ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
பிராமி ஜெகன் இவர் அவுஸ்ரேலியாவில் மஹிந்த இராஜபக்ஷவிற்கு எதிராக போர்க்குற்ற வழக்குத்தாக்கல் செய்த ஜெகன் அவர்களின் புதல்வி. நடந்து முடிந்த மாவீரர் நாள் நிகழ்வும் அதில் தமிழர்கள் எதனை சர்வதேசத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றார்கள் எனவும் கூறியுள்ளார். . உலகத்தில் தமிழர்கள் வாழும் நாடுகளில் அனைத்து இடங்களிலும் நவம்பர் 27 இல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் எங்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர். நானும் சிட்மியில் உள்ள சிலவர் வோட்டர் என்ற இடத்திற்கு சென்றேன். அங்கு 2000 ஈராயிரம் வரையான மக்கள் எமது மாவீரர்களுக்கும் இறுதிப்போரில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் மக்களிற்குமாக அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். . பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எனவும் மனதிற்குள் முள்ளிவாய்க்கால் சம்ப…
-
- 1 reply
- 917 views
-
-
காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் பெரியார் திக ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் நிகழ்ச்சி 27-11-2011 அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி, தோழர் தியாகு, தோழர் வேல்முருகன், பேராசிரியர் சரஸ்வதி, அற்புதம் அம்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேதகு தமிழீழ தேசிய தலைவர் வே பிரபாகரனுடைய ஐம்பத்தி ஏழாவது பிறந்தநாளையொட்டி ஐம்பத்தி ஏழு கிலோ எடை கொண்ட புலிக்கொடி வடிவிலான கேக்கு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அன்று மூன்று தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்த தோழர் செங்கொடி நினைவு இல்லம் திறக்கப்பட்டது. மாலை மாவீரர்களின் நினைவாக சுடர் ஏந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளை இங்கே காணலாம். …
-
- 1 reply
- 931 views
-
-
பெண் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கண்டி பொலிஸ் விசேட குற்றச்செயல் பிரிவைச் சேர்ந்த பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்படி ஆண் இன்ஸ்பெக்டரினால் முன் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை கண்டி பிரதான நீதவான் உதய கரலியத்த ஏற்றுக்கொண்டுள்ளார். தன்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தான் எந்த நேரமும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படலாம் என எதிர்பார்ப்பதனாலலேயே தான் இந்த முன் ஜாமினை கேட்பதாக அவர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார். பிரதான நீதவான், இந்த முன் ஜாமினை 10000 ரூபா காசு, ஒரு இலட்சம் ரூபா சரீர பிணை என்ற நிபந்தனைகளின் கீழ் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டதாக கூற…
-
- 1 reply
- 744 views
-
-
அரியாலை கிழக்கு போக்கறம்பைக்குளம் பிள்ளையார் கோயிலை அண்டிய பகுதிகள் இராணுவத்தினர் பாரிய முகாம் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் இவ்வருட ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. மக்கள் படிப்படியாக மீள் குடியேறி தங்களது இயல்பு நிலைக்கு மாறிவரும் நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதிக்கு வந்த இராணுவக் குழு, எந்தவித அனுமதியுமின்றி மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து எல்லைகளை அடையாளமிட்டு வருகின்றனர். மேலும் இராணுவ வேலிகள் அடைப்பதற்கு பனைமரங்கள், மற்றும் காட்டுமரங்களை வெட்டிக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். படையினரின் இந்த நடவடிக்கையினால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் இப்பகுதியில் தொடர்ந்தும் வாழ முடியுமா என்ற சந்தேகத்தில் இருப்பதாகத் தெர…
-
- 1 reply
- 856 views
-
-
தமிழர்களுக்கு பிரச்சினை இல்லையென்று கூறுவார்களேயானால் மீண்டும் பயங்கரவாதம் முளைக்கும்: ஜயலத் அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் அரசாங்கம் 25 வீதத்தைக் கூட எட்டிருக்கவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் பிரச்சினைகள் இல்லையென கூறுவார்களேயானால் அது இலங்கையில் மீண்டுமொரு பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன சற்றுமுன் சபையில் தெரிவித்தார். சர்வதேச பயங்கரவாதியான கே.பி.க்கு சென்னை நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச பொலிஸாரும் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவரை பாதுகாத்து வருகின்ற அரசாங்கம் சிறப்புரிமைகளை வழங்கி வருகின்றது. அவரை ஏன் சர்வதேச பொலிஸாரிடம் அரசாங்கம் கையளிக்க நடவடிக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கு-கிழக்கில் போர் பாதித்த மக்களுக்கு நிவாரணம் ஏதுமில்லை ஜனாதிபதியின் 6 மாதகால வாகனச் செலவு மட்டும் ரூ.293 கோடி; பட்ஜெட் குறித்து ஜே.வி.பி கடும் விமர்சனம் தனி ஒரு மனிதரான ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனங்களுக்காக மட்டும் ஆறு மாதங்களுக்கு 293 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று ஜே.வி.பி. உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு:போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஏதாவது விமோசனம் கிடைக்கும் எனப் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அரசு அப்பகுதி மக்களை முற்ற…
-
- 0 replies
- 636 views
-
-
பிரித்தானிய லிவர்பூல் நகரில் இயங்கி வந்த வணிக நிலையம் ஒன்றில் அங்கு பணியாற்றிவர்வர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கழுத்தில் கத்தி வெட்டுக்கு உள்ளாகியவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளார். . உயிரிழந்த இலங்கை நபரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. . இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கொலைக்கான முகமூடி அணிந்து வந்ததனால் இதுவரை கண்டறியப்படவில்லை என மேர்சிசைட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பு கமராவால் (CCTV) பதிவு செய்யப்பட்டுள்ளது. Re
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மொழிப்பெயர்க்கும் பணிகள் தற்சமயம் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிக்கை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளுக்கும் மொழிப்பெயர்க்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் எமக்குத் தெரிவித்தார். மும்மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட பின் அறிக்கை விரைவில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் எனவும் அதில் தாமதம் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்யுமாறு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு கிழக்குப் பகுதிகளில் அர…
-
- 1 reply
- 844 views
-
-
சிங்கள தமிழ் சமூகங்கள் ஒன்றையொன்று சந்தேகக் கண்ணினால் பார்க்கின்றன. கடந்த 8 தசாப்தங்களாக (1925லிருந்து இன்று வரை) இந்த இரு சமூகங்களும் எதிர்கொண்ட மோசமான அனுபவங்களே இதற்கு காரணமாகும். இவை அனைத்தும் உண்மையான அனுபவங்களாகும். நாம் கடந்த 30 ஆண்டுகளாக சமூக இனத்தவரைக் கொல்லும் போரில் ஈடுபட்டிருந்தோம். ஒருவர் மற்றவன் மரணத்தினை விரும்பிய சூழல் அது. அதாவது சமூக இனத்தின் துன்பம் குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்தோஷமடைந்தனர். இது குறித்து இந்த இரு சமூகங்களில் எந்த சமூகம் அதிர்ச்சியடைய வில்லை. மீண்டும் போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் காணப்பட்ட பண்புகளை வெளிப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் விமல் வீரவன்ச பெரிய மாநாடு ஒன்றினை நடாத்தி 13க்கு அப்பாலா இப்பாலா என்ற வின…
-
- 1 reply
- 923 views
-
-
பொதுமக்களுக்கு தங்கநகைகள் குறித்து தவறான தகவலை வழங்கியதாக குரொய்டனில் உள்ள தமிழ் நகைவர்த்தகர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். http://www.thisiscroydontoday.co.uk/Jewellery-store-owner-guilty-misleading-public/story-13952763-detail/story.html Jewellery store owner guilty of misleading public LOOTERS who stole from a jewellery shop during the riots could discover their swag is not worth as much as they thought. Mithus in London Road, West Croydon was completely ransacked and emptied of stock during the riots in August. MISLEADING: Mehala Parayoganathan But owner Mehala Parayoganathan has admitted to displaying 18 carat gold items as 22 cara…
-
- 5 replies
- 2.3k views
-
-
அன்ரன் பாலசிங்கத்தை புலிகளில் சிலர் ஓரங்கட்ட முயன்றனர் -விக்கிலீக்ஸ்! Published on December 1, 2011-10:26 am விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார். இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாகஅன்ரன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர். கிழக்கில் கடும் போக்குடைய கருணா, கர…
-
- 0 replies
- 979 views
-
-
07.12.11 மற்றவை இலங்கையில் கடைசி யுத்தம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. போர் முடிந்ததும், ‘‘முகாம்களில் தங்க வைக்கப்பட்ட தமிழர்களை உடனே மீள் குடியமர்த் திவிடுவோம்’’ என்றார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. சொன்னதைச் செய்தாரா? செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக இருக்கிறது திருகோணமலை அருகேயுள்ள தமிழர் கிராமமான சம்பூர். இனி எப்போதும் இந்த அழகிய கிராமம் தமிழர்களுக்குக் கிடைக்காது என்ற சிங்கள அரசுடன் இந்தியாவும் கைகோர்த்துள்ளதுதான் ஆச்சரியம்! “இங்கே அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்திய அரசு’’ என்கிறார்கள்! உண்மை என்ன என்பதை அறிய சம்பூர்வாசிகளுடன் பேசினோம். …
-
- 0 replies
- 745 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் ஈழத்தமிழர்கள் ராஜ வாழ்க்கை வாழலாம் - செல்வம் அடைக்கலநாதன் http://www.adaderana.lk/tamil/opinion_alindaya.php?nid=2676
-
- 7 replies
- 2.2k views
-
-
வட கிழக்கு மாகாணங்களில் இறப்பர் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க உள்ளதாகவும் இறப்பர் உற்பத்தியினை அதிகரிக்கவேண்டுமெனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்ததன் பின்னணியில், சிங்கள மக்களை தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டு குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக எமது புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.ஆரம்ப காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்டு குடியேறி வந்த சிங்களக் குடியேற்றங்கள், யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தீவிரமாக அரசாங்கத்தின் ஆசியுடன் குடியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து தமிழர் தரப்பு பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கள…
-
- 1 reply
- 598 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் இலங்கை அரசுக்கு ஆதரவு! வரவுசெலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மோகன்லால் கிறெறோ, இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வரவுசெலவு திட்ட விவாதம் இடம்பெற்றபோது சபாநாயகரின் அனுமதி பெற்று சிறப்புரையாற்றிய அவர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியுமெனக் குறிப்பிட்டார். வரவுசெலவுதிட்டம் மீதான விவாதம் இன்று மாலை முடிவடைந்து வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கூறிய அவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையை கடுமையாக விமர்சித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். வரவுசெலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என ஐக்கிய…
-
- 1 reply
- 863 views
-
-
போர்க்குற்றம் தொடர்பிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சில படையினர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கின்ற அரசாங்கம் அவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும்மேற்கொள்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுவருகின்றது. குற்றச்சாட்டுக்களுக்கான தண்டனைகள் வழங்குவதாக அறிவிக்கப்படும் போது கடும்போக்கு சிங்கள இனவாதிகள் அதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று முற்கூட்டியே அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. இந் நிலையில் இந்தவிடயத்திற்கமைய தண்டனைக்கான முயற்சி மேற்கொள்ளப்படும் போது அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்ற விடயத்தினை தமிழ்த் தேசியப் பத்திரிகைகளாக சொல்லிக்கொள்கின்ற உதயன், சுடரொளி ஊடாக அரச தரப்பு கசியவிட்டிருக்கின்றது. குறித்த செய்தியின் ஊடாக அரசாங்கத்தின் தந…
-
- 1 reply
- 929 views
-
-
மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்மொன்றில் தண்ணீர் பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 2012 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றது. இன்று மாலை 3 மணியளவில் கொட்டும் மழையிலும் கொழும்பு தொழிநுட்ப சந்திக்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நிதியமைச்சை நோக்கி நகர்ந்து சென்றது. இதன்போது முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்கும் முகமாக கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றவட்டமருகில் பாதைகளை மறைத்திருந்த பொலிஸார் அவர்களை நிதியமைச்சினை நோக்கிச் செல்வதைத் தடு…
-
- 3 replies
- 1.6k views
-
-
விஜயபாகு காலாட்படைப் பிரிவினரின் நலன்புரிச் செயற்பாடுகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைக்காக குருநாகலில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம் நடத்தப்படவுள்ளது. இதற்கான 50 ரூபா நுழைவுச்சீட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் படையினரால் கட்டாயப்படுத்தி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குருநாகலில் உள்ள போயகன மோட்டார் ஓட்டப் பந்தயத் திடலில் இந்தப் போட்டி மார்ச் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பந்தயத்திற்கான 50 ரூபா பெறுமதியான டிக்கெட் படையினரால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த டிக்கெட் அதிஷ்டலாபச் சீட்டாகவும் குலுக்கப்படவுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் மீசாலை, புத்தூர் சந்திப் பகுதியில் வாகனத்தில் சென்றவர்களை மறித்த படையினர் மே…
-
- 1 reply
- 632 views
-
-
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 72 மணித்தியாலங்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 27 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. இவ் வீதித் திறப்பு விழாவிற்கு ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு மறுநாள் 28ம் திகதி இரண்டு விபத்துக்களும் நேற்று 29ம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு விபத்தும் இடம்பெற்றுள்ளன. கடந்த 28ம் திகதி காலையில் இடம்பெற்ற வான் விபத்தில் இருவர் காயமடைந்து ஹொறன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 1 reply
- 879 views
-
-
-
- 15 replies
- 1.9k views
-
-
27.11.2011 அன்று, மாவீரர் நாள் மற்றும் 26.11.2011 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்நாள் என்பன தாயகத்தில் போராளிகளினால் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழீழதேசம் எதிரியின் வல்வளைப்பில் உள்ள நிலையிலும் தமிழீழ மக்கள் எழுச்சியுடன் தங்கள் வீடுகளிலும், தாம் வாழுகின்ற ஏனைய இடங்களிலும் மாவீரர்களை மனதில் நிறுத்தி வணக்கம் செலுத்தியுள்ளார்கள். இந்நிலையில் தாயகத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட ஓரிடத்தில் போராளிகளினால் மாவீரா நாள் வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும், சிறப்பாகவும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி வெற்றிபெற்றால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படுமெனவும், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது. மார்ச் மாதம் 19ம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடருக்கு முன்பு, தேசிய அரசாங்…
-
- 6 replies
- 2.2k views
-
-
வீரகேசரிக்கு சுமந்திரன் கொடுத்த செவ்வி http://youtu.be/HR-U4uXva-E http://youtu.be/hQEF-nBGSMY
-
- 0 replies
- 826 views
-
-
'மாவீரர் நாளும்' நல்லிணக்கமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்ற நினைவு தமிழ் மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று அரசாங்கம் கருதினாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அதனை நினைவுபடுத்தியுள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலைத் திறப்பு விழா கடந்த 27ஆம் திகதி தான் நடைபெற்றது.அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நவம்பர் 27 என்றதும் வீட்டை விட்டு வெளியே வராமல் கலங்கியபடி இருந்த காலத்தை மறக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மாவீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த நாளுக்காக, ஒரு வாரத்துக்கு குழந்தைகளைப் பெற்றோர் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர் என்றும், அந்த யுகம் இப்போது மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளால் பிரகடனம…
-
- 0 replies
- 640 views
-
-
இலங்கை கடற்படை கைது செய்த 5 மீனவர்களை விடுவிக்கக் கோரி 5,000 மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரத்தில் 5,000 மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 700 விசைப்படகுகளில் சுமார் 3,000க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்கக் கூடாது என்று கூறி விரட்டினர். மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாட்வின் என்பவரின் படகை மடக்கினர். அதில் இருந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், போல்டட், பிரசாந்த், வ…
-
- 0 replies
- 550 views
-