ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
அவுஸ்ரேலியாவில் மஹிந்த இராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத்தொடுத்த மீனா கிருஸ்ண மூர்த்தி என்பவர் ஒரு போராளி என சிங்கள அரசு பொய்யுரைத்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அவுஸ்திரேலிய விஜயத்தை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மாலதி படைப்பிரிவின் முன்னாள் பெண் போராளியான ஈழநதி என தெரியவந்துள்ளதாம். மீனா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில், இலங்கைக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர், அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு 9 நிமிட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார் எனவும் கூறியுள்ளது சிங்கள அரசாங்கம். இவர் குருபரன் என்ற புலிகளின் ஆயுதப்படைப் பிரிவின் உறுப்பினரை திருமணம் செய்துள்ளதாக பாதுகாப்பு படையினர் கண்டறி…
-
- 0 replies
- 983 views
-
-
அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் இன் மூன்று நாள் மாநாட்டின் இறுதி நாள் இன்று நடக்கின்றது. இந்த மா நாடு கடந்த 20 ஆம் அதிகதி ஆரம்பமானது. அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் Prestigious Sheraton on the Park, 161 Elizabeth St, Sydney எனும் இடத்தில் இந்த மா நாடு நடந்துவருகின்றது. அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் இன் இணைத்தலைவர் பேராசிரியர் இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த மா நாட்டில் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வியியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர். . கலந்து கொண்ட வெளி நாட்டவர்கள்; 1. Mr Laurie Ferguson – Labour Party - Member of Parliament for Werriwa 2. Mr Ed Husci – Labour Party - Member of Parliament for Chiffley …
-
- 0 replies
- 861 views
-
-
பூநகரியில் படைவீரரின் சடல எச்சங்கள் Sunday, October 23, 2011, 11:10 பூநகரிப் பிரதேசத்தில் விவசாயக் காணியைத் துப்புரவு செய்யும் போது அங்கிருந்து படை வீரர் ஒருவரின் சடலத்தின் எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் குறிப்பிட்ட படை வீராரின் தலைக் கவசமும் அங்கு காணப்பட்டது. பூநகரி வாடியடி வில்லடிக்குளம் பகுதியிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டது.இது தொடர்பில் குறித்த விவசாயி கிராமசேவகருக்கு முறைப்பாடு செய்ததனையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற சட்டவைத்திய அதிகாரி மற்றும், மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார், ஆகியோர் சடலத்தைப் பார்வையிட்டதுடன் மேலதிக ஆய்வுகளுக்காக சடல எச்சங்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார். பூநகரிப் பிரதேசம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந…
-
- 1 reply
- 885 views
-
-
மன்னார் எரிவாயு வளம் வியட்நாமிற்கு! Sunday, October 23, 2011, 11:17 மன்னார் கடற்பிரதேசத்தில் உள்ள எரிவாயு வளத்தை வியட்நாமிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மன்னார் கடற்பிரதேசத்தில் எண்ணெய் வளத்தைப் பெற்றுக்கொள்ளும் செயல்திட்டம் “கெயான்ஸ் லங்கா” என்ற இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய் வளத்தைப் பெறும் செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டபோதே எரிவாயு வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் கடற்பிரதேசத்தில் இருந்து எண்ணெய் வளத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அந்தப் பிரதேசம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பிரிவு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில பிரிவுகள் ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது …
-
- 1 reply
- 772 views
-
-
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம்! _ வீரகேசரி இணையம் 10/23/2011 10:34:35 AM சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களுடன் தங்கியுள்ள குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 பேர்ச்சஸ் காணியும் அரை நிரந்தர வீடு ஒன்றும் ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று திருகோணமலை மாவட்ட செயலகம் 'சம்பூர் பிரதேசத்திலிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான அன்பான வேண்டுகோள்" என்ற தலைப்பிலான அறிவித்தலில் தெரிவித்துள்ளது. அரசினாலும் பிரதேச செயலாளரினாலும் உங்களை மீளக்குடியமர்த்துவதற்காக சீதனவெளி, வேம்படித் தோட்டம், இளக்கந்தை, வீரமாநகர் வடக்கு, தங்கபுரம் குறவன்வெட்டுவான் ஆகிய பகுதிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்…
-
- 1 reply
- 756 views
-
-
13வது அரசியல் சீர்திருத்த சட்டம் தொடர்பில் அரசிற்கு குணதாஸ எச்சரிக்கை! Published on October 23, 2011-10:59 am 13வது அரசியல் சீர்திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் அரசாங்கம், பாரிய மக்கள் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தலைவர் குணதாச அமரசேகர இதனைத் தெரிவித்தார். மக்களினால் மேற்கொள்ளப்படும் இப்படியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தேசிய திட்டம் ஒன்று அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=38652
-
- 1 reply
- 674 views
-
-
இந்தியாவின் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் டில்லியில் இன்று நடந்தது இந்தியாவின் சகல் முதல்வர்களும் இதில் பங்கேற்பதாக இருந்தது. குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையை வாசித்தார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு அணுகுவதாக பிரதமர் முன்னிலையிலேயே குற்றம் சுமத்தினார் பன்னீர் செல்வம். அவர் வாசித்த அறிக்கையில்,காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யாத மாநில மக்களும் இந்திய குடிமகன்கள்தான் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. அந்த மாநிலங்களின் நியாயமான தேவைகளை கூட மத்திய அரசு செய்வ தில்லை. நாங்கள் பல தடவை கோ…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் நீதிக்கான நடைப்பயணம் Sunday, October 23, 2011, 11:20 பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான நீதிக்கான நடைப்பயணமொன்று ஜெயசங்கர் முருகையா என்பவரால் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 29-10-2011 முதல் 7-11-2011 வரையான காலப்பகுதியில் இந்த நடைபயணம் பிரதான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பிரதான ஐந்து கோரிக்கைகளாவன:- 01. ஈழத்தமிழர்களின் மீதான இலங்கையின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்…
-
- 0 replies
- 630 views
-
-
எதிர்வரும் வாரம் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ம் திகதி அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது. http://akkinikkunchu.com/new/
-
- 1 reply
- 905 views
-
-
பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, எதிர்வரும் வாரம் அவுஸ்திரேலிய செல்லவுள்ளார். இந்த முறை பொது நலவாய நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் 30 திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பேர்த் நகரில் இடம்பெற்றன. இர்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், பொது நலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொள்கைகள் தொடர்பில் அறுவுறுத்தும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நாடுகளின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் இந்த முறை மாநாட்டில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது. http://www.saritham.com/?p=38600
-
- 2 replies
- 1.3k views
-
-
[saturday, 2011-10-22 21:43:44] இவ்வார நடுப்பகுதியில் யேர்மனி தலைநகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அவர்களுடன் யேர்மன் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்து அவர்களுடன் தமிழீழ மக்களின் நிலைகுறித்து ஆராயப்பட்டதுடன் , அவ் விடையத்தில் இந்தியாவின் நிலைகுறித்தும் உரையாடப்பட்டது . கடந்த காலங்களாக ஈழத்தமிழர்கள் உரிமைக்காக இந்தியாவில் தேசிய ரீதியில் பல கவனயீர்ப்பு நிகழ்வுகளையும், அமைதி வழிப் போராட்டங்களையும் நாடத்தியது மட்டும் அல்ல,இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை மற்றும் அவர்கள் மீது ஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலை மேற்கொண்டதை கண்டித்து இலங்கை பிரச்சினையில் ச…
-
- 2 replies
- 917 views
-
-
தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கெனப் பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நிஜமன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்திற்கு உடனடியாக ஒத்தணம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும். இதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போல நடிக்க வேண்டும். அந்த நடிப்பிற்கு அரங்கும் நடிபங்காளர்களும் தேவை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு இயங்கு தளம் பேச்சுவார்த்தை நடத்துவதாகும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அடியோடு உடைப்பட்டு போகும். எனவே பேச்சுவ…
-
- 11 replies
- 1.9k views
-
-
நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அதன் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன தமிழ் மக்களைப் படாதபாடுபடுத்தி வருகிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் சிறைச்சாலைகளில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வேளையில், திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் மேற்படி சட்டத்தினால் பிடிக்கப்பட்டு, சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரின் நிலைமை மோசமடைந்து செல்கின்றபோதும் இவருக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணமாக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர் போரின்போது படுகாயமடைந்ததால் தனது இரண்டு சிறுநீர…
-
- 0 replies
- 1.2k views
-
-
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு, மாநகர சபையின் நிர்வாகத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தும் இன்னும் ஏன் நிர்வாகத்தைக் கையளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எங்களுக்கே இவ்வாறானதொரு நிலை என்றால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார். http://www.eelampres.../2011/10/38911/
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக்கருத்தை த வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு இரண்டு முதல் 6 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர்களுக்கு 20 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறைந்தளவு தண்டனையே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கொள்ள முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கொள்கைகளின் அடிபடையில், விடுதலைப் புலிகள…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரித்தானியாவில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் நினைவுவணக்க நிகழ்வு உலக நாடுகளில் தமிழ்த் தேசிய நிகழ்வுகளை நடாத்திவரும் ஒரேயொரு அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கிளையான பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச் செல்வன் அவர்களினதும் நவம்பர் மாதம் தம்முயிரை ஈகம் செய்த அனைவரதும் நினைவு வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் Muslim Resource Centre, Red Lane, Coventry CV6 5EE UK எனும் முகவரியில் வரும் நவம்பர் மாதம் 5 ஆம்நாள் சனிக்கிழமை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரித்தானியாக் கிளை அழைப்புவிடுத்துள்ளது. http://www.pathivu.c...tic…
-
- 0 replies
- 678 views
-
-
ஐ.நா அமர்வுக்காக மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் பொது அமர்வின் மூன்றாவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் நோக்கில் சிறிலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ நியூயோர்க் செல்லவுள்ளார். அந்த கூட்டத்தொடரில் இலங்கையின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் உரையாற்றவுள்ளார். குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் தமது உரையில் தெளிவுப்படுத்தவுள்ளார். இதுதவிர எதிர்வரும் 26ம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் விஷேட சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eelampress.com/2011/10/39001/
-
- 0 replies
- 724 views
-
-
மாங்குளம், மல்லாவியில் ரி.என்.ரி வெடிமருந்து நாலரைக் கிலோ மீட்கப்பட்டதையடுத்து ஆரியகுளம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் இராணுவ முகாம் நடத்திய விசாரணைகளையடுத்துக் கைது அசய்யப்பட்ட குறிப்பிட்ட நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக மல்லாவி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். http://www.pathivu.c...ticle_full.aspx
-
- 0 replies
- 768 views
-
-
[saturday, 2011-10-22 10:58:49] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச தரப்புடன் பேசுவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசிவிட்டே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்து வருகிறது. அங்கு சிங்களவர்கள் எவரும் குடியேற்றப்படவில்லை. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களை தவறான வழியில் நடத்திச் சென்று அவர்களை மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்…
-
- 3 replies
- 905 views
-
-
[saturday, 2011-10-22 11:31:05] 1983 காலப்பகுதியில் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது. தற்போது பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட உறுதி மொழியின் பிரகாரம் இந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏன் திருப்பி ஒப்படைக்க முடியாதிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். வடக்கில் காணிப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமானால் அங்குள்ள எம்.பி.க்களினதும் பங்களிப்புக்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு…
-
- 2 replies
- 844 views
-
-
[ சனிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2011, 07:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]puthinappalakai போர் முடிவுக்கு வந்துள்ள போதும், வடக்கு,கிழக்கு பகுதியில் மக்கள் சொந்தக்காணியில் குடியமர முடியாமல் இருக்கின்றனர். காணி சுவீகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் உண்மையான நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படமாட்டாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “போர் முடிந்து விட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, தமிழ் மக்கள் இனி நிம்மதியாக தமது சொந்த இடங…
-
- 3 replies
- 1.2k views
-
-
[saturday, 2011-10-22 11:58:20] "பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு." இது பாரதிதாசன் வரிகள். கனடியத் தமிழருக்காகவே அன்று எழுதி வைத்தார் போலும். கனடியத் தமிழர் துணிச்சலுடனும் ஒற்றுமையுடனும் உற்சாகத்துடனும் செயற்பட வேண்டிய தருணமிது. "பொங்கு தமிழ்" ரொறன்ரோவில் நிகழவுள்ளதாக அறியப்பட்டவுடனேயே அதற்கெதிராக செயற்படத் தொடங்கி விட்டனர் இங்குள்ள உள்ள மகிந்த அரசின் கைக்கூலிகள். இதனை நிகழவிடாமல் செய்வதற்கு அனைத்து வழிகளையும் - சாம பேத தான தண்டம் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். புலம்பெயர் தமிழரின் அரசியல் அழுத்தம் காரணமாக மகிந்தவின் இனவெறி அரசு மேற்குலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன் சர்வதேச போர்க்குற்ற விசாரண…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவலை இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், சிறிலங்கா அரசாங்கத்துடன் சீனா கொண்டுள்ள படைத்துறை ரீதியான உறவுகள் குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இலங்ழைகக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜக் கிங்ஸ்ரன் தனது விஜயத்தின் முடிவில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையுடன் முன்னர் அமெரிக்கா மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் அடையிலான படைத்துறை மற்றும் வர்த்தக உறவுகள் நெருக்கமடைந்ததால் இந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 651 views
-
-
புலம்பெயர் மக்களால் தமிழர் தாயகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும் . அதன் மூலம் பல்கலைக்க்ழகம் கிடைக்காத மாணவர்களுக்கு நல்ல கல்வியினை வழங்கமுடியும். . எடுத்துக்காட்டாக உலகெங்கும் சிதறி வாழும் தமிழ்க் கல்வியலாளர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க முடியும் என்று கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார். . யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னைய சூழலிலும் பல கல்வியலாளர்கள், மருத்துவர்கள் தமது பிரதேசத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்ட யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கலாநிதி யமுனானந்தா, இவர்களில் பலர் உலகில் மிகச்சிறந்த பேராசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பல முன்னணி…
-
- 3 replies
- 868 views
-
-
கிளிநொச்சியில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய நிரந்தரப் படைத் தலைமையகத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சிப் படைகளின் தலைமையகத்தின் இந்த நிர்வாக தலைமையக வளாகம்- குளிர்சாதன வசதி கொண்ட கருத்தரங்கு மண்டபம், தனியான மண்டபம், நிர்வாக பணியகங்கள், கணினி, சமிக்ஞை கட்டுப்பாட்டறைகள், உணவக மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் நேற்றுக்காலை கிளிநொச்சிக்குச் சென்ற சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தப் புதிய படைத் தலைமையகத்தைத் திறந்து வைத்தார். இரணைமடுக் குளத்தின் கரையில் அம…
-
- 1 reply
- 737 views
-