ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
'இலங்கையின் கொலைக்களம்' ஆவணக் காணொளியை அமெரிக்க செனட் டா்கள் இன்று பார்வையிடும் சாத்தியம் [Friday, 2011-07-15 12:52:20] 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணக் காணொளியை அமெரிக்க செனட் டா்கள் இன்று பார்வையிடவுள்ளனா் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், செனட்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும் சனல் 4வின் இலங்கையின் கொலைக்களம் என்ற காணொளி ஆவணப்படத்தை காட்சிப்படுத்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மக்கோவன் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு உதவித் தலைவர் ரொம் லன்டோஸ் ஆகியோர் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட முன்னர் விளக்கவுரை வழங்கவுள்ளனர் எனவும்…
-
- 1 reply
- 404 views
-
-
தமிழ் மக்களை கடந்தவைகளை மறந்து, புதிய விடயங்களுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுமாறு இந்தியா கோரியுள்ளதாம். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிந்த இந்திய உதவி உயர்ஸ்தானிகர் விக்ரம் மிஷ்ரா நேற்று இதனை தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று கூறியுள்ளது. கடந்த காலத்தை நினைத்து, தமிழ் மக்கள் எதிர்காலத்தை இழந்து வருவதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளாராம். . இதற்கிடையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசாங்கமும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளாராம். . மிஸ்ரா அவர்களே இந்த கருத்தை ஏன் யாழ்ப்பாணத்தில் பொத…
-
- 8 replies
- 930 views
-
-
காலாசார நாள் - பரதன் - காலம்: 1985 ஆம் ஆண்டு ஆரம்பகாலம்… ஸ்ரீலங்கா அரசுக்கெதிராக தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் மிகத் தீவிரமடைந்துகொண்டிருந்த காலம். இடம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்… மாணவர்களுடன் பல்வேறு போராட்ட அமைப்புகளும், இயக்கங்களும் சந்திக்கும், விவாதிக்கும் அல்லது தர்க்கிக்கும் இடம் இது. அப்பொழுது அங்கே கல்வி பயின்ற சில மாணவர்கள் இந்தப் போராட்டத்தை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது? எவ்வாறு மக்களைப் போராட்டத்துடன் இணைப்பது? போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்துவது? என்று சிந்தித்தார்கள். அதன் விளைவாக கலை இலக்கியங்களை பயன்படுத்தி மக்களிடம் போராட்டத்தை எடுத்துச்செல்ல முனைந்தார்கள். 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகத…
-
- 0 replies
- 463 views
-
-
விடுதலைக்கு போராடிய அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்? இன்று சங்கிலியன் சிலை உடைக்கப்படுகிறது, நேற்று வன்னியில் தமிழரின் நிலங்களை பாதுக்காக காலனித்துவ ஆட்சியாளர்களுடன் போர் முறிந்த பண்டாரவன்னியனின் நினைவு சின்னத்தை அகற்றினார்கள். தமிழரின் வரலாற்று சின்னங்களை அழிப்பது என்பது தமிழரின் அடையாளத்தை அழிப்பது, தமிழர்களின் வரலாற்றை, தமிழர்களின் அடையாளத்தை அழிப்பது, இதில் சிறி லங்கா அரசு தனது திட்டத்தை தமிழர்களை கொண்டே நடாத்தி கொண்டிருகிறது. சங்கிலியன் வாளுடன் குதிரைமேல் நிற்கும் சிலை சிறி லங்கா இராணுவத்திற்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தல்லாக இருக்கிறதாம். தமிழ் அரசர்களின் சின்னங்கள், தமிழரின் விடுதலை போராட்ட …
-
- 4 replies
- 1.1k views
-
-
நீதிமன்ற அனுமதியின்றி தமிழினியிடம் இரண்டுதடவைகள் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவில் விசாரணை Monday, July 4, 2011, 17:21 சிறீலங்கா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினியிடம் நீதிமன்ற அனுமதியின்றி பயங்கரவாதத்தடுப்புப் பிரிவுப் பொலிசார் இரண்டு தடவைகள் விசாரணை நடாத்தியுள்ளனர். தமிழினிக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரஸ்தாப விடயம் தமிழினியின் சட்டத்தரணியினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பொதுவாக தடுப்புக் காவல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் என்பவற்றுக்கு மட்டுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட …
-
- 2 replies
- 508 views
-
-
மன்னார் தினச் சந்தை வியாபாரிகளை வெளியேற்ற நகர சபை அதிரடி உத்தரவு Friday, July 15, 2011, 21:26 சிறீலங்கா மன்னார் தினச்சந்தை வியாபாரம் செய்யும் இடத்தினை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முதல் மன்னார் நகரசபையிடம் ஒப்படைக்குமாறு மன்னார் நகர சபை எடுத்துள்ள முடிவுக்கு மன்னார் தினச்சந்தை வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக மன்னார் நகரசபை விடுத்துள்ள பொது அறிவித்தலின் பிரகாரம் மேலும் தெரிய வருகையில், தற்போது தினச்சந்தை வியாபாரம் செய்யும் இடமானது நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தினச்சந்தையாக குறுகிய காலப்பகுதியில் நடைமுறையில் இருந்து வந்தது. அந்தச் சந்தையானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய வாராந்த சந்தையே ஆகும். நாட்டின…
-
- 0 replies
- 384 views
-
-
இலங்கை தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் - இந்தியா 15 ஜூலை 2011 இலங்கைத் தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதனை முதனிலையாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்திய அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் நிபுணர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சில கேள்விகள் எழுவதாகத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான ஓர் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். யுத்த நிறைவினால் பிரச்சி…
-
- 1 reply
- 690 views
-
-
11 பதக்கங்களை வென்று யாழ். இந்து மாணவர் சாதனை news வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தடகளப் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி 8 தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 11 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் ஆர்.செந்தூரன் 15 வயது பிரிவு ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்றார். வி.யஸ்மினன் 19 வயது பிரிவு ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை யும் முப்பாய்சலில் வெள்ளிப் பதக்கத்தையும் 19 வயது பிரிவு ஆண்களுக்கான 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் 4*400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் தங்கப்பதக்கத்தையும் பெற்றார். வடமாகாண தடகளப் போட்டியில் 15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான சிறந்த மைதான நிகழ்வுக்கான வீரராக…
-
- 11 replies
- 753 views
-
-
87 இலங்கை அகதிகள் குறித்து நியூசிலாந்து பாராளுமன்றில் விவாதம் Friday, July 15, 2011, 22:55உலகம், சிறீலங்கா ஜோன் கீ எல்ஸியா கப்பலில் வந்த தமிழ் அகதிகளின் வேண்டுகோள்களை நியூசிலாந்து தலைமை அமைச்சர் நிராகரித்துள்ளது குறித்து கிறீன் கட்சியைச் சேர்ந்த கீய்த் லொக்கி பாராளுமன்றத்தில் நடந்த விசேட விவாதத்தின் போது அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எத…
-
- 0 replies
- 484 views
-
-
பிச்சைக்காரன் கால் காயம் போன்று சில அரசியல்வாதிகளும் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனராம் [Friday, 2011-07-15 08:17:20] பிச்சைக்காரனின் காலில் உள்ள காயம் ஆறிவிடாமல் பார்த்துக்கொள்வது போன்று இங்குள்ள சில அரசியல் வாதிகளும் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்தே அரசியல் வியாபாரம் நடத்துகின்றனர். எனப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ விமர்சித்திருந்தார். நேற்று வலிகாமம் தெற்கு பிரதேச சபைப் பிரிவில் உள்ள குளத்தடி நாச்சிமார் கோயில் முன்றலில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். சர்வத…
-
- 1 reply
- 762 views
-
-
' தமிழனின் தன்மானத்தையும் தமிழ் தேசியத்தையும் விற்றுப் பிழைத்தவன் உன் தந்தை' என்று உங்கள் பிள்ளைகளுக்கு மாறாத அவப்பெயரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் ஏழாலைக் கூட்டத்தில் சரவணபவன் முழக்கம் [Friday, 2011-07-15 20:30:55] "தன்னுடைய சுயநலத்துக்காகவும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் தமிழனின் தன்மானத்தையும் தமிழ் தேசியத்தையும் விற்றுப் பிழைத்தவன் உன் தந்தை" என்று உங்கள் பிள்ளைகளுக்கு மாறாத அவப்பெயரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் தமிழன் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் இழந்து வாழ மாட்டான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து நமது ஒன்றுபட்ட சக்தியை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவோம் வாரீர் என தமிழ்த்தேசிய கூ…
-
- 2 replies
- 769 views
-
-
மகிந்த அரசைக் காப்பாற்றும் முயற்சியில் ரணில் – பிரித்தானியாவில் இரகசிய பேச்சு நடத்தவும் திட்டம் [ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 00:15 GMT ] [ கார்வண்ணன் ] பிரித்தானியாவுக்கு இந்தவாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் நோக்கில் இரகசியப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ள கொமன்வெல்த் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்குச் செல்லவுள்ளார். இவருடன் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சவும், பிரித்தானியாவுக்குப் பயணமாகவுள்ள…
-
- 1 reply
- 486 views
-
-
Murali cautions over tour boycott SRI Lanka's most famous cricketer, and Tamil, Muthiah Muralidaran, does not share the view expressed by almost 3000 people in an Age poll that Australia should boycott its impending tour to the island nation for moral reasons. The Australian tour will go ahead as scheduled, but since the screening on Four Corners of a graphic Channel 4 documentary about atrocities committed at the end of the Sri Lankan civil war and its aftermath, unease has been privately expressed by some players (though not players likely to be selected for the tour). Judging by the poll results, that unease is replicated in some sections of the community. Of th…
-
- 10 replies
- 891 views
-
-
பிலிப்பைன்ஸ் சிறுமியின் பிறப்பு உறுப்புகளைத் தொட்டுப் பார்த்த வெட்கம் கெட்ட இலங்கை மதகுருவின் விபஸ்தையற்ற நடத்தை [Friday, 2011-07-15 10:15:49] பிலிப்பைன்ஸில் இலங்கையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் 9 வயது சிறுமி ஒருவரை தவறான நோக்குடன் சீண்டிப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.பசே நகரத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் தாயாருடன் இருந்த சிறுமியொருவரின் பிறப்பு உறுப்புக்களை குறித்த மதகுரு தொட்டார் என பாதிப்புக்குள்ளாகிய பெண் தெரிவித்துள்ளார். சம்பவத்தை நேரில் கண்ட தாய் வீதி சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒருவரின் உதவியை நாடி குறித்த இலங்கை மதகுருவை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். 43 வயதான குறித்த சந்தேக நபர் மணிலாவில் உள்ள பல்கலைக்கழகத…
-
- 2 replies
- 776 views
-
-
கறுப்பு ஜூலை - ஈழத் தமிழர் வரலாற்றின் வலி சுமந்த நாட்கள். ஜூலை 15, 2011 இனவாத சிறீலங்கா அரசால் சிங்கள மக்களிடையே இனவாத கொள்கைகளை பரப்பி இன அழிப்பிற்கான கலவரங்களை உருவாக்கி தமிழினத்திற்கெதிரான வன்முறைகளையும் படுகொலைகளையும் நேரடியாக அரச உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட நாட்கள் இவை. 3000 ற்கு மேற்பட்ட மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படனர், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். பலர் உயிருடன் எரிக்கப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 18,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. இலங்கைத்தீவின் தென் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்…
-
- 1 reply
- 540 views
-
-
ஆயுதங்கள் மீட்க்கப்பட்டதாகச் சொன்னது ஒரு கட்டுக்கதை ! கிழக்கில் ஆயுதக் குழுக்கள், ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வாகரை பிரதேசத்தில் ஆயுதங்கள் சிலவற்றை கைவிட்டுச் சென்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகள், கிழக்கு பிராந்தியத்தின் இராணுவக் கட்டளைத் தளபதியின் மற்றுமொரு ஊடக கட்டுக்கதை என இராணுவத் தலைமையக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆயுதங்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து கிழக்கிலுள்ள ஆயுதக் குழுக்கள் வாகரை பிரதேசத்தில் ஒளித்துவைத்துள்ள தமது ஆயுதங்கள் குறித்து தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததாக கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜனரல் போனிபஸ் பெரேரா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கிறீஸ்…
-
- 2 replies
- 814 views
-
-
போர்க் குற்றவாளி மகிந்த இராசபக்சேக்குப் பாடம் படிப்பிக்க உள்ளாட்சித் தேர்தல் நல்ல வாய்ப்பாகும்! நக்கீரன் [Friday, 2011-07-15 20:12:26] பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெரியளவில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே தனது அமைச்சர் பட்டாளத்தோடு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். மக்களது வாக்குகளை அறுவடை செய்யப் பணம், பதவி மற்றும் சலுகைகள் ஆளும்கட்சியால் வாரி வழங்கப்படுகின்றன. வடக்கில் நடக்கும் தேர்தல் பரப்புரைக்கு இபிடிபி கட்சித் தலைவர் டக்லஸ் தேவானந்தா தலைமை தாங்குகிறார் எனச் சொல்லப் பட்டாலும் யாழ்ப்பாணத்தில் முகாம் இட்டுள்ள பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பஸில் இராசபக்சே மற்றும்…
-
- 0 replies
- 634 views
-
-
மாவீரன் லெப்.சீலனின் 28 ஆவது வீரவணக்க நாள் இன்றாகும். Friday, July 15, 2011, 0:31 தமிழீழம், மாவீரர்கள் சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர். லெப்டினன்ட் சீலன் லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983 தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்க…
-
- 11 replies
- 1.1k views
-
-
மகிந்தரின் சகோதரர் லண்டன் வருகிறார்: வரவேற்ப்பு எப்படி இருக்கப்போகிறது ? எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்தரின் சகோதரரும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ பிரித்தானியா வருகிறார். இவர் வரும் 17ம் திகதி லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தில் டேர்மினல் 4 ஊடாக லண்டன் வர இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இவருடன் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் உடன் வர இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா வந்தபோது தமிழர்கள் எவ்வாறு வரவேற்றார்கள் என்பது ஊரறிந்த விடையம். இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
காலிமுகத்திடலில் சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்ட காணி: பணம் கொடுக்காமல் டிமிக்கி விட்டுக் கொண்டிருக்கும் சீன நிறுவனம் [Friday, 2011-07-15 09:37:40] ஹோட்டல் அமைப்பதற்காக சர்வதேச நிறுவனமொன்றுக்கு காலி முகத்திடலில் காணியை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அதன் நிபந்தனைகளுக்கு அமைய உரிய நேரத்தில் பணம் செலுத்தப்படவில்லை எனவும், உடன்படிக்கை தற்போது செல்லுபடியற்றதாகியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார். குறித்த உடன்படிக்கைக்கு அமைய பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பதாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வங்கியில் வைப்பிலிட வேண்டும் எனவும், எஞ்சிய 86 மில்லியன் டொலர்களை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு ம…
-
- 1 reply
- 458 views
-
-
இங்கும் இலவசங்கள் news வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து இலவசங்களை அள்ளி வீசும் படலமும் தொடங்கியுள்ளது. யாழ். மாவட்டத்தில் சமுர்த்தித் திட் டப் பயனாளிகளில் தெரிந் தெடுக்கப்பட்ட 6,000 பேருக்கு இலவச சேலை மற்றும் சாரம் என்பனவற்றை அரசு வழங்கி வருகிறது. இவை தவிர நீர் இறைக்கும் இயந்திரம், மருந்து தெளிகருவிகள், தையல் இயந்திரம், மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் என்பனவும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இலவச சேலை, சாரம் என்பன தவிர்ந்த பொருள்கள்கள் ஏற்கனவே பிரதேச செயலகங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டவை என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு மக்களைத் திரட்ட…
-
- 1 reply
- 470 views
-
-
வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம்பெயர் மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டும்! யாழில் பசில் ராஜபக்ச. [Thursday, 2011-07-14 21:47:17] வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென புலம்பெயர் தமிழர்களை வட பகுதியில் முதலீடுகளை செய்யுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்ச கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 1983ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதாகவும் அது கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென அரசாங்கம் தற்போது அங்கு அபிவிருத்தித் திட்ட…
-
- 6 replies
- 891 views
-
-
அமைதி என்ற வார்த்தைக்கு மயான அமைதி என்பது பொருளல்ல: சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் மீது சிங்கள இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்துக் கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப்பலில் பயணம் செய்த 87 ஈழத் தமிழ் அகதிகளை இந்தோனேசிய அரசு நடுக் கடலில் சிறை பிடித்துள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியதாகும். ஈழத் தமிழ் அகதிகள் பயணம் செய்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் பழுதாகி நின்றபோது இந்தோனேசிய கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சிறைப் படுத்தப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 763 views
-
-
வடக்கிலும் பெருந்தொகை ஆயுதங்கள் நேற்றுப் படையினரால் மீட்பு [Friday, 2011-07-15 17:07:11] கொக்காவில், வன்னிவிளாங்குளம், உடையார் கட்டுகுளம் பகுதிகளிலிருந்து பெருந்தொகையான ஆட்லறிகளையும் வெடிப்பொருட்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 120 மி.மி. மோட்டார் குண்டுகள் 1555, 12.7 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 27,000 தோட்டாக்கள், 7.52 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 15,000 ஆகியனவும் இவற்றில் அடங்கும். நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின்போது, 81 மி.மீ ரக மோட்டார் குண்டுகள் 54, 86 பௌண்டர் குண்டுகள் 3000, 130 மி.மீ ஏவுகருவிகள், ஆகியன கைப்பற்றப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல கூறினார். …
-
- 0 replies
- 621 views
-
-
மீண்டும் மக்களை ஏமாற்றும் களத்தில் த.தே.கூ. - டக்லஸ்...! தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை த.தே.கூ.வினரே இழுத்துச் சென்றனர்- டக்லஸ்..! மலத்தில் புரளும் பன்றியின் இரைச்சலா..? ஈழதேசம்...! தமிழ் மக்கள் ஓரணியில் நின்று ஒற்றுமையின் பலத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று கூறியே, காலம் காலமாகப் பெற்று வந்த அரசியல் பலத்தை வைத்து, சுயலாப அரசியல் தலைமைகள் இதுவரை எதைச் சாதித்திருக்கின்றார்கள்..? என்ற கேள்வியோடு மற்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறார் டக்லஸ். தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பெற்றிருந்த த.தே.கூ.வினர் அழிவுகளுக்காக அன்றி ஆக்கத்தை நோக்கி பயன்படுத்தவில்லையே..? என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் மற்றும் இலங்கை அமைச்சருமான தேவானந்தா த.தே.கூ.வினரைப் பார்த்து பகிரங்க…
-
- 0 replies
- 819 views
-