Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இராணுவத்திற்கு காணிகள் வழங்க முடியாது என ஒருமித்த கருத்து வெளியிடப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்தி ஆராய்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. படையினருக்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் வழங்கப்படக் கூடாது. அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எனவே இந்தக் காணிக சுவீகரிப்பு முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து படையினருக்குக் காணிகள் வழங்கப்படக் கூடாது …

  2. [size=2][/size] [size=2][size=4]இலங்கையர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் செல்வதற்கான பயண எச்சரிக்கையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. [/size][/size] [size=2][size=4]தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைப் பயணிகளுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாட்டு அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு பாராட்டியுள்ளது. தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு ஆபத்திருப்பதாக அறிவித்தது. இந்திய அரசாங்கம், தொடர்புடைய மாநில அரசாங்கங்களுடன் ஆலோசி…

  3. [size=4]யாழ் மாவட்டத்தின் 2012ஆம் ஆண்டுடின் யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று காலை 9.30 மணி யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இங்கு தற்போது நடைபெற்று வருகின்ற அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்படி விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், தெங்கு உற்பத்தி, பனை அபிவிருத்தி, காணி, மீள்குடியேற்றம், மீன்பிடி, நீர்ப்பாசனம், மற்றும் சிவில் பாதுகாப்பு போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது. ஆரம்பத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வரவேற்புரையினை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நிகழ்ச்சி நிரல் மற்றும் கடந்த ஆண்டுக்கான கூட்ட அறிக்கைகள் கிடைக்க…

    • 2 replies
    • 797 views
  4. முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல்; மக்களும் திருப்பி தாக்கினர். சிறீலங்கா | ADMIN | OCTOBER 9, 2012 AT 10:12 முள்ளிவய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் பொதுமக்கள் தம்மால் புதைத்துவைத்த, கைவிடப்பட்ட பொருட்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பழைய இரும்புகளும் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் சிங்களப்படையினர் பளைய இரும்புகளை சிங்கள வியாபாரிகளுக்கு எடுத்து வீற்பனை செய்யும் பொருட்டு அவற்றை பொதுமக்கள் எடுக்கவிடாமல் தடுத்தும் தாக்கியும் வருகின்றனர். இது விடயத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் வீதிக்கு தென்முனையில் சிங்களப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்த முறுகல் நிலை முற்றவே, தாம் கொண்டுவந்த தடிகள், பொல்லுகள் என்பவற்றால் ப…

  5. பொலிஸ் திணைக்களத்தின் குதிரைப்படைப் பிரிவில் இணைத்துக்கொள்ள 18 குதிரைகளைக் கொள்வனவு செய்ய தீர்மானிகெ்கப்பட்டுள்ளது. இதற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில், அதற்காக அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. கொள்வனவு செய்யப்படவுள்ள விசேட ரகத்தைச் சேர்ந்த குதிரைகளுக்காக தலா 2.7 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பொலிஸ் குதிரைப்படைப் பிரிவானது நாட்டின் மிகவும் மரியாதைமிக்க விழாப் படையணியாகத் திகழ்கின்றது. இந்நிலையில், தற்போது மேற்படி பிரிவில் 40 குதிரைகள் காணப்படுகின்ற போதிலும் அவை தீவிரமாக கடமையாற்றும் வயதைக் கடந்துள்ளன. இவை அதிகளவான மக்கள் கூட்டத்தைக…

  6. [size=3][size=4]குடும்பமாக இந்தியா சென்றபோது அங்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் மேலதிக மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து திரும்பிச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த குடும்பங்கள் இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு இலங்கைப் பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டுமாயின் தத்தமது பிரதேச செயலகங்கள் அல்லது மாவட்ட மேலதிக பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் உரிய படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் தாய், தந்தையரின் பிறப்புச் சான்றிதழ், விவாகச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலப் பிரதிகள், குழந்தை பிறந்த வேளையில் பெற்றோர் இலங்கைப் பிரஜைகள் என்பதை உறுதிப்படுத்தும் பிரகடனப்படிவ…

  7. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவரை தாம் பின்வாங்கப்போவதில்லை என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. அத்துடன், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு, அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆராய்ந்து நாளையதினம்(10.10.2012) வேலைநிறுத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்குமெனவும் கூறியுள்ளது. இதேவேளை, இன்னமும் இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படாத நிலையில், நடைபெறும் பேச்சுவார்த்தையில் திருப்தியான முடிவு கிடைக்குமாயின் மட்டுமே தாம் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் தேவசிறி கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தில் முக்கிய கோரிக்கைகளில…

  8. ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்றார் துணைச் செயலர் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டமை தொடர்பில் ஐ.நா பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக ஐ.நாவின் துணைத் செயலாளர் நாயகம் அஜெய் சிப்பர் தெரிவித்தார்.வவுனியா மெனிக்பாம் முகாமை அரசு மூடியதற்கு ஐ.நா வரவேற்று அறிக்கைவிட்டது. ஆனால் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களை வைத்து சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை ஐ.நா எதிர்க்காதது ஏன் என யாழ்ப்பாண சிவில் பாதுகாப்புக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர் கள் தெரியப்படுத்தினர்.இதனைக் கேட்டறிந்த ஐ.நா. துணைச் செயலர் தாம் வெளியிட்ட அ…

    • 4 replies
    • 879 views
  9. இளைஞர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஷ 09 அக்டோபர் 2012 இளைஞர் யுவதிகளுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினரின் தன் நம்பிக்கையை பலப்படுத்த தலைமைத்துவ பயிற்சி முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர்களுக்கு கேணல் பட்டங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இளம் சமூகத்தினர் தீர்மானங்களை சுயமாக எடுக்கக் கூடிய வகையில் பயிற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தன் நம்பிக்கை இழந்த காரணத்தினாலேயே நான்கு தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி…

  10. சிறிலங்காவின் அடாவடி அமைச்சர்களில் ஒருவரான மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவின் தாக்குதலுக்கு இலக்கான இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் சுசென என்பவர் குற்றவாளி என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த இராணுவ மேஜர்,கைத்துப்பாக்கி மற்றும் பரிமாற்ற உபகரணங்களுடன் கெசினோ புள்ளியான வர்த்தகர் நளின் பொன்சோகவின் மெய்ப்பாதுகாவலராக நீண்ட காலமாகக் கடமையாற்றியமை விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை தற்போது இந்த இரா…

    • 0 replies
    • 361 views
  11. நீதிதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன தாக்கப்பட்டமை தொடர்பில் போலிக் குற்றவாளிகளைச் தேடிப்பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற கல்கிஸ்ஸ பகுதியில் கடந்த இரவு முதல் அதிகாலை வரை பொலிஸார் நடத்திய தேடுதலில் போதைப் பொருள் பாவனையாளர்களும் போதைப் பொருள் விற்பனையாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நால்வரைத் தெரிவு செய்து இந்த நால்வருமே மஞ்சுள திலகரத்னவைத் தாக்கியவர்கள் என்று காட்ட முயற்சிப்பதாகவும் இந்தச் செய்திகள் கூறுகின்றன. இந்த நால்வர் ஊடாகவும் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதல் கொள்ளையடிக்கும் நோக்குடன…

    • 0 replies
    • 426 views
  12. சிறிலங்காவின் தென்பகுதியில் கடலோரக் காவல்படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.இந்த மோதலை அடுத்து மீரிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள கடலோரக் காவல் படைமுகாமை அகற்றக் கோரி நேற்றுக்காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாத்தறை – கொழும்பு வீதிப் போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு துடுப்பாட்டப் போட்டியை பார்த்து விட்டுத் திரும்பிய இளைஞர்களுக்கும் மீரிஸ்ஸவில் உள்ள சிறிலங்கா கடலோரக் காவல்படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மதுபோதைகயில் இருந்த கடலோரக் காவல்படையினர் சுமார் 30 பேர் பொதுமக்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். மீரிஸ்ஸ பிரதேசசபைத் தலைவர் தலையிட்டு அமைதிப்படுத்த முயன்ற போது …

    • 0 replies
    • 471 views
  13. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அழுத்தங்கள் ஏதும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய அரசின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்லவுள்ள நிலையில், தமது பயணம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றத் தயார் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறவில்லை. அதை அரசியல் தீர்வாக அவர்கள் முன்னிறுத்தவும் இல்லை. மாகாணசபைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அதிகாரங்களைப் பறிக்கவே திவி நெகும சட்டமூலம் கொண்டு வரப்பட…

    • 1 reply
    • 770 views
  14. செப்டம்பர் 11 எப்படி ஏற்பட்டது? செப்டம்பர் 11 எப்படி ஏற்பட்டது? நீங்களே முடிவு செய்யுங்கள்.இங்கு ஒரு ஆதாரம் விமானம் புகுந்து கட்டிடம் ஒரேயடியாக தரைமட்டமாகாது. நடக்கும் ஆனால் ஓரிரு நாட்கள் எடுக்கும்.ஆகவே கட்டிட கலை நிபுணர்களின் கருத்துப்படி கீழே நான்கு மூலையிலும் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.இதோ நீங்களேபார்த்து முடிவு செய்யுங்கள்.தாக்குதல் நடந்த செய்திகள் ஜோர்ச் புஸ்ஸின் காதுகளில் சொல்லும் போது அவரின் முகபாவனை எப்படியிருக்கும்.....அமெரிக்கா ஆப்கான் மற்றும் ஈராக்கில் தரையிறங்குவதற்காக என்னவெல்லாம் செய்யும்..... இதில் கூடுதலான இழப்பை சந்தித்தவர்கள் யூதர்கள் தான் விமானங்கள் கூட தானியங்கியாக இயங்குமல்லவா?

  15. [size=5]கிழக்கு மாகாணசபை - தமிழர்களின் இருப்பை அச்சுறுத்துமா?[/size] சிவகுமாரன் நடராஜா கிழக்கு மாகாண சபை விவகாரம் அதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து நிர்வாகத்தினை அமைத்துக் கொண்டமையும், மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, நான்கு அமைச்சர் பதவிகள், சபைத் தவிசாளர் பதவி, பிரதி தவிசாளர் பதவி ஆகிய ஏழு பதவிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டமையும் கிழக்குத் தமிழர்களிடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எதிரானதொரு மனப்பாங்கினைத் தோற்றுவித்திருக்கிறது. கிழக்கு வாழ் முஸ்லிம்களின் அரசியலானது வட, கிழக்குத் தமிழர்களின் அரசியலுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பதை எழுதப்படாத அரசியல் விதி…

    • 2 replies
    • 808 views
  16. கடந்த ஆறாம் திகதியிலிருந்து காணாமற் போயிருந்த இளைஞன் - தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! [Monday, 2012-10-08 17:29:05] மாத்தறை, ஹிந்தட்டிய பிரதேசத்தில் தலை மற்றும் கைகள் இரண்டும் வெட்டி துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 26 வயதுடைய இளைஞர் ஒருவரது என மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்டுள்ள இளைஞர் கடந்த ஆறாம் திகதியிலிருந்து காணாமற் போயுள்ளதாக அவரது தாயாரால் மாத்தறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை களுத்துறை வடக்கு களுகங்கையில் மிதந்த பெண் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப…

  17. [size=4]இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு வடகிழக்கு நிலைமைகளை ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் மனித சபையின் குழுவினர் -அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பதில்ப் பேச்சாளர் ரவீனா சம்பசானி இதனை உறுதிப் படுத்தியுள்ளார். இலங்கை சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையைச் சேர்ந்த குழுவினர்- வடகிழக்கிலுள்ள மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு வருமாறு இலங்கை அரசால் விடுக்கப்பட்ட அழைப்புக் குறித்து எவ்வித கருத்துக்களையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[/size] ht…

    • 0 replies
    • 684 views
  18. [size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) 'ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்குள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். தவறும் பட்சத்தில் உங்கள் ஒலிவாங்கியை முடக்குவேன்' என்று என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணி சுவீகரிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மாவை எம்.பி தொடர்ந்து கருத்து தெரிவித்துக்கொண்டிருந்த போது, குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ், 'நான் தான் இந்த குழுவின் தலைவர். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் கருத்தைக் …

  19. நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது குண்டர் குழு தாக்குதல்! 07 அக்டோபர் 2012 நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்ஜுல திலகரத்ன மீது குண்டர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மஞ்ஜுல திலகரத்ன தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ சென்.தோமஸ் வித்தியாலத்திற்கு அருகில் வைத்து நான்கு பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குண்டர் கும்பல், மஞ்ஜுல திலகரத்னவைத் தாக்கிவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றுள்னர். நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கடந்த நாட்களில் அரசாங்க உயர்மட்டத் தரப்பினரின் பலத்த விமர்சனங்களுக்கு உ…

    • 5 replies
    • 510 views
  20. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரினால் இலங்கைஇந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் அதன் மூலமாகவே 13 ஆவது திருத்தமும் உருவாக்கப்பட்டது. அந்த 13 ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களையும் வாழ்வின் ௭ழுச்சி ( திவிநெகும) மூலமாக அரசாங்கம் அடியோடு அபகரித்து விட்டது ௭ன்று பொது ௭திர்க்கட்சிகளின் கூட்டணி தெரிவித்துள்ளது. இராணுவ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை, புலிகளும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர், யுத்தமும் இல்லை, உள்ளூர் இன்றேல் வெளியூரில் இருந்து ௭வ்விதமான இராணுவ அச்சுறுத்தல்களும் இல்லை அப்படியாயின் 2013 ஆம் ஆண்டுக்கென பா…

  21. [size=3][size=4]20 ரி.20 கிரிக்கட் போட்டியில் சிறிலங்கா அணி தேற்றதையடுத்து யாழ்.குடாநாடு முழுவதும் இளைஞர்கள் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.[/size] [size=4]இவ்வாறு வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த இளைஞர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ரி.20 உலக கிண்ண பேட்கள் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளின் நேரடி காட்சிகள் யாழ்.குடாநாட்டில் உள்ள பல பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ஏராளமான கிரிக்கட் ரசிகர்கள் பார்வையிட்டனர். சிறிலங்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப் ப…

  22. சிறிலங்காவில் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம், அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஜனநாயகத்தை பாதுகாக்கும் அமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை,பிரான்ஸ், கனடா,இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், சைப்பிரஸ், சுவீடன் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் முன்னால் ஆரப்பாட்டங்களை நடத்த இந்த அமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு இந்த நாடுகளில் வாழும் அனைத்துச் சிறிலங்கா பிரஜைகளையும் அந்த அமைப்பு கேட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்ட திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. http://thaaitamil.com/?p=34578

  23. TNA VS EPDP யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கூச்சல் குழப்பங்கள் மதிதியில் முடிந்தது:- 08 அக்டோபர் 2012 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கூச்சல் குழப்பங்கள் மதிதியில் நடந்து முடிந்துள்ளது. ஆளும் தரப்பின் பங்காளியான ஈபிடிபி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திரகுமார் மற்றும் அலென்ஸ்ர்pன் ஆகியோர் பிரசன்னமாகியிரு;தனர். கூட்டமைப்பின் சார்பில் அதன் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியமாக இன்று ஒன்று திரண்டு கலந்து கொண்டிருந்தனர். மாவை சேனாதிராசா சுரேஸ் பிறேமச்சந்திரன், விநாயகமூர்த்தி, சிறீதரன், சுமந்திரன் மற்றும் சரவணபவன் என அனைவரும் திரண்டிருந்தனர். யாழ்குடாநாட்டில் படை முகாம்களுக…

    • 2 replies
    • 796 views
  24. புலிகளின் நிலைப்பாட்டிலேயே தமிழ்க்கூட்டமைப்பு: பஷில் By General 2012-10-08 09:29:42 பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. யதார்த்தமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்க் கூட்டமைப்பு சகல கட்சிகளும் கலந்துகொள்ளும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கே வரவேண்டும் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ்க் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் ௭ன்று கூறமுடியாது. மேலும் தீர்வு விடயத்தில் புலிகள் அமைப்பு கொண்டிருந்த நிலைப்பாட்டையே தமிழ்க் கூட்டமைப்பும் கொண்டுள்ளது. இது தீர்வு முயற்சிக்கு ஆரோக்கியமானதல்ல ௭ன்றும் அவர்…

  25. [size=4]நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் இந்தப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.இதுதொடர்பாக அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.[/size] [size=4]நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.