Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ மாணவர் எழுச்சி நாள், நோர்வே ஒஸ்லோ நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் இளையோர் நடுவத்தின் ஆரம்ப நாளாகவும் இது அமையபெற்றிருந்தது. நிகழ்வினை முல்லை நிசாந்தன் தொகுத்து வழங்க, பொதுச்சுடறேற்றலைத் தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வின் பொதுச்சுடரினை சட்டவாளர் ஸ்டெஇனர் ஸ்டென்வாக் ஏற்றிவைக்க, தியாகி பொன்.சிவகுமாரனின் திருவுருவபடத்திற்க்கான மலர்மாலையினை நோர்வே தமிழ் இளையோர் நடுவ இணைப்பாளர் திரு. மேனன் அணிவித்து ஈகைச்சுடரினையும் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து, இதே நாளில் வீரச்சாவினை தழுவிய மாவீரர்களான லெப்.கேணல் அன்பு/அம்மா, லெப்.கேணல் சாள்ஸ், லெப்.கேணல் டேவிட் ஆகியோரின் …

  2. கனேடிய அரசாங்கம் நிதியுதவி அளித்தது:- இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினரின் தரவுத் தள வலையமைப்புடன் இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள தரவுத் தளம் இணைக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட, காணாமல்போன பயண ஆவணங்கள் பற்றிய தரவுகள், சர்வதேச குற்றவாளிகள் பற்றிய தரவுகள், புகைப்படங்கள், கைவிரல் அடையாளங்கள் போன்ற பல்வேறு தரவுகள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது. இன்டர்போலுடன் இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள தரவுத் தளத்தை இணைக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. தென் ஆசியாவிலேயே முதல் முறையாக இவ்வாறான திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய கனே…

  3. பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு தற்போது அவரது பணிகளை செய்ய முடியாத வகையில் சுகயீனமுற்றிருப்பதால், அவருக்குப் பதிலாக கோத்தபாய ராஜபக்‌ஷவை அந்தப் பதவிக்கு நியமிக்க மகிந்தர் தீர்மானித்துள்ளார். டி.எம். ஜயரத்ன அண்மைக்காலமாக சிங்கப்பூர் மௌவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ள போதிலும் அவருக்கு தமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என மருத்துவ நிபுணர்கள் மகிந்தருக்கு அறிவித்துள்ளனர். அமைச்சரவையில் மாற்றம் செய்ய மகிந்தர் அண்மைக்கால பலமுறை முயற்சித்தார். எனினும், பிரதமர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதில் ஏற்பட்ட நெருக்கடியால் அந்தத் தீர்மானத்தை அவர் தொடர்ந்து ஒத்திவைத்து வந்தார். எனினும், அடுத்த நடத்தத் திட்டமிட்டுள்ள மூன்ற…

  4. யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இடங்கள் தவிர்ந்து, ஏனைய இடங்களில் உள்ள ஆயிரத்து 33 காணிகள் மற்றும் வீடுகளை முப்படையினரும் சுவீகரிக்கவுள்ளனர். இதில் 29 காணிகளே அரச நிலங்கள். ஏனையவை தனியார் பொதுமக்களின் காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் தனியார் மற்றும் அரச காணிகளில் நிலைகொண்டுள்ளனர். தற்போது தாம் நிலை கொண்டுள்ள நிலங்களைத் தமக்கே வழங்க வேண்டும் என்று கோரி சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். கடந்த டிசெம்பர் மாதம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்களுக்கு பிரதேச செயலர்கள் உரிய பதில் வழங்காததைத் தொடர்ந்து, வடமாகாண ஆளுநரினால் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் க…

  5. யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள இராணுவம் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்த யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அங்கு படை முகாம்களை அமைப்பதற்கென அரச காணிகளை இராணுவம் கையகப்படுத்தவுள்ளமையை ஒத்துக்கொண்டார். ஆனால் தனியார் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் இராணுவத்திடம் கிடையாது என்று உறுதியாகக் கூறினார். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் இவ்வேளையில், யாழ். நகர்ப்புறங்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் விரைவில் முற்றாக அகற்றப்படும் என்ற விடயத்தையும் அவர் “சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார். அத்தோடு, சிவி…

  6. சிறிலங்காவானது மற்றுமொரு 1983 யூலை கலவரத்துக்கு வழிவகுக்கின்றதா? முஸ்லீம் மக்களின் வணக்கத் தலங்களான பள்ளிவாசவல்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் சிறிலங்காவில் மற்றுமொரு இனக் கலவரத்தை தூண்டுவதற்கு காரணமாக அமையும் என்கின்ற அச்சம் அதிகரித்துள்ளது. இவ்வாறான கொந்தளிப்பின் மத்தியில், சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய கல்விக் கூடங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதானது முஸ்லீம் மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையானது விசனத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும். அனுராதபுரம், தம்புள்ள, குருநாகல, மற்றும் தற்போது கொழும்பு, தெகிவளை போன்ற …

  7. யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் புதிய மத வழிபாட்டிடங்களை அமைக்கும் போது மாநகர சபையின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்று யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார். இலங்கை பௌத்த சாசன, மதவிவகார அமைச்சின் அண்மைய சுற்றறிக்கை ஒன்றின் பிரகாரமே இந்த அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளதாக யாழ் மேயர் கூறியுள்ளார். புதிதாக வரக்கூடிய மத வழிபாட்டிடங்கள், குறித்த பிரதேசத்தின் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே, அப்படியான மத நிறுவனங்களை அமைக்கும் போது உள்ளூராட்சி சபையின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்று அரசாங்க சுற்றறிக்கை கூறுவதாகவும் அவர் கூறினார். அனைத்து மத நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், ஏற்கனவே இது குற…

  8. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் காணாமற்போனதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள படி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சாட்சியமளித்தோரிடம் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முறைப்படியான இந்த வேண்டுகோளை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்தால், மூன்றாவது தரப்பின் ஊடாக இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறீலங்காப் பயணத்துக்கு முன்பத…

    • 1 reply
    • 583 views
  9. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வழங்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட உணவகம் ஒன்றில் காசாளராக கடமை புரியும் நபர் ஒருவரால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த உணவக களஞ்சியசாலைக்கு அழைத்துச் சென்ற நபர் சிறுமியை இருமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%…

    • 0 replies
    • 721 views
  10. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில முக்கிய இடங்களுக்குத் தமிழ் மக்கள் செல்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளால் அரிசி ஏற்றி வரப்பட்ட போது கரையொதுங்கிய 100 மீற்றர் நீளமான கப்பல் ஒன்று காணப்படுகிறது. வன்னிப் பகுதிகளுக்கு வருகை தரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் இதனைப் பார்ப்பதற்கு முண்டியடிப்பதை காண முடிகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இதனைப் பார்வையிடச் செல்வதை ஏனோ இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை. முஸ்லிம் மக்கள் கூட இதனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில் தமிழ் மக்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்துகின்றமை ஏன் என்று தெரியவில்லை. இதில் என்ன பாரபட்சம் என்று கேட்கின்றனர் தமிழ் மக்கள். மேலும் இந்தக் கப்பலை …

    • 0 replies
    • 512 views
  11. முள்ளிவாய்க்காலைப் பொறுத்தவரை அங்கே என்ன தான் நடக்கிறது என்ற ஏக்கங்கள் பல தமிழர்கள் மனதில் உள்ளது. அப்பகுதிக்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அப்பகுதியை சல்லடைபோட்டு அங்குலம் அங்குலமாக் இராணுவத்தினர் தேடிவருகின்றனர் என்பதே உண்மையாகும். யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிய பிற்பாடும், ஆனந்தபுரம், சாலை, வலைஞர்மடம், புதுமாத்தளான், ரெட்டமுள்ளிவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதியை இராணுவத்தினர் தொடர்ந்தும் கடும் தேடுதலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இங்கே காணப்படும் மனித எலும்புகளை உருக்கி உக்கவைக்க சில திரவங்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர். இதனைத் தவிர, விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த இராணுவத் தளபாடங்கள்…

    • 0 replies
    • 457 views
  12. மே 30, 2012 உலகளாவிய தமிழ் இளையோர் அவை வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக ஓர் அணி பங்கேற்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் உலகளாவிய தமிழ் இளையேர் அவை பெருமை அடைகிறது. சர்வதேச அரங்கில் இடம்பெறும் ஒரு காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டி யூன் 2012, எர்பில், குருதிஸ்தான் (வட இராக்கு) இல் இடம்பெறவுள்ளது. FIFA உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் அனுமதி பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறப்படாத தேசிய இன மக்களுக்காகவே வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி Nouvelle Fédération-Board (N.F. Board) ஆல் நடாத்தப்படுகிறது. காற்பந்தாட்டதில் தங்கள் திறமைகளை தமிழீழ விளையாட்டுவீரர்கள் புலம்பெயர் நாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். …

  13. கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் கொழும்பில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் அடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வரும் அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கிராமப் புறங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்குக் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் தொழில் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வரும் ஒரு கும்பலே இவர்களைக் கொழும்பில் சிறைவைத்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமைப்பட்ட குடுங்களிலுள்ள இளம் யுவதிகளே இவ்வாறு ஏமாற்றப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் பலாத்கார பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தொழில் வாய்ப்புப் பெ…

  14. அடையாளம் காட்ட முடியாத கொடும்பாவி ஒன்றை யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் எரியூட்டியுள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றது. சம்பள உயர்வு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும்படி நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் பங்கெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ஒருவரையே தமது கொடும்பாவி குறிப்பதாகத் தெரிவித்தனர். சம்பள உடன்பாட்டுச் சுற்றரிக்கையையே தமது கொடும்பாவி உருவகப்படத்துவதமாக ஊழியர் சங்கத் தரப்பு க…

  15. திருகோணமலை - மூதூர் பகுதியில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பச்சநூர் மலையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பௌத்த நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. சேருவெல சரணகித்தி நாயக்க தேரரின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த பௌத்த நிலையத்தை அமைப்பதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தத் தகவலை மாத்தறையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறிலங்க பாதுகாப்புச்செயலரே வெளியிட்டுள்ளார். தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடமான பச்சநூர் பிரதேசத்தில் உள்ள மூன்றாம்கட்டை மலையிலேயே இந்த பௌத்த நிலையம் அமைக்கப்படவுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கில் அழிக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மற்றும் வழிபாட்டு இட…

  16. சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி சிறிலங்கா அரசிற்கு மேலும் கிலியைக் கிழப்பியுள்ளது. அதற்காக பயண அனுமதி வேண்டுகோளையும் விடுத்துள்ளது மனித உரிமைகள் குழு. முறைப்படியான இந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தால், மூன்றாவது தரப்பின் ஊடாக இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் வட்டாரங்கள் கருதியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்காவிற்கான பயணத்திற்கு முன்னர் உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணி…

  17. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரனைகளை முன்னெடுக்குமாறு பிரத்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய பிரதமருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியதாக பிரிதானியப் பிரதமரின் பேச்சாளர் கிராக் ஒலிவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பானது மகிழ்ச்சியான சூழலில் இடம்பெற்றதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட…

  18. யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இடங்கள் தவிர்ந்து, ஏனைய இடங்களில் உள்ள ஆயிரத்து 33 காணிகள் மற்றும் வீடுகளை முப்படையினரும் சுவீகரிக்கவுள்ளனர். இதில் 29 காணிகளே அரச நிலங்கள். ஏனையவை தனியார் பொதுமக்களின் காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் தனியார் மற்றும் அரச காணிகளில் நிலைகொண்டுள்ளனர். தற்போது தாம் நிலை கொண்டுள்ள நிலங்களைத் தமக்கே வழங்க வேண்டும் என்று கோரி சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். கடந்த டிசெம்பர் மாதம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்களுக்கு பிரதேச செயலர்கள் உரிய பதில் வழங்காததைத் தொடர்ந்து, வடமாகாண ஆளுநரினால் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொ…

    • 0 replies
    • 621 views
  19. பாவிகள் செல்லும் இடமெலாம் கல்லும், முள்ளும், படுகுழியும் என்று சொல்வார்கள். இது ஈழத் தமிழ் அகதிகளுக்கு மிகவும் பொருத்தம். ஈழத் தமிழர்களின் வேதனைகளையும் வலிகளையும் சர்வதேச சமூகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் ஏன் நாடு விட்டு நாடு தாவி ஓடுகிறார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஜரிக்கன் தமிழீழ மக்கள் பாதுகாப்பான சூழல் ஒன்றைத் தேடி இலங்கையில் இருந்து தொடர்ந்து வெளியேறுகிறார்கள் என்று 2010ம் ஆண்டு தெரிவித்தார். மேலும் அவர்களுடைய பாதுகாப்பான வெளியேற்றத்திற்கும் புகலிடக் கோரிக்கைக்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அவர் சொன்னார். இது வரை இந்த நிலவரத்தில் மாற்றம் ஏற்படவில்லை. வடகிழக்கில் தமிழ் மக்கள் இர…

    • 0 replies
    • 559 views
  20. தமிழீழ இன அழிப்பின் ஒரு அங்கமாய், எமது விடுதலைக்காகப் போராடிய போராளிகளை, சிங்கள இராணுவத்தினர் கைகளைக்கட்டி வைத்துச் சுட்டுக்கொலைசெய்யும்காட்சிப்பதிவுகள் இன்னமும் வெளியாகியபடியே உள்ளன. எமது இனத்தின் மீது சிங்களம் ஏவிவிட்ட கோரத்தின் பதிவுகளாக எம்மனதில் இக்காட்சிகள் நிழலாடுகின்றன . இவை நிச்சயமாக எமது மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டியவைதான். ஆனாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்.விட்டு விட்டு, மீண்டும் மீண்டும் இவ்வாறான காட்சிகள், பகுதி பகுதிகளாக வெளியிடப்படுவது இன்னுமொரு சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னரும்கூட, வலிகளோடு வாழ்ந்துவரும் எமதினம், இன்னமும் போராடி விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையோடு உலகமெங்கும் குரல் எழுப்புகிறது. இதற்குச் …

    • 0 replies
    • 819 views
  21. யேர்மனியில் Berlin மற்றும் Hagen நகரங்களில் தியாகி பொன் சிவகுமாரனின்நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள், பொதுமக்கள், தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். அத்தோடு Hagen நகரில் ஈழத்தமிழர்களின் சிறுவர்கள் அவல நிலை குறித்து யேர்மனிய மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் “அவர்களுக்கும் ஆசைகள் உண்டு” எனும் நிகழ்வும் நடைபெற்றது. அங்கே இவ் விடையம் சார்ந்த துண்டுப்பிரசுரம் மக்களுக்கு வழங்கப்பட்டு இளையோர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படு…

    • 0 replies
    • 532 views
  22. கிளிநொச்சி நகரத்தில் சிறீலங்காப்படையினரால் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் பௌத்த விகாரைகளையும் புத்தர்சிலைகளையும் அரசாங்கமும் படையினரும் அமைத்து வருவதாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் கிளிநொச்சியிலும் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. கிளிநொச்சியில் வெண்புறா செயற்கைக் கால் அமைக்கும் வெண்புறா நிறுவனம் இயங்கிய இடத்தில் ஏற்கனவே ஒரு பிரமாண்ட புத்தர்சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது அவ்விடத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி நகரத்தில் 50ற்கு மேற்பட்ட இடங்களில் முதன்மையாக நிலைகொண்டுள்ள படையினர் தங்கள் முகாம்களில் பாரிய பௌத்த விகாரைகளை அமைத்துள்ளார்கள் இன்னிலையில் மேலும் மேல…

    • 0 replies
    • 684 views
  23. தமிழீழமே தனது ஒரே நோக்கம் எனவும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் ஆதரவுடன் ஈழ நாடு உருவாக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்தியாவில் தெரிவித்துள்ளதாக அரசசார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுக் கூற அரசாங்கம் இடமளிக்கவில்லை. நாங்கள் ஈழ நாட்டை ஆரம்பிப்போம். அது வெற்றியளிக்கும். எமது தனி ஈழ நோக்கத்தை கைவிட மாட்டோம் என அவர் கூறியுள்ளார். பிரபாகரன் கியூபாவை மதித்தார். எனினும் கியூபா இலங்கைக்கு உதவியது. ஈழத்தை உருவாக்க முடியாது என நினைக்க வேண்டாம் என தெரிவித்துள்ள சிறிதரன் வடக்கில், இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளதாக அரசசார்பு இணையத்தளம் மேல…

    • 5 replies
    • 1.5k views
  24. யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் கலந்துகொண்டார். இந்தநிகழ்வில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் புகைப்படங்கள் சகிதம் அமைச்சரை சுற்றிவளைத்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரி கண்ணீருடன்க தறியழுதனர். யுத்தத்தின் …

  25. படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களான டி.சிவராம் மற்றும் ஐ.நடேசன் ஆகியோரின் நினைவாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நினைவு தினக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பா.அரியநேத்தின் உட்பட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநடுவில் கூட்டத்திலிருந்து திடீர் வெளிநடப்புச் செய்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட உரைக்கு அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் வெளிநடப்புச் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் தெரியவந்திருப்பதாவது: கொழும்பு, தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.