ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து …
-
- 0 replies
- 232 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAR, 2024 | 12:47 PM யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை , வண்டுகள் மொய்த்த பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்களை சான்று பொருட்களாக மன்றில் முற்படுத்திய சுகாதார பரிசோதகர் அங்காடி உரிமையாளர்களுக்கு எ…
-
- 1 reply
- 599 views
- 1 follower
-
-
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது அதிக கொலைகள் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இப்பகுதிகளில் 20 ஆயுதம் தாங்கிய தாக்குதல் பொலிஸ் பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. இதேவேளை, அனைத்து கிராமிய சேவை பிரிவுகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட சமூக பொலிஸ் பிரிவை மேலும் பலப்படுத்தி அதன் ஊடாக தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்…
-
- 1 reply
- 739 views
- 1 follower
-
-
16 MAR, 2024 | 10:05 AM வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று சனிக்கிழமை (16) காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது. இப் பேரணியானது காலை 10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப…
-
- 5 replies
- 351 views
- 1 follower
-
-
'இலங்கையின் முதல் மதம் இந்துமதமே. இந்து மதம் நிலைகொண்ட பின்னரே இலங்கைக்குள் பௌத்தம் கொண்டுவரப்பட்டது. இதுவே வரலாற்று உண்மை' என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித் துள்ளது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு. 'வரலாற்றுக்கு முற்பட்ட இந்துமதம், எவ்வாறு பௌத்தத்தை ஆக்கிரமிக்க முடியும்?' என்றும் அந்த ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆல யத்தில், சிவராத்திரி வழிபாடுகளின்போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கண்டனங்கள் நாளுக்குநாள் குவிந்துவரும் நிலையில், கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு விடுத் துள்ள கண்டனக் குறிப்பு தனித்துவமானது என்ப துடன், 'குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போன்று' அமையவேண்டியதாகவும் இருக்கின்றது. ஒரு கத்தோலிக…
-
- 1 reply
- 486 views
-
-
புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தில் நெருக்கடி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணி தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமும் அண்மையில் கட்சித் தலைமையகத்தில்…
-
- 0 replies
- 684 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296023
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைவது மீண்டும் இந்திய மத்திய அரசால் தாமதிக்கப்பட்டிருக்கின்றது. விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாந்தன், தன் விடுதலையை அனுபவிக்காமல் -தன் உறவுகளைச் சந்திக்காமல் இவ்வுலகை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் - ஏனைய மூவரும் விடுதலை ஏக்கத்துடன் இன்னமும் இந்திய சிறப்புத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கான கடவுச்சீட்டு வழங்கும் செயன்முறைகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் பின்னடிப்பால் இழுபறி நிலையில் இருக்கின்றன. முருகன், ரொபேர்ட் பயஸ் ஆகியோர் 1…
-
- 0 replies
- 460 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAR, 2024 | 10:37 AM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று திங்கட்கிழமை (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக சேவைக்கால கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் தமக்கு வழங்குவதில்லை எனத் தெரிவித்து மேலதிக சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர். இதே பதவி நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஏனைய வைத்தியசாலையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தமக்…
-
- 0 replies
- 639 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி - வெடுக்குநாறி சம்பவங்கள் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 18 MAR, 2024 | 10:43 AM வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்வெளியிட்டுள்ளது இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்கா அரசும் அதன் இராணுவஇ போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள் நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட …
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
18 MAR, 2024 | 10:50 AM புத்தளம் மாவட்டத்தில் 'தலக்கூரா' என மக்களால் அழைக்கப்படும் சுமார் 5 அடிக்கு அதிக நீளமுடைய கொம்பன் யானை நேற்று (17) மாலை மற்றுமொரு யானையுடன் உணவு உட்கொண்ட காட்சி கமராவில் பதிவாகியது. புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மயிலாங்குளம் மாந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை கொம்பன் யானை மற்றுமொரு யானையுடன் மேய்ந்துகொண்டிருந்தது. இந்த கொம்பன் யானை கடந்த காலங்களில் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட தேவனுவர காட்டுப் பகுதியில் நடமாடிய நிலையில், தற்போது உணவுக்காக பல கிலோமீற்றர் சென்று மயிலாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்து உணவுகளை உட்கொண்டு வருகிறது. இதன் தந்தம் தரையில் உரசுமளவு சுமார்…
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
வடக்கில் கடந்தாண்டு மாத்திரம் வெளிநாடு அனுப்புவதாக 254 கோடி ரூபா மோசடி வவுனியாவிலேயே அதிக முறைப்பாடுகள்! ஆதவன். யாழ்ப்பாணம், மார்ச் 18 வடக்கு மாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மாத்திரம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடி செய்யப்பட்ட சம்பவங்களில் 139 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறைப்பாடுகளின் அடிப்படையில் 254 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பொலிஸ் பணிமனையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலிலேயே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்தில் 30 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 33 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்…
-
- 0 replies
- 282 views
-
-
Published By: VISHNU 17 MAR, 2024 | 08:25 PM பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களுக்கு போலியான கடவுச்சீட்டு தயாரித்தார்கள் என்ற சந்தேகத்தில் குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிரதிக் கட்டுப்பாட்டாளரும் முன்னாள் கட்டுப்பாட்டாளரும் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு போலிக் கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹன பிரேமரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://www.virake…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 04:14 PM யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தியமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பொது சுகாதார பரிசோதகர், வெதுப்பகத்திற்கு சீல் வைக்க கட்டளையிடக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார் . விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிமன்றம் வெதுப்பகத்தில் திருத்த வேலைகளை முடித்து , சுகாதார பரிசோதகர் அதனை உறுதிப்படுத்தும் வரையில் வெதுப்பகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178955
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 03:58 PM காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டையில் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் மீன் பிடி தொழிலுக்கு சென்றவர் குளத்தில் மீன் பிடிப்பதற்காக கட்டு வலையினை கட்டிவிட்டு அங்கிருந்த கட்டிலில் உறங்கி கொண்டிருந்த வேளை காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறிவினர்கள் தெரிவித்துள்ளதுடன் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/1…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 12:00 PM தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதியை சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வவுனியாவில் தெரிவித்துள்ளார். தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கை சேர்ந்தவர்களும் இடம்பெறவேண்டும் தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயார் அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒருபகுதியாகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 1 reply
- 587 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 01:10 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவ…
-
- 4 replies
- 411 views
- 1 follower
-
-
ரயில் இருக்கைகளுக்கான முன்பதிவுகள் இன்று முதல் ஒன்லைன் மூலம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்லைன் மூலம் ரயில் நிலையங்களின் ஊடாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார். இதன்படி, பயணிகள் பயணிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், இன்று காலை 7 மணிமுதல் அதற்கான பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295697
-
-
- 4 replies
- 835 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 03:18 PM தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பளைப் பகுதியை 21 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதால் தான் தலையில் படுகாயம் ஏற்பட்டது என மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/178949
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 02:57 PM சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டுக்கு பொலிஸார் விரைந்திருந்தனர். பொலிஸாரை கண்டதும் மாட்டை இறைச்சியாக்கி கொண்டிருந்த நபர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதனை அடுத்து இறைச்சியை மீட்ட பொலிஸார் , வீட்டின் உரிமையாளரான தப்பியோடியவரின் தாயாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீத…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 02:04 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தேச தேசிய தேர்தல்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமானதாக அமையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் இடம்பெறுமேயானால் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தனித்து பொதுஜன பெரமுன களமிறக்கும் பட்சித்தில் அவர், ராஜபக்ஷ ஒருவராக இருக்க மாட்டார் என்ற ஒருமித்த இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. ஜனா…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு! அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று (16) எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இன்று மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் இவ்வாறு அவர் பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -கிளிநொச்சி நிருபர் சப்தன் https://tamil.adaderana.lk/news.php?nid=185232
-
-
- 3 replies
- 413 views
-
-
அரசாங்கம் 1500 பக்க ஆவணங்களை மறைத்துவிட்டது - மர்ம லொறியொன்றை சோதனையிட வேண்டாம் என தற்போதைய பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார் - கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் புதிய குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 11:27 AM அரசாங்கம் திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆறு சிடிக்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வழங்கியது நாங்களும் சட்டத்தரணிகளும் அதனை ஆராய்ந்தோம் 70,000 பக்கங்கள் உள்ளன எனினும் அரசாங்கம் 1500 பக்கங்களை எங்களுக்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெர…
-
- 1 reply
- 265 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 10:28 AM தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது. இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் செயலாளராக ஆனந்த சங்கரி தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்படவுள்ள கட்சியின் மாநாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/178916
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 03:14 PM வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர். மகாசிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை குறித்த 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசா…
-
-
- 10 replies
- 757 views
- 1 follower
-