ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
வனவளப்பணிமனை பிடியிலுள்ள காணியை விடுவித்துத் தாருங்கள் மன்னார் இசைமாலைத்தாழ்வு மக்கள் போராட்டம் 'நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வனவளப்பணிமனையின் கட்டுப் பாட்டிலுள்ள 46 ஏக்கர் காணியை விடுவித்து காணி அற்றோருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மன்னார் இசைமாலைத் தாழ்வு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நானாட்டானில் கடந்த புதன் கிழமை இந்தப் போராட்டம் இடம்பெற்றது. "இசைமாலைத்தாழ்வு கிராமத்துக்குட்பட்ட 113 குடும்பங்கள் குடியிருப்பதற்கு காணியின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றன. ஒரு வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றோம். எனவே மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் கவனத்…
-
- 0 replies
- 335 views
-
-
சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருள்கள் அழிப்பு -(ஆதவன்) சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட சான்றுப் பொருள்கள் வவுனியா மேலதிக நீதிவான் முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுபரப்பட்ட அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை உட்பட 7 ஆயிரம் கிலோ உணவுப் பொருள்களும், கிருமிநாசினிகளும் இவ்வாறு அழிக்கப்பட்டன. இவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றில…
-
-
- 3 replies
- 465 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாணாமல் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து செல்வாறானால் இன்னும் அதல பாதாளத்துக்குள் இந்த நாடு விழுவதை யாராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08) நடைபெறுகிறது. இதில் உரையாற்றும்போது சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது: அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க எவ்வளவு தான் பேசினாலும், நாட்டின் பொருளாதாரம் சரிப்பட்டு வரப்போவதில்லை. எவ்வளவுதான் தான் செய்து முடித்துவிட்டேன் என்று மக்களுக்குச் சொன்னாலும் உண்மை மக்களுக்குத் தெரியும். அரச தலைவர் தேர்தல் வரும்போது மக்கள் விழிப…
-
- 0 replies
- 340 views
-
-
யாழில் தரிசு நிலத்தில் அறுவடை! யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் நெல் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் இன்று அறுவடை மேற்கொள்ளபட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட திருவடிநிலை மீள் குடியேற்ற பகுதியில் உள்ள குகன் குல சங்கத்தினருக்கு உரித்தான காணிமில் 60ஏக்கர் தரிசு நிலக் காணி சுழிபுரம்மேற்கு வாழ் பொதுமக்கள் ,புலம்பெயர்தேசத்தவர்கள் ,கலைமகள் விளையாட்டு கழகத்தினரால் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியானது நெல்வயலாக மாற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் அறுவடை முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் புலம்பெயர் தேச உறவுகள் சார்பில் முத்தையா ஞானவேல் ,வனிதா ரவீந்திரன்,பசுமை ப…
-
- 4 replies
- 649 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 11:18 AM கோடிக்கணக்கான கடன்களை செலுத்த தவறிய வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கடன் சலுகைகளை வழங்கிய போதிலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி, இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் கனவத்திற்கு கொண்டு வந்த போது கடனை வழங்குவதாக தெரிந்த போதிலும், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன்…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
Published By: VISHNU 08 FEB, 2024 | 09:53 AM ஆட்டுபட்டிதெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு இனந்தெரியாத ஒருவரால் விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் மயக்கமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (7) ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் ஜிந்துபிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நபரும், அதற்கான தகவல்களை வழங்கிய நபருக்குமே இவ்வாறு பாலில் விஷம் கலந்து வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவ…
-
- 1 reply
- 228 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தம்முடன் பாராளுமன்ற வளாகத்தில் பேசியதாகவும் ஆனால் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட மறுத்துவிட்டாா். தற்போதைய வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளராக ஜனாதிபதியை தான் கருதுவதாக அவர் கூறினார். https://www.ilakku.org/சிறந்த-ஜனாதிபதி-வேட்பாளா/?amp
-
-
- 14 replies
- 1.4k views
- 2 followers
-
-
பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கமைய இரகசியமான முறையில் கெமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த காவல்துறை உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படு…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
07 FEB, 2024 | 05:16 PM போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதன்போது குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியான நிலையில் குறித்த மாணவனைக் கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் முற்ப…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 03:50 PM நாட்டில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தமிழகத்தில் இன்று புதன்கிழமை (7) காலை தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று புதன்கிழமை (6) மாலை மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையை சென்றடைந்…
-
-
- 2 replies
- 362 views
- 1 follower
-
-
4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனை 07 FEB, 2024 | 03:02 PM நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்ததாக கூறப்படும் 517 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனைகளில் 85 கிராம் ஹெரோயின், 48 கிராம் ஐஸ், 1,561 போதைமாத்திரைகள், 1 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா, 3 கிலோ மாவா, 2 கிலோவிற்கும் அதிகமான மதன மோதக மாத்திரைகள் , 1,285 சிகரட்டுக்கள் ஆகியன கைப்பற்றப…
-
- 2 replies
- 384 views
- 1 follower
-
-
நாட்டு நலனுக்காக பொதுவான ஒருமித்த கருத்துடன் இணையுங்கள் - ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் முழு வடிவம்! 07 FEB, 2024 | 12:52 PM தத்தமது தனிப்பட்ட கனவுகளுக்காக அல்ல, நாட்டின் பொதுவான கனவை நனவாக்க புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் எனவும் அரசியல் ஆதாயத்துக்காக நான் முடிவுகளை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காகவே எப்போதும் முடிவுகள் எடுத்தேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதேவேளை, விண்கல் வேகத்தில் சரிந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் மற்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான பாதையில் ஒரு மைல் கல்லாக இந்த ஆண்…
-
- 12 replies
- 949 views
- 1 follower
-
-
07 FEB, 2024 | 11:53 AM கணவருடன் ரயிலில் கொழும்புக்குப் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையிலிருந்த சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுதந்திர தினத்தன்று தனது கணவருடன் ரயிலில் கொழும்பு நோக்கி பயணித்தபோது தான் உறங்கி விட்டதாகவும் ரயில் கெக்கிராவ ரயில் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்றபோது தான் விழித்துப் பார்த்தபோது தனது நகைகள், பணம் காணாமல் போயிருந்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவ…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவுக்கு தயாராகும் கச்சத்தீவு! கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவானது, இம்மாதம் 23 ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் நலன் கருதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள், சாலைகள்,இறங்குதுறைகள் , மின்சார விநியோகம், பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குவதற்குறிய நடவடிக்கைகளைக் கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விகாரையின் பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் சுற்றுப…
-
- 0 replies
- 289 views
-
-
Published By: RAJEEBAN 07 FEB, 2024 | 06:15 AM இலங்கையினால் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த பகுதிக்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகின்றன. சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு சொந்தமான தேர்ட் இன்ஸ்டியுட் ஒவ் ஓசோனோலஜியின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் காணப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து குறிப்பிட்ட கப்பல் மாலைதீவை நோக்கி சென்றது எனினும் தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் - இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் காணப்படுகின்றது…
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
Published By: VISHNU 07 FEB, 2024 | 12:59 AM (எம்.மனோசித்ரா) புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பாவனை மூலம் இலங்கை மருத்துவமனைகளில் வலுசக்தி வழங்கலை உறுதிப்படுத்தும் கருத்திட்டத்துக்கான ஜப்பான் உதவவுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது மருத்துவமனை, குருநாகல் போதனா மருத்துவமனை மற்றும் இரத்தினபுரி போதனா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுதல் மூலம் மின்சார வசதிகளை வழங்குவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் ஊடாக 1230 மில்லியன் ஜப்பானிய யென் கருத்திட்ட உதவியாக (ஏறத்தாழ 2.8 பில்லியன் ரூபாய்கள்) வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. சுகாதார துறையில் புதுப்பிக்கத்தக்கப்படாத…
-
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 10:59 AM யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது இன்று புதன்கிழமை (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மணலுடன், டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர். அதன்போது, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால், வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனால் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. சட்டவிரோத மணல் மண்ணை ஏற்றி சென்றமையால், சாரதி வாகனத்தை நிறுத்தவில்லை என பொலிஸாரின…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 FEB, 2024 | 05:49 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து, சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக கைப்பற்றி அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் செவ்வாய்க்கிழமை (06) இந்த உத்தரவை இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக் குழுவுக்கு பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இரண்டு சாதாரண கார்களாக அவற்றைப் பதிவு செய்து, சொகுசு வாகன இறக்குமதிக்கா…
-
-
- 6 replies
- 775 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 FEB, 2024 | 08:03 PM காணியற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மரமுந்திரிகை செய்கையில் அவர்களை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக திங்கட்கிழமை (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பூநகரி, ஜெயபுரம் பகுதியில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 472 ஏக்கர் காணிகளே கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், பிரதேசத்தினை சேர்ந்த காணிகளற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. அதுமாத்திரமன்றி, காணிகளைப் பெற்றுக் கொள்வோர் மரமுந்தி…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
இந்த வருடத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒதுக்கீட்டிற்குள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, உரிய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/290787
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 FEB, 2024 | 11:33 AM மலையகத்தில் இயங்கி வரும் 863 தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக 2,535 ஆசிரிய உதவியாளர்களை நியமனம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார் தெரிவிக்கின்றார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், இந் நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கல்வி அமைச்சால் கோரப்படவுள்ளன. இதன் மூலம் ஆசிரிய உதவியாளர்களாக தெரிவு செய்யப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்து கற்கும் பாடத்துறையில் பட்டம் …
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
06 FEB, 2024 | 01:28 PM வடக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் பாடசாலைக்கான அடைவுமட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றது. இதன்போது வடமாகாணங்களின் கல்வி நிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதில் ஏற்ப்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் 2018 தொடக்கம் 2022 வரை க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரபரீட்சைகளில் வடக்குமாகாண மாணவர்களின் சித்…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368588
-
-
- 21 replies
- 1.8k views
- 1 follower
-
-
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1,300 வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் தற்போது பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளனர் என்றும் வருவதாக சுகாதார அமைச்சு செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால கூறியுள்ளார். இதேவேளை, கடந்த வாரம் பயிற்சியை முடித்த 590 பேர், பற்றாக்குறை காணப்படும் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175694
-
- 0 replies
- 406 views
-
-
கூறுகிறார் மஹிந்த அமரவீர! புலிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த நாட்டை நாசமாக்கியது. அதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டை ஆளாவிட்டாலும் நாட்டை நாசமாக்கிய ஒரு கட்சியாகும். தற்போது ஜனநாயகப் போர்வையைப் போர்த்துக் கொண்டு வந்திருந்தாலும் படுகொலைகளுடன் தொடர்புடைய ஒரு கட்சியாகும். புலிகளுடன் இணைந்து நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்தினார்கள். இது இரகசியம் அல்ல. ரில்லியன் கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி இழுக்கப்பட்டது. அதை மறந்துவிடக் கூடாது. ஜே.வி.பி.யும் அவ்வாறு தான். இப்போது நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைக…
-
-
- 2 replies
- 822 views
- 1 follower
-