Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிட்டனிற்கு இனிமேல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் வரமுடியாதவாறு அமைச்சர்களுக்கு சட்ட அதிகாரம் வழங்கபப்ட்டுள்ளது. சித்திவதை, கொலை உட்பட பாரதூரமான மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத பிரஜைகள் பிரிட்டனுக்கு வருகை தருவதைத் தடுப்பதற்குத் தேவைப்படும் கடுமையான குடிவரவு ஏற்பாடுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மனித உரிமைகள் அறிக்கையிலுள்ள நடவடிக்கைகளை அந்நந்டடு வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை (இன்று) நடைமுறைப்படுத்துவதை ஆரம்பிக்கவுள்ளதாக “த கார்டியன்’ பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. கடந்த கால அல்லது நிகழ்கால மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் தொடர்பான நம்பகரமான ஆதார…

    • 0 replies
    • 718 views
  2. ஐ.நா அகதிகள் மறுவாழ்வு நிறுவனத்தின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல கொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் கடந்த பத்து ஆண்டுகளாக உலகின் பல பாகங்களுக்கும் சென்று அகதிகளுக்கு உதவியதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தனது உலகப் பயணங்களின் போது மறந்துவிடாமல் பிரபாகரன் பிறந்த ஊருக்கும் போய் நேரடியாக உதவியுள்ளார். சுனாமி வந்தபோது இலங்கை சென்றதும் அவர் முதலில் மரியாதை கொடுத்தது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊருக்குத்தான். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை சென்று ஒரு மில்லியன் ரூபாவை வழங்கினார். இன்று வடமாகாணத்தின் சிறந்த ஆரோக்கியமான வைத்தியசாலைகளில் முதன்மையாக இருப்பது வல்வை வைத்தியசாலையே. அந்த வைத்தியசாலையின் வாசலில…

  3. 1984 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவில் பயிற்சிபெற்ற தமிழ்ப் போராளிகள் பாக்கு நிரேரியைக் கடந்து வந்து இலங்கையின் வட பகுதியில் தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியபோது இலங்கை - இந்திய உறவு நிலைகளில் ஒருவித முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை தொடர்பாக கடந்த வாரத்தில் பார்த்தோம். அத்துடன், போராட்டத்தை அடக்குவதற்கான ஒரு பொறிமுறையாக தேசிய பாதுகாப்ப அமைச்சை இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமைத்திருந்தமை தொடர்பாகவும் பார்த்திருந்தோம். தேசிய பாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத்முதலியை நியமித்திருந்தார். இதேகாலப்பகுதியில் தமிழ்ப் போராளிகளுக்கு முகாம்களை அமைத்து ஆயுதப் பயிற்சியை இந்தியப் பலனாய்வு நிறுவனமான 'றோ' வழங்கிவருவது தொடர்பிலான தகவல்கள் ஊடகங்களின் மூலமாகக் கசியத் …

  4. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தற்தோதைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அக்கட்சியின் சில தலைவர்களின் நடவடிக்கைகளை நினைக்கும் போது ஏன் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே முடியாமல் இருக்கிறது. தற்போது ஐ.தே.க. தலைவர்கள் எதிர் வரும் மே தினத்தன்று என்ன செய்ய வேண்டும் என்பதில் பெரும் சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை பார்க்கும்போது இது இவர்களுக்கு வேண்டுமா என்று தான் கேட்க வேண்டியுள்ளது. கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சில எதிர்க் கட்சிகளுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தினத்தை கொ…

    • 1 reply
    • 622 views
  5. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வரும் மே 3ம் நாள் புதுடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். சிறிலங்காவில் இருந்து திரும்பிய காங்கிரஸ் நாடர்ளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமரைச் சந்தித்து, 10 அம்சத் திட்டம் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்திருந்தனர். அதையடுத்து சுஸ்மா சுவராஜை சந்தித்து, அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியக் குழுவுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மஹிந்தராஜபஷ கூறியுள்ளது குறித்து கலந்துரையாடினர். அத்துடன் தமது பயணம் தொடர்பாக இந்திய மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், குழுவின் சார்பாக இந்தியப் பிரதமர் மன்மோக…

  6. நெடுந்தீவைத் தனது கோட்டையாக வைத்திருக்கும் கட்சி ஒன்று ஜனநாயக விரோத செயற்பாடுகள் மூலம் மக்களை அடிமைபோல நடத்துகிறது. இந்த அடிமைத் தளையிலிருந்து நெடுந்தீவு மக்களை விடுவிக்க வேண்டும் என்று நெடுந்தீவு மக்கள், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் நேற்றுக் கோரிக்கை விடுத்தனர்.எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் இந்தமுறை நடத்தவுள்ள மேதின நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று நெடுந்தீவுக்கு சென்றிருந்தனர்.இதன்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கேட்டபோதே மேற்குறித்த கோரிக்கையை மக்கள் அவரிடம் முன்வைத்தனர். இதன்போது பொதுமக்கள் ரணிலிடம் தெரிவித்தவை வருமாறு: ஜனநாயக…

    • 1 reply
    • 451 views
  7. பிரபல தமிழ் வர்த்தகரும், மகிந்த ராஜபக்‌ஷவின் யாக, பூஜைகளின் இணைப்பாளருமான திரு.நடேசனின் பிரதான சகாவான ரவிச்சந்திரன் எனப்படும் 'செல்டெல் ரவி'யை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு கோதாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். மகிந்த ராஜபக்‌ஷவிற்கு நெருக்கமான திரு நடேசனின் சகாவாக ரவிச்சந்திரன் இருந்த போதிலும், அரசப் புலனாய்வுப் பிரிவினர் ரவிச்சந்திரன் என்ற நபர் ''டபள் கேம்'' அடிப்பவர் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவரைக் கைதுசெய்வதற்கோ அல்லது வெள்ளை வேனில் கடத்துவதற்கோ பாதுகாப்புச் செயலாளர் திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். ஆளும் கட்சியின…

    • 0 replies
    • 407 views
  8. கொழும்பு – காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்று நீரிழ் மூழ்கி காணாமல் போன இளைஞன் இன்று காலை 08.09 அளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு – காலி முகத்திடல் பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் கடலில் நீராடச் சென்ற குழுவினருள் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். நேற்று 29ம் திகதி மாலை 07 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாவலபிட்டி – கஹடபுலாவ – தொடம்கஸ்துலாவவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய புவனேஸ்வரன் சந்திரபோஸ் என்பவரே காணாமல் போனவராவார். கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://thaaitamil.com/?p=17492

    • 0 replies
    • 380 views
  9. சர்வதேச ஊடக தினத்தைக் கொண்டாடுவதற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாவிற்காக ஒட்டுக்குழு ஈபிடிபியிடம் சுதந்திர ஊடகக் குரல் அமைப்பு கையேந்தியதாகத் தெரிவித்து யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.இது தொடர்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடக அடக்குமுறைகளுக்கு உள்ளாகியிருக்கும், யாழ்.குடாநாட்டில் ஊடக சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் தேவையானவையே. ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் சொல்லுவதற்கு இந்தக் கொண்டாட்டங்கள் தேவையானவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனாலும் ஊடக சுதந்திரத்தை யார் கொண்டாடுவது என்பது இப்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடங்கி இறுதியாக யாழ்ப்…

    • 0 replies
    • 612 views
  10. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை மகிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் உதாசீனப்படுத்தினால் அதற்கான விபரீதத்தை விரைவில் எதிர்கொள்ள நேரிடும் என அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார். குருணாலில் நடைபெற்ற இரகசிய சந்திப்பொன்றின்போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர் பலர் கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு தாவிய உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அனைத்தை சலுகைகளையும் வழங்குகிறார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை உதாசீனம் செய்துவருகிறார். இந்த நிலை தொடர்ந்தால் அதற்கான விளைவுகளை ஜனாதிபதி விரைவில் சந்திக்க நே…

    • 0 replies
    • 438 views
  11. ஜக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது தமிழர்களுக்கு நீதியா? சிறீலுங்கா அரசை பாதுகாக்கவா?என்ற தலைப்பிலான கருத்துரங்கு சென்னையில் இடம்பெற்றுள்ளது. சேவ் தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை லோயேலா கல்லூரியில் இன்று மாலை இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் பல்வேறு பட்ட முதன்மை யாளர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.நிகழ்வில் எழுத்தாளர் அருள் எழிலன் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.நிகழ்வின் தொடக்கத்தில் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாயறாஜபக்ச ஊடகம் ஒன்றிற்கு தெரிவத்த கருத்து காணொளிவடிவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதில் சிறீலங்கா அரசின் போர்நடவடிக்கைக்கு இ;ந்திய எவ்வாறான உதவிகளை செய்தது என்பது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 357 views
  12. யாழ்.மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தையும், அதனோடு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தையும், ரெலோ இயக்கம் புறக்கணிக்கப்போவதாக அந்த இயக்கத்தின் உயர்மட்டத்தினர் தெரிவித்திருக்கின்றனர் குறித்த மே தினக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் ஜ.தே.கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளினால் குருநகரில் இடம்பெறவிருக்கின்றது. இதில் முதன்மையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளவுள்ளது. எனினும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ இயக்கம் ஜ.தே.கட்சியுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்தும் விமர்சித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள ரெலோ இயக்கம் தொட…

  13. கைது செய்யப்பட்டுள்ள திருகோணமலை புனித சவேரியார் பாடசாலை ஆசிரியர் ரி. குகதாஸை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை நகர சபை உறுப்பினர் சி. நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஆசிரியர் குகதாஸ் (வயது 47) மேற்படி வித்தியாலயத்தில் ஆங்கிலப்பாடம் கற்பித்து வந்தார். கடந்த 23 ஆம் திகதி பொலிஸõரினால் அழைக்கப்பட்ட இவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். காரணமில்லாத இவரது கைது காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள. இவரது மனைவியும் ஒரு ஆசிரியராவார். அவருக்கு சிறிய குழந்தையும் உள்ளது. இவரது கைது காரணமாக ப…

    • 0 replies
    • 328 views
  14. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிறுபான்மை சிங்கள மக்களுடன் சம உரிமைகள் வழங்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதனையே தாம் எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இலங்கையில் இரண்டாம் பட்ச மக்களாக வாழ்வதை தாம் விரும்பவில்லை. அனைத்து மக்களும் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடமும் இதனையே தாம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை …

  15. மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20, 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில், சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீவிரவாதப் புத்த மதத்தினர,; சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் பள்ளிவாசலை அகற்றி அதனை வேறிடத்திற்கு மாற்றும்படி பிரதம மந்திரி இட்ட கட்டளையும், இலங்கைத் தீவில் அரச உயர் அதிகாரிகள் ம…

  16. பறிபோவது தொழிலாளர் உரிமை மட்டுமல்ல- மாணவர்கள் மற்றும் பெண்கள் உரிமையும் தான்! மாணவர்களே பெண்களே அணிதிரண்டு வாரீர் ! உலகில் உரிமைக்காகப்போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும்தொழிலாளர் தினத்தில்பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு .தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயகஅரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்கசர்வதேசம்தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்து உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்ல வலுச்சேர்ப்போமாக.எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியகட்டாயக் கடமையில் உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம். அந்தவகையில் கடைமையுணர்வுள்ள ஒவ்வொருதமிழரும் தம்மாலியன்ற பங்களிப்பினை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளும்; அதேவே…

    • 0 replies
    • 267 views
  17. 16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் கைதான ஹோட்டல் உரிமையாளரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். அத்துடன், குறித்த யுவதியை வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதிபதி பணித்தார். இலங்கையைச் சேர்ந்த கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட 67 வயதான ஆணொருவரும் 16 வயதான யுவதியொருவரும் வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது வவுனியா பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டனர். வயது வித்தியாசத்தை கவனிக்காது இவர்கள் இருவரையும் ஹோட்டலில் தங்குவதற்…

  18. எமது நாட்டை பொறுத்தவரை நாங்கள் சிறுபான்மை இனம் ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மை இனத்துக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் இந்நாட்டில் எமக்கு வழங்கப்படவில்லை. நாம் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக எங்களது உரிமைக்காக எமது மக்கள் பல உயிர் தியாகங்களை புரிந்துள்ளார்கள் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்தக்கு மேல் உயிர்களை இழந்துள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடாத்திய மக்கள் சந்திப்பு ஒன்று கூடலில் உரையாற்றும் போது தெரிவித்தார். கதிரவெளி மக்கள் சந்திப்பு ஒன்று கூடலில் அவர் தொடர்ந்து கூறியதாவது! அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் பலர் அங்கவீனர்களாக…

  19. ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர், பல்லாயிரம் யூத இனத்தவர்களை நச்சுப் புகையூட்டிக் கொன்றொழித்தார். சிறை பிடித்த பல ஆயிரக்கணக்கான யூதர்களை தடுப்பு முகாமில் வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி பின்னர் நச்சு வாயுவை பாவித்து அவர்களை கொன்றார் என்பது வரலாறு. இதேபோலவே முள்ளிவாய்க்காலிலும் எம் மின மக்களை இலங்கை இராணுவம் பல்லாயிரக்கணக்கில் கொன்றது. இதனை நினைவு கூரும் நாளான மே மாதம், முள்ளிவாய்க்கால் தினத்தில் ... வேற்றின மக்கள் ஒன்றுகூடும், லண்டன் நகரின் மையப்பகுதியில் நினைவு தினத்தை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) முடிவெடுத்துள்ளது. இதனை நேற்றைய தினம்(29) நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் முன்மொழிய, மக்கள் அதற்கான ஆதரவினை நல்கியுள்ளனர் ! தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியில், இந்…

  20. போர்க் குற்ற ஆதாரத்தை தளபதியிடம் கையளிக்கலாம் மொஹான் பீரிஸ் தெரிவிப்பு இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்கோ பொதுமக்களை துன்புறுத்தியதற்கோ ஆதாரம் இருந்தால் இராணுவத் தளபதிக்கு நேரடியாக எவரும் முறைப்பாடு செய்யலாம். அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என அமைச் சரவையின் மூத்த சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அளிக்கப்பட்டு ள்ள அனை த்து மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். இதன் மூலம் குற்ற மிழைத்தர்கள் என்று கண்டறியப் படும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பல இடம்பெற்றிருப்பதாகவும் அ…

    • 4 replies
    • 1.1k views
  21. லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான். முருகேசப்பிள்ளை கோபிநாத், வயது 21. மல்லாவியைச் சேர்ந்த இம்மாணவன் நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ பீடத்தில் கல்விபயின்று வருபவர். ஒலிம்பிக் வரவேற்பு நடைபெற்ற போதும் எத்தனையோ மொழிகளுக்குள்ளும் முதலில் ‘’வணக்கம்’’ என தமிழிலேயே ஆரம்பிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இத் தீபம் அலுமினியத்தில் செய்யப்பட்டுள்ளது. இத்தீபத்தில் 8000 துவாரங்கள் போடப்பட்டு இருக்கின்றன. 8000 துவாரங்கள் போடப்பட்டுள்ள இத்தீபத்தினை 8000 வீரர்கள் 8000 மைல்கள் ஓட இருக்கின்…

  22. வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்குப் புதுடில்லியில் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரியவருகிறது. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவியான சுஷ்மா சுவராஜ் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது இது தொடர்பான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். இதற்கமையப் புதுடில்லியில் இந்தக் கண்காணிப்பு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளதாகப் புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தக் கண்காணிப்பு அலுவலகம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் ஆராய்ந்து அது தொடர்பில…

    • 7 replies
    • 842 views
  23. "தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது" என ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார். "அதேவேளை, சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான தமது ஐந்து தசாப்த காலத்துக்கும் மேலான போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் தந்த விலைக்கு ஈடாக ஒரு நியாயாமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் திடமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்" எனவும் அவர் குறிப்பிட்டார். சிவராமின் ஏழாவது நினைவு தினம் நே…

  24. இலங்கையில் தமிழீழம் தனித்ததொரு நாடாக அமைய மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று திடீரென்று இன உணர்வு பீறிட்டுக் கிளம்பப் பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்!குதிரை ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குப் பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி!மூன்றாண்டுகளுக்கு முன்வரை போராடுவதற்கு ஒரு வலுவான போராளிகள் கூட்டம் இருந்தது. அப்போது பேசியிருக்க வேண்டும் இதை! அப்போது சகோதர யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்; தமிழீழம் சாத்தியமில்லை என்று பேசிக் கொண்டிருந்தவர்; இப்போது "ஈழம் எங்கள் தாகம்' என்று புறப்பட்டு விட்டார்!அதை ஐ.நா.வுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசுக்கு விண்ணப்பம் போடுகிறார் கருணாநிதி! ஈழத்தை இந்த அளவுக்குச் சின்னாபின்னப்படுத்தியதே தானும் மத்திய அரசும்தான் என்பதை மூன்றாண…

  25. உதயன் வெளியிட்ட செய்தி 1,000 கோடி நட்டஈடு கேட்டு டக்ளஸ் நீதிமன்றில் வழக்கு இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சட்டவிரோதக் கொலைகள், ஆள்கடத்தல்கள் போன்றவற்றில் ஈ.பி.டி.பியும் கருணா குழுவும் ஈடுபட்டன என்று தெரிவிக்கும் அமெரிக்கத் தூதராக இருந்த பிளேக்கின் ஆவணத்தை வெளியிட்டது விக்கிலீக்ஸ் என்று உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டமைக்காகத் தனக்கு 1,000 கோடி ரூபா நட்டஈடு தருமாறு கேட்டு இலங்கை அரசின் பாரம்பரிய, சிறுகைத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை உதயன் பத்திரிகை சட்டப்படி எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி சட்டத் தரணி விஜயதாச ராஜ பக்ஷவின் வழிகாட்டலில் சட்டத்தரணி ரகுராஜ் நேற்று முன்தினம் பதில் மனுத் தாக்…

    • 0 replies
    • 463 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.