Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கதிர்காமம் சென்ற பெண்ணை இராணுவத்தினரே பலத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்! சிறுத்தை கடித்து மரணமானதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட பெண்ணை சிங்கள இராணுவத்தினரே பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் படுகொலை செய்துள்ளனர். குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது உறவினர்களால் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற பெண் ஒருவரை யால காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலி கடித்துக்குதறியதில் அப்பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆயினும் இவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் சிறுத்தையோ அல்லது ஏதாவது மிருகமோ தாக்கியதால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். குறித்தபெண் பாலியல் பலாத்காரம் செ…

  2. செவ்வாய்க்கிழமை, 12, ஜூலை 2011 (10:29 IST) மருத்துவமனையில் சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஏற்ப தண்டனை அனுபவித்து வரும் இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57614

  3. கூட்டத்துக்கு வராவிடின் மீண்டும் தடுப்பு முகாம் செல்ல நேரிடும் – படையினர் எச்சரிக்கை Tuesday, July 12, 2011, 10:47 சிறீலங்கா, தமிழீழம் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாவில் நேற்று (10-07-2011) நடாத்தப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு இளையோர்கள் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறீலங்கா படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்திற்கு தமிழ் இளையோர்கள், குறிப்பாக சிறீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பலர் மிரட்டி அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கிளிநொச்சியில் நடத்திய பரப்புரைக் கூட்டத்த…

  4. கூட்டமைப்புக்கு வடக்கில் வாக்களிக்க விடாமல் தடுப்பதில் அரசு மும்மரம் – விக்கிரமபாகு! Published on July 12, 2011-1:04 am வடக்கில் மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்புக்கு வாக்களிக்க விடாமல் தடுத்து, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் கருணா, டக்ளஸ் ஆகியோரே என்ற மாயையை உருவாக்க அரசு முயற்சிக்கின்றது. பின்னர் இவர்களுடன் பேச்சு நடத்தி அரசுக்குத் தேவையான தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதே அரசின் நோக்கம் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் திட்டமிட்டபடி வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனை நாம் வன்மையாகக் கண்டிக…

  5. அரச நிகழ்வுகளுக்கு இ.போ.ச பஸ்கள் குடாநாட்டு பயணிகள் வீதிகளில் தவிப்பு 2011-07-11 தற்போது குடாநாட்டிலும், கிளிநொச்சிப் பகுதியிலும் சூடுபிடித்துள்ள அரச திறப்பு விழாக்கள் மற்றும் அமைச்சர்களின் நிகழ் வுகள் ஆகியவற்றில் மக்கள் பங்கு பற்றுவதற்காக இ.போ.ச பஸ்கள் அரச தரப்பால் பயன்படுத்தப்படுவதால் நேற்றுத் திங்கட் கிழமையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் குடாநாட்டின் உள்ளூர் போக்குவரத்தில் சீரற்ற நிலை காணப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்தப் போக்குவரத்துச் சீரின்மையால் மக்கள் வீதிகளில் நீண்ட நேரம் காத்திருந்ததுடன் பெரும் அöசளகரியங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: உள்ளூராட்சித்தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள…

  6. கறுப்பு யூலை நடந்த அதே தேதிதான் நடக்க இருக்கும் தேர்தல் தேதியும் Workflow: Public யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, யூலை 12, 2011 1981 ஆம் ஆண்டு யூலை 23 இல் இடம்பெற்ற அரச ஆதரவுடனான இனப்படுகொலை கறுப்பு யூலையாக இன்னமும் தமிழ் மக்களின் வடுவாக இருக்கின்றது. அதே வேளை இதே காலப்பகுதியில் தான் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலின் போது கொழும்பில் இருந்து வந்த அரச அதிகாரிகளாலும் காமினி திஸ்ஸ் நாயக்க உட்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களாலும் அடாவடித்தனம் மேற்கொள்ளப்பட்டது. . ஆம் 1981 ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தலின் போது தெற்கில் இருந்து வந்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் யாழ்.நூலகம், நாடாளு மன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வீடு ஆகியன எரிக்கப்பட்டன. . இன்று முப்பது…

    • 0 replies
    • 456 views
  7. பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் நடந்தால் நேரடியாகவே நீதிமன்றில் முறையிடவும் ஏற்பாடு; குடாநாட்டில் புதிய பொறிமுறையை நடைமுறைப்படுத்த முடிவு news குடாநாட்டில் அண்மைக் காலத்தில் திடீரென அதிகரித்துள்ள பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அடுத்து குடும்பத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றால், அவை குறித்து நேரடியாகவே நீதிமன்றுக்கு முறைப்பாடு செய்யும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவிருக்கிறது. சட்ட உதவி ஆணைக்குழுத் தலைவர் நீதியரசர் என்.கே. உடலகம மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா நடத்திய கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய முறைப்பாடுகள…

  8. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் எரியும் இன்னொரு பிரச்சினை: 162 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு [Tuesday, 2011-07-12 09:46:53] இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதற்கான வட்டியு்ன் சேர்த்து ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹெஜிங் உடன்படிக்கையின்படி ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை செலுத்தாததால், அவ்வங்கிக்கு சுமார் 162 மில்லியன் டொலர்களையும் அதற்கான வட்டியையும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே (சீபெட்கோ) வழங்க வேண்டியுள்ளதாக லண்டன் நீதிமன்றமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீபெட்கோவிலிருந்து கருத்து கூறு…

  9. வெளிநாடுகளின் உதவியுடன் குடாநாட்டில் 3 துறைமுகங்கள்; கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் தகவல் யாழ். மாவட்டத்தில் கரை யோரங்களில் மூன்று துறைமுகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 10 ஆம் திகதி இடம் பெற்ற கிராமிய கடற்றொழில் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: யாழ். மாவட்டத்தில் குருநகர், இன்பருட்டி, மயிலிட்டி ஆகிய இடங்களில் 3 துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. குருநகரில் புதிதாக அமைக்கப்படும் துறைமுகத்துக்கான நிதியுதவியை டென்மா…

  10. அம்பாந்தோட்டைக்கு வாய்ப்பை வழங்கி ஆபத்துக்கு முகம் கொடுக்க வேண்டாம்: மார்க் பீற்றர் வீரகேசரி இணையம் 7/11/2011 2:13:14 PM - இலங்கையின் அம்பாந்தோட்டை நகருக்கு பொதுநலவாய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஆபத்திற்கு முகம் கொடுக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரத்தின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் 71 நாடுகளின் பிரதி நிதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் ஏற்பட்ட கஷ்டங்களின் பின், இது ஆபத்துக்கு முகம் கொடுப்பதற்கான நேரம் அல்ல. இதுதான் தூதுக்குழுவினருக்கு நாம் அனுப்பிய உறுதியான செய்தியாகும் என கோல்ட் கோஸ்ட் 2018 திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் பீற்றர் கூறினார். 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு இலங்கையின் அம்…

  11. பிரித்தானியாவில் பாரிய கடனட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர் கைது : 12 ஜூலை 2011 : கடன் அட்டை மூலம் பிரித்தானியாவில் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர் ஒருவரை பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்துள்ளனர். பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறிய இந்த இலங்கை பிரஜை கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல், 41 ஆயிரத்து 500 ஸ்ரேலிங் பவுணக்களை கடன் அட்டை மூலம் மோசடி செய்துள்ளார் என பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முருகையா செல்வகுமாரன் என்ற இந்த நபர் வெஸ்லி என்ற பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளதுடன் எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களின் கடன் அட்டைகளின் தகவல்களை உபகரணம் ஒன்றை பயன்படுத்தி திருடியுள்ளார். …

  12. வடபகுதி ரயில் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் விசேட திட்டம் [Tuesday, 2011-07-12 08:54:34] வடபகுதி ரயில் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.இதற்கமைய மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வடபகுதி ரயில் மார்க்கத்தில் ஒவ்வொரு புதிய ரயில் நிலையம் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை விரிவுபடுத்தும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் எதிர்பார்த்ததை விட மிக குறுகிய காலத்தில் வட பகுதி ரயில் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. http…

  13. வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதம்: இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி ஏற்றுக் கொள்கிறார் [Monday, 2011-07-11 22:56:48] போரினால் பாதிப்புகளுக்கு உள்ளாகிய வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ளதாக இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். ஆரம்ப கட்டமாக, ஆயிரம் வீடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.வடக்கு மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஒன்றிணைந்த சக்தியாகத் தொடர்ந்து செயற்படும் எனவும் இந்தியப் பிரதித் தூதுவர் தெரிவித்தார். வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இந்திய வீடமைப்புத் திட்டம் மற்…

  14. இலங்கையின் கொலைக்கள கோரக் காட்சிகள் குறித்து இதுவரை அசைந்து கொடுக்காத மத்திய அரசு இதுவரை உலக அளவில் பல்வேறு பகுதிகளில் ஒளிபரப்பாகி வந்த இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரிலான லண்டன் சானல் 4 நிறுவனத்தின் டாக்குமென்டரி படம் இந்தியாவில் ஒளிபரப்பாகிய நிலையில் இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளியாகவில்லை. கிணற்றில் போட்ட கல் போல மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வருகிறது. உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும், அப்பாவி மக்களுக்குத் துன்பம் விளைவிக்கப்பட்டாலும், உடனடியாக குரல் கொடுப்பது இந்திய அரசின் வழக்கம். ஏன், வடக்கு சூடானுடன் நடந்த 56 ஆண்டு கால கடும் ரத்தப் போராட்டத்தின் விளைவாக சுதந்திரம் பெற்றுள்ள தெற்கு சூடானுக்கு இந்திய அரசு வாழ்த்து தெரிவித…

  15. [saturday, 2011-07-09 11:50:20] நாடு கடந்த தமிழீழம் உலகில் எங்கும் கிடையாது. அதனை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமக்கேயுரிய பொருளாதார மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எமது நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதற்கான நோக்கத்தில் சர்வதேசத்தை தொடர்புபடுத்தி இந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துவருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் அது வெற்றி கொள்ளப்படுவதற்காக இந்தியா இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரியளவிலான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்கியிருந்தது. அது தற்போது…

  16. கூட்டமைப்பின் இணக்க ஆவணத்துடன் தெரிவுக்குழு பிரேரணை சபைக்கு வரும்; அதனை ஐ.தே.கவும் ஆதரிக்கும் பிரசுரித்தவர்: Sukkran July 10, 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்திவரும் பேச்சுக்களில் ஏற்படும் இணக்கத்தின் அடிப்படையில் தயாராகும் ஆவணத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இத்தகைய செயற்பாட்டை அரசு முன்னெடுக்குமாயின், நாடாளுமன்றத்தில் அந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராக இருக்கிறது.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையை கடந்த 5 ஆம்…

  17. கூட்டமைப்பு ஆதரவாளரின் வீட்டின் முன் மலர்வளையம்: சுவரொட்டிகள் மீது கழிவு ஒயில் வீச்சு [Monday, 2011-07-11 08:40:42] சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் தீவிர ஆதரவாளரின் வீட்டின் முற்றத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டதுடன் அவரின் வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை மிருசுவில் தவசிகுளத்தில் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா அசோகலிங்கம் என்பவர் சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மலர் வளையத்தையும் எடுத்துச் சென்றனர். http://www.seithy.com/breifNews.php?…

  18. பிளேக்கின் தூண்டுதலில் யாழில் ஆர்ப்பாட்டம்.அனைவரையும் ஆச்சரியத்தில் ஆள்த்தியுள்ளது. Posted by சோபிதா on 11/07/2011 in செய்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது. அண்மைக்காலங்களில் குடாநாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ள போதிலும் இது முக்கியமான ஆர்ப்பாட்டம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் அமெரிக்க முந் நாள் தூதுவர் ரொபேட் ஓ பிளேக் தூண்டுதலின் பேரிலேயே இப் போராட்டம் நடைபெற்றதாகக் கருத்து தெரிவித்துள்ளமை அனைவரையு…

  19. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயார் – ஜனாதிபதி : சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கக் கூடும் .. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காலியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கக் கூடும் எனினும், இவற்றின் மூலம் அரசாங்கத்தின் பயணத்தை தடுத்த நிறுத்திவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் …

  20. சிறிலங்காவிலான சுதந்திரத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இன்னொரு ஆணி:- தகவல்சுதந்திர சட்டமூலம் நிராகரிக்கப்பட்டது. விஷ்ணுகுப்தா - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான மிகக் கொடூரமான 18வது திருத்தம், இலகுவாக நிறைவேற்றப் பட்டதிலிருந்து தொடங்கிய ஒன்று சனநாயகத்தினதும் சுதந்திரத்தினதும் நிச்சயமான சாவை நோக்கி எந்த இடைவெளியும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. தகவல் அறிவதற்கான சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமுரிய அடிப்படை உரிமை என ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. சார்க் நாடுகள் அனைத்துக்குள்ளும் சிறிலங்கா, பூட்டான் ஆகிய நாடுகளில் மட்டுமே தகவல் அறிவதற்கான சுதந்திர சட்டமூலம் நடைமுறையில் இல்லை. பூட்டோவுடையவும் அவரது …

    • 0 replies
    • 448 views
  21. வரும் யூலை மாதம் 16ம் திகதி “ஒன்றாகி எழுவோம்” Monday, July 11, 2011, 21:55உலகம், தமிழீழம் தனித்திருக்கும் எமது தேசியத்தின் அமைப்புகளை ஒன்றிணைப்பதற்காக இளம் சமுதாயம் ஆகிய நாம் “ஒன்றாகி எழுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்கிறோம். தாயகத்தின் மேல் பற்றுறுதியும், எம் தேச விடுதலைக்கு கடின உழைப்பையும் புலம் பெயர் மண்ணில் அர்ப்பணித்த கனேடிய செயற்பாட்டாளர்கள் இன்று வெவ்வேறு குழுக்களாகவும், அமைப்புகளாகவும் தனித்து நின்றும், பிரிந்து நின்று செயற்படுவதும் செயல் பட முயல்வதும் இளம் சமூகமாகிய எங்களுக்கு வேதனையும் அதிர்ச்சியையும் அளிகின்றது. இவ்வகையான ஒரு போக்கு ஒரு சிந்தனை எம்மிடையே வளர்ந்துள்ளது என்பது எமது தேசிய மாவீரர்களையும் எம் உயிரினும் மேலான மக்களையும் அவமத…

    • 1 reply
    • 641 views
  22. ஜெயா தொலைக்காட்சியில் சீமான் இறுதி 5 நிமிடங்கள் சனல்4ல் காண்பிக்கப்பட்ட முக்கிய இனப்படுகொலைகள் காட்டப்பட்டன. http://www.youtube.com/watch?v=XpBKH_GJs04&feature=related http://www.youtube.com/watch?v=KLjQ0bKI270&feature=feedu

    • 0 replies
    • 845 views
  23. பிரபாகரனால் முடியாததை உங்களால் செய்ய முடியுமா?சிங்களத்தின் மிரட்டல் Sunday, July 10, 2011, 18:15கட்டுரைகள் “பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்” என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களைத்திரட்டி போராடுவோம் என சம்பந்தன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறிய கருத்திற்கு கிடைத்த சிங்கள அரசின் பதிலாகவே இதனைப்பார்க்க முடியும். என்றாலும் சர்வதேச அழுத்தத்தினை தணிக்க மஹிந்த ஒரு நாடகத்தினை மேடை ஏற்றியே ஆகவேண்டும். அதில் ஒன்றுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு என சிறிலங்கா அரசினால் தெரி…

    • 14 replies
    • 1.8k views
  24. கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால் வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது? பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயிலைச் சிங்களவர்கள் இடிக்கவில்லை [sunday, 2011-07-10 10:45:26] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால், வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கிலும் ஜனாதிபதியின் பெயரில் விளையாட்டு அரங்கு ஒன்றை அமைக்குமாறு தாம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை …

  25. நியூசிலாந்துக்குள் கடல் வழியாக பிரவேசிக்க முயன்ற 87 தமிழர்கள்! நியூசிலாந்துக்குள் கப்பல் மூலம் சட்டவிரோதமான முறையில் உட்பிரவேசிக்க முயன்ற இலங்கைத் தமிழர்கள் 87 பேர் கடலில் இன்று மதியம் இடைமறித்துப் பிடிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்கள் அலிசியா என்கிற கப்பலில் சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டு இருந்தனர். நியூசிலாந்தை ஓரளவு நெருங்கி இருந்தனர். ஆனால் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இந்தோனேசிய கடல் படையினர் இவர்களை மடக்கிப் பிடித்தார்கள். கப்பலை கைப்பற்றினார்கள். பற்றன் என்கிற இடத்துக்கு அருகில் வைத்து கைது இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்களையும், கைப்பற்றப்பட்ட கப்பலையும் இந்தோனேசிய கடல் படையினர் இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்கின்றனர். இத்தமிழர்களில் சிறு…

    • 2 replies
    • 845 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.