ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
யாழ். வசந்தபுரம் கிராமத்தில் தனது மகளுக்கு நிலம் தருவதாக கூறி ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர ஒட்டுக்குழு மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். குறித்த கிராமம் கடந்த 1995ம் ஆண்டு முதல் உயர் கடல்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்தாண்டின் ஆரம்பத்திலேயே மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் தமது சொந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீள்குடியமர்ந்துள்ள மக்களில் நிலமற்ற மக்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஜெயமணி (வயது45) என்பவரின் மகளுக்கு மட்டும் நிலம் வழங்கப்படவி…
-
- 1 reply
- 1k views
-
-
விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் சட்டத்தரணிகள் உள்ளிட்ட கற்றோர் ஏனையோருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து நேற்று ஜாஎல பிரதேசத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் நடு வீதியில் பதாகையை, சவப்பெட்டியை தூக்கிக் திரியும் இவர்கள் பௌத்த சமய வகுப்புக்குச் சென்று சமயம் கற்றவர்களேயாவர். கொடி பிடித்து பதாகை ஏந்தி சவப்பெட்டி தூக்கிச் செல்வதற்கெல்லாம் ஜனாதிபதி பயப்படமாட்டார் பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 392 views
-
-
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அக்கறை காட்டுவதாக இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது. அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கலுடனான தீர்வுக்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம் ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான. இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை ௭ழுத்து மூலம் நாம் சமர்ப்பித்திருந்தோம். அதற்கு இன்னமும் பதிலளிக்காத அரசாங்கம் ௭ம்மீது குற்றம் சாட்டி வருவது வேடிக்கையானது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ …
-
- 0 replies
- 359 views
-
-
[size=2][size=4]'நாட்டுக்கு எதிராக விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் தைரியமாக முகங்கொடுக்க இலங்கை இராணுவம் எப்போதும் தயாராக இருக்கின்றது' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். 'பயங்கரவாதத்திலிருந்து வெற்றிகொள்ளப்பட்ட நாட்டின் அனைத்து இன மக்களுக்காகவும் முக்கியமாக வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அபிவிருத்திக்காக இராணுவம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் இன்று சர்வதேச அளவில் பாராட்டுதல்களைப் பெற்று வருகின்றன' என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார். இலங்கை இராணுவத்தின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு கொழும்பு, சி.ஆர். அன்ட் எப்.சி மைதானத்தில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்…
-
- 2 replies
- 249 views
-
-
[size=2][size=4]பங்களாதேஷில் சேதமாக்கப்பட்ட பௌத்த விகாரைகளை புனர்நிர்மாணம் செய்வதற்காக இன்று புதன்கிழமை நிதியமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொபேகடுவவினால் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிதியத்திற்கு மல்வத்த பீடாதிபதி வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் முதலில் ஒரு இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளார். இதேவேளை, கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார 10 இலட்சம் ரூபா இந்த நிதியத்திற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...0-10-06-09.html[/size][/size]
-
- 2 replies
- 232 views
-
-
[size=2][size=4]நிமிடத்துக்கு 4000 லீற்றர் நீரை வெளித்தள்ளும் பாரிய நீர் ஊற்று ஒன்றை புவிச்சரிதவியலாளர்கள் ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். 217 அடி ஆழத்திலிருந்து பெரியதோர் கற்பாறையை துளைத்தபோதே இந்த நிலக்கீழ் ஊற்று வெளிப்பட்டுள்ளது. இந்த ஊற்றிலிருந்து 20 அடி உயரத்துக்கு நீர் சீறியடிக்கின்றது. இவ்வாறானதொரு ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். மேற்படி நீரை பரிசோதித்ததன் பின்னரே அது குடிப்பதற்கு உகந்ததா? இல்லையா? ஏன தீர்மானிக்க முடியும் என்று சிரேஷ்ட புவிச் சரிதவியலாளரான உபுல் விக்ரமரத்ன தெரிவித்தார். தொடர்ச்சியான வறட்சியினால் உண்டான நீர்த் தட்டுப்பாட்டினால் வருந்திய மக்கள் இதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர். (காஞ்சன குமார ஆரியத…
-
- 2 replies
- 778 views
-
-
[size=4]ஊடகவியலாளர் ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி பிரசுரித்த லங்காசிறி இணையத்தளம் மற்றும் கூல் சுவிஸ் இணையத்தளங்களை நடத்தும் சிவஞானம் சிறிகுகன் என்பவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று சுவிஸ் நீதித்துறை வழங்கிய உத்தரவுக்கு அமைய அவர் தனது இணையத்தளங்கள் ஊடாக மன்னிப்பு கோரியுள்ளார். ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் அவர்களை அவதூறு செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினதும் கருணாவினதும் உளவாளி என செய்தி பிரசுரித்த லங்காசிறி இணையத்தளம் மற்றும் கூல் சுவிஸ் இணையத்தளங்களை நடத்தும் சிவஞானம் சிறிகுகன் என்பவருக்கு எதிராக ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் செய்த முறைப்பாடு விசாரணைக்கு வந்த போது அந்த செய்திக்கான ஆதாரங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்றும் அது தவறான செய்தி என்…
-
- 3 replies
- 946 views
-
-
தமிழ் பேசும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து அடிப்படைக்கொள்கைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் கருத்து வரவேற்புக்குரியது என அகில இலங்கை உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். நாடு இன்றுள்ள சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்று பட வேண்டும் என்ற ஆதங்கம் தமிழ் பேசும் மக்களிடையே அதிகமாக ஏற்பட்டு வருவதை அவதாணிக்க முடிகிறது. கடந்த காலங்களில் விடப்பட்ட பாரிய தவறுகளை திருத்திக்கொள்வதன் மூலம் இதற்கான பாதைகளை திறந்து விட முடியும். ஆனால், பதவிகளுக்காகவே கட்சி என்ற அடிப்படையில் இருக்கும் கட்சிகள் மக்களுக்காக கட்சிகள் என்ற அடிப்படைக்கு முரண்பட்டவையாகும். இவ்வாறு அடிப்படையிலேயே முரண்படும் கட்சி…
-
- 0 replies
- 751 views
-
-
[size=4]அண்மைக் காலத்தில் சிறிலங்காவில் குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது சிறிலங்காவின் உயர் கல்வி தொடக்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, நகர்ப்புற ஏழைகளைக் குடியேற்றுவது தொடர்பில் சுதந்திரமாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையும், இவை தொடர்பில் சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்களால் பல்வேறு வகையான அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமையும் முக்கியமானதாகும். இவ்வாறு அறிக்கைகள் விட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஜனநாயகம், நல்லாட்சி, மீளிணக்கப்பாடு, சமாதானம் மற்றும் அபிவிருத்தி போன்ற பதங்களையே பயன்படுத்தியுள்ளனர். மக்கள் எளிதில் நம்பும் வகையிலேயே இவ்வாறான அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவர்களால் விடுக்கப்பட்ட கோ…
-
- 0 replies
- 324 views
-
-
திருமலை 5 மாணவர் கொலை, மூதூர் 17 தொண்டர்கள் கொலை விசாரணைகள் மீள ஆரம்பமாகும் 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம், மூதூரில் தொண்டு நிறுவனமொன்றின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் குறித்து மீள் விசாரணை நடத்துவதாக சர்வதேச சமூகத்திற்கு கடந்த வாரம் ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இலங்கை விவகாரத்தில் ஆர்வம் கொண்ட தரப்பினரின் பிரதிநிதிகளுக்கும் ஜெனீவாவுக்குச்சென்ற இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் இவ்வுறுதிமொழியை வழங்கினார். 2006 ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்களுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் கேள்வி…
-
- 4 replies
- 1.1k views
-
-
[size=4]இலங்கை ராணுவ பயிற்சிக்கு தடை விதிக்க முடியாது - இந்திய உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..! அரசின் முடிவு, அரசின் [/size][size=4]கொள்கை, பாதுகாப்பு, ராணுவ ரகசியம் என்று தட்டிக்கழிக்கிறதோ நீதிமன்றங்கள்..?! [/size] [size=4]இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவிலும் இந்தியாவும் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட முடியாது என்று கூறி தடையெல்லாம் விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. இந்தியாவில் உள்ள ராணுவ பயிற்சி மய்யங்களில் பல்வேறு இடங்களில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது, இலங்கை ராணுவ பயிற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு…
-
- 4 replies
- 683 views
-
-
சிறிலங்கா அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையில் எழுந்துள்ள முறுகலின் உச்சக்கட்டமாகவே, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலக ரட்ன, நேற்று கல்கிசைப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நான்கு ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டுள்ளார். தனது வாகனத்தில் இருந்து நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருந்த அவரை வெளியே இழுத்த, ஆயுதபாணிகள் தாக்கிவிட்டு அவரது கைத்தொலைபேசியையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். முகம் மற்றும் கைகளில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ண கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை கேள்வி…
-
- 4 replies
- 492 views
-
-
யாழ்.செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) சில நாய்கள் வந்து குரைத்துக்கொண்டிருந்தன. உங்களிற்கும் அது கேட்டதாவென கேள்வி எழுப்பியுள்ளார் வடமாகாண ஆளுநரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. நேற்று செவ்வாய்க்கிழமை அவசர அவசரமாக வடமாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களை அழைத்து அவர் உரையாடினார்.யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான வடமாகாண ஆளுநரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் அங்கு கலந்து கொண்டிருந்தார். ஆளுநர் மண்டபத்த்pனுள் வருகை தந்த போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ உள்ளுராட்சி சபைத் தலைவர்களோ …
-
- 1 reply
- 593 views
-
-
அப்பாவி இளைஞர்கள் புலிகள் என முத்திரை குத்தப் பொறுப்பான அதிகாரிகள் ஆண்டவனுக்குக் கணக்குகொடுக்க வேண்டியவர்கள் வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிவக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'முன்னாள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த போராளிகள் 2500பேரை சிவில் சமூக பாதுகாப்பு திணைக்களம் மூலமாகத் தெரிந்தெடுத்து பல்வேறு உப கொடுப்பனவுகளுடன் கூடிய நல்ல வேதனம் கொடுப்பதாக அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு நல்ல முயற்சியாக இருந்தபோதிலும் இந்த இளைஞர் யுவதிகளில் அனேகர் விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக அவர்களின் இயக்கத்…
-
- 1 reply
- 558 views
-
-
5 ரோந்துக் கப்பல்களை வாங்குகிறது கடற்படை இலங்கைக் கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளதாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம். இவற்றில் இரண்டு ரோந்துக் கப்பல்கள் ஒரு தரப்பிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. ஏனைய மூன்றும் வேறுவேறு தரப்புகளிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. இரண்டு ரோந்துக் கப்பல்களை வாங்குவதற்காக உடன்பாடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும். ஆழ்கடல் ரோந்துக் கப்பல்…
-
- 0 replies
- 355 views
-
-
அடுத்த வருடம் நாட்டின் செலவுக்காக ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 500 கோடி ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்று அரசால் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்புக்கு 28 ஆயிரத்து 950 கோடியே 25 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் பாதுகாப்பு செலவினத்துக்கு அரசு 23 ஆயிரத்து 124 கோடியே 30 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருந்தது. ஆனால், 2013ஆம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 825 கோடியே 95 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மீள்குடியேற்றத்துக்கு 43 கோடியே 73 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாவும், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள…
-
- 0 replies
- 393 views
-
-
யாழ்.குடாநாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 19 கொலைச் சம்பவங்களும் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விசேட உரையாற்றும் போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் குடாநாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பாரிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் 21 கொலைச் சம்பவங்கள் யாழில் நடைபெற்றுள்ளது. இம்முறை அது குறைவடைந்து 19 ஆக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு யாழில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தை விட …
-
- 0 replies
- 444 views
-
-
நோர்வேயின் சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான இன்றுடன் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோருக்கு டொம் தேவாலய நிர்வாகம் எழுத்து மூலமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்தே இந்த உண்ணாவிரப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்பதாக மேற்படி இரு தாய்மாரும் தெரிவித்தனர். உண்ணாவிரதம் இருந்து வந்த தாய்மாரிடம் பேச்சுக்களை நடத்திய டொம் தேவாலய நிர்வாகம் தாம் இவ்விடயம்…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கையில் தமிழர் பகுதியில், மதவாச்சி - யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே 252.5 கி.மீ. தொலைவில் ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதுவே இலங்கையின் மிக நீளமான ரயில் பாதையாக திகழ்ந்தது. போரினால் இந்த ரயில் பாதையை முழுவதும் அழிவடைந்து விட்டது. இப்போது தமிழர் பகுதிகளில் புனரமைப்பு பணிகள் இந்திய நிதியுதவியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 252 கி.மீ. நீள ரயில் பாதையை மீண்டும் புனரமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புனரமைப்பு திட்டத்துக்காக இந்தியா 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) செலவு செய்கிறது. ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கையின் படி கடனாக இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்திய அரசு நிறுவனமான `இர்கான்´, இந்த ரயில் பாதையை புனரமைக்கும் …
-
- 21 replies
- 1.4k views
-
-
கனடா நாடுகடத்திய ஈழத் தமிழன் கொழும்பு 4ம் மாடியில் கடும் சித்திரவதை..! சிறீலங்கா | ADMIN | OCTOBER 10, 2012 AT 09:38 சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் அரச படைகளும் விசேட பொலிசும் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் கொழும்பு 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி கடும் துன்பம் அனுபவிக்கிறார். இந்த மனிதாபிமான மற்ற செயலுக்கு கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும். இலங்கைக்கு நாடு கடத்தப் படுவோர் மீது பாலியல் வன்முறை உட்பட எல்லாவகைச் சித்திரவதைகளும் செய்யப்படுவது வழமை. இதைக் கனடா அரசு நன்கு அறிந்தும்…
-
- 1 reply
- 844 views
-
-
தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி. PHOTOS, தமிழீழம் | ADMIN | OCTOBER 10, 2012 AT 00:13 எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள். நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக்…
-
- 0 replies
- 465 views
-
-
திருமலை மூதூர் கடற்கரைச்சேனை மைதானம் காவல்துறையினருக்கு தாரைவார்ப்பு சிறீலங்கா | ADMIN | OCTOBER 10, 2012 AT 09:33 இத்தேசத்தின் ஆட்சியாளர்கள் எமது மக்களது நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்வதன் ஊடாக எமது பொருண்மியத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதும் எமது மக்களின் பெரும்பான்மையினை எமது பிரதேசத்திலேயே சிறுபான்மையாக்குவதும் என்ற மறைமுக நிகழ்ச்சி (Hidden agenda) நிரலின் அடிப்படையில் தூரநோக்குடன் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்றார்கள். அன்று விவசாய நடவடிக்கைகளை மையப்படுத்தி கந்தளாய், அல்லை, கல்லோயா போன்ற குடியேற்றத் திட்டங்கள் நிறுவி அதன் மூல் ஓரளவு வெற்றியும் கண்டார்கள். இன்று கவர்ச்சிகரமான முறையில் ஆடைத்தொழிற்சாலைகள், உப்புத்தொழிற்சாலைகள், என்ற போர்வை…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நோர்வேக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை – 10 அக்டோபர் 2012 – விக்கிலீக்ஸ் - தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள் இலங்கை யுத்தக் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நோர்வே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதுவர் க்ளைன்ட் வில்லியம்சனுக்கும், இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானப் ப…
-
- 0 replies
- 386 views
-
-
"கல்வி அமைச்சருக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்படுமா?" அதிபர்களுக்கு கேர்ணல் பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கல்வி அமைச்சருக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்படுமா என்று ஐ.தே.க. யின் எம்.பியான ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜனநாயக தேசிய கூட்டணியின் எம்.பி.யான சுனில் ஹந்துன்நெத்தி, அதிபர்களுக்கு கேர்ணல் பதவி வழங்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி கல்வியமைச்சர் விஜித்தமுனி சொய்சா, சிலவற்றை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்புகள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாலே அவர்களை கௌரவிக்கும் வகையில் கேர்ணல் பதவி …
-
- 5 replies
- 942 views
-
-
திவிநெகும சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றம் By General 2012-10-09 17:37:08 வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் அறிவித்தார். வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகளின் ஆளுநர்கள் தமக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=1003
-
- 0 replies
- 510 views
-