ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
செய்தி மூலம் :- http://www.thinakkathir.com/?p=24662 இரா.துரைரத்தினம் கே.பியினால் வழிநடத்தப்படும் லங்காசிறி மனிதன் இணையத்தளங்கள்- லங்காசிறி குகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் ஒத்துக்கொள்கிறார் Published on December 8, 2011-7:39 pm · 11 Comments சிறிலங்கா அரசாங்கத்துடன் இருக்கும் கே.பியினால் லங்காசிறி, மனிதன் இணையத்தளங்கள் வழிநடத்தப்படுகின்றன என்ற விடயத்தை மனிதன், லங்காசிறி இணையத்தளங்களை நடத்தும் சிறிகுகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனே ஒத்துக்கொண்டிருக்கிறார். மனிதன், லங்காசிறி இணையத்தளத்தின் பணிப்பாளர் ஒரு இனதுவேசம் கொண்ட சிங்கள பெண்ணாகும். இந்த விடயங்களை நாம் வெளிப்படுத்துவதற்கான ஆதாரங்களை திரட்டிய வேளையிலேயே எம்மை கருணாவுடன் தொடர்ப…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கை இந்தியா போன்ற தென்னாசிய நாடுகளிலிருந்து வந்து கனடாவில் குடியேறியவர்கள் பல்வேறு துறைகளில் இன்று வெற்றி பெற்றவர்களாக கனடாவிற்கு நன்மைகளைத் தந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்துள்ளார். இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடாவின் நோர்த் யோர்க் நகரில் பல்லின பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடிய கனடாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னி புகழாரம் சூட்டினார். கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கனடாவில் இயங்கும் தேசிய ஊடகங்களைவிடவும் பல்மொழி ஊடகங்களே இந்த நாட்டின் பல…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆற்றியஉரையை தாமே தயாரித்து வழங்கியதாக பிரி;த்தானிய நிறுவனம் வெளியிட்ட தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.2010 ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் ஜனாதிபதி ஆற்றிய உரையை தமது நிறுவனமே தயாரித்ததாக பிரித்தானியாவின் பெல் பொட்டின்கர் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். குறித்த உரை சிறப்பானதாக இருந்ததாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். எனினும் குறித்த உரையில் அடங்கியிருந்த பதங்கள் குறித்து நிறுவனம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதியின் இந்த உரையில் நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனம் அமைந்திருக்கிறது. எனினும் ஒரு அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் நடத…
-
- 3 replies
- 992 views
-
-
இலங்கையில் 2009 இல் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற பகுதிகளில், இதுவரை ஆட்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் பல பொதுமக்களது சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அந்தப் பகுதிகளுக்கு முழுமையாகச் சென்றுவர வசதி செய்யப்பட்டாக வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான றிச்சர்ட் ஹொவிட் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பகுதிகளில் நிலக்கண்ணிகள் இருப்பதன் காரணமாகவே அங்கு செல்ல எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. இந்தப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை என்பது இன்னமும் ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கிறது. ஆட்கள் செல்வதற்கு இதுவரை அனு…
-
- 2 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் மக்களின் மனம் நோகும்படி வெள்ளைக்காரர்கள் நடந்து கொண்டால் கப்பலில் ஏறி வெள்ளைக்காரர்கள் தங்களுக்கென தனி நாடு தேட வேண்டிவரும் என அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டியுள்ளார். பாகிஸ்தான் மீதான நேடோ படைகளின் தாக்குதலை கண்டித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “சீனா, ரஸ்யா உள்ளிட்ட பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ் ஆகிய ஆசிய நாடுகள் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக எம்முடன் மிகவும் வலுவான உறவாக இருந்தனர். அதனை மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு ஏதாவது மனக்காயம் ஏற்படுமாயின் உலகில் உள்ள எந்தவொரு சண்டியருக்கும் நாம் அஞ்ச மாட்டோம். வெள்ளைக்காரர் மண்டியிட்டு மன்னிப்புக…
-
- 0 replies
- 924 views
-
-
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அவசரகால மற்றும் பயங்கரவாத சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 800 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாகக் தமிழ் அரசியல் கைதிகளின் சார்பில் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரம் வருமாறு: ஐநா மனித உரிமைகள் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அவசரகால மற்றும் பயங்கரவாத சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 800 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். காலம் காலமாக எமது விடுதலையை வலியுறுத்திப ல வழிமுறைகளில் எமது நியாயமான வேண்…
-
- 0 replies
- 429 views
-
-
யாழ். மாவட்டத்தில் இன்னும் 36,442 பேர் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டி உள்ளனர் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (09) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்களின் விபரத்தை அவர் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 5ஆம் திகதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் 10,170 குடும்பங்களைச் சேர்ந்த 36,442 பேர் இன்னமும் யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றப்படவேண்டி உள்ளனர் என்றும் இவர்களில் 8,459 குடும்பங்களைச் சேர்ந்த 30,021 பேர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் வசித்து வருவதாகவும், 1,711 குடும்பங்களைச் சேர்ந்த 6,421 பேர் நலன்புரி நிலையங்களில் வசித்து வருவதாகவும் அவர் …
-
- 0 replies
- 585 views
-
-
இந்ந வருடத்தின் மிகப்பெரிய ஜோக் ! ஆசியாவில் மாத்திரமல்ல முழு உலகத்திலுமே ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் இலங்கையே மிகவும் பழைமைவாய்ந்த நாடாகும். அர்த்தமுள்ள ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தோனேசியாவில் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் ஆரம்பமான பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான அனுபவங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான சந்திஷ்டானங்களாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.alaikal.com/news/?p=90302
-
- 0 replies
- 1.9k views
-
-
"தந்தையும் தம்பியும்" - நூல் வெளியீட்டு நிகழ்ச்சி இடம்: தி.நகர்,சென்னை நாள்:2-12-2011 "தந்தையும் தம்பியும்" - நூல் வெளியீடு இயக்குனர் தாமரா வரவேற்ப்புரை கொளத்தூர் மணி உரை வேல்முருகன் உரை பரிதி இளம்விழுதி உரை தங்கபாண்டியன் ஏற்ப்புரை வைகோ உரை
-
- 0 replies
- 785 views
-
-
தங்களிடம் பயிற்சி பெற வருமாறு, இந்திய ராணுவத்திற்கு இலங்கை ராணுவத் தளபதி அழைப்பு இலங்கை ராணுவத்திடம் வந்து பயிற்சி பெற்றுச் செல்லுமாறு இந்திய ராணுவத்திற்கு இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லிக்கு வந்துள்ளார் இந்த ஜெயசூர்யா. ராணுவத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.முப்படைத் தளபதிகளையும், இந்திய ராணுவத் தலைமைத் தளபதியையுயம் சந்தித்துப் பேசினார்.அப்போதுதான் பயிற்சி பெற வருமாறு இந்திய ராணுவத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். கடந்த 30 வருடமாக தாங்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்ததால் போரில் தங்களுக்கு நல்ல அனுபவம் இருப்பதாக கூறினாராம் ஜெயசூர்யா. மேலும் தங்களுக்கு நிறைய யுத்த தந்திரகள் தெரியும் என்றும், அதை உலகநாடு…
-
- 2 replies
- 934 views
-
-
மூன்று விடயங்களை நிராகரித்தால் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாணசபைக்கான அதிகாரங் களைப் பகிர்தல் விடயங்களை அரசு நிராகரித்தால் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லையயன அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம், அரச காணிகளை மாகாணங்களுக்கு உரித்தாக்கல். ஆகிய மூன்று விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கொ …
-
- 0 replies
- 1.1k views
-
-
நேட்டோவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நேட்டோ படையினருக்கு எதிராக கொழும்பு தெவட்டகஹா முஸ்லிம் பள்ளிவாயில் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கும் நேட்டோ படைகளுக்கும் எதிராக பல்வேறு வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஒபாமா ஒழிக”, ‘அமெரிக்காவின் கைப்பொம்மையான பான் கீன் மூன் ஒழிக” மற்றும் ‘சதாம்…
-
- 0 replies
- 854 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாளும் மூத்த அதிகாரியான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் வில்லியம் பேர்ன்ஸ் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை இந்தியா செல்கிறார். எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுத்துறைச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோருடன் முக்கிய பேச்சுகளை அவர் நடத்தவுள்ளார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் இந்தியத் தரப்புடன் விரிவாக ஆராய்வர் என்றும், இலங்கையின் அரசியல் போக்குகள் பற்றியும் இதன்போது பேசப்படும் என்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. தெற்கா…
-
- 1 reply
- 1k views
-
-
14.12.11 மற்றவை ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஒரு முக்கியமான நாள். மாவீரர் தினம்! அன்று, தமிழ் ஈழ விடுதலைக்காய் போராடி வீழ்ந்து விதைக்கப்பட்ட மாவீரர்கள் உறங்கும் கல்லறைத் தோட்டமான மாவீரர் துயிலும் இல்லங்களில் மொத்த ஈழ மக்களும் கூடுவார்கள். இந்த தினத்திற்கு இன்னொரு விசேஷம். அன்றுதான், சரியாக ஆறு மணி ஐந்தாவது நிமிடத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை ஆரம்பமாகும். இப்பொழுது, உரையாற்ற பிரபாகரனும் இல்லை மக்கள் அஞ்சலி செலுத்த மாவீரர் துயிலும் இல்லங்களும் இல்லை. எப்படி கழிந்தது இந்த வருட, மாவீரர் தினம்? சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அன்று ஒரு விசிட் செய்தோம். …
-
- 1 reply
- 1.6k views
-
-
கால் வைக்குமா அமெரிக்க இராணுவம் ? அமைச்சரவை கடந்தவாரம் கூடியபோது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் உதவியுடன் வடக்கில் உள்ள நான்கு மருத்துவமனைகளைத் திருத்திமைக்கும் திட்டமே அது. ஒட்டுசுட்டான், முழங்காவில் பூநகரி மற்றும் பளை ஆகிய இடங்களில் உள்ள- போரினால் சேதமடைந்த மருத்துவமனைகளை புனரமைப்பதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் 190 மில்லியன் ரூபாவை வழங்கியது. இந்தநிதியுடன் உள்ளூர் நிதி 23 மில்லியன் ரூபாவையும் சேர்த்து இந்த நான்கு மருத்துவமனைகளையும் புனரமைப்புச் செய்ய அமைச்சரவையின் அனுமதி கோரினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. ஆனால் இந்தத் திட்டத்துக்கு உடனடியாகவே அமைச்சர்…
-
- 5 replies
- 1.8k views
-
-
சீனப் புள்ளவிபரங்களின் படி, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக செயற்பாட்டுத் திட்டங்களானது 2010ல் 2.1 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. இவ்வாறு சீன நாளிதழான 'People's Daily'யில் அதன் செய்தியாளர் Wu Chengliang எழுதியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அச்செய்தியின் முழுவிபரமாவது, சீனா, சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் கடந்த பல ஆண்டுகளாக ஆரோக்கியமான, உறுதித்தன்மை வாய்ந்த உறவைப் பேணிவருவதுடன் மிக ஆழமாக பல்துறை சார்ந்த ஒத்துழைப்புக்களையும் தமக்குள் பரிமாறி வருகின்றன. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பரஸ்பர பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது. சீனப் புள…
-
- 0 replies
- 500 views
-
-
இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றை பிரித்தானியாவில் சட்ட விதிமுறைக்கு அப்பால் தடுத்து வைத்தமைக்காக பிரித்தானிய உள்நாட்டுச் செயலாளர் 37 ஆயிரம் பவுண்களைக் குறிப்பிட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பி வாழ அனுமதிக்கபபட வேண்டும் என்றும் பிரித்தானிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவிலிருந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பவேண்டும் என்று பிரித்தானிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இலங்கைக் குடும்பம் முன்னர் வடக்கு லண்டனில் வசித்து வந்தநிலையில், அந்த குடும்பத்தினர் சட்டரீதியற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டமையை அடுத்து ஜெர்மன…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று நல்லூர்க் கந்தனில் நடைபெற்ற கார்த்திகைத் தீபத் திருநாள் குமராலய தீபம் thx http://newjaffna.com
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் 21,000 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர சிரமப்படுவதை தவிர்க்க தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆகிய துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து மாணவர், மாணவியர் விடுதிகளிலும், அவர்கள் தங்கி கல்வி பயில ஆணையிட்டுள்ளார். இதன்படி, தமிழகத்தில் தற்போது இயங்கி வரு…
-
- 0 replies
- 858 views
-
-
கட்டார் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 12ம் திகதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளனர். இலங்கை வரும் இவர்கள் முக்கிய அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, அவுஸ்திரேலிய பாராளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழு நேற்று இலங்கை வந்துள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ்வின் அழைப்பை ஏற்று இந்த பாராளுமன்றக் குழு இலங்கை வந்துள்ளது. அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மரியா வம்வக்கிநேவ் தலைமையிலான இந்த பிரதிநிதிகள், சபாநயாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஏனைய தலைவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம…
-
- 0 replies
- 597 views
-
-
தமிழ் இனம் எவரிடமும் கையேந்தியோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை பெற்றுக்கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. தமிழினம் தனித்துவமான இனம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட இறைமையுள்ள பண்டைய இனம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாகவே ஜெயானந்தமூர்த்தி தனது கண்டனத்தைத் வெளியிட்டுள்ளார். ஜெயானந்தமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர்கள் சிங்களவர்கள் விரும்புத் தீர்வைப் பெற்றுக் கொள்வதாயின் அதை அரை நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிரு…
-
- 0 replies
- 649 views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும் மேஜர் ஜெனரல் மேத்தா கோரிக்கை தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பாரிய பொறு ப்பு இந்தியாவிற்கு உள்ளது.அரசியல் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை புதுடில்லி முன்னெடுக்கத் தவறுமாயின் அது மன்னிக்க முடியாதது என முன்னாள் இந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் கே.மேத்தா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் எழுதியுள்ள பத்தியிலேயே மேற்கண்டவாறு வலியு றுத்தியுள்ளார். தனது மூலோபாய நலன்களை நன்கு உணர்ந்துள்ள இந்தியா, இலங்கைத்தீவில் இழந்த தனது அரசியல் செல்வாக் கினை சமப்படுத்துவதற்கா…
-
- 2 replies
- 634 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள மக்களின் இதயங்கள் உடைந்து போயுள்ளன. அவர்களின் மனங்களை முழுமையாக எம்மால் வென்றெடுக்க முடியவில்லை. அனைவரும் ஒன்றுபட்டே அதனைச் செய்யமுடியும். தமிழ் ஊடகங்களில் என்னை இனவாதியாகவே காட்ட முனைகின்றனர். ஆனால், நான் அப்படிப்பட்டவன் அல்லன். இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றுக்காலை நடைபெற்றது. இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக அன…
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியினில் குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி உள்ளி;ட்ட இருவர் இன்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்களது மகனும் இச்சம்பவத்தினில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நீர்வேலியை சொந்த இடமாக கொண்டவர்களான மார்க்கண்டு உதயகுமார்(வயது 55) அவரது மனைவியான உதயகுமார் வசந்தமலர் (வயது 45) ஆகிய இருவருமே படுகொலை செய்யப்பட்டு;ள்ளனர். மனைவியான உதயகுமார் வசந்தமலர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கணவரான மார்க்கண்டு உதயகுமார் இன்றிரவு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் வீடு திரும்பியிருந்த நிலையினில் வீட்டு வாசலோரமாக மறைந்திருந்த நபரொருவர் இவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு தப்பியோடி…
-
- 1 reply
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றக் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. நாடாளுன்ற சபாநாயகர் சாமல் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இந்த குழு இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளது. லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெரியா வம்வாகினோ தலைமையிலான இந்த குழு, நாடாளுமன்ற சபாநாயகரை எதிாவரும் தனங்களில் சந்திக்கவுள்ளது. அத்துடன் எதிர்கட்சித் தலைவரையும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பேசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கமே இந்த குழுவினது இலங்கை வருகை என இராஜதந்திரவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 637 views
-