ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
இலங்கையின் காலநிலையில் திடீர் மாற்றம்: விடிய விடிய பெய்த மழையினால் நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பாடசாலையில் தஞ்சம் [Monday, 2011-07-25 15:17:47] நீண்டகாலமாக நிலவிய வரட்சி காலநிலை நிறைவடைந்து நீர்த்தேக்கங்களை அண்டிய பிரதேசங்களில் நேற்றிரவு அதிக மழை பெய்துள்ளது.இதன்காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவொன்று 2 அங்குலங்கள் திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் எரந்த ஹேமவர்தன தெரிவித்துள்ளார். குறித்த அவசர கதவுகளை திறந்துவிட்டதன் காரணமாக களனி கங்கையை அண்மித்த வகையில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.யட்டியந்தோட்டை -கித்துல்கல - களுகலை மற்றும் பொல…
-
- 0 replies
- 853 views
-
-
இன்று மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் 1993 இதயபூமி இராணுவ நடவடிக்கை என்று தலைவரால் பெயர் சூட்டப்பட்டு மண்கிண்டி மலை முகாம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இது மிக பெரிய வெற்றியை புலிகள் இயக்கத்துக்கு ஈட்டிக்கொடுத்தது. இம்முகாமின் வீழ்ச்சி மணலாறு மாவட்டத்தில் சிங்கள குடிஏற்றத்துக்கு பலத்த அடியாக வீழ்ந்தது. அத்தாக்குதலில் தமது உயிர்களை ஆகுதியாகிய மாவீரர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துகொள்கின்றோம்.
-
- 0 replies
- 937 views
-
-
நல்லூர் கந்தன் திருவிழாக் காலங்களில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தமிழப் பொலிஸாரைப் பயன்படுத்தப் போகின்றாராம் யாழ் முதல்வர் யோகேஸ்வரி 'வளர்ப்பு நாய்'களைக் கட்டி வைக்க வேண்டுமாம் [Monday, 2011-07-25 13:25:33] நல்லூர் கந்தன் திருவிழாக் காலங்களில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெருமளவான தமிழ்ப் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று காலை நடைபெற்ற திருவிழா உற்சவகால ஒழுங்குகள் தொடர்பான கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய உற்சவகால ஒழுங்குகள் பற்றி யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ …
-
- 0 replies
- 964 views
-
-
இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு: ராமதாஸ் இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இலங்கை படையினர் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர் - ஆளும் கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது. இவற்றையெல்லாம் மீறி வடக்கு மாநிலத்தில் மொத்த…
-
- 1 reply
- 842 views
-
-
இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே இலங்கை அதிபர் ராஜபக்சே, யாழ்ப்பாணம், கோப்பாய், நாவலர் மகா வித்யாலய மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, உரையாற்றியுள்ள்ளார். அப்போது அவர், ‘’இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது எங்கள் நாடு. நாங்கள் பிறந்த நாடு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு. நான் அதிக பணம் செலவு செய்வது வட மாகாணத்துக்கே. எனது ஒரே இலக்கு வட மாகாணத்தின் அபிவிருத்தியே. உங்கள் பிரதேசம் முக்கியமாக கல்வியில் மீண்டும் சிறப்பாக வருவதற்காக நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். இனவாத அரசியல் இனி வேண்டாம்…
-
- 8 replies
- 774 views
-
-
தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை! கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள்: டக்ளஸ் தேவானந்தா. [sunday, 2011-07-24 21:17:24] நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த எவ்விதமான பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெ…
-
- 13 replies
- 1.5k views
-
-
தலவாக்கலை - டயகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல்: ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் Top News [Monday, 2011-07-25 12:08:34] தலவாக்கலை - டயகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, டயகம கிளை காவல்துறை நிலையம் முன்னாள் பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.இந்த சம்பவத்தில் காவல்நிலையத்தின் வாகனம் ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி நுவரெலியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவர் மரு…
-
- 0 replies
- 553 views
-
-
வோஷிங்டனால் எழுப்பப்பட்ட பொறுப்புக்கூறுதல் (வீடியோ காண்க) தொடர்பான விவகாரத்திற்கு பதிலளிக்கத் தவறும் பட்சத்தில் அமெரிக்காவிடமிருந்து அபிவிருத்தித் திட்டத்திற்காக வழங்கப்படவுள்ள 13 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை இழக்க நேரிடும். . அவசரகாலச்சட்ட விதிகளை வாபஸ் பெற வேண்டும்; ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் இலங்கை ப்ர்ர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறுதல் தொடர்பான விவகாரத்திற்கு பதிலளிக்கவேண்டும் இவை நிறைவேறும் வரை இலங்கை மீதான தடைகள் தொடரும். . அமெரிக்காவின் இந்த மூன்று நிபந்தனைகளையும் இலங்கை ஏற்குமா? ஏற்குமாயின் எப்போது? . இலங்கையினைப்பொறுத்தவரை அமெரிக்க நிதி உதவித்திட்டத்தின் கீழ் வருடாந்தம் 1500 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிடப்படுகின்றது. இந்…
-
- 0 replies
- 965 views
-
-
மக்களை அச்சுறுத்தி தாக்குதல்களை நடத்திய சூழ்நிலையிலும் வடபகுதி மக்கள் துணிச்சலுடன் அரசாங்கத்தை நிராகரித்தனர்: ஜே.வி.பி தெரிவிப்பு. [Monday, 2011-07-25 11:05:06] சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறாத நிலையிலும் வட பகுதி மக்கள் துணிச்சலுடன் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நாட்டில் சவாலுக்கு முகம் கொடுத்துள்ள ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டுமென்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஜே.வி.பி. யின் அரசியல் பீடம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச வளங்களை, அதிகாரத்தை பயன்படுத்தியதோடு மக்களை அச்…
-
- 0 replies
- 484 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிப்பதற்கான 25 ஜூலை 2011 Bookmark and Share நடை பயணம் இன்று காலை யாழ்.நகரை சென்றடையவுள்ளது. யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிப்பதற்கான யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிக்கும் நடவடிக்கைக்காக நிதி சேகரிக்கும் பொருட்டு தென்னிலங்கை தேவேந்திரமுனையில் ஆரம்பமாகித் தொடர்ந்து கொண்டிருக்கும் நடை பயணம் இன்று காலை 9 மணிக்கு யாழ்.நகரை சென்றடையவுள்ளது. நேற்றையதினம் கொடிகாமத்தில் தங்கிநின்ற இந்த நடை பயணக் குழுவினர் இன்று காலை தமது நடைபயணத்தைத் தொடங்கி யாழ். நகரை சென்றடையும்போது யாழ்.தாதியர் பயிற்சிக் கல்லூரியில் வைத்து …
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது என முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் தரப்பு அங்கீகாரம் [Monday, 2011-07-25 08:54:56] இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது என முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் தரப்பு அங்கீகாரமளித்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வொஷிங்டனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை பொறுப்பு கூறாத பட்சத்தில் அபிவிருத்திக்காக வழங்கும் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க நேரிடும். அவசரகால நடமுறைகளை மீளப்பெறுதல், ஊடக சுதந்திரத்துக்கு உறுதியளித்தல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்பு கூறாதிருப்பதால் இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்…
-
- 0 replies
- 485 views
-
-
வாகரையில் பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு : 25 ஜூலை 2011 வாகரைப் பிரதேசத்தில் பாரியளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் சுமார் 20 கிலோ கிராம் எடையுடைய ரி.என்.ரி. வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதக் குழுக்களினால் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். முக்கிய பிரபுக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் ஆயுதக் குழுக்கள் வெடிபொருட்களை மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு ஆயு…
-
- 0 replies
- 369 views
-
-
அமெரிக்க தடையால் இலங்கைக்கு நட்டம் திங்கள், 25 ஜூலை, 2011 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா விதிக்கவுள்ள நிதித்தடை காரணமாக ஸ்ரீலங்கா 1.4 பில்லியன் ரூபாய்களை இழக்கநேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் யுஎஸ் எய்ட் நிறுவனம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலுமான நிதி ஆண்டுக்காக இலங்கைக்காக 6 பில்லியன் ரூபாய்களை அமெரிக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளது நிதித்தடை காரணமாக அந்த நிதியும் இலங்கைக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வியாழகிழமையன்று அமரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு எதிரான நிதித்தடை தீhமானத்தை நிறைவேற்றியது இலங்கை அரசாங்கம் தம்மீது சுமத்தப்பட்டு போர்க்குற்றச்சாட்டுக்கு பதிலளி…
-
- 0 replies
- 452 views
-
-
தேர்தலையொட்டிய பொலிஸ் பாதுகாப்பு 7 நாட்கள் தொடரும்! Published on July 25, 2011-3:52 am தேர்தலை ஒட்டி பலப்படுத்தப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடரும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னரும் வன்முறைகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதனாலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். அதேவேளை, இத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மற்றவர்களுக்கு எதுவித தொந்தரவுமின்றி தேர்தல் வெற்றிகளைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இதேவேளை, தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 107 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 136 சந்தேகநபர்கள்…
-
- 0 replies
- 258 views
-
-
காங்கேசன் துறைமுக புனரமைப்புப் பணி நாளை ஆரம்பம் news காங்கேசன் துறைமுக புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்திய அரசாங்கத்தின் பல மில்லியன் ரூபா நிதியுதவியுடனேயே காங்கேசன் துறைமுகம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்த் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு துறைமுகத்தின் புனரமைப்புப் பணியை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்வில் இந்திய மற்றும் இலங்கையின் துறைசார்ந்த அதிகாரிகள், அரசியல் வாதிகள், கடற்படையினர் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. 25 ஜுலை 2011, திங்கள் 7:45 மு.ப http://onlineuthayan.com/News_More.php?id=30951447925547649
-
- 0 replies
- 314 views
-
-
சுற்றுலாத் துறையின் வருமானங்கள் அதிகரிப்பு (+ 50.9%) news கடந்த ஆண்டின் முதல் அரை ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் அரை ஆண்டில், இலங்கை சுற்றுலாத் துறையின் வருமானங்கள் ($.370.1 மில்லியன்) 50.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை ஊக்குவிப்பு முகவர் நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் அரை ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் (381,538 பேர்) 36.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. இதேவேளை, கடந்த ஆண்டில் மொத்தமாக 650,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்ததுடன் இதனை இந்த ஆண்டில் 800,000 ஆக அதிகரிக்க சுற்றுலாத் துறை அமைச்சு இலக்கு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (என்.சிவரூபன்) …
-
- 0 replies
- 350 views
-
-
வவுனியாவில் குடிவரவு, குடியகல்வு திணைக்களக் கிளை விரைவில் திறப்பு! Published on July 25, 2011-3:59 am குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கிளை அலுவலகமொன்றை வவுனியா மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதேச மக்கள் கடவுச்சீட்டுக்காக கொழும்பிற்குச் செல்லாது வவுனியாவிலேயே அதனைப் பெற்றுக்கொள்வதற்கு வழியேற்படும் என்று வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். உதவி ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கவுள்ள குடிவரவு, குடியகல்வு கிளை அலுவலகத்தின் ஊடாக, வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் கடவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது http://www.saritham.com/?p=27565
-
- 0 replies
- 232 views
-
-
சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சு தோல்வி Monday, July 25, 2011, 6:31 உலகம், சிறீலங்கா ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹனவுடன் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை திருப்தியின்மையை வெளியிட்டுள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாலித கோஹன தலைமையிலான குழுவினர், இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று முழுமையாக மறுப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த சந்திப்பை, சர்வதேச மன்னிபபு சபை வித்தியாசமான அணுகுமுறையுடன் நடத்தியது. எனினும் இலங்கைக் குழுவினர், உறுதியான கலந்துரையாடலுக்கு இணங்காத நிலையில் குறித்த சந்திப்பு வெற்றி பெறவில்லை என்று சர்வதேச…
-
- 0 replies
- 224 views
-
-
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான்: தேர்தல் இதனையே நிரூபித்துள்ளது என்கிறார் விக்கிரமபாகு கருணாரட்ன [Monday, 2011-07-25 08:37:58] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் தங்களின் ஏக பிரதிநிதிகள் என வடக்கு மக்கள் இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல்களின் மூலம் ஆணித் தரமாக முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளனர். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 26 சபைகளில் போட்டியிட்டு 21 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றி ஈட்டியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது …
-
- 0 replies
- 237 views
-
-
சனல் 4 கொலைக்களம் வீடியோ ஆவணப்படம் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வருவதாகவும் அது விரைவில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெலலிதாவிற்குச் சொந்தமான ஜெயா தொலைக்கட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று வெளியான சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் இத்தகவலை அரசியல் அலசல் பகுதியில் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியை இலங்கையிலும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்ரீலங்காவின் தூதர் பிரசாத் காரியவாசம் அண்மையில் சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித…
-
- 2 replies
- 1.2k views
-
-
பெங்களூருவில் இலங்கை ராணுவ வீரர்கள் ஊட்டி: குன்னூர் அருகே வெலிங்டன்னில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இலங்கை ராணுவ வீரர்கள் பெங்களூரு கிளம்பி சென்றனர். இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியாவில் நடக்கும் 4 நாட்கள் நிகழ்ச்சிக்காக ஊட்டி அருகே வெலிங்டன் வந்தனர். அவர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்நிலையில் அவர்கள் ஊட்டியில் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர்கள் பெங்களுரு சென்று 2 நாட்களுக்கு பின்னர் இலங்கை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=280831 ------------------------------------------------------------------------------- vijayvel - chennai,இந்தியா 2011-07-23 11:11:54 IST இலங்கை போர் குற்றம் புரிந்த…
-
- 0 replies
- 650 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் அவசியத்தை தமிழ் மக்கள் வழிமொழிந்துள்ளனர்! தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டமைப்பு அறிக்கை இலங்கையில் நேற்று (23.07.11) இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் வெற்றி பெறச் செய்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில…
-
- 2 replies
- 995 views
-
-
வடக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கிழக்கில் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நடந்த தேர்தலில் நிழல் புலிகள் என்று அழைக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெரு வளங்களோடு தேர்தல் போர் புரிந்த மகிந்த ராஜபக்சவை தோற்கடித்திருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. Tamil party wins elections in Sri Lanka's ex-war zone Sri Lanka's biggest Tamil party has won local elections in the island's former war zone in the north and east. The Tamil National Alliance (TNA) took 18 out of 26 councils in what is being seen as a rare electoral setback for the government of President Rajapaksa. His Sinhalese-dominated coalition won in all other areas being cont…
-
- 8 replies
- 2.3k views
-
-
சிவகங்கை அகதி முகாம்களில் புலி உறுப்பினர்கள்? 24 ஜூலை 2011 தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் காணப்படும் அகதி முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தங்கியிருப்பதாக க்யூ பிரிவு காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து முகாம்களில் இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த முகாம்களில் சுமார் நூறு அகதிக் குடும்பங்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ராமேஸ்வரம் கடற்கரையின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இவ்வாறு ஊடுறுவியிருக்கலாம்…
-
- 2 replies
- 877 views
-
-
அரசுடன் பேசுவதில் இரகசியம் வெளியிடப்படமாட்டாது என்கிறார் சுமந்திரன் எம் பி [sunday, 2011-07-24 22:30:07] லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்க அங்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் காணொளி இணைப்பு.. http://youtu.be/_eRQbrnWWVo http://youtu.be/XOpdbpUrsBs http://youtu.be/LWTP20OSgRU http://youtu.be/ZHS2K6Qx10U http://www.seithy.com/breifNews.php?newsID=47091&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 911 views
-