ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது? ”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார். அண்மையில் பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். எவ்வாறு இருப்பினும் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண…
-
- 0 replies
- 420 views
-
-
யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் கடந்த வருடம் 13 பேர் உயிரிழப்பு! “யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்” என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வாள் , வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1369514
-
- 0 replies
- 278 views
-
-
நாட்டு நலனுக்காக பொதுவான ஒருமித்த கருத்துடன் இணையுங்கள் - ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் முழு வடிவம்! 07 FEB, 2024 | 12:52 PM தத்தமது தனிப்பட்ட கனவுகளுக்காக அல்ல, நாட்டின் பொதுவான கனவை நனவாக்க புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் எனவும் அரசியல் ஆதாயத்துக்காக நான் முடிவுகளை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காகவே எப்போதும் முடிவுகள் எடுத்தேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதேவேளை, விண்கல் வேகத்தில் சரிந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் மற்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான பாதையில் ஒரு மைல் கல்லாக இந்த ஆண்…
-
- 12 replies
- 949 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 FEB, 2024 | 08:14 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியமில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார் சண்டே ஒப்சேவருக்கான பேட்டியொன்றின் போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 393 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய பிரபல பாடகர் ஹரிகரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட, ஆள் அடையாளத்தை உறுதி செய்துக்கொள்ள முடியாத ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதைத் தவிர, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பிரபல தென்னிந்திய நடிகையான ரம்பா, இலங்கையின் யாழ…
-
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய செய்தி சேனலான WION க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “….இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நாடு அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார். WION நிருபர்: இந்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் ? ஜனாதிபதி ரணில்: நான் மீண்டும் வருவதற்கு நான் போட்டியிட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முதல் கடமையாகக் கொண்டுள்ளேன்…
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
11 FEB, 2024 | 09:28 PM (எம்.மனோசித்ரா) முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காணி உறுதி வழங்கு 'உரித்து' (உருமய) வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் வினவிய போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். 'விவசாய நடவடிக்கைகளுக்காக நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட காணிகளுக்கான உரிமம் வழங்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இந்த வேலைத்திட்டத்தோடு தொடர்புடையதல்ல. இந்திய…
-
- 2 replies
- 270 views
- 1 follower
-
-
சொகுசு வாகனங்கள் ரகசியமாக பதிவு! மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு Published By: VISHNU 11 FEB, 2024 | 09:48 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்படாத சுமார் 400 கார்களை திணைக்களம் பதிவு செய்துள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
11 FEB, 2024 | 09:35 PM மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் த…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை. பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. தரிசு நிலமாக காண…
-
- 1 reply
- 367 views
-
-
இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் அதானி குழுமம் கலந்துரையாடல் இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்…
-
- 2 replies
- 663 views
- 1 follower
-
-
Published By: VISHNU 08 FEB, 2024 | 02:02 AM அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார். https://www.virakesari.lk/article/175852
-
-
- 7 replies
- 545 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 05 FEB, 2024 | 08:10 AM மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். 2022 மே 30 ம் திகதி மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சுகாதார துறை மூன்று வாரங்களிற்குள் வீழ்ச்சியடையும் என அமைச்சரவையில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை அரசாங்க மருத்துவமனைக்கு விநியோகம் செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இந்திய கடன் உதவியில் எஞ்சியிருந்த நிதியை கூடிய விரை…
-
-
- 5 replies
- 438 views
- 1 follower
-
-
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரையில் பெறப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் பாதி உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவித்தொகை 17,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது. அதில் 11,800 ரூபா உடனடியாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/291253
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அயோத்தி இராமர் கோயிலுக்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளார். புதுடெல்லிக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி இராமர் கோயிலுக்கு முன்னெடுக்கவுள்ளார். இந்தநிலையில், நாளை மாலை அயோத்தி இராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில் நாமல் ராஜபக்ஷ பல்வேறு உயரதிகாரிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/291042
-
-
- 5 replies
- 952 views
- 1 follower
-
-
திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் குறித்த ஆலோசனையை கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு 10 FEB, 2024 | 02:30 PM இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இ…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
Published By: VISHNU 09 FEB, 2024 | 11:38 PM (எம்.மனோசித்ரா) இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இ…
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
10 FEB, 2024 | 10:29 AM சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களமர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது நாட்டிலுள்ள முப்பது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் கைரேகைகளை பெற்று டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது . இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கைதியின் கைரேகைகளைப. பெற்று அவர்களுக்காக தயாரிக்கப்பட்பள்ளி தொழில்நுட்ப அமைப்பில் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் பணிப்பாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176022
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
Published By: VISHNU 09 FEB, 2024 | 09:13 PM உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் உ…
-
-
- 5 replies
- 530 views
- 1 follower
-
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368588
-
-
- 21 replies
- 1.8k views
- 1 follower
-
-
எமது மக்கள் நலன் கருதிய இலக்கானது எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது காலத்திலேயே எட்டப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (09) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இச்சாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் - எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால், மீளவும் இத்தகையதொரு பொன்னான காலத்தை நினைத்துப் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன். தேர்தல்களில் நாங்கள் தனித்தனியே போட்டியிடுவோம். நாட்டைக் கட்டி எழுப்புவதில் ஒன்றிணைவோம் என்ற ஜனாதிபதி அவர்க…
-
-
- 1 reply
- 331 views
-
-
இந்தியா பறந்தார் அனுரகுமார! தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் மேலும் இருவரும் இன்று (05) காலை புதுடில்லிக்கு பயணித்ததாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார். தேசிய மக்கள் கட்சி முதலில் மக்கள் விடுதலை முன்னணியினால் கட்டமைக்கப்பட்டதுடன், அந்தக் கட்சி முன்பு இந்தியாவுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றியது. இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் போது, மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே அதற்கு எதிராக செயல்பட்டு இந்திய விரிவாக்கத்திற்கு எதிரான ஒ…
-
-
- 40 replies
- 3.4k views
- 1 follower
-
-
பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையில் உள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் அதனை சாட்சியமாக பதிவு செய்வார்கள். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதேவே…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர! யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும்…
-
-
- 11 replies
- 1.4k views
-
-
09 FEB, 2024 | 12:33 PM யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன் இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதுவரை காலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய ச.கிருஷ்னேந்திரன் யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175963
-
- 1 reply
- 303 views
- 1 follower
-