Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கண்டியில் உள்ளூர் விமான நிலையத்தை அமைக்கிறார் மகிந்த! Published on October 4, 2011-2:36 am கண்டி மாநகரை இருபது ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய நகராக அபிவிருத்தி செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினமிரவு தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப் பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். இதேவேளை மத்திய மலையக மக்களுக்கென கண்டியில் உள்ளூர் விமான நிலையம் (Domestic Airport) ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறிய அவர், இதற்காக 100 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். http://www.saritham.com/?p…

  2. இலங்கை சீனாவுடன் நல்லுறவைக் கொண்டிருப்பது தனது பாதுகாப்புக்கருதியே. ஏனெனில் இலங்கையில் நடச்த அனைத்து அனர்த்தங்களுக்கும் இந்தியாவே ஆசான். தமிழர்களைத்தனிநாடு கேட்க வைத்ததும்இ போரியல் பயிற்சி அளித்ததும்இ பின்னர் தமிழர்களை அழிக்க இலங்கை அரசுடன் கைகோர்த்ததும் தமிழர்கள் மீது போரியல் விதிகக்கு அப்பாற்பட்ட குண்டுகளைப் பின்னின்று வீசியதும் இந்தியாதான். கற்றுக்கொண்ட பாடத்தின்படி இலங்கை அரசு இந்தியாவை நம்பமுடியாது என்பதிலும் எங்களுக்கு எதிராகவும் அவர்களுடைய ஆயுதங்களை எப்பவும் திருப்பலாம். இது கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டது. திரும்பியும் தமிழர் பக்கம் சென்று எங்களுக்கெதிரான ஒரு சக்தியை உருவாக்கலாம். இந்தியாவினது நோக்கம் இலங்கையில் மற்றைய நாடுகளின் ஆதிக்கத்தைத் தடுப்பது …

    • 0 replies
    • 616 views
  3. கிறீன் கார்ட் லொத்தர் என பிரபலமாக அறியப்படும் இணையத்தள மூலமான ஒன்லைன் விண்ணப்பப்படிவங்கள் 2011ம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த லொத்தருக்கு தகைமையுடைய நாடுகளில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கும் (இலங்கையும் மாலைதீவும் தகைமையுடைய நாடுகளாகும்) கல்வி அன்றேல் தொழில் அனுபவ தகைமையை உடையவர்களுக்கும் பல்வகை குடிவரவு விஸா லொத்தரின் மூலமாக ஒவ்வொரு வருடமும் எதேச்சையாக தெரிவுசெய்யப்படும் 50,000 விண்ணப்பதாரிகளுக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமாக வாழ்வதற்கும் தொழில் புவதற்கும் கல்வி கற்பதற்கும் வாய்ப்பளிக்கப்படுகின்றது. பல்வகை விஸா லொத்தருக்கான தம்மைப் பதிவுசெய்து கொள்வதற்கு விண்ணப்பதாரிகள் www. Dvottery.go…

  4. [ செவ்வாய்க்கிழமை, 04 ஒக்ரோபர் 2011, 00:23 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] எண்ணெய் வளத்தையும், வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதை தடுத்து நிறுத்தவே நோர்வே, புலிகளுக்கு ஆதரவளித்து அவர்களைக் காப்பாற்றி வந்ததாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த குற்றம்சாட்டியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வந்திராது போனால் மன்னார் படுக்கையில் மட்டுமல்ல, மன்னார் பக்கமே யாரும் தலைவைத்துப் படுத்திருக்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மன்னார் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை இன்னும் மூன்று வருடங்களில் மின்உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முத…

  5. செவ்வாய்க்கிழமை, 04 ஒக்ரோபர் 2011, 00:15 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் மேஜர் ஜெனரல் பி.கே.கோஸ்வாமி தலைமையில் 15 படைஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது. இந்தக் குழுவுக்குத் தலைமையேற்று வந்துள்ள மேஜர் ஜெனரல் பி.கே.கோஸ்வாமி நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதியையும், கடற்படைத் தளபதியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அத்துடன் சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்திலும், கடற்படைத் தலைமையகத்திலும் இந்தக் குழுவினருக்கு சிறிலங்காப் படைகளின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கல்வி கற்கும் இந்திய, நேப…

  6. உள்ளுராட்சித் தேர்தலை மையப்படுத்தியே எரிவாயு வளம் இருப்பதாக அறிவிப்பு Tuesday, October 4, 2011, 0:29 08ஆம் திகதி நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலை மையப்படுத்தியே இலங்கையின் மன்னார் கடல் படுகையில் எரிவாயு வளம் இருப்பதாக ஜனாதிபதி நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். மன்னார் கடல் படுகையில் எரிவாயு வளம் இருப்பதாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனம் இரு வாரங்களுக்கு முன்னரே ஜனாதிபதிக்கு அறியக்கொடுத்துள்ளது. எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பிரசாரப் பணிகள் உச்சக் கட்டத்தை அடையும் வரை இந்த அறிவிப்பை வெளியிடுவதில்லை என அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்ததாக தெரியவருகிறது. பிரதமர் சிறிமா…

  7. நவராத்திரி விழா சிறப்பு நாடகம் குற்றக்கூண்டில் யாழ். மின்சாரசபை மாணவர்களே! இது நவராத்திரி காலம் என்பதால் நாடகம் ஒன்றைத் தாயாரித்து அதனை அரங்கேற்றுங்கள் என்று கூறினோம். மாணவர்க‌ளின் அளுமைத்திறனை வளர்ப்பதில் பொறுப்புக்களை துணிந்து ஏற்றுக் கொள்ள வைப்பது முக்கியமானது என்ற அடிப்படையில் மாணவர்கள் தாயரித்த நாடகத்தை மேற்பார்வை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டோம். மாணவர்கள் தாங்கள் எழுதிய நெறியாள்கை செய்த நாடகத்தை பார்த்த போது அதிர்ந்து போனோம்.இதோ! நவராத்திரி விழா 'குற்றக் கூண்டில் யாழ்ப்பாண மின்சாரசபை' நாடகம் அரங்கேறுகிறது. பாத்திரங்கள்: துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி, மாணவர்கள்,இலங்கை மின்சார சபையின் யாழ் மாவட்ட உயர் அதிகாரிகள். இதோ நாடகம் பார்த்து மகிழுங்கள் என்ற அற…

    • 0 replies
    • 457 views
  8. நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த இராஜபக்‌ஷ எவ்வாறு தில்லுமுல்லு செய்துள்ளார் என விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் 17 விழுக்காடு வாக்காளர்கள் யாருக்கு போடுவது என இறுதி நேரத்தில்தான் முடிவெடுப்பார்கள். இந்த 17 விழுக்காடு வாக்குகள்தான் வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கும். இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட தகவல்களின்படி இந்த 17 விழுக்காடு வாக்காளர்களில் 6 விழுக்காடுதான் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு மிகுதி 11 விழுக்காடு சரத்பொன்சேகாவிற்கு என கருத்துக்கணிப்புக்கள் கூறியுள்ளன. ஆனால் மஹிந்த இராஜபக்‌ஷ இந்த வீதாசாரத்தினை மாற்ற திட்டமிட்டிருந்தார். முதல்கட்டமாக நேரடியாகவே எட்டு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் வாக்கு முடிவுகளை தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்ப முன்பு …

    • 0 replies
    • 914 views
  9. தமிழரின் ஒவ்வெரு நிகழ்வுகளிற்கும் பல அர்த்தங்கள் இருக்கும் அந்த வகையில் இதற்கும் உண்டு. பொங்கு தமிழ் நிகழ்வானது 17.தை.2001ம் ஆண்டு யாழ்பல்கலைக் களகத்தில் முதல் முதலாக பெங்கு தமிழ் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் வடக்குக்கிழக்கில் 08 மாவட்டங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் கருப்பொருள் „தமிழினத்தின் விடுதலையை வீறு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி நாள்“ இதன் நோக்கம்-மக்கள் தமது உள்ளக்குமுறல்களை(உள்ளவுணர்வுகளை) எதிரிக்கும், வெளியுலகுக்கும் எடுத்தியம்பி, நீதிகேட் பதாகும். இதன் செயற்பாடு – ஒவ்வொருவரின் உள்ளத்திலிருந்தும் வெளியில் எடுத்தியம்ப வைப்ப தேயாகும். எனவே உணர்வு கொண்ட தமிழினத்தின் உணர்வுகளை தமிழ் நெஞ்சங்களில் நிறுத்தி உலகவாழ் இதயங்களிற்கும், எம…

  10. தமிழரின் ஒவ்வெரு நிகழ்வுகளிற்கும் பல அர்த்தங்கள் இருக்கும் அந்த வகையில் இதற்கும் உண்டு. பொங்கு தமிழ் நிகழ்வானது 17.தை.2001ம் ஆண்டு யாழ்பல்கலைக் களகத்தில் முதல் முதலாக பெங்கு தமிழ் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் வடக்குக்கிழக்கில் 08 மாவட்டங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் கருப்பொருள் „தமிழினத்தின் விடுதலையை வீறு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி நாள்“ இதன் நோக்கம்-மக்கள் தமது உள்ளக்குமுறல்களை(உள்ளவுணர்வுகளை) எதிரிக்கும், வெளியுலகுக்கும் எடுத்தியம்பி, நீதிகேட் பதாகும். இதன் செயற்பாடு – ஒவ்வொருவரின் உள்ளத்திலிருந்தும் வெளியில் எடுத்தியம்ப வைப்ப தேயாகும். எனவே உணர்வு கொண்ட தமிழினத்தின் உணர்வுகளை தமிழ் நெஞ்சங்களில் நிறுத்தி உலகவாழ் இதயங்களிற்கும், எம…

  11. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 இலங்கைத் தமிழர்கள் விடுதலை Monday, October 3, 2011, 10:53 தமிழ்நாடு செங்கல்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 15 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 41 இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில் 15 இலங்கை தமிழர்கள் மீதான வழக்குகள் முடிவுற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுவித்து தங்கள் உறவினர்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்…

  12. கடந்த 30 ஆம் திகதி முதல் இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்படவிருந்த ஒன்லைன் விசா முறை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசா முறையை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே இதனை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக அடுத்த வருடம் முதலே இந்த முறையினை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின. இதேவேளை, குறிப்பிட்ட ஒன்லைன் விசா தொடர்பான இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் SIR LANKA என்பது SMRI LANKA எனக் காணப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இலங்கை வரும் மற்றும் இலங்கையூடாக பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக…

  13. மனிதநேயப் பணிகள் வன்னி மண்ணில் முன்னெடுக்கப்படாமல் இருப்பதேன்? இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீதி விபத்தொன்றில் சிக்கி மயிழையில் உயர் தப்பியிருந்தார் ஒருவர். அவருக்கு ஏற்கெனவே ஒரு கால் இல்லை. விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்குமிடையில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற மோதலின்போது அவருடைய கால் சிதைந்து போயிற்று. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக ஒரு காலத்தில் செயற்பட்ட அவர் தற்போது விறகு வெட்டியாகிச் சீவியம் நடத்துகிறார். சைக்கிளில் விறகை ஏற்றிச் செல்லும் போதே அவர் விபத்தில் சிக்கியிருக்கிறார். இதுபோல, போரிலும் போரின் காரணமாகவும் உடல் உறுப்புக்களை இழந்தோராகப் பல ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே கையை இழ…

    • 0 replies
    • 356 views
  14. லண்டனில் நேற்று (02-10-2011) ஞாயிற்றுக்கிழமை இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான செயற்பாட்டாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.வடமேற்கு லண்டன் கிங்ஸ்புறி பகுதியில் அமைந்துள்ள RNB மண்டபத்தில் மதியம் 1:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை நடைபெற்ற இச்சந்திப்பில் இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டதோடு நிகழ்வு தொடர்பான துண்டுப்பிரசுரமும், பங்களிப்புச் சிட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு எம்மால் வழங்கப்பட்டன. இச்சந்திப்பிற்கு வட மேற்கு லண்டன், வட கிழக்கு லண்டன், தென்மேற்கு லண்டன், தென்கிழக்கு லண்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும், லண்டன் புற நகர் பகுதிகளான லிவர்பூல், மன்செஸ்டர், மில்ரன்கீன்ஸ், லெஸ்டர், கைவீக்கம், லீட்ஸ், நோத்தம்டன், லூ…

  15. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஜனநாயக ரீதியாக வடக்கு கிழக்கில் இருக்கக்கூடியதமிழ் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஓர் கட்சியாகும்;. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைத் தடை செய்யவேண்டும் என கடும் பேரினவாத சிந்தனையாளர்கள் தெரிவித்தாலும் கூட இதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குறிப்பிட்டார். அத்துடன் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வினை வழங்காது விடுவதற்காக இவ்வாறான கருத்துக்களைத் அவ்வப்போது தெரிவிப்பதற்காக அரசினாலேயே இவர்கள் பயன்படுத்தப்படுகின்றார்களோ? என்ற கேள்வியும் எழுவதாக அரியநேந்தின் சந்தேகம் வெளியிட்டார். ஐ.நாவிற்கு இரகசிய தகவல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கியற்காக கூட்டமைப்பு த…

  16. நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் பரமத்தி வேலூர் 4 ரோடு அருகே கடந்த 24-ந்தேதி நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை நிலைய பேச்சாளர் பேராவூரணி அருகே உள்ள களனிவாசலை சேர்ந்த திலீபன் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தியின் கொலைக்கு காரணமானவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்திதான் என்றும், ராஜீவ்காந்திதான் இலங்கைக்கு இந்திய அமைதி படையை அனுப்பி ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் என பேசியுள்ளார். இதை கண்டித்தும், திலீபனை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு ப…

  17. ஓங்கி ஒலிக்கும் ஊருக்கு உபதேசம் ஒரு சமூக சேவகர், மனிதர்கள் பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பது பற்றி உதாரணங்களுடன் வெகு அழகாக விளக்கிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி உட்பட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே இனிப் பிறர் பொருளுக்க ஆசைப்படுவதில்லை என முடிவெடுக்கும் அளவுக்குப் பிரசங்கம் வெகு சிறப்பாக அமைந்திருந்தது. வீட்டுக்குச் சென்ற பின்பு ஏற்கனவே களவாகப் பிடித்து அடைத்து வைத்திருந்த அடுத்த வீட்டுச் சேவலை மனைவியிடம் கொடுத்துக் கறி சமைக்கும் படி அதே பிரசங்கி கூறினாராம். மனைவி ஆச்சரியத்துடன் பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என அவர் போதனை செய்ததைப் பற்றிக் கேள்வி எழுப்பினா ளாம். அவர் மெல்லச் சிரித்தவாறே "மண்டு! ஊருக் கல்லோடி உபதேசம்; உனக்கும் எனக்கும் இல்லை…

    • 1 reply
    • 1.1k views
  18. அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு தரப்புக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு இரகசிய தகவல்களை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடை செய்து அனைத்து உறுப்பினர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையையும் கூட்டமைப்புடன் முன்னெடுக்கக்கூடாது. இனப்பிரச்சினையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ரத்து செய்து விட்டு நாட்டிற்கு எதிரான சக்திகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூறுகையில், புலி பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவுதான் கூட்டமைப்ப்…

    • 6 replies
    • 935 views
  19. [Monday, 2011-10-03 09:07:37] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிபுணரான ஜிம் மக் டொனால்ட் இந்த மனுவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளார். போரின்போது விடுதலைப் புலிகளும், அரச படையினரும் போர்க் குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருந்தனர் எனவும் மனுவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை நம்பு…

  20. இந்திய மற்றும் சிறிலங்கா மீனவர்கள் தமக்குச் சொந்தமான கடல்களில் மற்றைய நாட்டு மீனவர்களை மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கேற்ற வகையில்முன்னர் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியவரும் தற்போது வோசிங்டனுக்கான இந்தியாவின் தூதருமாகிய நிரூபமா ராவ் பரிந்துரை ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விரு நாடுகளிற்கும் சொந்தமான கடலில் உள்ள மீன்பிடி வளங்களை பரஸ்பரம் இரு நாட்டு மீனவர்களும் பகிர்ந்து கொள்வதற்கேற்ற வகையில் இந்தியாவால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை சனிக்கிழமையன்று சிறிலங்கா ஏற்க மறுத்துள்ளது. "சிறிலங்காவிற்குச் சொந்தமான கடலில் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான விட்டுக்கொடுப்புக்களை செய்ய முடியாது" என சிறிலங்காவின் மீன்பிடி அமைச்சர் றாஜித சேனரட்ண தெரிவித்துள்ளா…

  21. யாழ். பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக வைத்திய சேவைகளை வழங்கி வந்த பிரான்ஸ் வைத்தியக்குழு எதிர்வரும்டிசெம்பர் மாதத்துடன் தனது சேவைகள் அனைத்தையும் நிறுத்திக்கொள்கிறது. எண்பத்து ஏழாம் ஆண்டு மே இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பித்த ஒப்பரேஷன் லிப ரேஷன் என்ற இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ் வைத்தியக்குழு பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை வைத்திய சேவையை முதன்முதலாக ஆரம்பித்தது. தொடர்ந்து சத்திரசிகிச்சை வைத்திய சேவையுடன் மகப்பேறு, பொதுவைத்தியம், அவசர சிகிச்சைப்பிரிவு ஆகிய வைத்திய சேவைகளையும் ஆரம்பித்தது. அத்துடன் வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்ட…

  22. இந்தியாவை விடவும் சீனாவடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணி வருவதாக முன்னணி அரசியல் விஞ்ஞானியும், ஆய்வாளருமான டொக்டர் சுமித் கங்குலி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிரி;த்தானிய ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் டொக்டர் கங்குலி கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை விடவும், சீனாவுடனான உறவுகளை அதிகளவில் வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 1980களில் இலங்கையில் அமெரிக்க மேலதிக்கம் நிலவக் கூடும் என பிழையான நிலைப்பாட்டினால், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தமிழ் பிரிவினைவாதத்தை போஷித்தார் என சுட்டிக்காட்டியுள்ளார். தென் இந்தியாவில் தமிழீழ விடுதலைப்…

    • 2 replies
    • 836 views
  23. நவம்பர் மாதத்தில் சூறாவளி? _ வீரகேசரி இணையம் 10/3/2011 12:29:54 PM நவம்பர் மாதத்தில் சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவுகின்ற அதிவெப்பமான காலநிலையே வங்காள விரிகுடாவில் சூறாவளி உருவாகக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தினங்களில் மேல், தென், மத்திய, வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் மாலை வேளைகளில் மழைபெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. காலி, மாத்தறை மாவட்டப்பகுதிகள் மற்றும் மேல்மாகாணத்தில் காலை வேளை மழையும் பலத்த காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. …

  24. உலகின் பழமைவாதம் தழுவிய ஆட்சியாளர்கள் சுதந்திரத்தின் [freedom] பக்கம் திரும்புகின்றனர் என்பதையே நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் கனடிய மனிதவுரிமை மையத்துடனான சந்திப்பின் போது தெரிவித்தார். > கனடியப் பாராளுமன்றத்தில் மனிதவுரிமை கண்காணிப்பகத்துடன் இணைந்து கொலைக்களம் விவரணத்தை திரையிட்டவரும், 2009ல் சிறீலங்காவிற்கு விஜயம் செய்ய முயன்ற வேளை விசா மறுக்கப்பட்டவருமான பற்றிக் பிரவுண் தான் இந்த முயற்சிகளின் போது சந்தித்த நெருக்கடிகளையும் கனடிய மனிதவுரிமை மையத்துடன் பகிர்ந்து கொண்டார். 2009ல் சிறீலங்காவிற்கு விஜயம் செய்ய தான் முயன்றதில் இருந்து சிறீலங்கா வரம்பு மீறிய அளவிலான அழுத்ததைத் தனக்குப் பிரயோகித்த போதும் த…

  25. அலரிமாளிகை நாடகத்துக்கு துணைபோன அவுஸ்ரேலிய தூதுவர் சர்ச்சையில் சிக்கினார் Monday, October 3, 2011, 10:23 விடுதலைப் புலிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய தூதுவர் கதி குலுக்மன் சான்றிதழ்களை வழங்கியதற்கு அவுஸ்ரேலியாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அலரிமாளிகையில் கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்வில் 1800 முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கூறி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார். இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியத் தூதுவர் கதி குலுக்மன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கியதை அன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.