ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143424 topics in this forum
-
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் பூகோள காலக்கிரம மீளாய்வு மாநாட்டில் சமர்பிக்கப்பட்டுள்ள 46 விசாரணை அறிக்கைகள் குறித்து தீர்மானிப்பதில் உலக நாடுகள் இரண்டாக பிரிந்துள்ளதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது. இந்தியா, ஸ்பெயின், பேனின் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், இந்த தீர்மானித்தை எதிர்வரும் 5 ஆம் திகதி அறிவிக்க உள்ளனர். இந்த விடயத்தில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வடகொரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.மீளாய்வு மாநாட்டிற்கு புலிகளுக்கு ஆதரவான 11 அமைப்புகளும், இலங்கையை சேர்ந்த 17 அரசசார்ப்றற அமைப்புகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகளே அறிக்கையை சமர்பித்துள்ளன. உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்முhனுவேல்,…
-
- 0 replies
- 568 views
-
-
வடக்கில் இராணுவத்தை நீக்கிகொள்ள வேண்டும்: அமெரிக்க தூதுவர் By General 2012-11-04 09:01:48 வடக்கும் மற்றும் கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் நடவடிக்கைகளிலிருந்து இராணுவத்தை நீக்கிகொள்ள வேண்டும் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்செல் சிசன் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீடு இன்னமும் காணப்படுகின்றது. எனவே இதனை விலக்கிகொள்ள வேண்டும். இலங்கையில் இன்னமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுளும் தயாராகவே உள்ளன. இந்தநிலையில் இலங்கை தமது இணக்கப்பாடு தொடர்பிலான தமது சொந்த …
-
- 0 replies
- 402 views
-
-
[size=4]இலங்கைத் தமிழர்கள் தனியான தேசிய இனமாக அங்கிகரிக்கப்படவேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக் கொண்டார். ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து ஆராயும் காலக்கிரம மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெறுவதற்கு முன்பாக, மனித உரிமை அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட கூட்டம் நேற்று இடம்பெற்றபோது, ஆயர் இலங்கையில் இருந்து ஸ்கைப் வழியாக உரையாற்றினார். 13 ஆவது திருத்தம் அடிப்படையில் தவறானதெனவும், அது தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாதெனவும், மாறாக தமிழர்கள் தனியான தேசிய இனமாக அங்கிகரிக்கப்படுவதுதான் தீர்வாக அமையுமெனவும் அவர் கூறினார். வன்னிப் போரின்போது ஒரு லட்சத்து நாற்பத்தா…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்காப் படையினருக்கு பேரழிவுகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகள் சிறீலங்கா | ADMIN | NOVEMBER 4, 2012 AT 11:20 போரின் போது சிறிலங்கா படையினருக்கு கணிசமான இழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படைப்பிரிவில் குறைந்தது 30 ஆட்டிலறிகள் இருந்ததாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படைப்பிரிவில், 152 மி.மீ ஆட்டிலறிகள்- 15, 130 மி.மீ ஆட்டிலறிகள்- 11, 122 மி.மீ ஆட்லறிகள்- 03, 85 மி.மீ ஆட்டிலறி- 01 மற்றும் 120 மி.மீ மோட்டார் -01 என குறைந்தது 30 ஆட்டிலறிகள் இருந்தன. விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகளால் சிறிலங்கா படையினருக்கு, குறிப்பாக வன்னிப்போர் முனையில், 2008 ,2009 காலப்பகுத…
-
- 0 replies
- 616 views
-
-
ருவாண்டா இன படுகொலைக்கு தீர்வு கண்ட ஐநா ஏன் இலங்கை படுகொலைக்கு தீர்வு காணவில்லை! இன்னர் சிற்றி பிரஸ் சிறீலங்கா | ADMIN | NOVEMBER 4, 2012 AT 09:03 ருவாண்டா அரசு மீது அங்கு இடம்பெற்ற ஆயிரகணக்கான மக்களின் இன படுகொலைக்கு தீர்வு காண ஐநா முயன்றது போல் ஏன் இலங்கையில் முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இலங்கை அரசு புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு காணவில்லை என ஐக்கிய நாடுகளின் இன்னா சிற்றி பிரஸ் ஐநா செயலர் பான் கீ மூனிடம் கேள்வி தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகள் கடக்கும் நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை ஏன் ஐநா காணவில்லை எனவும் அந்த ஊடகம் மேலும் கேள்வி மேல் கேள்வியால் பான் கீ மூனிடம் வேள்வி செய்துள்ளது. ஐநாவின் உத்தியோகபூர்வ ஊடகமான …
-
- 0 replies
- 377 views
-
-
[size="5"]இலங்கையின் வாக்குறுதிகளை நம்ப முடியாது: சர்வதேச மன்னிப்புச் சபை[/size] மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமை நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகளை சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 2008 ஆம் ஆண்டு கால மீளாய்வு அமர்வுகளின் போது இலங்கை அரசாங்கம் சர்வ…
-
- 0 replies
- 435 views
-
-
[size=4]தமிழகத்தின் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு பலபோராட்டங்களை மேற்கொண்டு உயிருக்காக போராடிய செந்தூரனை பிணையில் விடுதலைசெய்துள்ளார்கள்.[/size] [size=4]உரிய ஆவணங்கள் இன்றி கடல் வழியாக தமிழகத்திற்கு சென்ற அகதிகளை காவல்துறையின் கைது செய்து செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் வைத்து இருந்தனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினையால் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு சிலர் மாற்றப்பட்டனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்ட செந்தூரன் (வயது 34) சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகளை விடுதலை செய்து திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் தங்கள் மீதுள்ள வழக்குகளை முடிக்க வேண்டும் என்பன உள…
-
- 0 replies
- 476 views
-
-
[size=2][size=4]அமெரிக்க மாட்டிறைச்சியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்க உற்பத்திப் பொருட்களை பரவலான வீச்சில் ஏற்றுமதி செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இறைச்சி சந்தை, 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்பொழுது பொருளாதாரம் மற்றும் அரசியல் காலநிலை நிறுவப்பட்டுள்ளதனால் இந்த சந்தர்ப்பத்தை மீண்டும் வலய சந்தைகளில் நம்பிக்கையுடன் அணுகுவதற்கு தீர்மானித்ததாக அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான பிரதித் தலைவர் ஜொயில் ஹக்கார்ட் தெரிவித்துள்ளார். இலங்கையர் சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் தற்போது பொருளாதார அபிவிருத்தி …
-
- 7 replies
- 768 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ''விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்'' என்று கோரி ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பி. சிவநேசன் சார்பில் டெல்லியில் உள்ள சிறப்பு தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி, "விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பாளர் என்று சிவநேசன் கூறிக் கொள்வதால் அதற்குரிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று அறிவுறுத்தினார். மேலும் இந்த வழக்கில் சிவநேசன் நேரில் ஆஜராவாரா என்றும் விசாரணையின்போது அவரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து "இந்தியா வரும் எனது…
-
- 2 replies
- 784 views
-
-
சுழிபுரம் திருவடிநிலையில் பொதுமக்கள் மீது கடற்படையினர் கடும் தாக்குதல்! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 4, 2012 AT 00:54 இன்று மாலை சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் திருவடிநிலை பகுதி பொதுமக்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருவடிநிலையில் கடற்பகுதியின் ஒருபகுதியை கடற்படையினர் தடைசெய்து வைத்துள்ளதால் இரண்டு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில் திடீரென மோட்டார் சைக்களில் வருகைதந்த கடற்படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குல் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து ஒன்று திர…
-
- 0 replies
- 668 views
-
-
[size=2][size=4]இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய பெண்களுக்கான மெய்வல்லுநர் விளையாட்டு மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்கவிருந்த இலங்கை குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, விமானத்தை தவறவிட்டமையினால் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 5ஆம் திகதி நிறைவடையும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு புறப்படவிருந்த விமானத்தில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், விமானம் புறப்படுவதற்கான நேரத்தை தவறாக விளங்கிக்கொண்ட சுசந்திகா, மறுநாள் 31ஆம் திகதி இரவு விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளார். இதனால் அவருக்கு குறித்த விமானத்தில…
-
- 3 replies
- 569 views
-
-
சனிக்கிழமை, 03 நவம்பர் 2012 புனித சந்திப்பு... சனிக்கிழமை, 03 நவம்பர் 2012 17:03 0 COMMENTS சமாதானத்துக்கான அனைத்து மத, கலாசார சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள அதி. வணக்கத்துக்குரிய கலாநிதி ஷிங்குங் உள்ளிட்ட குழுவினர், இன்று சனிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் யுனெஸ்கோ அமைப்பின் இணைப்பாளர் பிரிவுத் தலைவர் கெத்தலின் பொங்காய், பல நாடுகளினதும் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://www.tamilmirror.l…
-
- 9 replies
- 658 views
-
-
[size=4]கேபி' என்ன அரசின் 'கை பாவை'யா?[/size] [size=4]என்.சத்தியமூர்த்தி[/size] [size=3]இன பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசுவதற்கு முன்னாள் விடுதலை புலிகள் இயக்க தலைவர் 'கேபி' என அறியப்படும் குமரன் பத்மநாதனின் உதவியை பெறப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெலவின் இந்த அறிவிப்பு எத்தனை தூரம் சாத்தியமானது, எந்தவித பயன் அளிப்பது என்பது குறித்த சந்தேகங்கள் உடனுக்குடனேயே எழுந்து விட்டன. அதைவிட முக்கியமாக, 'கேபி' குறித்த அரசின் இந்த அறிவிப்பு திடீரென்று தோன்றியது போலவே காணாமலும் போய்விட்டதோ என்று ஒரு வார காலத்திற்குள்ளேயே எண்ணத் தோன்றுகிறது. இனப் போர் உச்சகட்டத்தை நோ…
-
- 0 replies
- 905 views
-
-
மனித உரிமைகள் தொடர்பாக ஜெனிவாவில் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட 99 நாடுகளில் 80 சதவீதமான நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளோம். 30 வருட காலம் நெருக்கடியை சந்தித்த இலங்கை ஒரே நாளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனினும் நாம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சரும் ஐ.நா.வுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பான 14 ஆவது மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கை தொடர்பில்…
-
- 1 reply
- 707 views
-
-
வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு, தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது. குறிப்பாக, சர்வதேச சமூகத்திடம் தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத் தொடரில் அபாயப் பொறி நிச்சயம் என்று அமெரிக்கா கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, சர்வதேச சமூகத்திடம் அளித்த உறுதிமொழிகளை நிறை வேற்றாமல் ஜன…
-
- 0 replies
- 646 views
-
-
சென்னை:ஐ.நா.சபையில் டெசோ தீர்மானத்தை வழங்கியதால் ஈழத்தமிழர்களுக்கு ஒளிமயமான வாழ்வு கிடைக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"டெசோ மாநாட்டு தீர்மானங்களையும், திமுகவின் கருத்துக்களும் அடங்கிய விரிவான மனுவை ஐ.நா. மன்றத்தில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் வழங்கினார்கள். அதில் டெசோ இயக்கத்தின் சார்பில் திமுக தலைவர் என்ற முறையில் நான் கையெழுத்திட்டு உள்ளேன். இலங்கையில் ஏற்கனவே நடைபெற்ற இப்போது நடந்து கொண்டு இருக்கிற நிலவரங்கள் பற்றி ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினிடமும், டி.ஆர்.பாலுவிடமும் நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள…
-
- 1 reply
- 587 views
-
-
ஈழத்தமிழர்களின் இனவழிப்பை உணர்த்தும் அனைத்துலக ரீதியில் உணர்த்தும் வகையில்”எமது நிலம் எமக்கு வேண்டும்” மாநாடு சென்ற வெள்ளிக்கிழமை இத்தாலியில் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ் மாநாட்டில் தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா, பேராசிரியர் Jude Lal Fernando, இத்தாலி பாராளுமன்ற சென்ட் சபை உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய மதிப்பிற்குரிய Adriana Poli Bortone , மனிதவுரிமை விவகாரங்களுக்கான சட்டத்தரணி Italo Porcaro,இவ் மாநாட்டுக்கு அனுசரணை வழங்கிய பல்லின சமூக அமைப்பின் (Integra Onlus ) தலைவி Klodiana Cuka , ஏனைய மனிதவுரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் ,அனைத்துலக மக்கள் அவையை பிரதிநித்துவம் படுத…
-
- 0 replies
- 538 views
-
-
வன்னிப் பிராந்தியத்தை முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு படை என்ற பெயரில் தமிழ் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு படையினருடன் இணைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிகவும் கடுகதி வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பாடசாலைவிட்டு இடைவிலகிய மாணவர்களை 18 ஆயிரம் ரூபா சம்பளம் என்று ஆசை வார்த்தை காட்டி சிவில் படையில் இணைக்கும் செயற்றிட்டங்களை இராணுவ தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சில மாணவர்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்தியும், இடைவிலகியவர்களும் பாடசாலைகளிலிருந்து நற்சான்றிழ்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ள குடும்பங்களிலுள்ள வாலிப வயதுடைய இளம் பெண்களை சிவில் பாதுகாப்பு படையில் இணைந…
-
- 0 replies
- 558 views
-
-
புலிகளை தோற்கடிக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் அவசரத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பதிமூன்று “ப்ளஸ்” என்று காண்பவர்களிடம் எல்லாம் சொல்லி வந்தார். அதன்பிறகு மாகாணசபை அதிகாரங்களை பறித்தெடுக்க பசில் ராஜபக்ச, திவி நெகும சட்டமூலத்தின் மூலம் பதிமூன்று “மைனஸ்” என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தினார். இன்று, கோதாபய ராஜபக்ச இந்த அதிகாரப்பகிர்வு எதுவுமே வேண்டாம் என மாகாணசபைகளையே அகற்றிவிடும் பதின்மூன்று “பூஜ்யம்” என்ற நிலைக்கு தமது அரசாங்கத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இதுதான் ராஜபக்ச குடும்ப ஆட்சியில், “ப்ளஸ், மைனஸ் ஆகி கடைசியில் பூஜ்யம்” ஆன கதை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு அரசியல் மோசடியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 499 views
-
-
ஆறு இலட்சம் பேர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் லீற்றர் சாராயம் விற்பனை [ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012, 09:22 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] 2012ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் (16 இலட்சம்) லீற்றர் மதுபானம் (சாராயம்) யாழ்.மாவட்ட மக்களால் நுகரப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புகைத்தல் மற்றும் மதுப் பழக்கத்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். “இது யாழ்ப்பாணத்தில் சராயம் அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது. பதின்ம வயதினரும், பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதத் …
-
- 3 replies
- 806 views
-
-
[size=4]பிரான்சில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனினதும் மற்றும் அவருடன் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தமிழ்ச்சங்கத்தினராலும், லாக்கூர்னோவ் கலைக்கூடம் என்ற பிரெஞ்சு அமைப்பினராலும்[/size] [size=4]01.11.2012 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு லாக்கூர்னோவ் என்னும் இடத்தில் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வனின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை லாக்கூர்னோவ் தமிச்சங்கத்தலைவர் திருமதி அ. யாழினி அவர்கள் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை 2008 ல் கிளிநொச்சி பகுதியில் சிறீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர் லெப். வர்னப்பிரியாவின…
-
- 0 replies
- 544 views
-
-
பறவைமோதி கண்ணாடி உடைந்த ஸ்ரீலங்கன் விமானம் வெறுமையாக கொழும்பு திரும்பியது! [saturday, 2012-11-03 12:12:59] பறவை மோதி கண்ணாடி உடைந்த விமானம், நள்ளிரவில் பயணிகள் யாரும் இல்லாமல் இலங்கை கிளம்பிச்சென்றது.இலங்கையில் இருந்து கிளம்பிய, "ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று முன்தினம் மாலை, 3 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. மீண்டும், 4 மணிக்கு கிளம்ப தயாரானபோது, விமானத்தில், 80க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திடீரென விமானத்தின் தலைமை பைலட், முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருப்பதை கண்டறிந்தார். அதையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.விமான நிலைய அதிகாரிகளும், தொழில்நுட்ப பிரிவினரும் விமானத்…
-
- 3 replies
- 558 views
-
-
ஜெனிவா: சிறிலங்காவுடன் பேரம்பேசும் அனைத்துலகம் [ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012, 10:28 GMT ] [ நித்தியபாரதி ] தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இன்னமும் முழுமையான சமாதானத்தைக் கொண்டு வரவில்லை என்பதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு தென்னிந்தியாவை தளமாகக்கொண்ட Deccan Chronicle ஆங்கில நாளேட்டில் Neena Gopal எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கான கூட்டத் தொடரை…
-
- 0 replies
- 570 views
-
-
[size=4]நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமை பற்றி அமைச்சர் தினேஷ் குணவர்தன மஹாநாயக்க தேரரை இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து தெளிவுபடுத்தினார். இதனை அடுத்து மஹாநாயக்க தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல. நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது கையிற்கு அது செல்வதை தடுக்க வேண்டு…
-
- 11 replies
- 813 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்)[/size][/size] அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளேன் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். [size=2][size=4]அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். வட மாகாணசபைத் தேர்தலில் முதலைமைச்சர் வேட்பாளராக நானே போட்டியிடவுள்ளேன். எனது விருப்பத்திற்கு மாறாக அரசாங்கம் நடந்துகொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார். வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தரப்பில் கே.பி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்று கேட்டதற்கு கே.பியும் போட்டியிடலாம்.…
-
- 0 replies
- 346 views
-