Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி சென்னை நினைவக அரங்கம் அருகில் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திமுக துணைப்பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, விடுதலைச்சிறுத்தைகள் தோழர் வன்னி அரசு, பெரியார் திராவிடர் கழக தோழர் தபசி குமரன், த.மு.மு.க மாணவரணியி மாநிலத்தலைவர் ஜெய்னுலாபுதின், தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர் அருண்சோரி, மே 17 இயக்க தோழர் திருமுருகன், தமிழ் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை அமைப்ப…

  2. மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் இனந்தெரியாத பொருட்களை கையாள்வது குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய வலியுறுத்தியுள்ளார்.யாழ்ப்பாணம் பளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் கேட்டபோதே இராணுவ ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்தினை தெரிவித்தார். வீடொன்றின் முற்றத்தில் சிறுவர்கள் உருண்டை வடிவிலான பொருள் ஒன்றை கையிலெடுத்து விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சிறுவர்களின் முன்பள்ளி ஆசிரியையான தாய் குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிச்சம்பவத்தில் நான்கு வயது மற்றும் இரண்டரை வயதான இரண்டு பிள்ளைகளே உயிரிழந்துள்…

    • 0 replies
    • 721 views
  3. கொத்தணி குண்டு தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணரின் அறிக்கை குறித்து விசாரணை செய்யப்படும் என சிறீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. இலங்கையின் வட பகுதியில் வெடிக்காத கொத்தணி குண்டுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் கண்ணி வெடி அகற்றும் நிபுணர் அலன் பொஸ்டன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சிறீலங்கா இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் வனிகசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணரின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த அதிகாரி உரிய ஆதாரங்கள் இன்றி மின் அஞ்சல் மூலம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொத்தணி குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் அவர் இலங்கை அதிகாரிகளுக்கு முதல…

  4. மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைமைக் காரியாலயத்திற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்மேளன காரியாலயத்தின் பிரதான கதவுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. வீதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காகச் சென்ற இராணுவத்தினரே தீயை அணைத்துள்ளதாக காத்தான்குடி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காகவும், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி லால் பெரேராவின் தலைமையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் ச…

  5. கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் காலமானார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற கமலநாதன் அவர்கள் தமிழ் துறையில் வித்துவான் பட்டம் பெற்றவராவார். இவர் தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கிழக்கு பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது. மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றை தேடும் பணியில் இறங்கிய கமலநாதன் அவர்கள் பழைய ஏட்டுச்சுவடிகளை தேடி அதனை அச்சுவடிவில் கொண்டுவந்த பெருமையை பெற்றார். ஓலைச்சுவடிகளில் இருந்த வரலாற்று தடயங்களை தொகுக்கும் மிகப்பெரிய பணியில் இறங்கிய வித்துவான் கமலநாதன் அவர்களும் அவரது துணைவியார் கமலா கமலநாதன் அவர்களும் எடுத்துக்கொண்ட …

  6. இலங்கை விவகாரத்துக்கு விக்கிரமாதித்தன் கதையுடன் சமாந்தரம் வரைகிறார் ஹரிகரன் இலங்கையின் இன நெருக்கடித் தீர்வு விவகாரத்தில் இந்தியாவின் முயற்சிகளுக்கும் விக்கிரமாதித்தன் கதைக்கும் இடையில் சமாந்தரம் வரைந்துள்ளார் கேணல் ஆர்.ஹரிகரன் . இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பாக புரிந்து கொள்ளக் கூடியவை என்ற தலைப்பில் தெற்காசிய ஆய்வுக் குழுமம் (South asia Analysis Group )கேணல் ஹரிகரன் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலை கொண்டிருந்த காலத்தில் அப்படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணி ஆற்றிய வரும் தெற்காசியா தொடர்பான ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு நிபுணருமான கேணல் ஹரிகரன் இலங்கைக்கான இந்தியப் பாராளுமன்றக் குழுவின் 6 நாள் வி…

    • 0 replies
    • 630 views
  7. சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சரத் பொன்சேகா மீது மேலும் இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. இருநடதாலும் அவரது சட்டவாளர்களால் அவரைப் பிணையில் விடுவிக்கும் முயற்சிகள் கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து இதற்கு எதிர்ப்புகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால், பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ள…

  8. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தென்கொரிய விஜயம், இலங்கைக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுத்தருவதாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிடுகின்றார்.தென்கொரிய விஜயம் தொடர்பில் தெளிவூட்டும் சந்தர்ப்பத்திலேயே வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்தினைக் கூறினார். கொரியாவின் பாரிய நிறுவனங்களிடம் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக்கூறப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் அவர்கள் திருப்தி வெளியிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அந்தநாட்டு தொழிலதிபர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு எண்ணியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் 23,000 இலங்கையர்கள் கொரியாவில் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கையை வருடாந்தம் அதிகரிப்பதற்கு கொரிய அ…

  9. தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டதால், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடிந்ததாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அங்கு தொழில் செய்கின்ற இலங்கையர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணர்வகள் முன்நிலையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்கொரியா தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டதன் காரணமாவே சிறந்த அபிவிருத்தி நாடாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தென்கொரியாவில் தொழில் புரிகின்ற இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டின் ஜனாதிபதி சிறந்த மனோபாவத்தை கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.seithy.co...&language=tamil

  10. பிரான்சில் கொட்டும் மழையிலும் கடும் குளிர்காற்றுக்கிடையே பிரித்தானிய அரசை ஈழத்தமிழர் விடயத்தில் அவர்கள் சிறி லங்கா அரசுக்கு எதிராக, காலனித்துவ ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையிலும், காமன்வெல்த் நாடுகளின் நிறுவனர் என்ற அடிப்படையில், நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாரிஸ் நகரில் இன்று பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினரால் ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காலநிலை பாராது போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல தமிழ் உறவுகளும், பிரான்சு நாட்டு நண்பர்களும் இந்த ஒன்றுகூடலில் பங்கு பற்றினார்கள். ஜெனிவா மனிதவுரிமை அமைப்பின் அமர்வுக்கு பின்னர் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரனையால் தமிழீழ மக்களுக்கு எந்தவித நன்மையையும் பெற்று தறபோவதில்லை…

  11. கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் நினைவு தினம் இன்று கிழக்கு மாகாணத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது ஈழத்தமிழர்களுக்காக அகிம்சை ரீதியாக போராடிய ஈழத்து காந்தி என்ற புகழ் நாமம் கொண்ட தந்தை செல்வா(செல்வநாயகம்) அவர்கள் கடந்த 26.04.1977ம் ஆண்டு இறைபாதம் அடைந்தார் அன்னாரின் 35வது நினைவு தினம் கடந்த 30வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இம்முறை எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் நாவக்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் மட்டு, …

  12. President said, ‘go ahead’- Army Chief Despite international pressures to sudden stop the military operations when the Wanni humanitarian operations were entering a decisive phases, President Mahinda Rajapaksa ‘personally’ instructed the military to pursue the operations as planned, the Army Commander revealed. “President Mahinda Rajapaksa was determined and did not give in to pressures of the international community to suddenly stop the military operations when the Wanni humanitarian operations were entering a decisive phases around April 2009,” Army Chief Jagath Jayasuriya told troops today addressing an event in Kurunegala. The Army Headquarters in a sta…

    • 3 replies
    • 406 views
  13. தனி ஈழம் பற்றி பேச திமுக தலைவர் கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தர்மபுரியில் மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, இலங்கையில் தமிழர்களை அழிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் அதற்கு துணைநின்றன. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியபோதும் சரி, படுகொலைகள் நடந்தபோதும் சரி அவற்றைத் தடுத்த நிறுத்த குரல் கொடுக்காமல் மௌனமாக இருந்தார் கருணாநிதி. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது தனி…

    • 0 replies
    • 651 views
  14. கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதி முல்லையடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடி விபத்தில் இரண்டு பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளனர். நான்கே வயதான முகுந்தன் தமிழ்மாறன் மற்றும் அவரது சகோதரனான இரண்டு வயதுடைய முகுந்தன் தனூஜன் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர். பெற்றோருக்கு இவர்கள் இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமை போன்று கூலித்தொழிலாளியான தந்தை தமது வேலைகளில் ஈடுபட்டிருக்கையின் தாயார் சமையலறையினில இருந்துள்ளார். குழந்தைகள் தமது பாட்டினில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் வீட்டின் அருகாக இருந்து கைவிடப்பட்ட பொருளொன்றை இச்சிறுவர்கள் எடுத்து விளையாடிக்கொண்டிருந்த வேளையில் அது வெடித்து சிதறியுள்ளது. இதனால் சம்பவ இடத்தில் ஒரு…

  15. தம்புள்ளை புனித பூமியிலுள்ள பள்ளிவாசலை அகற்றுமாறு பௌத்த பிக்குகள் விடுத்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய தினம் (26.06.2012) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தாவூர், அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை, பொத்துவில், மற்றும் அட்டாளைச் சேனை ஆகிய பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன இதனால், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள், மூடப்பட்டுள்ளதுடன் பஸ் போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவி…

    • 0 replies
    • 380 views
  16. தமிழர் பகுதிகளில் சிங்கள ஆதிக்கமுள்ள சிறிலங்காவின் கொடுங்கோலாட்சி தொடர்கின்ற நிலையில், தமிழீழத் தனிநாட்டை உருவாக்குவதற்கு ஐ.நாவை இந்தியா இணங்கச் செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று கேள்வி நேரத்தின் போது, இது பற்றிப் பிரச்சினை எழுப்பிய அவர், “சிறிலங்காவில் தமிழர் வாழ்விடங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினரே உள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வாழ்கின்றனர். கொடுங்கோலாட்சி தான் அங்கு நடக்கிறது. இந்திய- சிறிலங்கா உடன்பாடு மதிக்கப்படவில்லை. தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. …

    • 5 replies
    • 1.3k views
  17. சுதந்திர தேசமாக விடுதலைப் பெற்றுள்ள தென் சூடானில், சுதந்திர தமிழீழத்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்காரியாலம் அமைக்கும் பொறுப்பினை, அவுஸ்லியாவின் சிட்னி வாழ் தமிழர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை சிட்னியின் கொம்புஷ் ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மக்களே இப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர். கருத்துரைகள், மக்களின் கேள்விகளுக்கான விளக்கவுரைகள் என, இடம்பெற்றிருந்த இந்த மக்கள் அரங்கம் நிகழ்வில், பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள், தமிழீழ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும், போராட்ட முன்னெடுப்புகள் குறித்து எடுத்து …

    • 3 replies
    • 924 views
  18. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயம் தீக்கிரை மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயக் கட்டிடம் இனந்தெரியாதோரினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்மேளன அலுவலக கட்டிடத்தின் முன் கதவு தீயினால் கருகியதுடன், ஜன்னல் கதவுகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் இராணுவத்தினரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். http://www.tamilmirr...6-02-58-23.html

    • 1 reply
    • 364 views
  19. நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பொன்சேகாவிற்கு அனுமதி முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவிற்கு கொழும்பு - நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வழி செய்து கொடுக்கப்பட வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சேவையில் இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகா நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் பொன்ச…

    • 0 replies
    • 371 views
  20. அதிகாரப் பகிர்வு: ராஜபட்ச உறுதியளிக்கவில்லை' பி. கே. பாலசந்திரன் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் எந்தவிதமான உறுதியையும் அதிபர் ராஜபட்ச அளிக்கவில்லை என்று "தி ஐலேண்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது. ""அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இலங்கைக்கு வந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவிடம் ராஜபட்ச உறுதியளித்ததாக கூறப்படுவதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. எனினும், அதற்கு மேலும் செய்வதற்கு அதிபர் தயாராக இருக்கிறார்'' என்று அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியொரு உறுதிம…

    • 0 replies
    • 479 views
  21. சர்வதேச சமூகம் இலங்கை அதிபர் ராஜபக்சவையும் போர்க் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கும் காலம் நிச்சயம் வரும். அதற்கு ரொம்பக் காலமும் ஆகாது! தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வில் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் இலங்கை அரசியல் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் கீழு்வருமாறு: கேள்வி: ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களைவைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்களே? பதில்: அது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு. ஈழத் தமிழர்களை ஆதரிப்பதால், நாங்கள் எவ்வளவோ சொந்த இழப்புகளுக்கு ஆளாகி இருக்கிறோம். காவல்துறையின் நெருக்கடி, பொய் வழக்குகள், உளவுத்…

    • 0 replies
    • 459 views
  22. திருக்கேதீஸ்வர ஆலய சூழலில் புத்தர் சிலை எதற்கு? தம்புள்ளையில் மசூதி அகற்றுவது தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையில் இந்துக்களின் முக்கிய கோவிலாகக் கருதப்படும் திருக்கேதீஸ்வரவம் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில். ஒரு புத்த கோவில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கவலைகளை வெளியிட்டுள்ளது. பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலையத்துக்கு அருகில், இலங்கை அரசும், இராணுவமும் பௌத்த சமயத்தை பரப்பும் நோக்கில் முயற்சிகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இந்து மாமன்றம், அதற்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையிலும் திருக்கேதீஸ்…

    • 0 replies
    • 463 views
  23. ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி? - ஓர் கண்ணோட்டம் உலகலாவிய பொருளாதார மந்த நிலமையானது, மொத்த கேள்வியில் ஓர் வீழ்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. இதனால், வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில் முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிநடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இது, அந்த அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினையும் வெகுவாக குறைவடையச் செய்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் 7.2% எனக் காணப்பட்ட வளர்ந்து வரும் ஆசிய நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சியானது, இந்த ஆண்டில் 6.9% என வீழ்ச்சி காணும். என்றாலும், உலக பொருளாதார நிலமைகள் சீரடைகின்ற போது, வருகின்ற ஆண்டு 7.3%என்ற சராசரி பொருளாதார வளர்ச்சியினை சாதிப்பதற்கான வல்லமையினை வளர்ந்து வரும் ஆசிய நாடுகள் தற்போது கொண…

    • 0 replies
    • 432 views
  24. 12 முறை நாங்கள் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக உண்ணாநிலையை மேற்கொண்டோம், எவ்வித பயனுமில்லை. 45 நாட்கள் அமைதியாக இருங்கள், அரசிடமிருந்து சாதகமான பதில் வரும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். காத்திருந்தோம். பயனில்லை. இதற்கு பின்னரே இம்முறை உண்ணாநிலையை மேற்கொள்ள தீர்மானித்தோம். இன்று 10 நாட்கள் கடந்து விட்டது. எமது தோழர்கள் மூவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். 55 வயதான தோழர் எச்சில் கூட விழுங்காமல் நேற்று முதல் உண்ணாநிலையை தொடங்கியுள்ளார். இவ்வளவுக்கு பிறகும் உறுதியோடு உள்ளோம். எமக்காக எமது உலகு முழுக்க உள்ள தமிழ் மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி முரசொலி கேள்வி பதிலில், தான் முதல்வராய் இருந்த போது மாத, மாதம், குழு, குழுவாக வ…

    • 0 replies
    • 275 views
  25. பிரான்சில் கொட்டும் மழையிலும் கடும் குளிர்காற்றுக்கிடையே பிரித்தானிய அரசை ஈழத்தமிழர் விடயத்தில் அவர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிராக, காலனித்துவ ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையிலும், காமன்வெல்த் நாடுகளின் நிறுவனர் என்ற அடிப்படையில், நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாரிஸ் நகரில் இன்று பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினரால் ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காலநிலை பாராது போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல தமிழ் உறவுகளும், பிரான்சு நாட்டு நண்பர்களும் இந்த ஒன்றுகூடலில் பங்கு பற்றினார்கள். ஜெனிவா மனிதவுரிமை அமைப்பின் அமர்வுக்கு பின்னர் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையால் தமிழீழ மக்களுக்கு எந்தவித நன்மையையும் பெற்று தறபோவதில்லை, இது முதல் ப…

    • 0 replies
    • 311 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.