Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெனிஸும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறைபா…

    • 2 replies
    • 1.8k views
  2. வட,கிழக்கு மாகாணத்துக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்க முடியாது என கூறும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டிருப்பதானது சர்வதேசத்தை ஏமாற்ற முனையும் நடவடிக்கையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பில், விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளதன் அடிப்படையே வடகிழக்கு காணி, பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அரசாங்கத்தில் உள்ள கெஹெலிய ரம்புக்வெல போன்ற அமைச்சர்க…

  3. அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து விளக்கவுள்ளது. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது பொலிஸ் , காணி அதிகாரங்கள் வழங்க முடியாதென்றும் வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போது பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படமட்டாதென தெரிவித்திருந்தார். இதேபோல் அமைச்சரவையின் பேச்சாளரான கெஹெலிய றம்புக்வெல பொலிஸ் அதிகாரம் குறித்து பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை வீணடிப்ப…

  4. மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் அவரது அரசிற்கும் புலிகள் பற்றி பேசாதுவிட்டால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதனை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். இன்று புத்தாண்டு புரளியாக மஹிந்த அரசு ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதாவது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியவரும் பலரைக் கொலை செய்தவருமான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் உட்பட ஐவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட போது புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் சயனைட் அருந்தினார் என்றும் என…

  5. காலம் கடந்தாலும் கண்ணீர் கன்னத்தை விட்டுப் போகதா ஆண்டு 2004 ஆம் ஆண்டு மார்கழி 26ல் தமிழகம் மட்டுமல்லாது தமிழீழம் தொட்டு தெற்காசிய கடற்கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் நொடியில் மரணமடையக் காரணமாக இருந்த சுனாமியின் இன்று ஆண்டுகடக்கும் நினைவு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழீழத்தில் பல இடங்களில் கொன்றுகுவித்ததை நினைக்கும் போது அந்த இடங்கள் பெயர் சொன்னாலே வலிகள் துளிர் விட்டு கொல்கின்றது. தமிழகத்தில் பல இடங்களை காண்பிக்க ஊர்கள் பல அழிந்து அலை திரண்டது போன்று ஒவ்வொரு உதடில் தட்டுப்பட்டு நினைவுகளாய் மண்ணில் சிந்திக்கொய்கின்றது கதறலாயும் கண்ணீர்கள் இடம் பெயர்கின்றது. இவை அத்தனையும் மறுவாழ்வுப்பணிகளால் இன்றளவும் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். …

  6. படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெனிஸும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை க…

  7. யாழ். மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஆனந்தநடராஜா சஞ்சயனின் சிறப்பு நேர்காணல் thx http://newjaffna.com/fullview.php?id=ODM5Mg==

  8. அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதல் இடம் பெற்றுக்கொண்ட மாணவன் கமலவாசன் மற்றும் அவரது உறவினர் பாடசாலை அதிபர் உள்ளங்களில் இருந்து thx http://newjaffna.com

  9. நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் செல்வதன் மூலம் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும். பரீட்சை பெறுபேறுகள் இன்று (25) காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதும் தாமதமாகி சற்று முன்னனே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யாழ். மாணவர்கள் சாதனை தற்பொழுது வெளியிடப்பட்ட கல்விப்பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உடுப்பிட்டி அமெரிக்க மிசன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடமும…

  10. பிரித்தானிய செஞ்சிலுவை சங்க தொண்டர் கொலை பிரித்தானிய செஞ்சிலுவை சங்க தொண்டர் தங்காலை விடுதியில் கொலை செய்யபட்டுள்ளர். ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இறந்தவரின் மனைவியுடன் பாலியல் தொந்தரவு செய்ததாகவும்,இதை கண்ணுற்ற கணவன் தட்டிகேட்டதாகவும் ஆரம்ம கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் இறுதிக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான சம்பத் சந்து புஸ்பவும் அவரது சகாக்களும் ஆயுத பிரயோகம் செய்துள்ளனர்.இறந்தவரான பிரித்தானிய பிரசையின் பெயர் குரும் சேக்.

  11. உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதில் எதிர்பாராத பல சிக்கல்களை எதிர் கொள்வதாக தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழீழ விடுதலையின் தேவையினையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றதற்கான காரணிகளையும் அழுத்தம் திருத்தமாக வெள்ளித் திரையில் பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான சிறுமி புனிதவதியின் துன்பம் நிறைந்த வாழ்வு நமது சொந்தங்கள் தமிழீழத்தில் இந்த வினாடிவரை அனுபவித்து வரும் அல்லல்களைப் பிரதிபலிக்கிறது. தமிழீழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பாடசாலைகள் மீதான விமானத் bதாக்குதல்கள், தமிழ் இளைஞாகளின் கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி, நி…

  12. ஐ.நா அமைதிப் படையில் உள்வாங்கப்பட்டு ஹெய்ட்டியில் பணியாற்றி இலங்கை இராணுவத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பதக்கம் வழங்கப்பட்டு உயர் கௌரவம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹெய்ட்டியில் இலங்கை இராணுவத்தினர் ஆற்றி இருக்கின்ற மனிதாபிமான பணிகளுக்காக இக்கௌரவம் வழங்கப்பட்டு உள்ளது என ஐ.நாவால் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஹெய்ட்டியில் சிறுமிகள் உட்பட ஏராளமான பெண்களை கற்பழித்தார்கள் என்று இலங்கை இராணுவம் மீது பலத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன. http://www.tamilthai...ewsite/?p=2230#

  13. கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியான புலிகள் குரல் வானொலி நிலையம் அமைந்திருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். கிளிநொச்சியில் 155ஆம் கட்டையில் விடுதலைப் புலிகளின் புலிகளின் குரல் வானொலி நிலையம் அமைந்திருந்தது. தற்பொழுது புலிகள் குரல் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவமுகாம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். தமது முகாமிற்கு நடுவில் பெரும் புத்தர் சிலை ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். 2007ஆம் ஆண்டு தமீழழ விடுதலைப் புலிகளின் புலிகளின் குரல் வானொலி நிலையம்மீது இராணுவத்தினர் விமானத் தாக்குதல் நடத்திய பொழுது இசைவிழி செம்பியன் என்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.புலிகளின் குரல் இருந்த இடத்தில் புத்தர்சிலை …

  14. அமெரிக்கா நியாயமற்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது!-ஜனாதிபதி. இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அமெரிக்கா, நியாயமற்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் ஊடக முதன்மையாளர்களை நேற்று சந்தித்தபோது ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஏ.எப்.பி. செய்திசேவை தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு, பரந்துப்பட்ட நிலையில் நல்லிணக்கம் தொடர்பான பரிந்துரைகளை செய்துள்ளது. எனினும் அமெரிக்கா மாத்திரம் போரின் இறுதிக்கட்ட நாட்கள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பொது…

  15. எம்.ஜி.ஆர். மட்டும் இன்னும் 10 வருடம் இருந்திருந்தால்... முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத் தமிழனுக்கு தனி தேசம் கிடைத்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்றிரவு சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழனுக்கு தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காதது தான் வரலாற்று துயரம். இன்று தமிழர்களால் நிம்மதியாக கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியவில்லை…

    • 0 replies
    • 800 views
  16. அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான ““தேனிலவு பேச்சுவார்த்தை'' இந்த வருடத்துடன் முற்றுப் பெற்றுவிடும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது. புதுவருடம் தொடங்கும் பொழுது இதுவரை பேச்சு வார்த்தை தேனிலவில் ஈடுபட்டிருந்த இரு தரப்பும் ““மண முறிவு'' க்கு வந்துவிடுவர் போல் தெரிகிறது. இரு பகுதியினரும் ஒருவர் மீது மற்றொருவர் விட்டுக் கொடுக்காது, சளைக்காது சொற்கணைகளை மாறி மாறி ஏவிக் கொண்டிருக்கின்றனர். போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 13 ஐ தருவோம், இதற்கு மேல் 13+ ஆகவும் தருவோம் என்று ஜனாதிபதி உட்பட அரச தரப்பினர் பேசி வந்தனர். போரினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் சர்வதேச நாடுகளின் காதுகளில் பூச்சுற்றுவதற்கும் இந்த கோஷங்கள் பாவனைக்கு வந்தன போ…

  17. சிறிலங்காவுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும்ஆக்கபூர்வமான முறையில் இந்தியா செயல்படுமென இந்தியா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை(25-12-2011) டெல்லியின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் அவர்கள் இந்தியாவின் இந்நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். http://naathamnews.com/2011/12/25/indiasrilanka/

  18. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீ{டன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் தோற்கடிக்க உதவிய கருணா குழுவைச்; சேர்ந்தவர்கள் என தான் கருதுவதால் நிகழ்சியை புறக்கணிப்பதாக ஜீவா தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்டனம் ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந…

  19. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடையும் விடுதலைப் புலிகளை கொன்று விடுமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஒருவர் அளித்துள்ள சாட்சியம் ‘அற்பத்தனமான’ நோக்கம் கொண்டது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். “அந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டவர். அவரது கவலைகள் என்னவென்று நாம் அறிவோம். அவரது நோக்கம் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெறுவது தான். அவர் இராணுவத்தில் இருந்த காலத்தில், அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததால், எமது கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.” என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார். எ…

  20. முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து இரண்டரையாண்டுகளை,கடந்து மூன்றாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் தமிழர் தாயகப் பகுதிகளில் எமது மக்களின் நிலை என்ன?தொடரும் தாயக உறவுகளின் அவலங்கள்.- ஒரே பார்வையில் - ஷோபனா சாந்தகுமார். http://youtu.be/gMRqnpIcYvo http://www.tamilthai.com/newsite/?p=2270

  21. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி கட்சி வடக்கில் கடத்தல்களை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடப் போவதாகவும், இது தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக சில ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் பின்னணியில் சதித் திட்டங்கள் இருக்கக் கூடுமென தாம் சந்தேகிப்பதாக …

  22. சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பான பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுத்துவதற்கென மேலும் இரண்டு பெல் 412-EB ரக உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த இரண்டு உலங்குவானூர்திகளும், இந்தவாரம் சிறிலங்கா விமானப்படைக்கு விநியோகிக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சுமார் 2 மில்லியன் டொலர் (225 மில்லியன் ரூபா) பெறுமதி கொண்டவையாகும். சிறிலங்கா அதிபரின் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் விமானப்படையின் மிகமுக்கிய பிரமுகர்களுக்காக விமான அணியில் இவை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் Textron நிறுவனத்தினால் இரண்டு பெல் 412 ரக உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப…

  23. எமது தமிழ்ச் சமூகம் தாயகத்தில் பலவித ஒடுக்கு முறையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நிந்திக்கப்பட்ட வேளையில், சிங்களத்தின் வாயிலிலும் சர்வதேச அரங்கிலும் எம் சமூகம் மீதான அநீதிகளை துணிகரமாக எடுத்தியம்பிய உரிமைக் குரலாக விளங்கியவர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் என பா.உ. சீ.யோகேஸ்வரன் தனது இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழர் மனங்களில் இன்று வரைக்கும் அணையாத ஒளிச் சுடராக வாழ்ந்து வருபவர், வடக்கு கிழக்கே தமிழர்களின் வாழ்விடம் என்றும் இந்நிலப்பரப்பிலே தான் தமிழன் ஆள வேண்டும் என உடலில் இருந்து உயிர் பிரியும் வரை உறுதியாக இருந்த சிறந்த அரசியல் தலைமையை இன்று எம் சமூகம் இழந்துள்ளது என சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே எந்த எதிரியாலும் மதிக்கப்படும் இடம…

  24. இயேசு பிறந்த நாளில் மறைந்தார் மாமனிதார் யோசப்பரராசசிங்கம்-ஆய்வு நினைவேந்தல்கட்டுறை. அன்பும் அறமும் தன்னீய்கையும் கொண்ட தெய்வ மகன் பிறந்த நாளாகிய யேசு எமக்காய் பாவங்களையும் இந்த மானிட குற்றங்களுக்கு பாவ மன்னிப்புக்களை அவசியப்படுத்தி இந்த உலகில் மனித இனத்தவர்கள் அனைவருக்கும் அன்பின் வளியில் இறைமையாக செல்ல வேண்டும். என்பதை எளிதான முறையில் காண்பிக்க உதித்த தந்தைதான் எங்கள் யேசுபிரான். இந்த புனிதமான நாளில் புனிதங்களை சிதைக்கவும் மதங்களையும் மத தலங்களையும் நசுக்கி அரக்கத்தனமாகன முறையில் நடந்த இனப்படுகொலை நடந்த நாளில் இயேசு பிறக்கின்றான் இங்கே உயிர்கள் நரபலி எடுக்கின்றது அரக்கத்தனவாதிகள். இந்த நாளில் தான் இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பார…

  25. சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.