Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாட்டவர்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ள சிறிலங்காவின் வடபகுதி [ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 11:56 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில், அதன் வட பகுதியில் பெருமளவான நிலப்பரப்பு தமிழ்ப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. இந்தப் பிரதேசத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காத் தீவின் ஏனைய பகுதிகளும், அனைத்துலக நாடுகளும் தமது தொடர்புகளைப் பேணிக் கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் யுத்தம் முடிவுற்று இருஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது வெளிநாட்டவர்கள் எந்தவொரு தடைகளுமின்றி சிறிலங்காவின் வடக்கிற்குச் செல்ல முடியும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வாரத்தின் முற்பகுதியில் வெளியிட…

  2. கொழும்பை பொறுப்புக்கூற வைக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை! - Callum Macrae வலியுறுத்தல்!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சர்வதேச போர் நியமங்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக் கூறவைக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை என 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தின் இயக்குனர் Callum Macrae வலியுறுத்தியுள்ளார். இதனை உலக நாடுகள் செய்யத் தவறினால் இத்தகைய போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் உலக வரலாற்றில் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா - அது எந்த நாடாக இருந்தாலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித…

  3. நீங்கள் இந்தியாவிலிருந்து இலங்கை செல்பவராகவிருந்தால் சென்னையில் இருக்கும் சாஸ்திரிபவனுக்கு செல்லுங்கள்.அங்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்தானிகர் அலுவலகம் உண்டு. அங்கு சென்று உங்கள் விபரங்களை பதிவுசெய்தால் அவர்கள் நீங்கள் விசா இன்றி தங்யிருந்த காலத்திற்கான சான்றிதழ் (EXIT VISA) பெற்றுகொடுப்பதோடு உங்களுக்குரிய விமான பயணச்சீட்டு,அங்கிருந்து வவுனியாவரை செல்வதற்கான இலவச பயண ஒழுங்குகள் செய்து கொடுப்பார்கள்.இதைவிட உங்களுக்கான உதவித்தொகை ரூபா 10,000 வழங்குகிறார்கள்.ஆகவே ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாறாதீர்கள்.இப்படி செல்வதால் பாதுகாப்பும்கூட.ஏனெனில் ஐக்கிய நாடுகள் பதிவேட்டில் உங்கள் விபரங்கள் சேமிக்கபட்டிருக்கும்

  4. பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை ஒழுங்கு செய்யும் வாய்ப்பை ஹம்பாந்தோட்டை இழக்கலாம்? 11 ஜூலை 2011 பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை ஒழுங்கு செய்யும் வாய்ப்பை ஹம்பாந்தோட்டை இழக்கலாம்? 2018ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டித் தொடரை ஒழுங்கு செய்யும் சந்தர்ப்பத்தை ஹம்பாந்தோட்டை நகரம் இழக்கக் கூடும் என அவுஸ்திரேலிய பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது. 2018ம் போட்டித் தொடரை நடாத்தும் சந்தர்ப்பத்திற்காக அவுஸ்திரேலியாவும் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தி அடைந்து வரும் நகரம் ஒன்றுக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்குவது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட அனுபவங்களை நினைவில் நிறுத…

  5. மன்னார் பேசாலையின் ஐஸ் தொழிற்சாலை திறந்து வைப்பு: [Monday, 2011-07-11 21:37:18] மன்னார் பேசாலையின் இன்று திங்கட்கிழமை காலை ஐஸ் கட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜீத சேனாரத்தின அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது கடல் தொழில் நீரியல் வள தலைவர் மகில் சேனா ரத்தின மன்னார் மாவட்ட கடல் தொழில் உதவிப்பணிப்பாளர் மெராண்டா,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன்,மன்னார் பிரதேசச்செயலாளர் திருமதி ஸ்ரானிலி டி மேல் இராணுவ பொலிஸ் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர். இதன் போது கடல் உணவுப்பொருட்களை குளிரூட்டி வைக்கும் கட்டிடமும் திறந்த வைக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=46325&am…

  6. கருணாநிதி, சிவ்சங்கர் மேனன், நாராயணன், நிருபமா ராவ் - புதுச்சேரியில் தமிழர் களம் ஆர்ப்பாட்டம் பதிந்தவர்: ஈழப்பிரியா திங்கள், 11 ஜூலை, 2011 கருணாநிதி, சிவ்சங்கர் மேனன், கே. ஆர். நாராயணன், நிரூபமா ராவ் ஆகியோரின் கூட்டுச் சதியாலும், ஒத்துழைப்பாலும்தான் இந்தத் தமிழின அழிப்புப் போர் நடந்திருக்கிறது. இவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அப்பாவித் தமிழர்களைக் கொன்ற அரக்கர்களாக இவர்களை அறிவித்து உரிய தண்டனையை வழங்கிட வேண்டுமென்று தமிழர்களம் வற்புறுத்துகிறது. நூற்றுக்கணக்கான தமிழர்களத் தொண்டர்கள், மற்றும் பல தமிழர்தேசிய அமைப்பினைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் உரையாற்றினைார்…

  7. ஊடக ஜாம்பவான் தோழர் உயர்திரு வித்தியாதரன் அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல் – எங்கள் சரித்திரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோய்விட்டது என்று நீங்களும் மாறி விட்டீர்களா? பிரசுரித்தவர்: admin July 11, 2011 வணக்கம், உங்கள் பிள்ளைகளின் அரங்கேற்ற அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பண்ணும் பரதமும் பண்பாடு மாறாமல் மண் மணம் கமள உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது குறித்து பாராட்டுகள். ஆனாலும் எனக்கு ஓர் ஆச்சரியம் – என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. தமிழ்த் தேசியம் பேசித்திரிந்த ஒருவரின் நிகழ்வுக்கு, அப்பட்டமாக தமிழ்த் தேசியத்தைக் குழி தோண்டிப் புதைத்த ஒருவர் சிறப்பு விருந்தினராம்…. நம்ப முடியவில்லை. உங்கள் “உதயனை”யும், நீங்கள் பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளிய எ…

  8. இறுதி நாட்களும் எனது பயணமும் – 11 பதிந்தவர்: ADMIN திங்கள், 11 ஜூலை, 2011 சற்றுநேரமேனும் என்னை புரிந்துகொண்டவர்களாய் என்னோடிருந்த மனிதர்களும் சென்றுவிட்டார்கள். அவர்கள் எழுந்துசென்ற இடைவெளியை வேறு யாரோ வந்து நிரப்பினார்கள். மங்கலாகிவிட்ட பார்வையை கூர்மைப்படுத்தியபடி அவதானித்தேன். வயோதிப தம்பதியொன்று தமது பைகளை போட்டு அவைமீது குந்திக்கொண்டிருந்தனர். எனக்கோ கண்களை திறக்க முடியாமல் தலையை வலித்தது. உடலும் மனமும் களைத்து சோர்ந்துபோய்விட்டிருந்தது. போத்திலில் இருந்த, ஒரு மிடறுக்கும் போதாத பானத்தை கவிழ்த்து ஊற்றி நாக்கை முழுதுமாய் நனைத்து விழுங்கினேன். சற்றுநேரத்தில் என்முன்னால் சிறுவன் ஒருவன் வந்துநின்றான். ‘அக்கா அந்த போத்தில தாறிங்களா?’ என்றபடி. அந்த போத்தில் என…

  9. உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவுவோம்: [Monday, 2011-07-11 21:12:47] கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இந்தோநேசிய அரசினால் சிறீலங்காவிற்கு திருப்பியனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றால் தாம் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அக்கப்பலில் உள்ள எம் அன்பு உறவுகளில் ஒருவரான திரு.செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்ப…

  10. 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் படை அதிகாரி': இழப்புக்களை நினைத்து எதிர்கால வாழ்வை சீரழிக்கக் கூடாதாம் யுத்த இழப்புக்கள் எல்லாத் தரப்பினருக்கும் உரியதாம் [Monday, 2011-07-11 20:01:44] இழப்புக்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இருப்பதை உரிய முறையில் உச்சப் பயன்பாட்டில் பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தின் மேம்பாடு குடும்பத் தலைவிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளிலேயே மேல்நிலைபெறும். இவ்வாறு கூறினார் அச்செழு இராணுவமுகாம் பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. டி.சி.கே.கொஸ்தா. புத்தூர் கிழக்கு மகாத்மாஜி கலையரங்கில் குடும்பத் தலைவரை இழந்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகளான பால்மாடு, ஆடு, கோழி, அதற்கான கொட்டில்கள் அமைப்பதற்கா…

  11. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை 'தம்பி' என செல்லமாக விழித்த சிறிலங்கா அமைச்சர் [Monday, 2011-07-11 19:14:35] தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை 'தம்பி' என செல்லமாக விழித்துள்ளார் சிறிலங்காவின் மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சரான ராஜித சேனரட்ன.கடந்த சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு விழித்துள்ளார். "அன்று 1988ம் ஆண்டு நான் யாழ்ப்பாணம் வந்த போது தம்பி பிரபாகரனுடன் இருந்த தோழர் பாலகுமார் (தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரமுகர்) அவர்கள் என்னைக் கட்டித் தழுவி முத்தமிட்டு வரவேற்றார்." என உரையில் குறிப்பிட்டார் அமைச்சர் ராஜித சேனரட்ன. ww.seith…

  12. திருநெல்வேலி சந்தையின் காவலாளி உடலமாக மீட்பு! யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையின் காவலாளி நேற்று பிற்பகல் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரும்பிராயினை சேர்ந்த 50 அகவையுடைய சந்திரசேகர் என்பவர் கடந்தகாலங்களாக யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையின் காவலாளியாக பணிபுரிந்துவந்துள்ளார். இன்னிலையில் நேற்று அவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை யார் கொலைசெய்தார்கள் எதற்காக கொலை செய்தார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை. http://www.pathivu.com/news/17356/57//d,article_full.aspx

  13. இந்தியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் பிரிட்டனின் சனல்4 காணொளி (video in) Sunday, July 10, 2011, 11:38 இந்தியா, உலகம், சிறீலங்கா, முதன்மைச்செய்திகள் பிரிட்டனின் சனல்4 காணொளியின் பயங்கரமான படுகொலைக் காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றமை இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் உறுதியாக செயற்படவேண்டுமென்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் செய்தி அலைவரிசைகளில் இந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. பிரபல்யமானவர்கள் இந்தக் காட்சிகள் தொடர்பாக தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். http://www.youtube.com/watch?v=C…

    • 7 replies
    • 977 views
  14. இரண்டு பெல் உலங்கு வானூர்திகளை வாங்குகிறது சிறிலங்கா விமானப்படை [ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 08:49 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு பெல்- 412 உலங்கு வானூர்திகள் புதிதாகக் கொள்வனவு செய்யப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சு இதற்கென சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் 3.5 பில்லியன் ரூபா நிதியை குறைநிரப்பு பிரேரணை மூலம் கோரியுள்ளது. சிறிலங்கா விமானப்படையின் 4வது உலங்கு வானூர்தி அணிக்காகவே புதிதாக இரண்டு உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெல்- 412 ஈபி உலங்கு வானூர்திகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுபவையாகும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு விமானிகளும் 13 பேரும் இலகுவாகப் பயணம் மேற்கொள்ள முடியும். சிறிலங்…

  15. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான த.தே.கூட்டமைப்பின் பரப்புரைகள் வேகம் கொண்டுள்ளன. இந்நிகழ்வுகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் வேட்பாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இங்கு வி.ஆனந்தசங்கரி உரையாற்றுகையில் நான் இப்பிரதேசத்தின் பழைய மனிதன் பல தசாப்தம் கிளிநொச்சியில வாழ்ந்தவன். எனக்கு ஞாபகம் இருக்கின்றது முன்பு தேர்தல் பிரச்சாரம் கூட்டம் முடித்துவிட்டு இரவு12மணி ஒரு மணிக்கெல்லாம் வந்திருக்கின்றோம்.மிகவும் சுதந்திரமாக சென்றிருக்கின்றோம். ஆனால் இப்போது முடியவில்லை. எத்தனை இடத்தில் இராணுவத்தால் மறிக்கப்படுகின்றோம். இந்த நிலைஏன் இராணுவத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார். போ…

  16. Saturday, July 9, 2011, 20:58சிறீலங்கா இலங்கை அரசாங்கத்தின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கின்ற சனல் 4 ஒளிப்படக் காட்சிக்கு எதிராக கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இராணுவத்தினர் பலவந்தமாகப் பொதுமக்களைக் கொண்டு பேரணி நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் ஜெயபுரம் 661 ஆவது இராணுவ படைத்தளத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது. ஜெயபுரம், கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, முழங்காவில் போன்ற பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு வெள்ளியன்று சென்ற இராணுவத்தினர், சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜெயபுரத்திற்கு வருகை தந்து விவசாயிகளுக்கான உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்போவதாகவும், அவற்றை வந்து பெற்றுச் செல்லுமாறும் அறிவித்திருந்தனர். மறுநாள் காலை இந்தப் பகுதிகளுக்கு பேரூந்…

    • 2 replies
    • 538 views
  17. நாய்கள் நடத்திய கண்டனப் பேரணி கொல்லாதே... கொல்லாதே...! யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக நாய்களைச் சுட்டுப்போடும் ஒருவகை முறைமை நடந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் எல்லா நாய்களும் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினால் நிலைமை எப்படியிருக்கும். இப்படி யொரு கற்பனை செய்தோம். அடேங்கப்பா! இதோ நாய்களின் கண்டன ஆர்ப்பாட்டம். கொல்லாதே... கொல்லாதே... எங்கள் இனத்தைக்கொல்லாதே... கைது செய்... கைது செய்... குற்றவாளியைக் கைது செய். அமுல்படுத்து... அமுல்படுத்து... மகிந்த சிந்தனையை அமுல்படுத்து இவ்வாறு கோஷ­மிட்டவாறு நாய்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டப் பேரணியில் வளர்ப்பு நாய்கள், தெரு நாய்கள், வீட்…

    • 0 replies
    • 774 views
  18. இந்தியத் தொலைக்காட்சி விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் – சொதப்பி விட்டதால் நெருக்கடி [ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 01:03 GMT ] [ கார்வண்ணன் ] இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துடன் இணைந்து நடத்தப்பட்ட விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல பங்கேற்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஒன்றின் மீது ஒன்று குற்றம்சாட்டியுள்ளதுடன், முறுகலான நிலை ஒன்றும் ஏற்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் என்ற ஆவணப்படத்துடன் இணைந்ததாக நேரடி விவாத நிகழ்வு ஒன்றையு…

    • 3 replies
    • 1.1k views
  19. அனைத்து மாநிலங்களிலும் மஹிந்த போர்க்குற்றவாளி என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:சீமான் [Monday, 2011-07-11 10:10:27] இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அனைத்து மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பயணிகள் விடுதியில் நேற்று 10.07.2011 அன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான் தமிழர்களின் குறிக்கோள். கடைசி தமிழன் உள்ளவரை அதை கேட்பான். ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என எங்களது கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. …

    • 1 reply
    • 705 views
  20. தனி ஈழம் அமைப்பது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும்-நாஞ்சில் சம்பத் Posted by சோபிதா on 11/07/2011 in செய்தி இலங்கையைப் பிரித்து தனி ஈழம் அமைக்க வேண்டும். அது மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பாக இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொ…

  21. ஏதிலிகளின் கோரிக்கையை நியூஸிலாந்து பிரதமர் நிராகரிப்பு Posted by காந்தன் on 11/07/2011 in செய்தி நியூஸிலாந்திற்கு வரும் வழியில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்றபோது, அகதிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல விரும்புகின்றோம். ‘எங்களது எதிர்கால வாழ்க்கை நியூஸிலாந்திலேயே …

  22. "என்னை நியூஸிலாந்து செல்ல அனுமதியுங்கள்.. அல்லது கப்பலில் சாக விடுங்கள்" அலிசியா கப்பல் தமிழ்க் கைதி மன்றாட்டம் [Monday, 2011-07-11 16:40:14] இலங்கையில் எனது குடும்பம் கொலை கெய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் என்னை மீண்டும் அங்கு திருப்பியனுப்பக் கூடாது. அதனை விட இநதக் கபப்லிலிருந்தே உயிரை விடுவது மேல்... நாம் நியூசிலாந்து செல்ல வேண்டும்.தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் என இலங்கை அகதி ஒருவர் மன்றாட்டமாகக் கேட்டுள்ளார். 85 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் இந்தோனேசியாவின் பின்டன் தீவிலுள்ள தன்யுன்ங் பினெனங் நரகப் பகுதியிலுள்ள கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள அகதிகளை ரொய்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்…

  23. லசந்த விக்கிரமதுங்க கொலை: சந்தேக நபரான இராணுவ வீரர் பிணையில் விடுதலை [Monday, 2011-07-11 17:40:25] சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் . இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச்சேரந்த லான்ஸ் கோப்ரலான கந்தகெதர பியவன்ஸ எனும் இந்த இராணுவ வீரரரை 75,000 ரொக்கப் பிணையிலும் 100,000 ரூபா பெறுமதியான இரு சரீர பிணையிலும் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன பத்மன் சூரசேன அனுமதியளித்தார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபர் குற்றம் சுமத்தப்படாமல் நீண்டகாலமாக விளக்கமறியலில் இருப்பதாக சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனக உல…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பேசும் மக்கள் தாம் நாட்டின் பிரஜைகள் என்பதை முதலில் அறிந்திருக்க வேண்டும் [Monday, 2011-07-11 16:25:12] தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க குறிப்பிடுகின்றார்.ஹொரணை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் தாம் நாட்டின் பிரஜைகள் என்பதை அறிந்திருக்க வேண்டுமென அமைச்சர் வலியுறுத்துகின்றார். மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால் முதலாவதாக அரசாங்கத்திடமே சொ…

  25. திருமலையில் கடற்படை சிப்பாய் ஒருவர் பலி Monday, July 11, 2011, 17:18சிறீலங்கா திருகோணமலை, கடற்படை முகாமில் சிங்கள கடற்படை சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த வீரரால் உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததிலேயே இவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் இவரது மரணம் தற்கொலையா? அல்லது அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மரணம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று திருகோணமலை, துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காலி, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்தவரும் திருகோணமலை, திஸ்ஸ கடற்படை முகாமில் இருந்தவருமான திலங்க தர்ஷன (வயது 21) என்ற கடற்படை சிப்பாயே உயி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.