Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்மையில் வெளிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளதோடு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீது முழுமையான விசாரணை ஒன்றுக்கும் வலியுறுத்தியுள்ளது. அரச படைகள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கை உறுதி செய்துள்ளதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஊடக சுதந்திரம், மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிலையான பரிந்துரைகளை செய்துள்ளதாக அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்துள்ளார். "நாங்கள் முழு அறிக்கையையும் படித்து …

    • 2 replies
    • 700 views
  2. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அடுத்த வருடம் முதல் சொகுசு பஸ் சேவை இடம்பெறுமென தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் செயற்பாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் பி.டி.கே.பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையும் முதற்கட்டமாக 48 ஆசனங்களைக் கொண்ட 4 பஸ்களை வழங்கவுள்ளதாகவும் பி.டி.கே.பண்டார குறிப்பிட்டுள்ளார். பயணிகளின் கோரிக்கைக்கமைய காலியிலிருந்து கொட்டாவ வரையான நுழைவாயிலுக்கு பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக பஸ்கள் ஒழுங்குபடுத்தப்படுமெனவ…

  3. சிறிகொத்த மீதான தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு ரணில் கோரிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமாக விசாரணை மேற்கொள்ளுமாறு அக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் நாடாளுமன்றத்தில் இன்று கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் கட்சியிடமிருந்தும் மக்களிடமிருந்தும் மன்னிப்பு கோருவதாக விசேட அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 'எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எந்தவித மாற்றமும் ஏற்படாதென ஏற்கெனவே தான் நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளேன். இது தொடர்பில் இன்றும் என்னால் மீண்டும் உறுதிப்படுத்த முடியும்' என பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசா…

    • 0 replies
    • 511 views
  4. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு தயார் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசனிடம் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை காலை மனோ கணேசனை அவரது பிறந்தநாளன்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு புலிகளைப்போல் செயல்படுகிறது. எனவே உங்கள் கூட்டமைப்பு நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மனோ ஜனாதிபதியிடம் தனது பிறந்தநாள் விருப்பம் ஒன்று இருக்கிறது என்று கூறியபோது, கூறுங்கள் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டவிட்டு ஜனாதிபதி பதில் அளித்தார். நீண்ட காலமாக இழுபறிப்பட…

  5. ஐ.தே.க. தலைவராக ரணில் மீண்டும் தெரிவு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையிலேயே கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவாகியுள்ளார். தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க 72 வாக்குகளையும் கரு ஜயசூரிய 24 வாக்குகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32922-2011-12-19-10-21-56.html

  6. வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட எல்லா விடயங்களும் உண்மையானவையா என்பதை கண்டறிவதற்காக இன்னொரு ஆணைக் குழு தேவையென்று எவரும் கேட்க மாட்டார்கள். அதேநேரம் நல்லிணக்க ஆணைக்குழு அரசிற்கும் படைத்தரப்பிற்கும் எதிராக அல்லது பாதகமாகவும் தனது அறிக்கையை தயாரிக்க முடியாது. அவ்வாறானதொரு அறிக்கை வெளியிடப்படுமாக இருந்தால், நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெற்றவர்களுக்கு நடந்தது என்ன? விசாரணை வேண்டும். பக்க சார்பற்ற ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோசங்கள்…

  7. இந்தியாவைச் சுற்றி சுருக்குக்கயிறு போன்ற வியூகம் அமைத்து வரும் சீனா! இலங்கையிலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் சீனாவின் செல்வாக்கு யாராலும் கணிப்பிட முடியாதளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் சீன இராணுவ பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் கொழும்பு வந்திருந்த அதேவேளை, இந்து சமுத்திரத்தில் உள்ள செஷெல்ஸ் தீவில் கடற்படைத்தளம் ஒன்றை அமைக்கும் முடிவை சீனா அறிவித்துள்ளது. சீனாவில் இராணுவ அதிகாரிகளின் பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் மிகவும் முக்கியமானதொரு இராணுவ அதிகாரி. அவரது கொழும்பு வருகை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடியதொன்று அல்ல. சீன விமானப்படையைச் சேர்ந்த அவர் இப்போது ஒட்டுமொத்த இராணுவ அதிகாரிகளுக்கும் பிரதித் தலைவராக இருப்பவர். …

    • 4 replies
    • 1.7k views
  8. காணி அதிகாரமானது அதிகாரப் பகிர்வின் மையமாக இருக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத் தூதுக்குழுவை நேற்று திங்கட்கிழமைசந்தித்தபோது த.தே.கூட்டமைப்பு இக்கோரிக்கையை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இது தொடர்பாக கூறுகையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் காணி அதிகாரம் பகிரப்படுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தநிலையிலும் 1995 அம் ஆண்டு தமிழ்க்கட்சிகள்அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழக் கட்சிகளின் பிரதான கோரிக்கையாக இது இருந்த நிலையிலும் இக்கோரிக்கை தமது கட்சி வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். எனினும் காணி அதிகாரத்தைப் பகிர்வதற்கு அரசாங்கத் தூதுக்குழுவினர் …

    • 2 replies
    • 672 views
  9. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இறுதியில் புலிகளையும்;, தமிழர்தரப்பையும் குற்றம் சாட்டிக்கொண்டு முடிக்கப்படும் என நால்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டபோது தெரிவித்திருந்த கருத்துக்கள் இன்றுஉன்மையாகியிருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக கலந்துரையாடும் வகையில் இன்று நடைபெற்றபத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமாகவேநல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது. நல்லிணக்க ஆணைக்குழு யுத்தத்தின் பின்னரான மூன்று வருடங்…

  10. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நலவன பிரதேசத்தில் பாலமொன்றை நிர்மாணிப்பதற்காக கொண்டுவரப்பட்டிருந்த பெருந்தொகையான இரும்புகளை திருடியதாக பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நெடுஞ்சாலை தற்போது பின்னதுவயிலிருந்து கொடகமை வரை விஸ்தரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்திலிருந்து கிடைத்த தகவலொன்றையடுத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் 12 அடி நீளமான இரும்புகளை ட்ரக்டர் ஒன்றில் ஏற்றிச்சென்றுகொண்டிருந்தனர். இந்த இரும்புகளின் பெறுமதி சுமார் 10 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. சுந்கேத நபர்கள் பின்னதுவ, கனன்கே, மாத்தறை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஏற்கெனவே இடம்பெற்ற திருட்டுகளுடனும் தொடர…

  11. fhiuefu; tu;j;jfg; ngUkf;fSf;F Xu; md;Gkly;! md;GkpF fhiuefu; tu;j;jfg; ngUkf;fSf;F Kjw;fz; tzf;fk;! cq;fsplk; ,Uf;ff;$ba tu;j;jfj;jpwd;> rkag;gw;W> jpl;lkply; vd;gtw;wpw;fhf vkJ ghuhl;Lf;fs; cupj;jhFf. mNj Neuk; aho; Flhehl;bd; nghUshjhu gyj;jpy; vOgj;ije;J tPjkhd gq;if tfpj;Jf; nfhz;bUf;Fk; jq;fsplk; rpytw;iw Rl;bf; fhl;bNa ,f;fbjk; vOjg;gLfpd;wJ. cq;fsplk; ,Uf;ff;$ba nghUshjh gyk; fhiuefupy; cs;s Nfhapy;fis ,bj;Jf; fl;Ltjw;Fk; FlKOf;Ffs; itj;J nrhu;zG\;gj;jhy; mu;r;rid nra;tjpYNk nrythfpg;Nghfpd;wJ. thuptstpy; Nfhapy; epu;khdpj;jhy; tye;jiyapYk; gQ;rjf; NfhGuj;Jld; mikf;fpd;Nwhk; ghu; vd;w ge;jak; aho; Flhehl; bd; nghUshjhu mgptpUj;jpia mkpo;j;jp…

  12. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் சர்வதேச பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் n;தரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் n;தாடர்பில் உண்மையக் கண்டறியும் ஆணைக்குழு கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெருமளவான தமிழ் பொதுமக்கள் யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டிய…

  13. தமிழர் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வும் அபிலாசைகளும் சி.வி. விவேகானந்தன் நவம்பர் 19 “சிலோன் டுடே' (Ceylon Today) பத்திகையில் Tamils Pine for a Poilitcal Solution என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் சாராம்சம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திடம் குறிப்பாக அமெரிக்க சென்று வந்த பொழுது தெற்கு கொதித்தது. உள்நாட்டில் பேசித் தீர்க்க வேண்டியதை வெளிநாட்டில் பேசுவதா? எங்கள் இறைமையை மாற்றானிடம் அடகு வைப்பதா? விற்பதல் என்றெல்லாம் வெகுண்டெழுந்தார்கள். வீட்டிற்குள் நடக்கும் விடயமாக இருந்தாலும் அது தீர்க்கப்படாவிட்டால் வெளியில் வந்து விடும். இது இயற்கை. தீர்வு கிடைக்காதவன் மாற்றானிடம் உதவி கேட்டு அலைய வேண்டியுள்ளது. அவ்வாறே நாட்டுப் பிரச்சினையும், இதற்கு வர…

  14. தமிழ் சிவில் சமூகம் என்ற கோதாவில் 'கூட்டமைப்பிற்கான பகிரங்க விண்ணப்பம்' என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் தொடர்பாக புளொட்டின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம். புதுடில்லியில் கடந்த ஆகஸ்ட் 23ம், 24ம் திகதிகளில் இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து தமிழ் கட்சிகள் மாநாட்டில் தேசியம், சுயநிர்ணயம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானத்தை புளொட் அமைப்பு எதிர்த்ததாக தமிழ் சிவில் சமூகம் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும் என்பதை நாம் தெரியப்படுத்துகின்றோம். அந்த மாநாட்டில் இந்திய பாராளுமன்றத்திற்கு பொதுவாக சமர்ப்பிக்கவெ…

  15. ”த‌மிழக‌த்த‌ி‌ன் முத‌ன் எ‌தி‌ரி ம‌த்‌திய அரசுத‌ா‌ன்” எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டி‌ய‌ன் ஆவேசமாக கூ‌றினா‌ர். ‌விருதுநக‌ர் மாவ‌ட்ட‌ம், ராஜபாளையத்தில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய போது இதனை தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், இலங்கையில் தமிழர்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் இலங்கை அரசை போர் குற்றவாளி என கண்டிக்கும்போது இந்தியா இலங்கையை தட்டி கேட்கவில்லை எ‌ன்று‌ம் பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனை ஏற்படும்போது மாநில மக்களிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது எ‌ன்று‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர். விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது எ‌ன்று கூ‌றிய தா.பா‌ண்டி‌ன், ஊழலை ஒழிக்க மக்களுக்கு…

  16. சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா இராணுவத்தின்களமுனைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள சிறிலங்காவின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது. சக்திவாய்ந்த நபர்க…

    • 2 replies
    • 1.1k views
  17. சிறிலங்காவின் தேசிய மனிதஉரிமைகள் செயற்திட்டத்துக்கு ஐ.நாவின் நிதியுதவியைப் பெறக்கூடாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய மனிதஉரிமைகள் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 150,000 டொலர் நிதியுதவியை பெறுவதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்திருந்தார். தேசிய மனிதஉரிமைகள் செயற்திட்டத்தை வரைதல், ஒருங்கிணைத்தல், கூட்டங்களுக்…

    • 4 replies
    • 1.1k views
  18. புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் இரு தினங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் சுமார் 1200 குடும்பங்கள் வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக வீடுகளிலும், ஓலைக்குடிசையிலும் வாழ்ந்து வரும் இவர்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததினால் இருக்க இடமின்றிப் படுத்துறங்கவோ, சமைத்துண்ணவோ முடியாமல் குழந்தை, குட்டிகளுடன் திண்டாடுகிறார்கள். இதே நேரம் இப்பிரதேசத்தில் உள்ள பல ஆறுகள் பெருக்கெடுத்து வீதிகளுக்கு குறுக்கே பாய்ந்து செல்வதால் வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து நேரில் சென்று பார்வையிட்டுள்ள புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் ஜெயகாந்த் தேவையான அவசர உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் இரு தினங்களாகத் …

  19. மனிதஉரிமைகள் மீறப்படுவதாகக் கூறி எகிப்தைப் போல, சிறிலங்காவிலும் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. வெறும் பகல்கனவாகவே முடியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சரவையின் முடிவுகளில் நம்பிக்கை வைக்காது, வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்திய காலம் மாறிவிட்டது. அந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாட்டைப் பிரித்து ஒரு துண்டைக் கொடுப்பது தான் தீர்வு என்று வெள்ளைக்காரர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் நாம் நாட்டைப் பிரிக்காமலேயே தீவிரவாதத்துக்கு முடிவ…

  20. 615, 000 மக்களே யாழில் உள்ளனர்: மாவட்ட செயலாளர் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழவேண்டிய யாழ் மாவட்டத்தில் இன்று சுமார் 1 இலட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரம் மக்களே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் யாழ். மக்களின் சனத்தொகை விருத்தி குறைவடைந்து வருகின்றது என யாழ் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆறுமுக நாவலரின் 132ஆவது குரு பூஜைத்தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், 30 வருட கால யுத்தம் முடிவடைந்து இன்று மக்கள் மிகவும் அசௌகரியமான நிலையில் விரக்தியோடு இரு…

  21. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தமிழ் மக்களின் கண்ணீருக்கு விடை தேடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழு முன்னிலையில் தமது துயரங்களை கூறியிருந்தனர். ஆனால் அதற்கான விடை வழங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என்று சிறி ரெலோ அமைப்பின் தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,அரசாங்கத்தினால் நல்லிணக்க ஆணைக் குழு கடந்த வருடம் அமைக்கப்பட்டபோது மாவட்டங்கள் தோறும் விசாரணைகள் நடத்தப்பட்டது. இதன்போது ஆணைக்குழு முன் தோன்றிய பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலரும் தமது துயரரங்களை கொட்டித் தீர்த்திருந்தனர். தாம் பட்ட துன்பங்களுக்கு ஆணைக்குழு உரிய பரிகாரம் காணும் என்ற நம்பிக்கையே மக்கள் மத்தியில் காணப்பட்டது. …

  22. வைச்சிட்டாய்யா ஆப்பு வைச்சிட்டான்....

  23. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. அவ்வறிக்கை ஏற்றக்கொள்ளப்படமுடியாததொன்றுமாகும். இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டபோதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரிப்பதாக அறிவித்திருந்தது. நாம் ஏற்கனவே கடந்த ஒருவருடத்திற்கு மேலாக கூறி வந்தது போன்று நடந்தவற்றை மூடி மறைத்து முற்றாக புலிகளையும் தமிழ் தரப்புகளையும் குற்றஞ்சாட்டுவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழுவின் அறிக்கை வெளி வந்துள்ளது. இந்நிலையில் சர்வதேசம் இனியும் பொறுத்திராது பக்கசார்பற்ற விசாரணையை நடத்தவேண்டும். கடந்த ஒருவருடத்தினுள் எவ்வளவோ செய்திருக்கமுடியும் இனிமேலும் பொறுத்திருக்கமுடியாது அது வ…

  24. முல்லைத்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு நேற்றுக் காலை சென்ற மீனவர்கள் இரவுவரை கரை சேரவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.முல்லைத்தீவு பகுதியில் நேற்று வானிலை அசாதாரணமாக காணப்பட்டது. கடும்காற்று, மழை என்பன காரணமாக வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக கொந்தளிப்புடன் இருந்தது. இந்த நிலையில் நேற்றுக் காலை தொழிலுக்குப் புறப்பட்டுச் சென்ற மீனவர்கள் திரும்பி வரவில்லை. அசாதாரண வானிலை காரணமாக மீனவர் களை தேடிக் கண்டறியும் முயற்சியும் கைகூட வில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பிரதி கிடைத்த தகவல் நள்ளிரவு மீனவர்கள் சென்ற படகு மட்டும் கரை ஒதுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. http://www.tamilthai...newsite/?p=1934

  25. ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. http://youtu.be/YG0h4-EVxKs ஈழத் தமிழர் தயாகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.