Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [ புதன்கிழமை, 13 யூலை 2011, 08:57 GMT ] [ தா.அருணாசலம் ] யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேட்பாளர்கள் மீது ஈபிடிபி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து இராணுவப் புலனாய்வாளர்கள் தாக்குதல்களை நடாத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது. இவ்வாறு கனடாவை தளமாகக் கொண்டு அரசியல் பத்திகளை எழுதிவரும் டி.பி.எஸ் ஜெயராஜ் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் இல்லங்கள் மீது இரவுநேரங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அச்சுறுத்துகின்ற ஒரு செயலாகும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பா…

  2. கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையம் - உடன்படிக்கையில் கைச்சாத்து [ புதன்கிழமை, 13 யூலை 2011, 08:36 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சமகால இந்திய ஆய்வு மையம் [Centre for Contemporary Indian Studies - CCIS] ஒன்று ஆரம்பிப்பதற்கான உடன்படிக்கையில் யூலை 12 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்விசார் ஓர் உறவின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள சமகால இந்திய ஆய்வு மையத்தை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்திய உயர் ஆணையாளர் ஆசோக் கே.காந்தா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் Kshanika Hirimburegama ஆகியோர் சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மு…

  3. நேற்றுத்தான் ஈழ நாதத்தில் எழுதி இருந்தோம் 1981 இல் உள்ளூராட்சி தேர்தலின் போது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த முறை அதே தேதி என்ன நடக்கப்போகுதோ தெரியாது என்று. சந்தேகமே இல்லை யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. . அனால் இந்த முறை தமிழரின் சொத்தான நூலகத்தை தீயிட்டது போல் அல்லாமல் சட்ட ரீதியாக , நாசூக்காக தமிழர்கலைக்கொண்டே சங்கிலிய மன்னன் சிலை இடிக்கப்படுகின்றது. அதாவது இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் …

  4. கொழும்புக்கு எதிராக இலண்டன் நீதிமன்றம் தீர்ப்பு! - 162 மில்லியன் டொலரை வட்டியுடன் செலுத்த உத்தரவு!! சிறிலங்கா அரசாங்கம் 162 மில்லியன் டொலர் நட்டஈட்டையும் அதற்குரிய வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என இலண்டன் வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதிக்காக சிறிலங்கா அரசாங்கம் ஸ்ரான்டட் சார்ட்டட் வங்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியிருந்த நிலையிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்விகாரம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஸ்ரான்டட் சார்ட்டட் வங்கி இலண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கின் 140 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பின்படி சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்த…

  5. கப்பல்களை மறிக்க இந்தோனேசியா சர்வதேச கடல் பொலிஸ்காரன் அல்ல Wednesday, July 13, 2011, 12:43உலகம், சிறீலங்கா அகதிகள் அந்தஸ்துக் கோரிச் செல்வோரின் கப்பல்களைத் தடுத்து நிறுத்துவதில் இந்தோனேஷியாவின் நடவடிக்கைகள் தெளிவில்லாமல் உள்ளதாக கனடா அவுஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. இது ஒரு துரதிர்ஷ்டவசமான விடயம் எனவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இவ்வாறான அகதிக் கப்பல்கள் கடந்த காலங்களில் அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கே சென்றுள்ளதாகவும் நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் இந்தோனேஷியா, சர்வதேசக் கடல் பொலிஸ்காரன் போன்று செயற்படுவதுவதாகவும் அந்த வேலை அவர்களுக்குரியது அல்ல என்ற கருத்துப்படவே இந்த நாடுகள் இவ்வா…

    • 3 replies
    • 1k views
  6. யாழ்.குடாநாட்டில் நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலொன்று நம்பிக்கையற்றதாகவே இருக்கிறது:- 13 ஜூலை 2011 யாழ்.குடாநாட்டில் நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலொன்று நம்பிக்கையற்றதாகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தினில்; இடம்பெற்ற தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டது. யாழ் மாவட்ட தேர்தலில் குதித்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து தேர்தல் ஆணையாளர் உதவித்தேர்தல் ஆணையாளர் முகமட் தலைமையிலான குழு ஒன்றை யாழ்ப்பாணம் அனுப்பியிருந்தார். இந்தக்குழு நேற்றையதினமும் …

  7. கூட்டமைப்பின் குற்றச்சாட்டிற்கு மறுத்தான் போடுகிறார் யாழ்.கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க: [Wednesday, 2011-07-13 21:29:15] தமக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதாக பிரசாரம் செய்து கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியல் பிழைப்பு நடத்திவந்த கூட்டமைப்பு தற்போது இராணுவத்தினருக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்த முயற்சிக்கின்றது இவ்வாறு யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டுகின்றார். யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது இராணுவத்தினர் திட்டமிட்டு இடையூறு விளைவிக்கின்றனர் என அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இராணுவத்தினர் உண்மையாகவே இவ்வாறு அடாவட…

  8. கிளின்ரனின் இந்திய விஜயத்தின் போது இலங்கை விவகாரம் குறித்து பேசப்படாது 13 ஜூலை 2011 அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனின் இந்திய விஜயத்தின் போது இலங்கை விவகாரம் குறித்து பேசப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிலரி கிளின்ரனின் விஜயம் அரச சார்பற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிலரி கிளின்ரன் தமிழகத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்து. அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் கிளின்ரன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பதவி வகிக்கும் நபர் ஒருவர் சென்னைக்கு விஜயம் செய்யும் முதல் தடவை இத…

    • 2 replies
    • 862 views
  9. Jul 14, 2011 / பகுதி: செய்தி / தென்பகுதி அதிவேக வீதியில் பயணிக்க சில வாகனங்களுக்குத் தடை! தெற்கு அதிவேக வீதியில் வாகன வகைகள் சிலவற்றிற்கு பயணிப்பதைத் தடுப்பது தொடர்பாக பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் உளவு இயந்திரங்கள் ஆகியவற்றிற்கான அனுமதியை வழங்காதிருப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்கலன்கள் மற்றும் லொறிகள் உரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மாத்திரம் அனுமதி வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் - கொட்டாவ - மாகும்புர பகுதியிலிருந்து காலி - பின்னதுவ வரை செல்லும் தெற்கு அதிவேக வீதியின் முதற்கட்டத்தில் மணித்தியாலத்திற்கு…

  10. மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடியில் புத்தர் சிலை வைக்க நடவடிக்கை!(Photon in) Wednesday, July 13, 2011, 18:35சிறீலங்கா, தமிழீழம், முதன்மைச்செய்திகள் மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த பயோப்பா என அழைக்கப்படும் பெருக்க மரம் ஒன்று உள்ளது.அதற்கடியில் புத்தர் சிலையினை வைப்பதற்காக இராணுவத்தினர் திட்டம் தீட்டி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில் உள்ள பெருக்க மரத்தினை குறித்த கிராம மக்களும் குறித்த கிராமத்தில் உள்ள கத்தோலிக்க ஆலய நிர்வாகமும் இணைந்து பேணிப்பாது காத்து வந்தனர். குறித்த கிராமத்தில் நூறு வீதம் கத்தோலிக்க மக்கள் வாழ்ந்து வருவதினால் குறித்த பெருக்க மரத்திற்கு அருகாமையில் மாதா சொரூபம் ஒன்றை வைத்து வழிபட்டு வந்த…

  11. நியூசிலாந்துக்குச் செல்லும் வழியில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள 85 இலங்கை அகதிகளை தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். அகதிகளாக தமது நாட்டுக்கு வருவதற்குரிய நடைமுறையைப் பின்பற்றாமல் ஆட்கடத்தல் முகவர்கள் மூலமாக வரும் எவரையும் தாம் உள்ளே எடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இப்போது இந்த படகிலுள்ள 85 பேரை உள்ளே அனுமதித்தால், இன்னும் லட்சக்கணக்கானவர்கள் தமது நாடு நோக்கி வருவார்கள் என்றும், அதோடு இவ்வாறு செய்தால் ஆட்கடத்தல்காரர்களுக்கு சன்மானம் வழங்குவதுபோல அமைந்துவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் தமது வாழ்க்கை இனி நியூசிலாந்தில்தான் என்றும், தாம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் …

  12. இழப்பால் அதிர்கிறது கொக்கிளாய் - ஒரு பூர்வீக கிராமத்தின் துயரக் கதை - 13 ஜூலை 2011 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தமிழ்மாறன் இழப்பால் அதிர்கிறது கொக்கிளாய் - ஒரு பூர்வீக கிராமத்தின் துயரக் கதை - ஒரு துண்டிக்கப்பட்ட கிராமத்தைப் போல கொக்கிளாய் மூடி வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாக புறக்கணிப்படுவதாகவும் நடத்தப்படுவதாகவும் வெதும்பும் சனங்களின் வார்த்தைகள் மிகவும் அதிர வைக்கின்றன. இங்கு சனங்கள் வாழந்தார்களா? என்று பார்ப்பவர்கள் கேட்கும்விதமாக பாழடைந்து அழிவுகளின் எச்சமும் அழிந்து போய்க் கிடக்கிறது கொக்கிளாய்ப் பிரதேசம். கொக்கிளாயில் கடந்த சில மாதங்களின் முன்பாக 27 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். சிங்களக் குடிய…

  13. நாய்க்கூட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த 65 வயது தாய் பொலிஸாரால் மீட்பு Wednesday, July 13, 2011, 12:46சிறீலங்கா மாத்தறை, நூப்பே பிரதேச வீடொன்றிலுள்ள இருட்டறையொன்றை நாய்க்கூடு வடிவில் வடிவமைத்து அதனுள் நாயுடன் தங்க வைக்கப்பட்டிருந்த 65 வயது மூதாட்டி ஒருவரை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர்.நான்கு பிள்ளைகளின் தாயாரான மேற்படி மூதாட்டி குறித்த நாய்க் கூட்டினுள்ளேயே காலத்தைக் களித்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே மாத்தறை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு அவரை மீட்டுள்ளது. குறித்த கூண்டுக்குள்ளிருந்த நாய், மேற்படி மூதாட்டி அங்கிருந்து வெளியே செல்லாது பாதகாத்து வந்ததாகவும் குறித்த நாயை அங்கிருந்து அகற்றிய பின்னரே அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டத…

  14. இலங்கையிலிருந்து செல்லும் தமிழர்கள் தற்போது நியூசிலாந்தை 13 ஜூலை 2011 தமது குடியேற்ற நாடாக தெரிவு செய்துள்ளனர் - அமல் ஜயசிங்க: புலம் பெயர்ந்து குடியேற்றவாசிகளாக இலங்கையில் இருந்து செல்லும் தமிழர்கள் தற்போது நியூசிலாந்தை தமது குடியேற்ற நாடாக தெரிவுசெய்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி சேவையின் பிரதானியான சிரேஷ்ட ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளதால், தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நியூசிலாந்து நோக்கி சென்று கொண்டிருந்த போது, 80 இலங்கையர்கள் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக …

  15. கிளிநொச்சி வலய தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் யாழில் ஆர்ப்பாட்டம் Wednesday, July 13, 2011, 12:39சிறீலங்கா தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கிளிநொச்சி வலய தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை காலை அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். யாழ். வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ‘போரினால் பாதிக்கப்பட்ட எமக்கு ஆசிரியர் நியமனம் புறக்கணிப்பா?’, ‘பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு முடிவு என்ன?’, ‘கிளிநொச்சி தொண்டர் ஆசிரியர்களுக்கு மாத்திரம் ஆசிரியர் நியமனம் புறக்கணிப்பா?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள…

  16. இந்த வருடம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி எனது இதயத்தில் இடியை ஏற்படுத்திய விடயம் ஒன்றை சனல்4 இல் பார்த்தேன். ஆம் அதுதான் இலங்கையில் கொலைக்களம் என்ற காணொளி. சனல் 4 இதனை ஒளிபரப்ப முன்னராக அதன் ஒளிபரப்பாளர் கூறினார், போர்க்குற்றத்திற்கான ஆதாரமாகவும் மனித குலத்திற்கு எதிரான ஆவணங்களாக இந்த காணொளி இருக்கும் என்று. அதுமட்டுமல்ல இந்த காணொளி நீதியைப்பெற்றுக்கொடுக்கவும் உதவும் என்று குறிப்பிட்டார். . உண்மையில் எனக்கு ஞாபகம் வருகின்றது 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலண்டனில் பெருமளவான தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்கள். இவர்கள் இனப்படுகொலைக்கு எதிரான கோசங்களை இட்டார்கள். அதன் பிற்பாடு நூற்றுக்கணக்கானவர்கள் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் கூடி போராட்டம் செய்திருந்தார்க…

    • 0 replies
    • 1.1k views
  17. இலங்கையில் அதிகரித்தும் வரும் சிறுமிகள் கருத்தரிப்பு: தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை [Wednesday, 2011-07-13 12:18:36] சிறுமிகள் கருத்தரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணத்தைக் கண்டறியும் வகையில் நாட்டின் சில பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் ஆய்வொன்றை நடத்தவும் அதிகாரசபை ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறுமிகள் கருத்தரித்துள்ளமை தொடர்பில் அநுராதபுரம், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டார். இதன்பிரகாரம் முதற்கட்ட நடவடிக்கையாக பொலனறுவை…

    • 1 reply
    • 692 views
  18. யாழ். செல்லும் மகிந்தறாஜபக்ச - தேர்தல் வியூகம் என்கிறது கொழும்பு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சியை வெற்றிபெற வைக்கும் முனைப்புடன் மகிந்தறாஜபக்ச யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடு பிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரசாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வீரசிங்கம் மண்படத்தில் யாழ்.மக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் …

  19. [ புதன்கிழமை, 13 யூலை 2011, 03:45.49 AM GMT ] கிழக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத தொகுதியொன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.36 ரீ56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால் இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிகள், விமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. வாகரைப் பிரதேசத்தில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த பகுதியில் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடத்…

  20. 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் வெள்ளியன்று அமெரிக்க காங்கிரஸ் மண்டபத்தில் காண்பிக்க ஏற்பாடு [Wednesday, 2011-07-13 12:23:19] பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் எதிர்வரும் 15 ம் திகதி அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 15 ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ள இக்காட்சியைத் தொடர்ந்து இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதமொன்றும் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனிதவுரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகளுக்கான அமைப்பு என்பன இணைந்து மேற்கொண்டுள்ளன. அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினரும் Tom Lantos மனித உரிமைகள் அமைப…

  21. புதன்கிழமை, 13, ஜூலை 2011 (9:33 IST) சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை என்ற சி.டி.,யை மாணவர்களுக்கு வழங்கினார் வைகோ இலங்கை ராணுவத்தால் ஈழத்தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து தயாரிக்கப்பட்ட சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை, ஐ.நா.,வின் மூவர் குழு அறிக்கை' என்ற சி.டி.க்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து நேரில் வழங்கி வருகிறார். தாம்பரத்தில் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வாயிலில் 12.07.2011 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவித்தது தொடர்பான சி.டி.க்களை வழங்கினார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57669

  22. 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: தே.அ.ஒ _ வீரகேசரி இணையம் 7/13/2011 11:20:48 AM Share ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்க பலத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் முயற்சிக்கு அரசுடன் இணைந்துள்ள சில அமைச்சர்கள் துணைபோவதாகவும் அவ் ஒன்றியம் குற்றஞ்சாட்டியது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயா கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இதனை தெரிவித்தது…

  23. யாழ். வருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ: ஐந்து நாட்கள் தங்கி அபிவிருத்தி விடயங்களை நேரடியாக நெறிப்படுத்துவாராம் [Monday, 2011-07-11 19:20:01] ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகை தருகை தரவுள்ளதாக ஜனாதிபதியின் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ஜந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடுபிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரச்சாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.