Jump to content

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் படை அதிகாரி': இழப்புக்களை நினைத்து எதிர்கால வாழ்வை சீரழிக்கக் கூடாதாம் யுத்த இழப்புக்கள் எல்லாத் தரப்பினருக்கும் உரியதாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் படை அதிகாரி': இழப்புக்களை நினைத்து எதிர்கால வாழ்வை சீரழிக்கக் கூடாதாம் யுத்த இழப்புக்கள் எல்லாத் தரப்பினருக்கும் உரியதாம்

[Monday, 2011-07-11 20:01:44]

இழப்புக்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இருப்பதை உரிய முறையில் உச்சப் பயன்பாட்டில் பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தின் மேம்பாடு குடும்பத் தலைவிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளிலேயே மேல்நிலைபெறும். இவ்வாறு கூறினார் அச்செழு இராணுவமுகாம் பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. டி.சி.கே.கொஸ்தா.

புத்தூர் கிழக்கு மகாத்மாஜி கலையரங்கில் குடும்பத் தலைவரை இழந்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகளான பால்மாடு, ஆடு, கோழி, அதற்கான கொட்டில்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் லீட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் படையினரால் வழங்கப்பட்டது.

வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பிரிகேடியர் கொஸ்தா தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது:

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எமது கோரிக்கைகளை ஏற்று லீட்ஸ் நிறுவனம் 74 குடும்பங்களுக்கு பால்மாடுகள், ஆடுகள், கோழிகளை வழங்க முன் வந்துள்ளது. அந்த உதவிகள் கிராம அலுவலர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன.

யுத்த இழப்புக்கள் எல்லாத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளன. இழப்புக்களை நினைத்துக் கொண்டு எமது எதிர்கால வாழ்வை சீரழிக்கக்கூடாது. இழப்புக்களை மறந்துவிட்டு எமது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் உரிய முறையில் முழுப்பயன்பாட்டுடன் பயன்படுத் தப்பட வேண்டும். கால்நடைகளை நாம் உரிய முறையில் பயன்படுத்தினால் எமது வாழ்க்கையை மேல் நிலைப்படுத்துவதுடன் எமது குடும்பத்தின் போஷாக்கு நிலையையும் உயர் நிலையில் பேணமுடியும் என்றார். லீட்ஸ் நிறுவனத்தின் யாழ். மாவட்ட அதிகாரி எஸ். ஜெனேந்திரன், கிராம அலுவலர் என்.மதனசேகரம் உட்படப் பலர் உரையாற்றினர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46312&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.