Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பூநகரி பள்ளிக் குடாவில் உள்ள சுண்ணாவில் அ.த.க ஆரம்ப பாடசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக எமது இணயைத்தளத்திற்கு அப் பாடசாலை அதிபர் வழங்கிய பேட்டி thx http://newjaffna.com

  2. அடேல் பாலசிங்கம் “தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு’’ என்பதனை “சுதந்திர வேட்கை’’ எனும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். இந்நூல் 2002இல் வெளிவந்தது. இந்நூலில் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி முன்னெடுத்த “விடுதலைப் புலிகள்’’ அமைப்பை மையப்படுத்திய நிகழ்வுகள், சம்பவங்கள், அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித்தது முதல் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது வரையான அறிமுகம் தொடங்கி பிரேமதாசா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணப் போருக்குள் வாழ்க்கை, வன்னியில் அனுபவித்த இன்னல்கள்... எனப் பல்வேறு காலகட்டப் பதிவுகள் உள்ளன. குறிப்பாகப் பெண் போராளிகள் பற்றிய பதிவுகளில் இருந்து சில பகுதிகளை இங்குத் தொகுத்துள்ளோம். புலி…

  3. ஆசிரியர் இடமாற்றம் - விசாரணை யமதர்மன் தலைமையில் ஆணைக்குழு வட பகுதியில் ஆசிரியர் இடமாற்றம் தீராத் துன்பமாகத் தொடர்கின்றது. ஆலயவாசல் மிதியாத ஆசிரியர்களும் நேர்த்தி வைக்கும் அளவிற்கு ஆசிரியர் இடமாற்றத் தொந்தரவு படாப்பாடுபடுத்துகிறது. கல்வி அதிகாரிகளும் ஐயா! வேண்டாம் இந்த வேலை என்று கூறுமளவிற்கு நிலைமை படுமோசம். வன்னிப் பகுதியில் கடமையாற்றும் ஆசிரியர்கள் யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக சண்முகார்ச்சனை செய்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களோ, நமக்குத் தீராநோய் தந்தருள வேண்டும் என மன்றாடுகின்றனர். அங்கும் இங்குமாக வழிபாடு நடத்த குழப்பமடைந்த பரம்பொருள், யமதர்மராசனை அழைத்து வட பகுதியில் நடைபெறும் ஆசிரியர் இட …

  4. நெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா மீது பாராமன்றில் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விஜயகலா எம்.பி. பாராளுமன்றத்தில் முழங்கிய விஜயகலா எம்.பி., மகேஸ்வரனைக் கொன்றது முதல் தென்மராட்சிப் பகுதியில் கொலை செய்தது வரை எல்லாமே நீங்கள்தான் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சொற்தாக்குதல் நடத்தியுள்ளார். இவரின் துணிகரப் பேச்சினால் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பியதுடன், டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது. http://youtu.be/yAA1WSPsZt4 http://www.vannionli...-post_3311.html

  5. அமெரிக்காவின் 4 சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை வருகின்றனர் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுபாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் தந்திரோபாய கற்கை நிலையத்தின் அண்மைய கிழக்கு தெற்காசிய நிலையத்தைச் சேர்ந்த தூதுவர் ஜேம்ஸ் ஏ லரோக்கோ ஜனவரி 15 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ளார். வர்த்தக திணைக்களத்தின் ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் ஹொலி வினியார்ட் ஜனவரி 17 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் அலிஸா அய்ரெஸ் ஜனவரி 18 முதல் 24 ஆம் திகதி முதல் இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்…

  6. அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியிருப்பது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் சாதகமான சமிக்ஞையை காட்டுவதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடாப்பிடியாக இருந்த போதிலும் இவற்றில் சில பகுதிகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக வெளியில் எவ்வளவு தான் பேசினாலும் இறுதித் தீர்விற்கு பாராளுமன்றத்திற்கே வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையில் இருப்பது …

  7. எஸ்.பி.யின் கூற்று பொறுப்பற்றது: மனோ கணேசன் _ ஜே.ஜி.ஸ்டீபன் / வீரகேசரி தேசிய நாளேடு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வை மற்றுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு தயார்படுத்தல் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் அடையாளப்படுத்தப்படுவது அவரது பொறுப்பற்ற தன்மையை எடுத்துக் காட்டியிருகின்றது. அத்துடன் தமிழ் இளைஞர்களோ தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்களோ தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினரே தவிர அதனை விரும்பி அவர்கள் ச…

  8. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த பூரண தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் கனடாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கனேடிய வெளிவிவகார அமைச்சு இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் ஆராய்ந்துள்ளோ…

    • 3 replies
    • 740 views
  9. யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஈபிடிபி உறுப்பினரெனக் கூறப்படுபவரால் சிறைப்பிடிப்பு யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவனை ஈபிடிபி உறுப்பினரொருவர் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் யாழ்.நகரப்பகுதியினில் இன்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. எனினும் பின்னர் பொதுமக்களதும் ஊடகவியலாளர்கள் சிலரதும் தலையீட்டையடுத்து மாணவன் விடுவிக்கப்பட்டதுடன் குறித்த நபர் விசாரணைக்கென பொலிஸாரால் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். வன்னியைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கஸ்தூரியார் வீதியூடாக பல்கலைக்கழகம் நோக்கி பயணித்துள்ளான். அவ்வேளையிலேயே இவ்விளைஞனை வழி மறித்த குறித்த நபர் தன்னை ஈபிடிபி உறுப்பினரென அடையாளப்படுத்தி அவனது அடையாள அட்டையினை பறிமுதல் செய்ததுடன் அவனை அச்சுறுத்தி …

  10. அனைத்துலக ரீதியாக பிரபலம் வாய்ந்த ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ ஏடு வெளியிட்டுள்ள, 2012ம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களின் பட்டியலில் சிறிலங்கா இடம்பெறவில்லை. 2012ம் அண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களை ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ கடந்த 6ம் நாள் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்த சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது. தங்காலை விடுதியொன்றில் கடந்த நத்தார் நாளன்று பிரித்தானிய சுற்றுலாப் பயணி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது நண்பியான ரஸ்யப் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே சிறிலங்கா இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட ‘National Geographic Traveler‘ என்ற சஞ்சிகை, 2012ம் ஆண்டின் சுற்ற…

    • 5 replies
    • 1.7k views
  11. யாழ்மாவட்ட வாழ்க்கைச் செலவினம் மிகஅதிகம் யாழ்ப்பாண மாவட்டம்தான் இலங்கையில் மிகவும் அதிகமான வாழ்க்கைச் செலவினம் உள்ள மாவட்டமாக இலங்கையின் குடிசன மதிப்புப் புள்ளிவிவரத் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. யாழ்ப்பாண மாவட்டம் கொழும்பிலிருந்து தொலைவில் இருப்பதால், பொருட்கள் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு ஆகும் போக்குவரத்துச் செலவினங்கள் காரணமாக விலைவாசி உயர்ந்து காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறைப் பேராசிரியர் வி.பி.சிவனாதன் கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பல்பொருள் அங்காடிகளில் குறித்த விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதும், போர்க்காலத்தில் செலவினங்களைக் கட்டுபடுத்தி வாழ்ந்த யாழ்ப்பாண …

    • 0 replies
    • 575 views
  12. இலங்கையில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டால் அதுபாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என ஸ்லோவேனிய நாட்டு சிரேஸ்ட நீதவான் எர்னஸ்ட்பெட்ரிக் குறிப்பிட்டுள்ளார். நீதவான் எர்னஸ்ட் பெட்ரிக் ஸ்லோவேனியாவின் அரசியல் சாசன நீதிமன்றின்தலைவராக கடமையாற்றுகின்றார். மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் அது சாதக விளைவுகளை காட்டிலும் பாதகமான விளைவுகளையேஅதிகம் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு ரீதியில் சுயாதீனமான விசாரணைகளை நடத்துவதன் மூலம் சர்வதேசவிசாரணைகளுக்கான வழிகளை தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் குறித்த நாடு எடுக்கும் தீர்மானங்கள்நிரந்…

  13. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டப்பொதி தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் டில்லிக்கு வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவேண்டிய கடப்பாடு தெற்காசியப் பிராந்தியத்தின் தலைவன் என்ற அடிப்படையில் இந்தியாவிற்கு உள்ளது. இந்தியா அவ்வாறு செய்யும் பட்சத்தில் ஆமை வேகத்தில் நகரும் அரசியல் தீர்வுப் பயணம் துரிதமடையக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் சிரேஷ்ட பேராசிரியர்களுள் ஒருவரான சுமனசிறி லியனகே தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்விற்கு அரசுக்குள் இருக்கும் இனவாதிகள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். அவர்களின் கருத்துக்கமைய அரசு செயற்படுமானால் தேசிய அரசியல் என்ற …

  14. மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் வழங்கக்கூடாது அது பிரதேச வாதத்தைத் தூண்டக்கூடியது என்று அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் இனவாதியுமான விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது: வடகிழக்கு மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காது மாற்றாக உள்ளூராட்சி சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டைக் கூறுபோடுவதற்கு முயற்சிக்கின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாகாணசபைகள் மேலும் சக்திபெறும். மாகாணசபைகளுக்குக் கூடுதலான அதிகாரங்கள் வழங்கினால், மக்கள் மத்தியில் பிரதேசவாதம் ஏற்படும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பிரிக்கப்ப…

  15. விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் பயண நிகழ்ச்சி நிரலை இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டள்ளது. அதில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக எவையும் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்றையதினம் வெளியிட்டுள்ள இப்பயண நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கள் பற்றி எந்த குறிப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் முதலாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவையே சந்திப்பார் எனவும் அதன்பின்னர் வடபகுதிக்கான விஜயத்தினை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்…

  16. இந்திய அரசின் உதவியால் கிடைக்கப்பெறும் வீட்டுத்திட்டத்தில் சுமார் 500 வீடுகளை வன்னிப் பகுதியில் நிர்மாணித்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கு அவற்றை வழங்கி நிரந்தரமாக குடியமர்த்தலாம். அதன்மூலம் வன்னிப் பகுதிக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து நீண்ட காலக் கற்பித்தல் சூழலை அங்கு ஏற்படுத்த முடியும். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திர சிறியைச் சந்தித்து இந்த ஆலோசனையை முன்மொழிந்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்தார். கடந்த வாரம் ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. அங்கு தமது சங்கம் சுட்டிக்காட்டியதாக பொதுச்செயலாளர் கூறிய விடங்கள் வருமாறு: வன்னிப் பகுதியின் ஆசிரியர் பற்…

  17. கனடாவில் இருந்து அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்ட ஒருவர் நாடு கடத்தபப்டவுள்ளார். இவர் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்தவர் என கனேடிய பொலிசார் கூறியுள்ளனர்.61 வயதான இவரை கனடாவில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கனேடிய குடிவரவு எல்லை முகவர் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்லத்தம்பி பாஸ்கரன் மிக மோசமான தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ளவர் என கனேடிய குடிவரவு எல்லை முகவர் நிலைய தலைவர் லக் போர்டெலன்ஸ் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் செல்லத்தம்பி ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அவர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என அவர் கூறியுள்ளார். கனடாவில் அகதி அந்தஸ்த்…

  18. வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர்.இவர்களால் இலங்கைக்கு அச்_றுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுவதைத் தடுப்பதற்கு நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா பவுண்டேசனில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற “தேசிய பாதுகாப்புக்கான எதிர்காலச் சவால்கள்” என்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை அரசு நாட்டை இராணுவப் மயப்படுத்தி வருவதாகச் சில குழுக்கள் கூறிவரும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அவர், நிலையான சமாதானத்தை…

  19. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து ’ONLINE’ விசாவுக்காக கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் 7 கோடி ரூபா பணம் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதம கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலரத்ன பெரேரா தெரிவித்தார். இதேவளை, நேற்று முன்தினம் 10ம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நண்பகல் வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் இலங்கை வருகைத் தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் வருபவர்களுக்கு இதுவரை காலமும் இலங்கை இலவச விசா வழங்கி வந்துள்ளது. இந்நிலையில், இலவச விசா வழங்கும் நடைமுறை 2011 டிசம்பர் 31ம் திகதி முதல் ரத்துச் செய்து அதற்க…

    • 1 reply
    • 1.3k views
  20. தமிழ் மாணவர்கள் புலிப்பயங்கரவாதிகள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இன்று உயர்கல்வி அமைச்சர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரவிருந்த நிலையிலேயே இக் கெடுபிடி நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர். பல்கலைக்கழக ஆரம்ப நேரத்தில் இருந்து உயர்கல்வி அமைச்சர் பல்கலைக்கழகத்திற்குள் வரும் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நின்று ஒவ்வொரு மாணவர்களாக சோதனைக்குட்படுத்தினர். மாணவர்களது பொக்கட் உட்பட மோட்டார் சைக்கிள் வரை சோதனையிடப்பட்டது. சோதனையின் பின்னரே அவர்களை உட்செல்லவும் அவர்கள் அனுமதித்தனர். இதுமட்டுமல்ல கைலாசபதி கலையங்கில் உயர்கல்வி அமைச்சுக்…

    • 3 replies
    • 1.1k views
  21. திரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்பட்டது. யேர்மனியில் 20 வருடங்களுக்கு மேலாக உறுதியுடன் தேசியச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்து 06.01.2012 இன்று சாவடைந்த திரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் என்று மதிப்பளிக்கப்பட்டுள்ளது. வீரவணக்கம் 'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு' திரு. வைத்திலிங்கம் பரமேஸ்வரன். தமிழ்த் தேசிய பணியை அயராது திறம்படச் செய்து வந்த திரு. வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்கு 'நாட்டுப்பற்றாளர்' என மதிப்பளிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம். சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைக்கெதிரான தமிழ்த் தேசியப் பண…

    • 0 replies
    • 924 views
  22. ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான போராட்டமே இப்போது தேவை - கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இன்று அரசாங்கத்திற்குள்ளும் பிரச்சினை, ஐக்கிய தேசியக்கட்சியினுள்ளும் பிரச்சினை, மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளும் பிரச்சினை. அரசாங்கத்தினுள் இருக்கும் பிரச்சினையை ஒரு பக்கம் வைத்துவிட்டு பிரதான எதிர்க்கட்சிகளுக்குள்ளே என்ன நடைபெறுகின்றது என்பதையே ஆராயவேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவுபட்டிருக்கின்ற இரு அணியினரும் ஒருவரை ஒருவர் வசை மாரி பொழிந்து வருகின்றனர். இதே நிலைதான் மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளும் நடக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியிடம் இருந்து பிரிந்து சென்றவர்களும் மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குள் அரசாங்கத்தின் செ…

    • 0 replies
    • 410 views
  23. திரிசங்கு நிலையில் அரசாங்கம் ஆக்கம்: கே. சஞ்சயன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதில் தீவிரமாக இருந்த அரசாங்கம், போருக்குப் பிந்திய அரசியல் தீர்வில் அக்கறை காண்பிக்கவில்லை என விமர்சிக்கப்படுகிறது. போரில் வேகம் காட்டியபோதும், அதற்குப் பிந்திய காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் அரசாங்கம் வேகம் காட்டத் தவறியுள்ளது. இப்போது அரசாங்கம் எதிர்கொள்கின்ற - வரும் காலத்தில் எதிர்கொள்ளப் போகின்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் இதுவே மூலகாரணம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாகப் போகின்றன. போரை நடத்திக் கொண்டிருந்த போதும் அதை முடித்தவுடனும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இன…

    • 0 replies
    • 789 views
  24. போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றிய முழுமையான விபரங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிடவுள்ளது. இந்தத் தகவலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். “பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பொறுப்புக் கூறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது- அபத்தமானது. எந்தவொரு மோதல்களின் போதும் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படும். அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. எவ்வாறாயினும் சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற கொள்கையி்ல் தெளிவாக இருந்தது. இதனாலேயே பொதுமக்களுக்கு குறைந்த இழப்புகளுடன் போரை வெற்றி கொள்ள முடிந்தது. …

  25. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுக்கு எதிராக ஆபிரிக்க நாடுகளைத் திருப்பிவிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்று தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் செஹான் ரத்னவேல் தெரிவித்துள்ளார். ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தென்னாபிரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "30 ஆண்டுகாலப் போரை முடித்து வைத்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாதனையை ஆபிரிக்க நாடுகளின் அரசுகளும், அரச தலைவர்களும் பாராட்டுகிறார்கள். ஆபிரிக்க நாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.