Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆலோசனையின் பேரில் நடத்தப்படும் ”ரந்திவ” பத்திரிகை அலுவலகத்திற்கு கடந்த 30ஆம் திகதி பிற்பகல் திடீரென புகுந்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் பத்திரிகை ஆசிரியரிடமும், செய்தி ஆசிரியரிடமும் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகிய குறித்த பத்திரிகையில் ”ஹிருனிகா பிரேமச்சந்திரனைக் கொலை செய்ய சூழ்ச்சி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தலைப்புச் செய்தி தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. இந்தச் செய்தியின் ஆதாரம் என்ன என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர் கேள்விகளை எழுப்பிய போதிலும், இதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவை தமக்கில்லையென ஆசிரியர் இருவரும் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து இரண்டு ஆசி…

  2. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்காது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் வெளிப்பாடாகவே வெளிநாட்டு அழுத்தங்களும் வருகின்றன. என்றாலும் என்னதான் அழுத்தங்கள் வந்தாலும் அவற்றுக்குத் தலைசாய்க்காது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலை…

  3. மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அய்யா! கவனத்திற்கு நடந்து முடிந்த தொழிலாளர்தின பேரணியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுச்சிமிகு கூட்டத்தில் ஐக்கியதேசியக் கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஒன்றுபட்டு ஒரே மேடையில் தோன்றியமையானது காலத்தின் கட்டாயத்தில் நடைபெற்ற ஒரு நிகள்வாக கருதலாம்.இந்த பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துகொண்டு உழைக்கும் தொழிலாளர்களுக்காய் குரல்கொடுத்தமையானது வரவேற்க்கத்தக்க விடயம். ஆனால் அதில் நீங்கள் உரையாற்றும்போது குறிப்பிடப்பட்ட ஒருசில விடயங்கள் நீங்கள் வெளியிட்டகருத்துக்கள் சுதந்திர ஈழம் மலரும் என்ற கனவுகளுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என்னையும் எ…

  4. சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு வெளிநாட்டவர்களின் நிகழ்வுடன் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிரான்சு பாரிஸ் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.பாரிஸ் நகரின் Denfert Rochereaum பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து Bastille நினைவுத் தூபிப் பகுதியைச் சென்றடைந்தது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர். பிற்பகல் 2 மணியளவில் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு பட்ட இனங்களினதும் கட்சிகளினதும் ஒன்றிணைந்த அணிவகுப்புக்கு மத்தியில் தமிழ் மக்களின் பேரணியும் இடம்பெற்றது. இம்முறை பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறும் காலமாகையால் பிரான்சு நாட்டின் கட்சி…

    • 0 replies
    • 538 views
  5. இராணுவமே வெளியேறு! எங்கள் நிலத்தை நாங்கள் ஆளவேண்டும்: கிளிநொச்சி மேதினக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு நாங்களும் வரிப்பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அந்த வரிப்பணத்தின் மூலம் எமது பிரதேசத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யப்படுவதில்லை, இன்னமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த மக்களுடைய நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்து கொண்டு, மீள்குடியேற விடாமல் அடாவடி புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நாங்கள் இந்த மே தினத்தில் ஒரு அறைகூவலை விடுக்கின்றோம். இராணுவமே வெளியேறு, யுத்தம் நிறைவடைந்து விட்டது. நாங்கள் எங்கள் நிலத்தை ஆழ வேண…

  6. யாழ். உரும்பிராய் பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வயல் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினர் மீட்டுள்ளார்கள். இதனையடுத்து இவ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர். குறித்த சடலம் இதுவரை இனம்காணப்படவில்லை என்றும் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=17853

    • 0 replies
    • 463 views
  7. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ள இச்சந்திப்பில் இலங்கையின் போருக்குப் பிற்;பட்ட நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் குறித்து கவனம் கொள்ளப்படவுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வை வழங்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்திருந்ததாக கொழும்பிலும், புதுடில்லியிலும் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாறு எந்த உறு…

  8. அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறி பொவன் இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார். சிறிலங்காவில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு ஆட்கள் கடத்தப்படுவதைத் தடுத்தல் உள்ளிட்ட குடிவரவு விவகாரங்கள் குறித்து அவர் சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்தநிலையில் சிறிலங்கா செல்லும் அவுஸ்ரேலியா குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன், அங்குள்ள மனிதஉரிமைகள் நிலை குறித்து சிறிலங்கா அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளான மனிதஉரிமைகள் கண்காணிப்பகமும், மனிதஉரிமைகள் சட்ட நிலையமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. சிறிலங்கா அதிகாரிகளுடனான பேச்சுக்களின் போது மனிதஉரிமைகளுக்கு மதிப்பளித்தல், மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுதல், குறித்தும் கலந்துரையாடப…

  9. சிறிலங்காவில் மனித உரிமை தொடர்பாக பிரிட்டனின் வெளியுறவு செயலகம் கருத்தினை வெளியிட்டது தெரிந்ததே. இந்த அறிக்கையில் சிறிலங்காவில் மனித உரிமை நிலமை கவலையளிப்பதாக கூறி இருந்தது. ஆனால் பிரிட்டன் இந்த கருத்துக்களை எந்த அடிப்படையில் கூறியது அவர்களுக்கு என்ன அருகதை உள்ளது என சிறிலங்காவின் வெளியுறவு துணை அமைச்சர் கேள்வி கேட்டுள்ளார்.இலங்கையின் அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தவும், போர் காலத்தில் இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்தவும் அரசு முன்வர வேண்டும் எனவும் பிரிட்டன் கோரியிருந்தது. ஆனால் அரசு தாங்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதன் அடிப்படையில் பிரிட்டன் கூறுகிறது…

    • 1 reply
    • 1.2k views
  10. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச நல்லூர்.. ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்…

    • 1 reply
    • 3.2k views
  11. http://youtu.be/lKkxVxHQUX8 ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து தொழிலாளர் தின ஊர்வலத்தையும், கூட்டத்தையும் நடத்தும் கூட்டமைப்பின் நிலை குறித்து தான் கவலையடைவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கினிகெத்ஹேனையில் நடைபெற்ற தொழிலாளர் தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச ;செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் கினிகெத்ஹேனையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்…

    • 3 replies
    • 681 views
  12. முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகளை இனப்படுகொலையாக அறிவியுங்கள்; ஹிலாரிக்குத் தொலைநகல்கள் முள்ளிவாய்க்கால் படு கொலைகளின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, முள்ளிவாய்க் காலில் நிகழ்ந்த படுகொலைகளை இனப் படுகொலையாக அங்கீகரித்தும், வன்னி மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன்னுக்கு தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மே 18 நினைவு நாள் அமெரிக்க ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்தத் தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர சுபா சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். ரு…

    • 0 replies
    • 591 views
  13. யாழ்,மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லூயிஸ் பியட் ஆகியோருக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று காலை 10 மணியளவில் யாழ்,மாவட்ட செயலகத்தில் இவ் சந்திப்பு இடம்பெற்றுள்ளது இச் சந்திப்பின் போது தமிழ் மக்களுடைய மீள்குடியோற்றம், உயர்பாதுகாப்பு வலயங்கள், வாழ்வாதார உதவிகள், கால்நடை வளர்ப்புக்கள் மற்றும் மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகளின் இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பாக அரச அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் டச்சுக்கால கட்டிடங்கள் சேதமாகியுள்ளதாகவும் அதனை பாதுகாப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கையினை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார். அவ்வாறு அது சேதமாக்கப்படுவது குறித்து வி…

  14. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவை ஐ.நாவிலேயே சிறிலங்கா பழிதீர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கான போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா வாக்களித்துள்ளது. நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியில் நிறுத்தப்பட்டிருந்தார். ஐ.நா பொதுச்சபையில் அண்மையில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. இதன்போது இந்தியா நிறுத்திய நீதிபதி தல்வீர் பண்டாரிக்கு எதிராக சிறிலங்கா வாக்களித்துள்ளது. பிலிப்பைன்ஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கே சிறிலங்கா ஆதரவளி…

    • 8 replies
    • 2.2k views
  15. தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி பதுமன் எனும் சிவசுப்பிரமணியம் வரதானந்தனை இராணுவ முகாம்களை தாக்கியமை மற்றும் இராணுவத்தினரை கொலை செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டின் பெயரில் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மேல்நீதிமன்ற பதில் நீதிபதி எம். இளஞ்செழியன் இன்று செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை விடுத்தார். வரதனன் சார்பில் வழக்குரைஞர் எவரும் ஆஜராகவில்லை. அவரை மே 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார். http://thaaitamil.com/?p=17782

    • 0 replies
    • 748 views
  16. காஞ்சி மக்கள் மன்றம் என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ,பின்தங்கிய வகுப்பு மக்களுக்கு பெண்களால் நடத்தப்படும் ஒரு சேவை அமைப்பாகும். இதன் தலைவி மகேஷ் அவர்கள் ஆவார். இவர்கள் பல சமுதாய விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாத்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன் இன்னுயிரை ஈந்த செங்கொடி என்ற பெண் இந்த காஞ்சி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கொடி கிராமத்தில் அமைந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்திற்கு 27-04-12 அன்று காலை 9.50 க்கு ஒரு நான்கு சக்கர வண்டி வந்தது (நீல நிற ஸ்கார்பியோ பதிவு எண்…

    • 0 replies
    • 859 views
  17. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லண்டன் மாநகரில் நேற்று (01) பல்லின மக்கள் கலந்து கொண்ட மே தினப் பேரணியில் பிரித்தானிய தமிழர் பேரவை கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை எடுத்துக் காட்டியது. சாதகமற்ற மழையுடன் கூடிய கால நிலை மற்றும் வேலை நாளாக இருந்தும் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் இப் பேரணியில் கலந்து கொண்டு, ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் மடிக் கணணி(lap- top) மற்றும் smart phone என்பவற்றை பாவித்து பல்லின மக்களின் மத்தியில் இணையத் தள மின் மனுவிற்கான கையெழுத்துப் பெறும் வேட்டையில் உற்சாகமாக ஈடுபட்டனர் . சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையினை முன் வைத்து கவனத்தை சிதறவிடாது தொடர்சியாக பிரித்தானிய தமிழர்…

    • 0 replies
    • 560 views
  18. சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த மேலும் இருவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஆட்களை கப்பல் மூலம் கடத்துவதில் தொடர்புபட்டிருந்ததற்காக ஒருவரையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதற்காக மற்றொருவரையும் கனடாவை விட்டு வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த 492 அகதிகளில் இதுவரை 19 பேர் கனடாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அறிவிக்…

    • 0 replies
    • 553 views
  19. முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – குளத்தூர் மணி அவர்கள் வழங்கிய செவ்வி. http://thaaitamil.com/?p=17711

    • 0 replies
    • 497 views
  20. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, மானம் உள்ள நபர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்தனர். குறைந்தபட்சம் 5 நபர்கள் , தங்களது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்துக்கொண்டு மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியவாறு ஓடிச் சென்றனர்.

    • 12 replies
    • 2.3k views
  21. தமிழீழப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு - தமிழீழ மக்களுக்கும் போராளிகளுக்குமான நினைவேந்தல் மே,பதினேழு இயக்கம் மூன்று ஆண்டுகள் முடிந்தும் இன அழிப்பு தடுக்கப்படவில்லை தமிழீழத்தில். சர்வ தேசம் தனது சட்டங்களை விடுதலைப் போரில் நின்று தமிழர்களை காத்த போராளிகளுக்கு எதிராக பயன்படுத்தி அந்த மக்கள் கொன்று குவிக்கப்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் நின்று துணை செய்து தற்போது தனது சுய லாபங்களுக்காக இலங்கையுடனும் இலங்கைக்கு எதிரான அணி என்றும் பிரிந்து நிற்கிறது. இரு அணிகளுமே தமிழர்களின் விடுதலைப் போரினை அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தனது நகர்வுகளில் தமிழர்களுக்கான உரிமையைப் பற்றிய குறிப்புகளை தவிர்த்தே வருகின்றன. தமிழீழத்தமிழர்கள் தங்களது அரசியல் கோரிக்கைகளை முன்னெடுப்பதி…

  22. தேர்தல்கள் மூலம் அரசாங்கத்தை மாற்றும் உரிமை பொது மக்களுக்கு உள்ளது என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். ஜனநாயக ரீதியில் தேர்தல்களில் இதனை தீர்மானிக்க முடியும். ஆனால் சதித்திட்டங்கள் ஊடாகவோ வெளிநாட்டு அழுத்தங்கள் ஊடாகவோ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். எமது நாட்டின் மனித உரிமைகள் குறித்த அக்கறையில் சில வெளிநாடுகள் பேசவில்லை. மாறாக இலங்கை இன்னும் அவர்களின் காலனித்துவ நாடு என்ற எண்ணத்தில் சில நாடுகள் செயற்படுகின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துபவர்கள் அன்று யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பார்கள் என்று நம்புகின்றோம். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இவர்கள் மேதினத்தை நடத்தும் வகையில…

  23. வடக்கு கிழக்கு பிரச்சினை தீர்ப்பதற்காக அரசாங்கம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக வழங்க முயற்சிக்கும் தீர்வுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த மே தினக் கூட்டத்தில் இணைந்துள்ள அனைத்து அணிகளும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் குருநகர் புனித குறுஸ் மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் அரசாங்கம், எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகளாக மதிக்க வேண்டும் என தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் இந்த மே தினக் கூட்டத்திற்கு அரசாங்கம் பல்வேறு அர்த்தங்களை கற்பித்த…

  24. எந்தவொரு யுத்தமும் பல துணைப் பாதிப்புக்கள் ஏற்படக் காரணமாக இருக்கும். ஆட்கடத்தல் தொடர்பாக கனடாவால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கை வாசினியையும் பாதித்துள்ளது. 30 வயதுகளில் உள்ள வாசினி என்கின்ற தமிழ் பேசும் பெண், தாய்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் பாதிப்பை தாங்கி வாழ்வதுடன், கனடாவின் ரொரன்ரோவில் வாழும் தனது வயது முதிர்ந்த பெற்றோருடன் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார். ஆனால் பாங்கொங்குக்கு வெளியே செயற்படும் ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் கனடாவுக்கு செல்வதை வாசினி ஒருபோதும் விரும்பவில்லை. "இவ்வாறானதொரு ஆபத்தை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில் இது மிகவும் ஆபத்தானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் காணப்படுகின்றது" என வாசி…

  25. அதிபர் தேர்தலுக்கான 2ம் சுற்று வாக்களிப்புக்கு பிரென்சு தேசம் தயாராகி வரும் நிலையில் மே நாள் பேரணிகள் பிரான்சின் முக்கிய நகரிங்களில் பாரியளவில் இடம்பெற்றுள்ளது. இதன் மையப்புள்ளியாக விளங்குகின்ற தலைநகர் பரிசில் இடம்பெற்ற பிரமாண்டமான மே நாள் பேரணியின் போது ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை வலியுறுத்தி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரான்ஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகத்தின் அமைப்பு பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட பிரதிநிதிகளை பல்லின மக்களுக்கும் விநியோகித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். மறுபுறம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக்குழுவினர் துண்டுப்பிரசுர விநியோக பரப்புரையில் இன்னுமொரு ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.