நடத்தி திவநெகும சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால், திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. சிறிலங்க…

  2. கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும், பாதுகாப்புச் செயலாளரும் இடம்பெயர் மக்களை சந்திக்க உள்ளனர் 08 நவம்பர் 2012 அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் இடம்பெயர் மக்களை சந்திக்க உள்ளனர். எதிர்வரும் நாட்களில் மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் பிரதேச மக்களை பாதுகாப்புச் செயலாளரும், கர்தினாலும் சந்திக்க உள்ளனர். இடம்பெயர் மக்களின் சுக நலன்களை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. இடம்பெயர் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தற்காலிக இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். மீளவும் தங்களது சொந்த கிராமங்களுக்கு…

  3. சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேணையைக் கொண்டு வந்துள்ளது. சிறிலங்காவின் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, சமர்ப்பித்துள்ள இந்தப் பிரேரணை நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தெரிவுக்குழு ஒன்றை அமைக்கக் கோரும் வகையில் இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகளை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது, சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை, 20க்கும் மேற்பட்ட வங்கி வைப்புகளை …

  4. வடமாகாண சபை தேர்தலை அனுமதியோம்: சம்பிக்க, விமல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாது வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அனுமதிக்கப்போவதில்லை என அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் எச்சரித்துள்ளனர். இன்று கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 13ஆவது திருத்தச் சட்டமானது நாட்டின் அரசியல் அமைப்புக்கு முற்றிலும் முரணானது. எனவே இதனைத் தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லை. அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மையைப் பயன்படுத்தி காலதாமதம் இன்றி 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். (படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்) http://www.virakesari.lk/article/local.…

  5. எச்.ஐ.வி தொற்று நோய் 5 சதவீதத்தால் அதிகரிப்பு நாட்டில் எச்.ஐ.வி தொற்று நோயானது கடந்த வருடத்திலும் பார்க்க 5 சதவீதம் அதிகரித்துள்ளது என தெற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நிமல் எதிரிசிங்க தெரிவித்தார். கடந்த வருடத்தில் 129 பேர் எச்.ஐ.வி. தொற்று நோயிக்கு ஆளாகியிருந்தனர். ஆனால் இவ்வருடத்தில் முதல் 10 மாத காலப்பகுதியில் மாத்திரம் 140 பேர் எச்.ஐ.வி. தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/local.php?vid=1499

  6. ஜே.வி.பிக்கும், கருணா, பிள்ளையான் ஆகியோருக்கும் ஜனநாயக அரசியலுக்கு வர முடியுமாயின் கே.பிக்கு ஏன் வர முடியாது என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கே.பியிடம் இருந்து அரசாங்கம் பணத்தை பெற்றதாம், கறுப்பு பணம் நாட்டில் இருக்கின்றதாம் என மங்கள சமரவீர கூறுகிறார். முடிந்தால் அதனை உறுதிப்படுத்தி காட்டுங்கள். மனித உரிமைகளை மீறியதாக கூறுகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அதனை செயற்படுத்தி காட்டுங்கள். போரை முடிவுக்கு கொண்டு வந்து, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாத வகையில், பாதுகாப்புச் செ…

    • 2 replies
    • 415 views
  7. ஜனவரி மாதமளவில் இலங்கை விஜயம் செய்வதாக நவநீதம் பிள்ளை, மு.க ஸ்டாலினிடம் உறுதிமொழி 07 நவம்பர் 2012 எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை உறுதி மொழி வழங்கியுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க முக்கிய உறுப்பினர்களான ஸ்டாலின் மற்றும் பாலு ஆகியோர் அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்து, நவனீதம்பிள்ளையை சந்தித்திருந்தனர். இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் குறித்து நவனீதம்பிள்ளையிடம் திமுக உறுப்பினர்கள் விளக்கியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேல் நீடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பே…

    • 2 replies
    • 545 views
  8. [size=5]இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளை வடக்கின் தலைவர்களாக்க அரசு முயற்சிப்பது ஏன்? - சுமந்திரன் கேள்வி![/size] 'இந்தியாவினாலும் இன்ரப்போலினாலும் தேடப்படும் சர்வதேசக் குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தாவையும், கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனையும் தமிழர்களின் தலைவர்கள் ஆக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்வது ஏன்?' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், தேடப்படும் குற்றவாளிகளான இந்த இருவரையும் தலைவர்களாக்குவதால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு என்ன இலாபம் இருக்கிறது என்றும் அவர் கேட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: 'அமைச்சர…

  9. தமிழ் மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து காணப்படுகின்றது - சுரேஷ் 07 நவம்பர் 2012 தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பது தொடர்ந்தும் தாமதமாகி வருவதாலும், நாட்டில் காணப்படும் அரசியல் நிலைமைகளில் உக்கிரமடைந்து வரும் பிரச்சினைகள் காரணமாக நாளையோ, நாளை மறுதினமே, 5 வருடங்களிலோ அல்லது 10 வருடங்களின் பின்னரோ, அந்த மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அரசாங்கம், தாம் கூறுவது அனைத்துமே சட்டம் என நினைத்து செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை பெற்றுக்க…

  10. மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது! [Wednesday, 2012-11-07 20:11:09] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நொச்சிமுனை ஆறாம்குறிச்சி பகுதியில் வைத்து குறித்த காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தது.இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக அவர் தலைமறைவாகியிருந்துள்ளார். பால்குடியன் அல்லது கிளியரசன் என்ற இயக்கப் பெய…

  11. [size=2][size=4](அழகன் கனகராஜ்)[/size] [size=4]மக்களின் ஆணையை கொள்ளையடித்தே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 13ஆவது திருத்தம் உயர்நீதிமன்றத்தின் முரண்பாடுகளுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தினால் 62,000 பேர் பலியெடுக்கப்பட்டனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். தேசிய சுந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன இணைந்து, தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமையினால் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சமாதானமாக பேசு…

  12. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது புத்தளத்திற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பேருந்தின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்நாள் திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி தொலைபேசியில் பொலிஸாருக்கு தகவல் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு சம்பவ இடத்திற்கு அருகாமையிலுள்ள தேநீர்க் கடையொன்றில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தெரிய…

  13. முல்லைத்தீவில் 15 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்த முயன்ற சிறிலங்கா படையினனை தடுத்த சிறுமியின் தாயார் கொடுரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அம்பலவன் பொக்கணை என்னும் இடத்திலேயே சிறிலங்கா படையின்; கொலை வேறியாட்டம் அரங்கேறியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. அம்பலவன் பொக்கணைப் பகுதியில் ஆண் துணையின்றி தாயாரும் அவரது 15 வயது மகளும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள ஆலடிப் பிள்ளையார் ஆலையத்திற்கு அருகில் உள்ள சிறிலங்கா படை முகாமில் உள்ள 2 படையினர் வந்துள்ளனர். மேற்படி படையினர் அந்த வீட்டில் வசிக்கும் 15 வயதுச் சிறும…

  14. ஈழத் தமிழர் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களைப் பற்றி மனு கொடுப்பதற்கே சிரமப்படத்தான் வேண்டி இருக்கிறது. சென்னையில் நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுத் தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் அவையில் கொடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் சென்றபோது அமெரிக்காவே புயலில் சிக்கி இருந்தது! தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு எனப்படும் ‘டெசோ’ அமைப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் உருவாக்கினார். அது தொடர்பாக சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தினார். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, இந்தத் தீர்மானத்தின் நகலை தி.மு.க. எம்.பி-க்கள் அனைவரும் ஒருசேரப் போய்க் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, ‘ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தத் தீர்மானத்தைக் கொடுப்போம்’ என்றும் கருணாநிதி அறிவித்தார். இத…

  15. புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதை போன்று தான் கே.பிக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது: கருணா விளக்கம் [Wednesday, 2012-11-07 09:20:51] குமரன் பத்மநாதனுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் 12000 போராளிகள் சரணடைந்தார்கள்.இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதுடன், பலருக்கு பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குமரன் பத்மநாதனுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.ஐக்கிய தேசியக் கட்சி புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து ஆயுதங்களை வழங்கியது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரத்திற்கு நே…

  16. 'பிரபாகரனின் மகனைக் கொன்றது தவறு' By General 2012-11-07 10:30:02 இலங்கையை அழிப்பதற்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொன்று குவித்த உலகமே தேடும் பயங்கரவாதியான கே.பி. குற்றமற்றவர் என அரசு தெரிவித்துள்ளமை சரியானால் பிரபாகரனின் 12 வயது மகனைக் கொலை செய்தமை பாரிய குற்றமாகும் என ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசுசார்பற்ற நிறுவனங்களைத் தடை செய்யும் அரசாங்கம் கே.பி.க்கு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். “ஆசியாவின் பழைமையான ஜனநாயக நாடான இலங்கையில் இன்று அரசியல் மோகம் பிடித்தவர்களால் நீதியின் கிரீட…

    • 2 replies
    • 930 views
  17. 13 ஆவது திருத்தம் நேரக்குண்டு: விமல் புதன்கிழமை, 07 நவம்பர் 2012 11:25 0 COMMENTS 'அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அதனை தொடரந்து முன்னெடுப்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தானது. அது ஒரு நேரக்குண்டு' என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52127-13-.html

  18. தமிழீழத்தில் இராணுவப் புலனாய்வாளர் எனக்கூறி மக்களை அச்சுறுத்தும் பேர்வழிகள் November 7, 2012, 7:22 am[views: 108] கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் இராணுவப் புலனாய்வாளர்களெனத் தெரிவிக்கும் சிலர் விவரங்களைச் சேகரித்து வருவதால் மக்களிடையே பதற்றமானதொரு சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டாவளை பிரதேசத்திலுள்ள புன்னைநீராவி, விசுவமடு, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை ஆகிய இடங்களிலுள்ள குறிப்பிட்ட சில வீடுகளுக்கு கடந்த மூன்று நாள்களாகச் சென்று வரும் சிலர் இராணுவப் புலனாய்வாளர்கள் எனக் கூறிக்கொண்டு அந்தப் பகுதிகளிலுள்ள இளம் குடும்பத்தர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் பற்றிய விவரங்களைத் திரட்டி வருகின்றனர். அத்துடன் கடந்த போரின் போது உடல் அவயவங்களை இழந…

  19. மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு என்ன – ஐரோப்பிய ஒன்றியம் 07 நவம்பர் 2012 மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு என்ன என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவேஜிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை குறித்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை சிறைத்தண்டனையாக மாற்றுவது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதவான் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்…

  20. தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவர்களாக்க அரசு முயற்சிப்பது ஏன்? - சுமந்திரன் எம்.பி. இந்தியாவினாலும் இன்ரப்போலினாலும் தேடப்படும் சர்வதேசக் குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தாவையும், கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனையும் தமிழர்களின் தலைவர்கள் ஆக்குவதற்கு அரசு முயற்சி செய்வது ஏன்? இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். தேடப்படும் குற்றவாளிகளான இந்த இருவரையும் தலைவர்களாக்குவதால் அரசுக்கு என்ன லாபம் இருக்கிறது என்றும் அவர் கேட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கே.பி. எனப்படும்…

  21. வடமாகாண ஆளுநர் கருத்து சபையின் அங்கீகாரம் ஆகாது - உயர் நீதிமன்றம் திவிநெகும' சட்டவரைவுக்கு ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்றுவிட்டு வடக்கு மாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது. * "திவிநெகும' நடைமுறைக்கு 2/3 பெரும்பான்மை அவசியம் * வரைவில் பல பிரிவுகள் அரசமைப்புக்கு முரணானவை * அதில் ஒரு பிரிவுக்கு வாக்கெடுப்புத் தேவை * அனைத்து மாகாண சபைகளிலும் கருத்து முறையாகப் பெறப்படவேண்டும் எனவே ஆளுநரின் அனுமதியை அங்கீகாரமாக கருத முடியாது. மாகாண சபையின் கருத்து முறையாக பெறப்பட வேண்டும். இவ்வாறு திட்ட…

  22. சர்வதேசத்திற்கு பயப்பட ஆரம்பித்துள்ளது என்று சிறீலங்காவிற்கான கனடியப் பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தமிழர்களினூடான சந்திப்பின் போது தெரிவித்தார். சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப நடத்த முடியும் என நினைத்த சிறீலங்கா சர்வதேசத்தின் பலத்தை இப்போது தான் உணர்கிறது. கனடிய மனிதவுரிமை மையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இச் சந்திப்பில் கலந்து கொண்ட கனடாவின் சிறீலங்கா விவகாரத்திற்கான உத்தியோகபூர்வ குழுவில் அங்கம் வகிக்கும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தாங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்ட விஜயம் தொடர்பான அறிக்கையை கனடிய அமைச்சரவையின் கவனத்திற்குச் சமர்ப்பித்து விட்டதாகத் தெரிவித்ததோடு. சிறீலங்கா 200…

  23. இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவிநீக்க கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்களை இலங்கை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது. [size=3][size=4]தனது வருமானத்துக்கும் சொத்துகளுக்கும் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.[/size][/size] தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு அவர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. [size=3][size=4]ஷிரானிக்கு எதிராக மொத்தத்தில் 14 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.[/size][/size] [size=3][size=4]சுமார் இரண்டு கோடி ரூபாயை ரொக்கப் பணமாக கொடுத்து ஒ…

  24. [size=3] [/size][size=3] [size=4]லண்டனில் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்படவிருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் தீவிர தமிழீழ ஆதரவாளருமான வைகோ அவர்களை செல்லவிடாது தடுப்பதற்காக இந்திய அரசு சதியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.[/size][/size][size=3] [size=4]உலகமெங்கும் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை ஒரு குடைக்கீழ் அழைத்து ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்கும் முகமாக லண்டனில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு உலகமெங்கும் இருந்து தலைவர்கள் ஆர்வலர்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள்.[/size][/size][size=3] [size=4]இந்நிலையில் தாய்த்தமிழகத்தில் இருந்தும் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பில் பலர் தமது பயணத்தை ஆரம்பித…

  25. இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் யுத்த மோதல்களின் போது படுகாயமடைந்து, உடலில் உலோகத் துண்டுகளான குண்டுச் சிதறல்ளுடன் வாழ்கின்ற மாணவர்களுக்கு விசேட வைத்திய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. யுத்த மோதல்களில் சிக்கி படுகாயமடைந்த பலர் குண்டுச் சிதறல்கள் உடலில் பாய்ந்ததனால், உலோகத் துண்டுகளுடன் கடந்த மூன்று வருடங்களாகப் பெரும் அவஸ்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். யுத்தத்தின் எச்சங்களான இவற்றை அகற்றுவதற்கு குறிப்பாக மாணவர்களுடைய உடலில் இருந்து அகற்றுவதற்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகக் கூடிய மாவட்ட ஒருங்கிணைப்புக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.