Jump to content

இறுதி நாட்களும் எனது பயணமும் – 11


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நாட்களும் எனது பயணமும் – 11

பதிந்தவர்: ADMIN திங்கள், 11 ஜூலை, 2011

சற்றுநேரமேனும் என்னை புரிந்துகொண்டவர்களாய் என்னோடிருந்த மனிதர்களும் சென்றுவிட்டார்கள். அவர்கள் எழுந்துசென்ற இடைவெளியை வேறு யாரோ வந்து நிரப்பினார்கள்.

மங்கலாகிவிட்ட பார்வையை கூர்மைப்படுத்தியபடி அவதானித்தேன். வயோதிப தம்பதியொன்று தமது பைகளை போட்டு அவைமீது குந்திக்கொண்டிருந்தனர். எனக்கோ கண்களை திறக்க முடியாமல் தலையை வலித்தது. உடலும் மனமும் களைத்து சோர்ந்துபோய்விட்டிருந்தது. போத்திலில் இருந்த, ஒரு மிடறுக்கும் போதாத பானத்தை கவிழ்த்து ஊற்றி நாக்கை முழுதுமாய் நனைத்து விழுங்கினேன்.

சற்றுநேரத்தில் என்முன்னால் சிறுவன் ஒருவன் வந்துநின்றான். ‘அக்கா அந்த போத்தில தாறிங்களா?’ என்றபடி. அந்த போத்தில் என்னிடமிருந்தால் என்னை அறிந்தவர்கள் யாராவது தண்ணீருடன் வந்தால் கொஞ்சம் தருவார்கள் என்றிருந்த நப்பாசையையும் அவன் அபகரித்துவிட்டான். அந்தச்சிறுவனுக்கு மறுப்புச்சொல்ல என்னால் முடியவில்லை. போத்திலை அவனிடம் கொடுத்துவிட்டேன். அவனும் வாங்கிய வேகத்தில் போய்விட்டான்.

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதைப்போல எல்லோருக்கும் துன்பங்கள் அதிகரித்துக்கொண்டுதான் செல்கின்றன. போயும் போயும் கிழிந்து கந்தலாய்போன மனதுடன் கிடக்கும் என் கால்மாட்டில்தானா காயப்பட்டவர்களும் வந்து விழவேண்டும். ஆறாத பச்சை காயங்களுடன் வந்த சிலர் செய்வதறியாத நிலையில் இருந்தார்கள்.

தமது ஊன்று கோல்களை பொத்தென கீழே போட்டுவிட்டு நிலத்தில் கிடந்த அவர்களில் களைப்பு அப்பட்டமாய் தெரிந்தது. யாராவது தண்ணீர் தரமாட்டார்களா? எங்கள் காயமடைந்த நிலையை பார்த்து பரிதாபப் பட்டாவது யாரும் ஒரு மிடறுக்குத்தன்னும் தர மாட்டார்களா என்று அவர்கள் சூழவுள்ளவர்களை பார்த்தார்கள் என்றால் அதில் தவறில்லை. ஆனால் எந்த மனிதர்களுமே அவர்களை பார்க்கவில்லை.

பார்த்தால் தம்மிடமிருந்த சொட்டு நீரையும் கொடுக்கவேண்டி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் எவரும் அவர்களை கடைக்கண்ணால்கூட பார்க்க விரும்பவில்லை. அந்தப்பையன்கள் தவிப்போடுகிடந்தார்கள்.

வெய்யில் பாடாய் படுத்தியது. அத்தனை சனங்களும் நாவாற குடிக்கக்கூடிய தண்ணீரை படையினரால் வழங்கவே முடியவில்லை. வலியன வாழும் என்பதைப்போல அடித்து மோதி தண்ணீரை பிடித்துக்கொண்டவன் குடித்தான். முடியாதவன் தாகத்தோடு உடல்வற்றி சுருண்டான்.

என் காலடியில் கிடந்தவர்கள் உளறத் தொடங்கிவிட்டார்கள். காயங்கள் அவர்களுக்கு எவ்வளவு வேதனை அளிக்கும் என்பதை என்னாலும் உணரமுடிந்தது. இவர்கள் ஏன் இங்கே வந்தார்கள்? காயப்பட்டவர்களை ஏற்றும் இடத்திற்குச் சென்றிருக்கலாம் அல்லவா? இந்நேரம் மருத்துவமனையை அடைந்திருக்கலாம் அல்லவா? என்று உள்மனம் நினைத்த மறுகணமே அதற்கான காரணங்களையும் எண்ணி அவர்கள்மீது இரக்கத்தையே நிரப்பியது.

அவர்கள் பெரும்பாலும் போராளிகளாக இருந்தவர்களாகவும் இருக்கலாம். அதனால் தனித்துச்செல்ல அவர்கள் அஞ்சியிருக்கலாம். அல்லது தம் பெற்றோர் சகோதரர்களை தேடித்தான் வந்துமிருக்கலாம். நிறையப்பேர் அப்படித்தான் உறவுகளைத்தேடி அலைந்தார்கள். பெற்றவர்களும் பிள்ளைகளை தேடிக்கொண்டு திரிகிறார்கள் அந்த மனிதச் சமுத்திரத்துள்.

அம்மா அம்மா என்று உளறிக்கொண்டு நிலத்தில் புரளும் காலிழந்தவனுக்கருகில் இன்னொருவன் தன் ஒற்றைக்காலை குத்திக்கொண்டு குந்தியிருந்தான். அவர்களுக்கு அப்பால் இரண்டு பையன்கள் மயக்கநிலையில் கிடந்தார்கள். நான் எழுவதற்குத்தான் முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் முடியவே இல்லை.

ஒருதுளி தண்ணீரையாவது என்னால் கொடுக்க முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று என் உள்மனம் அரற்றியது. நான்கூட தண்ணி தண்ணி என்று அரற்றிக்கொண்டுதான் கிடந்தேன்போலும். அது அருகிலிருந்த வயோதிப தம்பதியை பாதித்து இருக்கவேண்டும்.

‘இந்தா ஒரு மிடறு குடியம்மா’ என்று தம்மிடமிருந்த குறைப்போத்தல் தண்ணீரை தந்தார்கள். அதில் நான் ஒரு மிடறு நீரை வாயில் நிறைத்துக்கொண்டு என்னிடமிருந்த சத்துக்குளிசை ஒன்றை போட்டு விழுங்கினேன். அது ஓரளவு பலவீனத்தை தடுக்கும் அல்லவா என்ற நப்பாசைதான். கையோடு ஐந்தாறு விட்டமின் சி குளிசைகளையும் எடுத்துக்கொண்டு எழுந்தேன். தலை சுற்றியது. நிற்கமுடியாமல் தடுமாறி மீண்டும் அமர்ந்துவிட்டேன்.

என்னை கட்டுப்படுத்த முயற்சித்தேன். வெட்டைவெளி முழுவதிலும் காயப்போட்ட கருவாடுகள்போல மனிதர்கள் ஏன் படுத்துக்கிடக்கிறார்கள் என்பதை நான் அநுபவபூர்வமாக உணர்ந்தேன். சற்றுநேரத்தின்பின் மிகமெதுவாய் எழுந்துநின்றேன். மெதுவாக காலடிவைத்து நகர்ந்து ஒருவாறு என்னை சமாளித்து நடந்தேன். வாடிவதங்கிப்போய் குந்திக்கொண்டிருந்த ஒரு தம்பியிடம் இரண்டு விட்டமின் சி குளிசைகளை கொடுத்தேன்.

‘நாக்குக்கு கீழ் வைச்சிருங்க’ என்றும் சொன்னேன். சொன்னதுதான் தாமதம்;, பறிக்காத குறையாக அதை வாங்கியவன் தன் வாய்க்குள் எறிந்து கொண்டான். தரையில் புரண்டு புரண்டு கிடக்கும் காலிழந்த தம்பியிடம் மெல்லக் குனிந்து, ‘தம்பி வாயத் திற’ என்று மெதுவாக கன்னக்கில் தட்டினேன்.

பசியோடு காத்திருந்த குருவிக்குஞ்சை போல, அவன் வாய் திறந்தான். அவனது நாக்கு மரக்கட்டை போல வறண்டு வெள்ளை பூத்திருந்தது. அதில் குளிசையை வைத்துவிட்டு உமியுங்கள் என்று எப்படி சொல்வது? ஈரலிப்பே இல்லாத நாவில் குளிசை எப்படி கரையும்? அரை மயக்கத்தில்கிடந்த மற்ற பையன்களின் நாக்குகளிலும் இவ்விரண்டு குளிசைகளை வைத்துவிட்டேன். குறைந்தது ஒரேயொரு குவளை தண்ணீராவது கொண்டுவந்து அவர்களின் நாவை நனைக்க விரும்பியது என் உள்ளம். ஆனால் என்னால் நிற்கக்கூட முடியவில்லை. கால்கள் வலுவிழந்தன. வெற்று நினைவும் வேதனை மனமுமாக மீண்டும் வந்து நிலத்தில் சரிந்தேன்.

எல்லாமே எனக்கு மங்கலாகத்தான் தெரிந்தன. அந்த பையன்களை நினைக்க அழுகை வந்தது. அப்படி என்னதான் பாவம் செய்தார்கள் இவர்கள்? மனிதர்களை துடிக்கப்பதைக்க வெட்டி கொன்றார்களா? இல்லையே. ஊர்களுக்குள் புகுந்து உறவுகளை பிடித்து கட்டிவைத்து சுட்டார்களா? இல்லையே. பெண்களை கடத்திச்சென்று சித்திரவதை செய்து அவர்கள் குளறக்குளற மானபங்கப் படுத்தினார்களா? இல்லவே இல்லையே.

தமது இனத்தின் விடுதலைக்காக என்று ஆயுதம் தூக்கினார்கள். தம்முடன் மோத வந்த படையினருடன் மோதினார்கள். அதற்காக இவ்வளவு பெரிய தண்டணையா?

என் கண்களில் இருந்து சுடுநீர் வழிந்து கன்னங்களை நனைத்து அப்படியே உதடுகளையும் நனைத்தது. அந்த ஈரத்தை நாவால் தடவி நாவை ஈரலிப்பாக்கிக்கொண்டேன். என் பார்வையின்முன்னே குந்திக்கொண்டிருந்த போராளியின் வளைந்த முதுகு தெரிந்தது. அழுக்கான அவனது மேற்சட்டைக்கு மேலே முதுகு மெதுவாக ஏறியிறங்கிக் கொண்டிருந்தது.

திடீரென நினைவு வந்தவளாய் சொன்னேன்,

‘தம்பி சீனி இருக்கிது. தரட்டா?’

‘தாங்களனக்கா’ என்றான்.

உடனே என் சிறிய பையில் வைத்திருந்த சீனிப்பையை பிரித்து கைநிறைய அள்ளிக்கொடுத்தேன். காலிழந்து கிடந்தவனின் வாயிலும் சீனியை போட்டுவிட்டேன். அவனை காய்ச்சல் எரித்துக்கொண்டிருந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன்பால் இரக்கம் மேலிட்டது.

இப்போது அவன் முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட்டால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும் என்று வெறுமனே நினைத்துக்கொண்டு வேதனையுடன் வந்து குந்திக்கொண்டேன்.

காலத்தாலும் இந்த உலகத்தாலும் சபிக்கப்பட்ட மாந்தர்கள் நாங்கள் என்று எனக்குள்ளேயே என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டேன். என்னிடம் இன்னும் சிறிதளவு சீனியும் சத்துக்குளிசைகளும் இருக்கின்றன. கடைசிப்பொழுதில் காப்பரணருகே கிடந்ததால் எடுத்துக்கொண்டுவந்தது எவ்வளவு நன்றாகப்போய்விட்டது.

எனது பார்வையை போலவே பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டே போனது. வெய்யில் தாழவிட்டு எப்படியாவது தண்ணீர் தேடவேண்டும் என்ற எண்ணத்தை என்னால் ஈடேற்ற இயலவில்லை. மின்விளக்குகள் ஆங்காங்கே எரிந்து இருளை விரட்டின. எனினும் என்னால் இயங்க முடியவில்லை. வேறு வழி புரியாமல் படுத்துவிட்டேன். கடும் துக்கமாக இருந்தது. மனசுக்கு நெருக்கமான யாராவது அருகில் இருந்தால் எவ்வளவோ ஆறுதலாக இருக்குமே. என்னைப்போல யாராவது தனித்துவிட்டவர்களாவது வந்து என்னோடு சேர்ந்துகொள்ள மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது.

நான் பிறருக்கு இடைஞ்சலாய் ஆகிவிட விருப்பமில்லை. நான் யாருடனும் சேர்ந்து இருக்கப்போய் படையினர் அவர்களிடம் இவள் யார்? உங்களுக்கு என்ன உறவு என விசாரித்தால் அது அவர்களுக்கு பிரச்சினைதானே. இருக்கின்ற கவலைகள் போதாதா? இன்னும் தேடிக்கொள்ள வேண்டுமா?

எல்லாவற்றையும் எண்ணித்தான் தனித்திருந்தேன். எனினும் அந்த ஆதரவற்ற தன்மை என்னில் பயங்கரமாய் தாக்கியது. தானாய் வழிகின்ற கண்ணீரை துடைக்கக்கூட மறந்தவவளாய் கிடந்தேன்.

என் தலைமாட்டில் திடீரென நெருக்கிடியத்த கூட்டம் படுமோசமாய் கலகலத்தது. அவர்கள் ஏதோ திருவிழாவில் கலந்து கொண்டிருப்பவர்களைப் போல அமர்க்களப்படுத்தினார்கள்.

‘சரி சரி இந்த தண்ணிய இப்ப பாவியுங்க. மற்றதுகள கவனமா வையுங்க. பிறகு தண்ணி கிண்ணி எண்டு என்னை ஆக்கினப்படுத்த கூடாது. இப்பவே எல்லாரும் சாப்பிடுங்க. மிச்சமிருந்தா கவனமா கொண்டு வாங்க’ என்று கண்டிப்புடன் சொன்னது ஆண்குரல்.

பயணம் தொடரும்…

இறுதி நாட்களும் எனது பயணமும் – 10

ஆனதி

ஈழநேசன்

http://www.vannionline.com/2011/07/11.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • GT vs CSK: சாதனைகளை முறியடித்த கில், சுதர்சன் - சி.எஸ்.கே ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கல் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த அணிகள்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடைசி இடத்தில் இருந்த அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற சுவரஸ்யமான திருப்பங்கள் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் கிடைத்து வருகின்றன. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்றைய தோல்வியால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ஒரே பலம் நிகர ரன்ரேட் மட்டும்தான். அந்த நிகர ரன்ரேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் 3வது இடத்தை அல்லது 2வது இடத்தைப் பிடிக்க சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில் இப்போது 4வது இடத்தைப் பிடிக்கவே கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாகி இருக்கிறது.   ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்தது. 232 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.   சிஎஸ்கே-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி? பட மூலாதாரம்,SPOTZPICS இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான பாதை குறுகியுள்ளது. சிஎஸ்கே அணி தற்போது 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேவுக்கு இணையாக டெல்லி கேபிடல்ஸ், லக்னெள அணிகளும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால், இந்த இரு அணிகளின் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதால், சிஎஸ்கே அணியைவிட பின்தங்கியுள்ளன. ஆனால் சிஎஸ்கேவின் நிகர ரன்ரேட் இந்தத் தோல்வியால்கூட பெரிதாக பாதிக்காமல் நிகர ரன்ரேட் 0.491 என வலுவாக இருப்பதால் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. சிஎஸ்கே, அடுத்து வரும் 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலும், அதன்பின் ஆர்சிபியுடன் பெங்களூருவிலும் சிஎஸ்கே மோதுகிறது. இந்த இரு அணிகளும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால், இரு அணிகளையும் வீழ்த்துவது சிஎஸ்கே அணிக்கு சவாலாக இருக்கும். ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான சாத்தியங்கள் என்ன? ஒருவேளை சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால் 14 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது, டெல்லி கேபிடல்ஸ், லக்னெள அணிகள் தங்களுக்குரிய 2 ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த இரு அணிகளில் எந்த அணியின் நிகர ரன்ரேட் சிறப்பாக இருக்கிறதோ அந்த அணி 4வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை லக்னெள, டெல்லி அணிகள் தங்களுக்கு இருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்று தலா 14 புள்ளிகளுடன் முடித்து, ஆர்சிபி அணியும் 14 புள்ளிகளுடன் முடித்து, குஜராத் அணியும் 14 புள்ளிகளுடன் முடித்தால், கடைசி இடத்துக்கு சிஎஸ்கே, டெல்லி, லக்னெள, ஆர்சிபி, குஜராத் ஆகிய 5 அணிகள் போட்டியிடும், நிகர ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி உயர்வாக இருக்கிறதோ அந்த அணி ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறும். இந்தக் கணக்கீட்டின்படி, சிஎஸ்கேவுக்கு நிகர ரன்ரேட்டில் சவாலாக இருப்பது ஆர்சிபி மட்டும்தான். ஆர்சிபி 0.217 என்ற அளவில் இருப்பதால் இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே நிகர ரன்ரேட் சிஎஸ்கேவுக்கு இணையாக வந்துவிடும். அப்போது 14 புள்ளிகளுடன் போட்டியிடும்போது, சிஎஸ்கே அல்லது ஆர்சிபி என்ற போட்டியும் வரலாம்.   குஜராத் அணிக்கு வாய்ப்பு குறைவு பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியால் 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.063 எனப் பின்தங்கியுள்ளது. குஜராத் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களில் வென்றால் 14 புள்ளிகள் பெறலாம். ஆனால், நிகர ரன்ரேட்தான் அந்த அணிக்குப் பெரிய சிக்கலாக உள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றால், குஜராத் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகலாம், அது மட்டுமல்லாமல், மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால்தான் அது சாத்தியம். பட மூலாதாரம்,SPORTZPICS போட்டியை ஆக்கிரமித்த கில், சுதர்சன் குஜராத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில், தமிழக வீரர் சாய் சுதர்சன் இருவரும்தான். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி விளையாடி பெரிய ஸ்கோருக்கு அணியைக் கொண்டு சென்றனர். ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமே சதம் அடித்த 3வது ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். இதற்கு முன் விராட் கோலி, ஏபிடி ஜோடி 2016இல் குஜராத் லயன்ஸுக்கு எதிராகவும், ஆர்சிபிக்கு எதிராக 2019இல் வார்னர், பேர்ஸ்டோ ஜோடியும் சதம் அடித்திருந்தனர். கேப்டன் சுப்மன் கில் 51 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (7 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இவருக்குத் துணையாக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 55 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து (6 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 210 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் குஜராத் அணி சேர்த்தது என்பது ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் சேர்ப்பது 2வது முறை. இதற்கு முன் 2022இல் கொல்கத்தா அணிக்கு எதிராக கே.எல்.ராகுல், டீகாக் ஜோடி 210 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தனர். அது மட்டுமல்லாமல் இது சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடக்க ஜோடி சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். அது மட்டுமல்லாமல் ஆமதாபாத்தில் குஜராத் அணி சேர்த்த 231 ரன்கள் என்பது ஐபிஎல் தொடரில் அந்த அணியின் 2வது அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் கடந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக 233 ரன்கள் சேர்த்திருந்தது குஜராத் அணி. சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடக்க ஜோடி 150 ரன்களுக்கு மேல் சாய் சுதர்சன், கில் சேர்த்ததுதான் அதிகபட்சம். இதற்கு முன் 2015இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரஹானே, வாட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்திருந்ததுதான் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது. கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் ஆட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து பேட் செய்தனர். சான்ட்னர் வீசிய முதல் ஓவரிலேயே கில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்து அதிரடியாகத் தொடங்கினார், ஜடேஜா ஓவரை வெளுத்த சாய் சுதர்சன் 21 ரன்கள் சேர்த்து சுழற்பந்துவீச்சாளர்களை மிரட்டினார். சுதர்சன் 32 பந்துகளில் அரை சதத்தையும், கில் 25 பந்துகளில் அரை சதத்தையும் நிறைவு செய்தனர்.   ராக்கெட் வேகத்தில் ரன்ரேட் பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளே ஓவரில் குஜராத் அணி, விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தது. ஆனால் குஜராத் அணி ஸ்கோரையும், ரன்ரேட்டையும் உயர்த்தியது 7 முதல் 15வது ஓவர்களுக்கு இடையேதான். இந்த 8 ஓவர்களில் மட்டும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். குறிப்பாக 9 முதல் 14 ஓவர்களுக்கு இடையே மட்டும் 100 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளே முடிவில் 58 ரன்கள் இருந்த குஜராத் அணி 9.3 ஓவர்களில் 100 ரன்களையும், 12.4 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. 16.2 ஓவர்களில் 200ரன்களை குஜராத் அணி எட்டியது. சாய் சுதர்சன் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார், கில் 50 பந்துகளில் தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். இருவரையும் 18வது ஓவர் வரை சிஎஸ்கே பந்தவீச்சாளர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. தேஷ் பாண்டே வீசிய 18வது ஓவரில் ஆஃப் சைடு விலக்கி வீசப்பட்ட பந்தை விரட்டி அடிக்க முற்பட்டு சாய் சுதர்சன் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கில் 103 ரன்கள் சேர்த்தநிலையில் துபேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை மட்டும் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக சிஎஸ்கே பந்துவீச்சாளர் வீசியதால், 30 ரன்கள் மட்டும் குஜராத் அணியால் சேர்க்க முடிந்தது.   சிஎஸ்கே அணி தோற்றது ஏன்? செய்த தவறுகள் என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றதில் இருந்து சுழற்பந்துவீச்சை சரியாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றசாட்டு இருந்து வருவது நேற்றைய ஆட்டத்திலும் ஒரு விமர்சனமாக வர்ணனையாளர்களால் வைக்கப்பட்டது. புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா இரு அணிகளுமே சுழற்பந்துவீச்சை சிறப்பாகப் பயன்படுத்தி அந்த இடத்தை அடைந்தவை. ஆனால் சிஎஸ்கே அணியில் சான்ட்னர், ஜடேஜா, மொயின் அலி, ரவீந்திரா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. மொயீன் அலி சர்வதேச அளவில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியவர், டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய நீண்ட அனுபவமுடையவர். ஆனால், இரு இடதுகை பேட்டர்கள் களத்தை 15 ஓவர்களுக்கு மேலாக ஆக்கிரமித்து விளையாடும்போது, அவர்களை வீழ்த்த ஆஃப் ஸ்பின்னரான மொயீன் அலியை ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து வர்ணனையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். ஜடேஜா, சான்ட்னர் ஓவர்களில் ரன்கள் அதிகமாகச் சென்றவுடன் இருவருக்கும் 2 ஓவர்களோடு கெய்க்வாட் நிறுத்தினார், ஆனால் இருவருமே விக்கெட் டேக்கர்கள் என்பதை மறந்துவிட்டு, டேரல் மிட்ஷெலுக்கு ஓவரை வழங்கினார். ஆனால், மிட்ஷெல் 4 ஓவர்கள் வீசி 52 ரன்கள் கொடுத்தார். சிமர்ஜித் சிங் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களை வாரி வழங்கினார். இவர்கள் இருவர் மட்டுமே 112 ரன்களை வழங்கினர்.   'ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டோம்' பட மூலாதாரம்,SPORTZPICS தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில், “எங்களின் ஃபீல்டிங் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை, 10 முதல் 15 ரன்கள் கூடுதலாகக் கொடுத்துவிட்டோம். மற்ற வகையில் சிறப்பாகவே செயல்பட்டோம். அதிலும் மிட்ஷெல், மொயீன் அலி ஆட்டம் அற்புதமாக இருந்தது. எங்களின் அடுத்த ஆட்டம் சென்னையில் நடக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற வலிமையான அணிக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்,” எனத் தெரிவித்தார். அதேபோல பவர்ப்ளேவில் ரன்களை சேர்க்கவும் சிஎஸ்கே அணி தவறவிட்டது. பவர்ப்ளே ஓவர்களுக்குள் ரஹானே(1), ரவீந்திரா(1), கெய்க்வாட்(0) என 3 முக்கிய பேட்டர்களை 10 ரன்களுக்குள் இழந்தது. குறிப்பாக கெய்க்வாட் இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராகக் களமிறங்கி சிறப்பாக பேட் செய்து வரும்போது, திடீரென ஒன்டவுனில் களமிறங்கியது ஏன் என்ற கேள்வியும் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. ரஹானே இந்த சீசன் முழுவதும் ஃபார்மில் இல்லை, இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது ஏன் எனத் தெரியவில்லை. டேரல் மிட்ஷெல்-மொயீன் அலி இருவரும் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் சிஎஸ்கே அணியின் ஆறுதலான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மொயீன் அலி 31 பந்துகளில் அரைசதத்தையும், டேரல் மிட்ஷெல் 27 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர். இருவரின் ஆட்டமும் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில் அதை மோகித் சர்மா உடைத்தார். மோகித் சர்மா பந்துவீச வராத வரைக்கும் சிஎஸ்கே ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த 3 ஆட்டங்களாக மோசமாகப் பந்துவீசிய மோகித் சர்மா நேற்று சிஎஸ்கே பேட்டர்களை மிரட்டினார். தனது பந்துவீச்சு வேரியேஷனில் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்தார். மிட்ஷெல், மொயீன் அலி, ஷிவம் துபே ஆகிய 3 பேரின் விக்கெட்டையும் தனது ஸ்லோ பால், நக்குல் பால் தந்திரத்தால் மோகித் சர்மா வீழ்த்தினார். மிட்ஷெல் 63 ரன்களிலும், மொயீன்ன் அலி 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவர் சேர்த்த ஸ்கோர்தான் சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாகும். https://www.bbc.com/tamil/articles/c6py9l14x8no
    • Published By: DIGITAL DESK 3 11 MAY, 2024 | 09:57 AM   குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/183212
    • இல்லையண்ணை. செய்தியின்படி சந்தையில் வியாபாரம் செய்யும்போது வெற்றிலை போடக்கூடாது எனப்புரிந்து கொண்டேன். வெற்றிலை போட்டபின் சுற்றாடலில் தானே புளிச்சென துப்புவார்கள். அது அங்கு வருபவர்களால் உழக்கப்படலாம் தானே?!
    • யாழ்ப்பாணம் சிங்கப்பூருக்கு கிட்டவா வந்திட்டுது.வெய்யில் மட்டும்தான் பிரச்சனையா இருக்கு
    • நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன். உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை. சாப்பாடு முக்கியம் தலைவரே. சாப்பாடு எப்படி இருந்தது?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.