Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார் , சவூதி தாய்லாந்து, உறுதி' ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து …

  2. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று காலை 123.20 ரூபாவாக இருந்தது. நேற்றுமாலை 121.30 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று மேலும் 2 ரூபாவினால் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்று 120 ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதிப் பண்டங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். http:/…

    • 7 replies
    • 1.5k views
  3. இராணுவ விசாரணை நீதிமன்றினால் வாக்குமூலங்கள் பதிவு ஆரம்பம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறுpத்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்புரைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றமானது அவ்வறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. அக்கறையுடையவர்களை இவ்விசாணை நீதிமன்றுக்கு வந்து சாட்சியமளிக்கும்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தலைமயகத்தின் தற்போதைய தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் தலைமையில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை மன்றம் கோரியுள்ளளது. அதேசமயம்…

    • 5 replies
    • 695 views
  4. மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான தேசிய பொறிமுறை அவசியம்: தயான் ஜயதிலக்க பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை தணிப்பதற்காக, மனித உரிமைகள் விவகாரத்தை கையாள்வதற்கு தேசிய பொறிமுறையொன்று அவசியம் என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை இலங்கையால் முடிவுக்கு கொண்டுவர முடியுமா என கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2007 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்த கலாநிதி தயான் ஜயதிலக்க தற்போது பிரான்ஸுக்கான இலங்கையின்…

    • 4 replies
    • 814 views
  5. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட பின்னர் இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடிக்க முடிந்தது. இந்நிலையில் இம்முறை தானே நேரடியாக தீர்மானத்தை முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பலான நாடுகள் அதை ஆதரிக்கும் என அமெரிக்கா கருதுவதாக இலங்கை ராஜதந்த…

    • 11 replies
    • 1.4k views
  6. TNAயினர் ஜெனிவா வந்தால் அவர்களின் முகமூடி கிழித்தெறிப்படும் - அருண் தம்பிமுத்து : 27 பெப்ரவரி 2012 விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜெனிவாவுக்கு வந்தால், அவர்களின் முகமூடியை கிழித்தெறிய போவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.அருண் தம்பிமுத்துவை போல் பேர்ன் நகரில் வசித்து வரும் புலிகளின் எதிர்ப்பாளரான வீரையா காந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போர் குற்றங்களில் தொடர்புள்ளமைக்கான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ளார். சம்பந்தன் போன்றோர் வரும் வரை காத்திருக்கின்றோம். அண்மையில் சூரிச் நகருக்கு வந்த தமிழ் தேசியக் …

  7. வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது வெளி அமைப்புக்களின் தலையீடுகள் இதில் இல்லாவிட்டால் நீண்ட காலப் போக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும். இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட ஊடகமான Lakbima News இணையத்தளத்திற்காக Namini Wijedasa மேற்கொண்ட நேர்காணலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த நேர்காணலின் முழுவிபரமாவது, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது ம…

  8. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது. நேற்று பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பேரவையின் கூட்டதிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் சிறிலங்கா பற்றியதும் ஒன்றாகும். போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படு…

  9. அமெரிக்க தூதரத்திடம் மனு கையளிப்பு http://youtu.be/cZP6GKn0TQw இலங்கைக்குஆதரவாக ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதியின் படத்துடன் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் - அமெரிக்க தூதரத்திடம் மனு கையளிப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில்இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புதெரிவித்து நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக சுயதொழில் புரிவோருக்கானசம்மேளனம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில்இடம்பெற்றது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரார்கள் இலங்கை அரசாங்கத்திற்குஆதரவாகவும், ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியவாறும் ஊர…

  10. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு - ஜனநாயகம் - மற்றும் மனிதஉரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் முதலாம் திகதி ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவார் என இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்றிருந்து போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவினது தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மரியா ஒற்றேரோவை வெள்ளைமாளிகை அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது http://www.seithy.com/breifNews.php?newsID=56443&category=TamilNews&language=…

  11. இலங்கைக்கெதிரான பிரேரணையை அமெரிக்கா இன்று மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்! இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனையை இன்று செவ்வாய்க்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக தெரியவந்ததாக திவயின தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனிடையே சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 37 அரசசார்ப்பற்ற நிறுவனங்கள், இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கும் நோக்கில், ஜெனிவாவுக்கு சென்றுள்ளனர். இதனைத் தவி…

    • 0 replies
    • 813 views
  12. இலங்கைமீதான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை கண்டு வெளிநாட்டு சக்திகளின் முன்னிலையில் மண்டியிடப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபாக்ச தெரிவித்துள்ளார். போர்க் குற்றச் சாட்டுக்களை சுமத்தி இலங்கையை பணயமாக வைத்து, வடக்கில் தமிழீழ ராச்சியத்தை உருவாக்க சில வெளிநாட்டு சக்திகளும், தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன. நாட்டை பிளவு படுத்தி தனி இராச்சியத்தை அமைக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தச் சக்திகள் தொடர்கின்றன. போர்க் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி வெளிநாட்டு கண்காணிப்பாளர்களைக் கொண்டு விசாரணை நடத்த முயற்சிக்கப்படுகிறது. நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளப்பட…

    • 2 replies
    • 652 views
  13. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதில்லை என்ற தீர்மானமானது எனது தனிப்பட்ட முடிவல்ல. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாகும். ஜெனீவா செல்லாவிட்டாலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேசநாடுகளுடன் பேசிவிட்டோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் ஊடகவியலாளர் ஒரவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: கேள்வி: ஜெனிவா விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதாக எடுக்கப்பட்ட முடிவு தனிப்பட்ட முடிவா? பதில்: இல்லை. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு கேள்வி: ஜெனிவா கூட்டத்தொடர் புறக்கணிப்பு சம்பந…

  14. உயிரிழந்த செய்தியாளர் மேரி கொல்வினுக்கு யாழில் நினைவஞ்சலி யாழ். ஊடகவியலாளர்களினால் உயிரிழந்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யுத்த செய்தியாளரான மேரி கொல்வின் நினைவஞ்சலி திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன் இவர் உயிரிழந்ததை நினைவுகூரும் முகமாக அஞ்சலி கூட்டமும் இன்று யாழ். ஊடகவியலாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு உரிழந்த்த செய்தியாளரான மேரி கொல்வின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றினர். அத்துடன் அவரின் செய்தித்துறை பற்றிய கருத்து பகிர்வுகளும் இடம்பெற்றன. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/36676-2012-02-27-17-40-45.html

  15. போருக்குப்பின் செம்மறி ஆட்டுக்குட்டம் போல நடத்தப்படும் யாழ் மக்கள். சிங்களம் போரில் வெற்றியடைந்தபின் தமிழர்களின் நலன்கள் யாவும் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தழிழர் பகுதியில் இராணுவக்கெடுபிடிகளுக்குப்பயந்து பி. ப. 6மணிக்குப்பின் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் காட்சிதான் காணமுடிகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக காய்திறந்தால் அடுத்தநாள் பிணமாகும் மக்கள். இப்படியான நிலையில் தானுண்டு தன்பாடுண்டு என்று மக்கள் சாப்பிடுவதும் தங்கள் கடமைகளை முடித்து உறங்குவதுமாகத் தான் வாழ்கின்றார்கள். எப்படி இருக்கின்றீர்கள் என்றால் தங்கள் மனத்தாங்கலை உள்ளே புதைத்துவிட்டு நன்ஙாக இருக்கின்றோம் என்று வெளிப்படையாகச் சொல்வார்கள். ஏனென்றால் கேட்பவன் யார் என்று அவர்களால் ஊகிக்க முடி…

    • 2 replies
    • 1.1k views
  16. அமெரிக்காவை ஆதரித்து இந்தியா தனது தென் பிராந்தியத்திலும் பாகிஸ்தானைப் போன்று எதிரி நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? அல்லது எதிர்த்து நட்பு நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? என்பது தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதாக ""நல்லதொரு நாளைக்கான'' ஏற்பாட்டாளரும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளரும் எம்.பி. யுமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். எம்மீது பொருளாதார தடை விதிப்பதற்கான முன்னோட்டமே ஐ.நா. வில் எமக்கெதிராக முன்வைக்கப்படும் பிரேரணையாகுமென்றும் தேரர் தெரிவித்தார். கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர்கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நல்லதொரு நாளைக்கான மக்கள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அத்துரலிய ரத்ன தேரர் இதனைத் தெ…

  17. காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம். ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஐநா.செயலாளர் நாயகம் பான்கிமூன் அவர்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அமெரிக்க அரசாங்கத்தையும் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஓபமா அவர்களைக் கண்டித்தும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று காத்தான்குடியில் கடைகள் ,பாடசாலைகள்,அரச ,தனியார் வங்கிகள், பொது ஸ்தாபனங்கள் ,சந்தைகள் மூடப்பட்டுள்ளதுடன் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் மனிதப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாசலில் து ஆபிரார்த்தனை என்பன இன்று காலை இடம் பெற்றது.இதில் உலமாக்கள்…

  18. சிறீலங்காவின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மட்டுமன்றி ஜெனிவாவுக்கு சிங்கள துணைநடிகைகள், அழகிகள் கொண்ட குழு ஒன்றும் சென்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தமரா குணநாயகம் இக்குழுவினரை ஜெனிவா விமான நிலையத்திலிருந்து அழைத்து சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளார் என ஜெனிவாவிலிருந்து நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு தூதுக்குழுக்களுக்கு அளிக்கப்படும் விருந்தில் அவர்களை மகிழ்விப்பதற்காகவும், உபசரிப்பதற்காகவும் சிங்கள நடிகைகள், மற்றும் அழகிகள் கொண்ட குழுவை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அழைத்து வந்துள்ளது. தமரா குணநாயகத்தின் வேண்டுகோளின் படி கொழும்பில் உள்ள வெளிநாட்டமைச்சும், அலரிமாளிகையும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளன. தற்போது ஜெனிவாவில்…

  19. சிறிலங்கா மீது அமெரிக்கா கடும் அதிருப்தி – இராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரிப்பு [ திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012, 11:15 GMT ] [ தா.அருணாசலம் ] ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளன. இந்தத் தீர்மானம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு முறைப்படி அறிவித்த பின்னர், சிறிலங்காவின் பல அணுகுமுறைகள் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அமெரிக்க இராஜாங்கச்…

  20. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை…

  21. சிறிய நாடான இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிராக செயற்பட முடியாது எனவும் அவ்வாறு எதிராக செயற்பட்ட லிபியாவின் கடாபிக்கு நேர்;ந்த கதியை ராஜபக்ஸ அரசாங்கம் ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒரு லட்சம் பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக செயற்படும் ஈரானுக்கும் கடாபிக்கு நேர்ந்த கதி நேரக்கூடும். இந்தியா, அமெரிக்கா, மேற்குலக நாடுக்ள இலங்கையின் நட்பு நாடுகளாகும். அவர்களை பகைத்து கொண்டு உலக இலங்கையால் தனித்து வாழ முடியாது.இலங்கை சுதந்திரம…

  22. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அயர்லாந்துபிரதமர் மேரி ரொபின்சன் கோரியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புவிசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மனிதத்திற்கு எதிராக இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட குற்றச்செயல்களை வெறுமனே உதாசீனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம்ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உதவிகளைவழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தைஏற்படுத்தல் ஆகியன நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மகிவும் …

  23. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோருவதற்கு பிரேரணை ஒன்று அவசியம் இல்லை என சிறீலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். காரணம் பரிந்துரைகள் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் சற்று நேரத்திற்கு முன்னர் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சுதந்திரமானதும் வெளிப்படையானதும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால் 20 வருட யுத்தம் தொடர்பில் தனிநபர்களின் கருத்துகளைக் கேட்டு ஐநா நிபுணர், குழு அறிக்கை தயாரித்ததாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் தேசிய ஒருமைப…

  24. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு சர்வதேசம் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை செயற்படுத்தும் என தாம் நம்புவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமை கவுக்ஸில் கூட்டத் தொடரில் பிரித்தானியா சார்பில் சற்று முன்னர் உரையாற்றிய அதன் பிரதிநிதி ஜெரமி பிரவுன் இவ்வாறு குறிப்பிட்டார். பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெரமி பிரவுன் தெரிவித்துள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.