Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தொடர்பில் தருஸ்மன் குழுவின் அறிக்கைக்கு எதிராக செயற்பட, ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவா சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஆப்பிரிக்க ஒன்றியத்ததுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படுமாக இருந்தால், அதற்கு எதிராக செயற்பட இந்த நாடுகள் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://akkinikkunchu.com/new/

  2. விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை நீக்கப்படுமா? – நெதர்லாந்தில் விசாரணை ஆரம்பம் ஹேக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையானது புலிகள் மீதான தடை நீக்கம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்களின் விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இவ்வாறு உலகளாவிய ஒலிபரப்பு சேவையைக் கொண்ட நெதர்லாந்து வானொலியின் [Radio Netherlands Worldwide - RNW] http://www.rnw.nl/international-justice/article/tamil-tigers-terrorists-or-freedom-fighters-%E2%80%93-dutch-court-decide இணையத்தளத்தில் Richard Walker எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தமிழீழ விடுதல…

  3. மூன்று தமிழர்களின் உயிர் காக்க தமிழக முழுவதும் மக்களை நோக்கிய 16 நாட்கள் பரப்புரைப் பயணத்திற்கு பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 20.09.2011 அன்று மாலை சென்னை இராயப்பேட்டை தோழர் செங்கொடி நினைவரங்கத்திலிருந்து பெரியார் திக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் தொடங்குகிறது. http://www.periyarthalam.com/2011/09/15/periyardk-travel-people/

  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தன்பக்கம் இழுக்க மகிந்த மேற்கொண்ட இரகசிய முயற்சி அம்பலம் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்றயமைக்கும் நோக்குடனேயே மூத்த அமைச்சரான டி.யூ.குணசேகரவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக கொழும்பு ஊடக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. இலங்கைத் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பில் கடும் போக்குடன் இருக்கின்ற வைகோ மற்றும் நெ;மாறன் போன்றவர்களைக் கையாள்வதைவிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை கையாள்வது இலகுவானது என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருதியுள்ளார். இது குறித்து அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா ஜனாதி…

  5. சீன இராஜதந்திரிகள் நாட்டின் உள் விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை சில நாடுகளின் இராஜதந்திரிகள், இராஜதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்களையும், பணிப்பாளர்களையும் குறித்த இராஜதந்திரிகள் நேரடியாக சந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைசார் அமைச்சர்கள் அல்லது அமைச்சுக்களின் செயலாளர்களது அனுமதியின்றி இராஜதந்திரிகள் அரச நிறுவன அதிகாரிகளை சந்திப்பது இராஜதந்திர வரைமுறைகளுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு இராஜதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்படக் கூடாது என குறித்த இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி, வெளிவி…

  6. ஐநா செல்ல வாகன வசதிகள் -தொடர்பு கொள்ள அழையுங்கள் ..! நியூ யோர்க் – ஜெனீவா : ஐ நாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்நகர்வு ! ஜெனீவாவில் உள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருக்கும் சமவேளை, நியூ யோர்க்கில் உள்ள ஐ நாவின் பீடத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்கெடுக்க வரும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும், மாபெரும் ஒன்றுகூடலொன்றையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒன்றுகூடல் நியூ யோர்க் ஐ நா உயர்பீடத்துக்கு முன்னால் செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்க…

  7. சிட்னியில் தியாக தீபம் திலீபன் கலை மாலை, செப்ரம்பர் மாதம் 25ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து 8:00 மணி வரை Homebush Boys High School மண்டபத்தில் நிகழவுள்ளது. உன் மறைவு எமக்கு உண்மையான உண்மையைப் பிறப்பித்துத் தந்து போயிருக்கிறது உனது மறைவினால் ஓர் புதுயுகம் ஒளி பெற்றிருக்கிறது உன் எண்ணத்தில் உதித்த தமிழீழம் - யாராலும் தடுக்க முடியாத ஓர் பிரசவம். தியாகதீபம் திலீபன் கலை மாலை நிகழ்வில் திலீபனுக்கு அஞ்சலி, சிந்தனையைத் தூண்டும் இளையோரும் பங்குகொள்ளும் பட்டிமன்றம், என்பனவற்றுடன், இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களின் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கேட்டுத் தன்னுடலை எரிதழலாக்கிக் காவியமான செங்கொட…

  8. இலங்கையின் அநுராதபுரத்தில் அமைந்திருந்த ஒரு முஸ்லீம் தர்காவை சில பொளத்த பிக்குகள் அடங்கிய குழு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் இடித்து தரைமட்டமாக்கியதாக சில ஊடகச் செய்திகள் கூறியுள்ளன. இந்தச் சம்பவம் போலிசாரின் முன்னிலையிலேயே நடந்ததாகவும் அந்தச் செய்திகள் கூறின. இந்தத் தர்கா , பௌத்தர்கள் புனிதமான இடமாகக் கருதும் சிங்கள மன்னன் துட்டகெமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே அமைந்திருப்பதால் அது இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தமிழோசையிடம் பேசிய அனுராதபுரம் மொய்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக் அவர்கள், இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகவும், பிக்குமார் அடங்கலாக சுமார் 60 பேர் கொண்ட …

  9. 15 செப்டம்பர் 2011 வட அயர்லாந்து கிளர்ச்சிகளின் போது பிரித்தானியா இதனை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டது - ஜோன் ரான்கீன் இலங்கையில் இல்லாதொழிக்கப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய வருந்தவில்லை என இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கருதப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் நிலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். வரரலாற்றுக் காலம் முதலே இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பி…

  10. ஜெனீவா மா நாட்டில் சிறிலங்கா தொடர்பிலான அழுத்தங்களை திசை திருப்பும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நாளை ஆரம்பிக்கின்றது. நாளை அல்லது வெள்ளிக்கிழமை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது என கூட்டமைப்பு கூறியுள்ளது. .. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பல கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்ததைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையிலேயே திடீரென அரச தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதது. முன்னதாக தெற்காசிய துணை இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கினை சந்தித்த மஹிந்த வருகின்ற வெள்ளி க்கிழமை கூட்டமைப்புடன் பேசவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். . அரசாங்கத்துடனான பேச…

  11. பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியினை சிறிலங்காவில் நடத்தும் திட்டத்தினை புறக்கணிக்க வேண்டும் என பல மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அண்மையில் கனேடிய முன் நாள் பிரதமரும் சிறிலங்காவை புறக்கணிக்குமாறு கூறி இருந்தார். இதே வேளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சிறிலங்காவை புறக்கணிக்குமாறு பொது நலவாய நாடுகளின் தலைவர்களையும் அதேவேளை டில்லி நிர்வாகத்தினரையும் கேட்டுக்கொள்வார் என கூறப்படுகின்றது. மூலம்

  12. செப்டம்பர் 12 ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அமர்வு ஆரம்பம், சிறி லங்கா அரசு ஒரு படையணியே தான் செய்த இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிக்க அனுப்பி இருக்கிறது. அத்துடன் அணிசேரா நாடுகளின் உதவியுடன் கியூபா நாட்டில் துதுவர் ஆக இருந்த, பிரான்சு நாட்டின் சிறி லங்காவின் தூதுவரான தயான் ஜெயதிலகவிட்கும், மகிந்த ராஜபச்கேவுக்கும் நெருக்கமான தாமர குணநாயகம் என்னும் தமிழ் பெண்ணை அபிவருத்தி பிரிவின் தலைவியாக நியமித்துள்ளார்கள், அத்துடன் வட மாகாண அரசாங்க அதிபர் இமேல்டவும் ஜெனிவவிட்கு அனுப்பபட்டுளார். அபிவிருத்தி என்று சொல்லி இந்த உலகத்தின் பார்வையை இனப்படுகொலையில் இருந்து திசை திருப்பும் செயல்பாடுகளை சிறி லங்கா அரசு செயல்படுத்த துவங்கி விட்டா…

  13. [Thursday, 2011-09-15 08:01:13] இலங்கையில் வாழும் மக்களில் 10 பேரில் ஒருவர் சில வகையான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் தெரிவித்தது. இந்த கணிப்பீடு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் மன நோய் பரவுவதற்கு 30 வருட கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றனவே காரணம் என நிபுணர்கள் பலர் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 100 இலங்கையருக்கு இருவர் என்ற விகிதத்தில் தீவிர மன நோய்களுக்கு ஆளாவர் என இந்நிறுவகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய்களுக்கு சிகிச்சை பெறுவதன் மூலம் தீர்வு காண முடியும் என தேசிய மன ஆரோக்கிய நிறுவகத்தின் அதிகாரியொர…

  14. ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இலங்கையர்கள் சிலரே செயற்பட்டுள்ளமை மிகவும் மோசமான விடயமாகும். இவ்வாறானவர்கள் ஜெனீவாவுக்கு சென்று புலிகளின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர் என்று நிர்மாணம் பொது வசதிகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஹங்குரன்கெத்தவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வீடமைப்பு நிர்மாண வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த மனித உரிமை கூட்டத் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையை சேர்ந்த சிலர் அங்கு சென…

  15. நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என நம்புகின்றோம். மனித உரிமைகள் தொடர்பில் நான் கரிசனை கொண்டுள்ளேன். இவ்வாறான நிலையில் துணைப்படைகளின் ஆயுதங்களை களைந்து வடக்கில் தமிழ் பொலிஸாரை நியமிக்கவேண்டும். இதனை நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்தார். அதிகார பகிர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெறுகின்ற பேச்சு வார்த்தையினை வரவேற்கின்றேன். இவ்வாறான நிலையில் 13 ஆவது திருத்தத்தின் விரிவாக்கம் தொடர்பில் இருத்தரப்பினரும் பேசிக…

  16. "மலேசியாவின் தீர்வு தீர்வாகாது" அகதிகளைத் திருப்பி அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும்! ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. [Thursday, 2011-09-15 09:05:40] அகதிகள் கடல் வழியாக வந்த வண்ணம் இருப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மலேசிய அரசுடன் ஆஸ்திரேலிய அரசு "மலேசிய தீர்வு" ஒப்பந்தத்தை மேற்கொண்டது.இந்த அகதிப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் படி இங்கு வந்து இறங்கியுள்ள 800 அகதிகள் ஏற்கனவே மலேசியாவில் வந்து தங்கி இருக்கும் பரிந்துரைக்கப் பட்ட 4000 அகதிகளுக்குப் பதிலாக 'அகதிப் பரிமாற்றம்� செய்யப் படுவர்கள் என்பதே அரசின் திட்டமாகும். இந்த விவகாரம் உச்ச நீதி மன்றம் வரை எட்டிப் பார்த்தது.கடந்த சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.. தலைமை நீதிபத…

  17. கிளிநொச்சி மாவட்டம் பளைப்பகுதியில் சிங்களப்படையினர் மூன்று இளஞர்களை கடுமையாக தாக்கி அவர்களிடம் இருந்த 36 000 ரூபா பணத்தினையும் கைத்தொலைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.. கடந்த 6 ஆம் திகதி பளைப் பகுதிக்கும் முகமாலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள இராணுவ காவலரணுக்கு அண்மித்த பகுதியில் வைத்து இராணுவச் சீருடை அணிந்தவர்களால் மூன்று இளைஞர்கள் மறைவிடம் ஒன்றுக்குக் கூட்டிச் சென்று கடுமையாகத் தாக்கப்பட்டு அவர்களிடம் இருந்த 36 ஆயிரம் ரூபா பணத்தையும், அவர்கள் வைத்திருந்த நான்கு கைத்தொலைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.. இது தொடர்பாக இளைஞர்கள் கொடுத்த முறைப்பாட்டினைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு சிங்களப்படையினரும் கிளிநொச்சிப் பொலிஸாரால் கடந்த 7 ஆம் திகதி, ப…

  18. ஜெனீவாவில் ஆரம்பமான 18 வது மனித உரிமை கூட்டத்தொடரில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை தொடக்க உரையினை சற்று முன்னர் ஆற்றினார். அதில் சிறிலங்கா தொடர்பிலும் தொட்டுச்சென்றார். சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் சுயாதீன அமைப்புக்களின் செயற்பாடுகளை மதிப்பதில்லை. ஆனால் அண்மையில் அவசரகால சட்டத்தினை நீக்கியதாக அறிந்திருந்தோம். என்றாலும் சிறிலங்கா அரசாங்கம் தனது பாதுகாப்பு படைகள் தொடர்பான அதிகாரங்களை மீழ் மதிப்பீடு செய்யவேண்டும். என்பதோடு சிறிலங்காவின் விடயத்தினை முடித்துக்கொண்டார்.இது தொடக்கவுரை என்பதனால் பொதுவாகவும் சுருக்கமாகவும் முடித்துகொண்டாரோ என்ன்வோ தெரியவில்லை. ஈழநாதம்

  19. பாதுகாப்புச் செயலர் கோத்தாபாயாவிற்கு திடீர் நெஞ்சுவலி! வீட்டிற்கு விரைந்த இராணுவ வைத்தியர்கள் அவசர வைத்தியம்! [Thursday, 2011-09-15 08:27:00] கோத்தாவிற்கு நேற்றைய திடீரென சுகயீனம் ஏற்பட்டது. உடனடியாக இராணுவ வைத்தியசாலை வைத்தியர்கள் வீட்டிற்கு வரவளைக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர், சர்வதேச அழுத்தம் மற்றும் உட்கட்சி பூசல்களால் கோத்தாபாயாவிற்கு அடிக்கடி உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உணவு பழக்கவழக்கங்கள், குடிபானங்கள் போன்றவற்றில் கட்டுபாடாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். அத்துடன் போதிய ஓய்வு …

  20. [Wednesday, 2011-09-14 11:57:32] போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அரசு விடுத்த அறிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. குறிப்பாக இனங்களுக்கு இடையே நம்பிக்கையையும் நட்புறவையும் கட்டி எழுப்பும் வகையிலான நல்லிணக்க அணுகுமுறையை இலங்கை அரசு அழுத்தமாகக் கடைப்பிடிக்கிறது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் நேற்று முன்தினம் ஆற்றிய உரையை எதிர்த்துள்ள கூட்டமைப்பு, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அனுபவங்கள் அமைச்சரின் கூற்றுக்குச் சற்றும் பொருந்தாது என்றும் அடித்துக் கூறியுள்ளது. நாட்டின் நிலவரத்தை அனைத்துலக சமூகத்துக…

  21. பழைய இரும்பு வியாபாரத்தில் படையினர் - இளைஞர்களை ஏமாற்றிய சிப்பாய்கள் விளக்க மறியலில்:- 15 செப்டம்பர் 2011 வன்னியில் போர்ப்பகுதிகளில் பழைய இரும்பு வியாபாரத்தில் படையினர் முழுவீச்சினில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மூவரை தாக்கி அவர்களிடமிருந்த பணம், கைத் தொலைபேசிகளை பறிமுதல் செய்த படையினர் நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இம் மூன்று இளைஞர்களுடன் முகமாலைப் பகுதியில் கடமையில் இருந்த நான்கு இராணுவத்தினர் உரையாடி தம்மிடம் இரண்டாயிரம்; கிலோ வரையினில் பழைய இரும்பு இருப்பதாகவும் இதற்காக 35 ஆயிரம் ருபா பணம்…

  22. யாழ் மீசாலையில் மாணவிகளைப் பிடித்துத் மோட்டார் சைக்கிளில் ஏற்ற முயற்சி – நபர் தப்பியோட்டம்:- 15 செப்டம்பர் 2011 தனியார் கல்வி நிறுவனத்துக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளைப் பிடித்துத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றுவதற்கு முயன்ற நபரினால் நேற்று மாலை யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீசாலை, புத்தூர்ச் சந்திப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு நேற்றுப் பிற்பகல் மாணவிகள் சென்றுகொண்டிருந்தனர். அந்தவேளை அந்தப் பகுதியில் ஏ9 வீதியில் ஊதா நிற ஸ்கூட்டி பெப் மோட்டார் சைக்கிளில…

  23. 14 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் : சந்தேகத்திற்கு இடமான முறையில் குளியலறையொன்றினுள்; மறைந்திருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். நையப்புடைக்கப்பட்ட நிலையில் இவ்விராணுவச் சிப்பாய் இன்று இரவு 7.30 மணியளவில் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில். யாழ் கொட்டடி கோணாந்தோட்டம் பகுதியினில் வீடொன்றில் வீட்டின் உரிமையாளர் அவதானித்துக் கொண்டிருந்த போது இராணுவச் சிப்பாய் ஒருவர் மறைவாக அங்குள்ள குளியலறையொன்றினுள மறைந்துகொண்டதை அவதானித்துள்ளார்.. இதனையடுத்து அயலவர்களும் ஒன்று திரண்டு மறைந்திருந்த இராணுவச் சிப்பாயினை பிடித்து யாழ் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித…

  24. [Wednesday, 2011-09-14 14:19:48] இந்தியாவும் அமெரிக்காவும் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதப் போராட்டங்களை உருவாக்க முயற்சிகளை மேற் கொண்டு நாட்டில் அமைதி யின்மையை ஏற்படுத்தவும், போராட்டங்களுக்கு தேவை யான புறச்சூழலை அமைக் கவுமே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை வந்துள்ளார் என்று ஜே வி பி அமைச்சரும் பிரிவினைவாதியுமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மஹரகமவில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது: லிபியா உட்பட அரேபிய நாடுகள் மற்றும் மத்திய ஆபிரிக்க வலய நாடுகளில் அமெரிக்கா வும் ஏனைய மேற்குலக நாடு களும் திட்டமிட்டு சூழ்ச்சிகர மான முறையில் புரட…

  25. இலங்கைக்கு மீண்டும் வருகைதந்ததையிட்டும் பழைய நண்பர்களைக் காணக்கிடைத்ததையிட்டும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த இரு தினங்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தளதவிலான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2695:2011-09-14-07-33-29&catid=1:latest-news&Itemid=18'>http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2695:2011-09-14-07-33-29&catid=1:latest-news&Itemid=18 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் , ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.