ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
அமெரிக்கப் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டுமென தான் கோரிக்கை விடுத்ததையடுத்து தான் கடுமையாக தாக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர் அமெரிக்கர்கள் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று திங்கட்கிழமை கூறினார். “ஆம், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க அனுசரணையுடன் முன்வைக்கப்படும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் அரசாங்கத்துடனான எமது ஐக்கியத்தை வெளிப்படுத்தவும் நான் ஒரு தேசாபிமானி என்ற வகையில் அமெரிக்காவையும் அமெரிக்க பொருட்களையும் பகிஷ்கரிக்குமாறு கோரினேன். நான், இவ்வாறு கூறியதால் ஆச்சரியகரமான வகையில், உள்ளூர் அமெரிக்கர்கள் என்னை கொல்ல முயற்சிக்கின்றனர்” என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். இவ்வாறான கருத்தை வ…
-
- 4 replies
- 956 views
-
-
ஜெனீவாவில் மோதல்களை தவிர்த்து, பொன்சேகா உட்பட அனைவரின் மனித உரிமைகளையும் பாதுகாக்கவும்; சரத் சில்வா ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மோதல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் மோதல்களுக்கு பதிலாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறும் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அரசாங்கத்தை ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வலியுறுத்தியுள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான இயக்கத்தின் கருத்தரங்கொன்றில் நேற்று உரையாற்றும்போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இவ்வாறு கூறினார். இந்நாட்டில் மனித உரிமைகளோ சட்டங்களோ முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் அவர் கூறினார். அனைத்து சட்டங்களுக்கும் முரணாக முன்னா…
-
- 0 replies
- 712 views
-
-
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் தற்பொது ஒரு முடிச்சுப் போட்டள்ளது. அந் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரின் மனைவி ஓர் தமிழ்ப் பெண் என அரசசார்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சிராணி சுப்பிரமணியம் என்று அறியப்படும் அப் பெண்மணி- சனல் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரை மணமுடித்து லண்டனில் வசித்து வருவதாகவும், இவர் சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புலம்பெயர் தமிழர்களுடனும், விடுதலைப் புலிகள் அமைப்புகளுடனும் கடந்த காலங்களிலும் தற்பொதும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை வெளிடுவதற்கும் இந்தப் பின்னணியே காரணமாக …
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை விவகாரம்: பிரதமர், எஸ்.எம்.கிருஷ்ணா ஆளுக்கொரு பேச்சு- மீண்டும் நாடகம்? சென்னை: இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கத்திற்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ள பேச்சுக்கும் இடையே ஆறு வித்தியாசம் அல்ல, 6000 வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தை உறுதிபட ஆதரிக்கிறோம் என்று இந்தியா இதுவரை …
-
- 5 replies
- 1.5k views
-
-
வன்னியில் போருக்குபின் மீண்டும் இயங்க தொடங்கும் செஞ்சோலை! இலங்கையில் நடைபெற்ற போராட்டம், அதனால் ஏற்பட்ட யுத்தம் பற்றி ஓரளவுக்காவது தெரிந்தவர்களுக்கு கூட செஞ்சோலை என்ற பெயர் பரிச்சயம். யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் குழந்தைகளுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு, காலப்போக்கில், தாய் தந்தையரை யுத்தத்தில் இழந்த மற்றைய குழந்தைகளையும் இணைத்துக் கொண்ட காப்பகம்.
-
- 0 replies
- 1k views
-
-
http://naathamnews.com/?p=4542 ஐ.நா மனித உரிமைச் சபையில் பல நாடுகளின் ஆதரவுத்தளம் கைநழுவிப் செல்லும் நிலையில், சிறிலங்கா-பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஊடாக, அரபு நாடுகளை வளைத்துப் போடும் இறுதி முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டு வருகின்றது. சவுதியைத் தளமாக கொண்டு இயங்கும் ArabNewsஊடகம், இந்தச் செய்தியை உறுதிப்படுதியுள்ளது. அரபு நாடுகளின் ஆதரிவினைத் திரட்டித் தருமாறு, சவுதி அரேபியாவிடம் பகிரங்கமாக சிறிலங்கா கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரம் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுளமை குறித்தும், தென்னிலங்கையெங்கும் முஸ்லிம் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டங்களையும் சுட்டிக்காட்டி…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ்நாடு அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையும் இதுதொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கம் திமுக, ஜெனிவா தீர்மானம் குறித்தும், இதில் இந்திய அர…
-
- 1 reply
- 1k views
-
-
ஹிலாரியுடன் அவசர சந்திப்புக்கு பீரிஸ் முயற்சி - காலில் விழத் தயாராகிறது சிறிலங்கா? [ திங்கட்கிழமை, 19 மார்ச் 2012, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இறுக்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை அவசரமாகச் சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், அரசியல்தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சிறிலங்காவின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் - மார்ச் மாத தொடக்கத்தில் வொசிங்டன் வருமாறு …
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், “எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா… இனப்படுகொலை செய்த சிங்களர்கள் முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது,” என்ற கேள்விகளை பாராளுமன்றத்த…
-
- 36 replies
- 3.1k views
-
-
இலங்கையின் கழுத்தில் கத்தி வைத்துள்ள இந்தியா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை வைத்து, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதானால், இலங்கை 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வகையிலேயே இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவாறு தமிழர்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்து வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட…
-
- 4 replies
- 1.6k views
-
-
கணக்கறிக்கை (யூன், யூலை, ஓகஸ்ட்)
-
- 30 replies
- 3k views
-
-
ஈபிடிபியின் தலைமைப் பணிமனையான யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்கில் ஈபிடிபியின் முக்கிஸ்தர்கள் இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகரசபையில் அங்கம் பெறுகின்ற ஈபிடிபி உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கு ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தலைமை தாங்கினார். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் உரையாற்றிய பொழுது, யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் றீகன் உரை நிகழ்த்தியிருக்கின்றார். அவர் தனது உரையில், யாழ்.மாநகர சபையும் ஈபிடிபி கட்சியும் முற்றுமுழுதாக வியாபார நோக்கத்துடனேயே செயற்பட்டு…
-
- 11 replies
- 2.1k views
-
-
இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஏனைய தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் இது தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்டப்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மாணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்கனவே பேச…
-
- 4 replies
- 877 views
-
-
பீரிசின் காலை வாரிய ஆபிரிக்க நாடுகள் – தீர்மானத்துக்கு நைஜீரியாவும் கெமரூனும் இணை அனுசரணை [ திங்கட்கிழமை, 19 மார்ச் 2012, 01:36 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்கா வரைந்த சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆபிரிக்க நாடான கெமரூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து கடந்தமாத பிற்பகுதியில் ஜெனிவா சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட த.தே.கூட்டமைப்பு சம்மதம் அரசியல் தீர்வு, மனித உரிமைகள் போன்ற விவகாரங்களில் ஐ.தே.கவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்மதித்துள்ளதாக அக்கட்சியின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. தூதுக்குழுவினர் த.தே.கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமது கட்சி அநேகமாக இவ்வருட மே தினக்கூட்டத்தை ஐ.தே.கவுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் கட்சி, சிறி…
-
- 4 replies
- 864 views
-
-
http://www.youtube.com/watch?v=46gzIso-9XU சர்வதேசத்திற்கு தமிழரின் கோரிக்கைகளை முதன்மைபடுத்துவோம். இலங்கை ஒரு தோல்வியுற்ற சனநாயக நாடு என்பதை அம்பலப்படுத்துவோம். இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயில் எரிப்போம் – சர்வதேச தமிழ்ச் சமூகங்களிற்கு மே 17 இயக்கத்தின் கோரிக்கை. மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகள் தமிழரின் துன்பத்தை முன்வைத்து இலங்கையை நெருக்குவதாக பேசுகின்றன. இரண்டு முறை கடந்த 25 ஆண்டுகளில் இப்படியான தலையீடுகள் நமக்கு நடந்து இருக்கிறது. 1987இல் இந்தியா தமிழர்களுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் இராணுவத்தை அனுப்பி, பின் அதுவே தமிழர்களை வேட்டையாடியது என்பதை நாம் மறக்க முடியாது. சிங்களம் தமிழருக்கு உதவி செய்ய வந்தவர்களின் பின்புறமாக நின்று தனது காரியத்தை சாதித்தத…
-
- 0 replies
- 1k views
-
-
தாய்தமிழுக்கு நன்றி (http://thaaitamil.com/?p=12944) சென்னையில் மே 17 இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த இலங்கைக்கு எதிரான பெரும் கூட்டம் மெரீனா கடற்கரையில் கூடியது. மெரினா கடற்கரை அதிர்ந்தது. அதே போல் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கூடங்குளத்தின் அருகே இடிந்த கரையில் அணு உலை எதிர்பாளர்கள் மாபெரும் பேரணி இலங்கைக்கு எதிராக நடத்தி அதிர வைத்துள்ளனர். இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இடிந்த கரையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வரை இந்த எழுச்சி பேரணியை நடத்தி உள்ளனர். இதில் அதிக அளவு பெண்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கு கூடியது போது இடிந்த கரையே அதிர்ந்தது
-
- 1 reply
- 837 views
-
-
புதிய காணொளியை வெளியிட்ட சனால் - 4 ன் புதிய ஆதாரங்கள் குறித்து ஆஸ்திரேலிய அரசின் செனட்டர் லீ ரைனான் செய்தியாளர்களிடம் கூறியவை,இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட 54 நிமிட மனித உரிமை மீறல் காட்சிகள் ஆஸ்திரேலிய அரசை உலுக்கி உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் புதல்வன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் நால்வரும் சரணடைந்த வேளை, இலங்கை இராணுவத்தினால் ஆடை களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொன்ற காட்சிகள் போர்க்குற்ற ஆவணமாக காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காட்சிகளை புதிய போர்க்குற்ற ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் லீ. மேலும் கூறுகையில், சமீபத்தில் வெளியிட்ட போர்க்குற்றம் இரண்டாவது பாகம் என…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஈழத்திற்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் 18 மார்ச் 2012 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தி சென்னையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் முன்பாக மாபெரும் கூட்டமும் பேரணியும் இன்று இடம்பெற்றது. மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டிலேயே இந்த போராட்டம் இடம்பெற்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் சுமார் நான்கு மணிநேரம் இடம்பெற்றது. மே 17 இயக்கத்தின் தலைமை செயற்பாட்டாளர் திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தின் பொழுது தோழர் தியாகு, தோழர் மணியரசன், கவிஞர் தாமரை, பேராசிரியர் தீரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு…
-
- 9 replies
- 1.1k views
-
-
இராணுவத் தரப்பு, தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளுக்கு.....! Sunday, March 18, 2012 ஈழத்தவன் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களை வெளிப்படுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி புதியதொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு வெளியான இந்த வீடியோவை உடனடியாகவே அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆனால் இந்த வீடியோ அரச, இராணுவ உயர் மட்டங்களுக்குத் தெரிந்தே போர்க்குற்றங்கள் நடந்தன என்று அடித்துச் சொல்கிறது. குறிப்பாக பாதுகாப்பு வலயங்கள் மீதான ஷெல் தாக்குதல்கள் குறித்து அரச தரப்பு நன்றாகவே அறிந்திருந்தது என்கிறது இந்த ஆவணப்படம். இதற்குச் சான்றாக ஐ.நா பணியாளர்களுடன் தொடர்புடைய சம்பவம் ஒன்றையும் சனல்4 ஆதாரப்படுத்தியுள்ளது. அதைவி…
-
- 2 replies
- 1.9k views
-
-
சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:- 13 ஜனவரி 2011 சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:- அண்மை நாட்களில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.அந்த மின்னஞ்சலில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரு.சுகி சிவம் அவர்கள் சன் தொலைகாட்சியில் ஆற்றிய சொற்பொழிவு இடம்பெற்றிருந்தது. இந்தச் சொற்பொழிவில் திரு.சுகி சிவம் அவர்கள் இலங்கைக்கு சென்றுவந்ததாகவும், தான் இலக்கியங்களில் வாசித்த மணிபல்லவம் என்ற நயினா தீவிற்கு சென்றுவந்ததாகவும் குறிப்பிட்ட அவர் புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக உலகத்தமிழர்களை சாடியிருந்தார். …
-
- 9 replies
- 2.3k views
-
-
இலங்கைக்கு எதிராக ஜெனிவா சென்றவர் தமரா இன்று நடப்பது வேடிக்கை என்றது ஐ.தே.க. [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-18 10:46:05| யாழ்ப்பாணம்] அன்று இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமரா குணநாய கம், இன்று மனித உரிமைகள் மீறப்படவில்லை என வாதாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இது என்ன வேடிக்கை? என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம் அதனை நடைமுறைப்படுத்துவோமென அரசின் ஒரு தரப்பு ஜெனிவாவில் உறுதியளிக்கை யில், இன்னொரு தரப்பு இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறது. இவ்வாறு அரசிற்குள்ளேயே இழு பறி நிலை தோன்றியுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் …
-
- 4 replies
- 1.5k views
-
-
நாளை லண்டனில் தொழில்கட்சியினர் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்திக்கும் ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சந்திப்பில் முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London) கலந்துகொள்ளவுள்ளார். இச்சந்திப்பின் போது முக்கிய விடையங்களாக லண்டன் நகர போக்குவரத்து, மற்றும் தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்தல் என்பன பேசப்படவுள்ளன. தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறீலங்கா விடையம் முக்கிய பேசு பொருளாக அமைந்திருப்பதாலும், நேற்று முந்தினம் இரவு சன்ல் 4 தொலைக்காட்சியில் சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தப்பட்ட சிறீலங்காவின்…
-
- 7 replies
- 770 views
-
-
ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய நாடகத்தை அப்போது பாரளுமன்றத் தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஆளும் காங்கிரசு கட்சி மேற்கொண்டதை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். போரின் இறுதி நிலை என்று இலங்கை இராணுவம் அறிவித்து இந்தியாவின் உதவியுடன் தமிழ் மக்களை துவம்சம் செய்து கொண்டிருந்த போது தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக்கட்சித் தலைவரான திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் என்னும் ஒரு தற்காலிக நாடகத்தை சென்னை மெரினாவில் அரங்கேற்றிக் கொண்டே போரை இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக கூறி இந்திய ஊடகங்களைக் கொண்டு பரப்புரை செய்தது இந்திய அரசு. தமிழர்களாகிய நாமும் வாய் பிளந்து அட தமிழினத்தலைவரின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு சக்தியா என்று ஆ…
-
- 7 replies
- 2k views
-
-
கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த வரவேற்பு நிகழ்விற்கு, நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அவுஸ்ரேலியாவுடன் இணைந்து கொமன்வெல்த் கூட்டத்துக்கு இலங்கையே இணைத்தலைமை வகிக்கிறது. இந்தநிலையில், சவீந்திர சில்வா பு…
-
- 3 replies
- 1.3k views
-