Jump to content

நாய்கள் நடத்திய கண்டனப் பேரணி கொல்லாதே... கொல்லாதே...!


Recommended Posts

நாய்கள் நடத்திய கண்டனப் பேரணி கொல்லாதே... கொல்லாதே...!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக நாய்களைச் சுட்டுப்போடும் ஒருவகை முறைமை நடந்தவண்ணம் உள்ளன.

இது தொடர்பில் எல்லா நாய்களும் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினால் நிலைமை எப்படியிருக்கும். இப்படி யொரு கற்பனை செய்தோம்.

அடேங்கப்பா! இதோ நாய்களின் கண்டன ஆர்ப்பாட்டம்.

கொல்லாதே... கொல்லாதே... எங்கள் இனத்தைக்கொல்லாதே...

கைது செய்... கைது செய்... குற்றவாளியைக் கைது செய்.

அமுல்படுத்து... அமுல்படுத்து... மகிந்த சிந்தனையை அமுல்படுத்து

இவ்வாறு கோஷ­மிட்டவாறு நாய்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டப் பேரணியில் வளர்ப்பு நாய்கள், தெரு நாய்கள், வீட்டு நாய்கள், பாதுகாப்புக் காவலரணில் வளரும் நாய்கள், மீன் சந்தைகளில் ஆட்சிபுரியும் நாய்கள் என எல்லா நாய்களும் கலந்து கொண்டன. பேரணி யாழ்ப்பாணம் முற்ற வெளியை அண்மித்தது.

முற்றவெளியில் எல்லா நாய்களும் குந்தியிருக்க, நாய்க்கூட்டத் தலைவன் ஜிம்மி மேடையேறிப்பேசினான்.

என் இனமே நன்றிமறவா நம் இனமே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

முதலில் நன்றி மறந்த மனிதர்களின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியாகிய எங்கள் சோதர நாய்களுக்காக ஒரு நிமிட அஞ்சலி செலுத்துவோம்... எல்லா நாய்களும் எழுந்து கண்ணீர் சொரிந்து ஊளையிட்டு அஞ்சலி செலுத்துகின்றன. அஞ்சலியை நிறைவு செய்வோம்.

நன்றி என்றால் அது நம் இனத்திற்கே உரியது என்ற பாரம்பரியத்தை இன்று வரை கட்டிக்காக்கும் என் இனமே! யாழ்ப்பாணத்தில் இன்று எங்களுக்கு ஏற்பட்ட கதியை நினைக்கும் போது நெஞ்சம் வெடிக்கும் போல் இருக்கிறது.

எங்களை ஏன்தான் சுட்டுக் கொல்கிறார்கள் என்பது எமக்குத் தெரியவில்லை. எந்தவித காரணகாரியமும் இன்றி எங்களைச் சுட்டுச் சுடலையிலும், வீட்டுக்கிணற்றிலும் வேட்பாளர்களின் வீட்டு வாசல்களிலும் வீசிவிட்டு செல்கிறார்கள்.

அவர்கள் தங்களின் எதிர்ப்பை காட்டுவதற்காக இப்படிச் செய்வதாகக் கூறுகிறார்கள்.

எங்கள் உயிர்பற்றி அவர்கள் இம்மியும் சிந்திப் பதாக இல்லை.

தத்தம் பாதுகாப்பிற்கும், பொதிகளை, வெடிமருந்துகளை சோதிப்பதற்கும் எங்கள் இனம் தேவைப்படும்போது நன்றி மறந்து எங்களைச் சுடுவது எவ்வகையில் நியாயமாகும்.

எனவே உலகில் உள்ள ஜீவகாருண்ய அமைப்புகளே! யாழ்ப்பாணத்தில் எங்கள் மீது நடத்தப்படும் வதையைக் கண்டியுங்கள். நிலைமை மோசமடைந்தால், விமான நிலையங்களிலும் மற்றும் சோதனை நடவடிக்கைகளிலும் மோப்பம் பிடிக்கும் பணிகளைப் பகிஷ்கரியுங்கள்.

அப்போது தான் எங்கள் இனத்தின் சிறப்பை ஆறறிவு படைத்த அறிவிலிகள் உணர்வார்கள்.

இவ்வாறு நாய்க்கூட்டத் தலைவன் உரையாற்றி முடிக்க, நன்றி உரை தொடர்ந்தது.

என் அன்புக்குரிய நாய் இனமே இதுவரை மனித இனத்திற்காக வால் ஆட்டி... வால் ஆட்டி நன்றி தெரிவித்த நாம் எப்போதாவது எங்களுக்காக எங்கள் உறவுகளைக் கண்டபோது நன்றி பகர்ந்தோமோ? வால் ஆட்டினோமோ? இல்லவே இல்லை.

ஆகையால் எல்லோரும் எழுந்து வால் ஆட்டி எங்களுக்கு நாங்களே நன்றி கூறிக்கொள்வோம். கூடவே ஒற்றுமைப்படுவோம் என்று உறுதிமொழி கூறிக்கொள்வோம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20690

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்" என்பார்கள். ஆனால், நீங்கள் ஒரு படத்தையும் போட்டு, அந்தப் படம் என்ன சொல்கிறது என்று இன்னும் சில நூறு சொற்களையும் மெனக்கெட்டு எழுத வேண்டிய துரதிர்ஷ்டம். சில யாழ் வாசகர்களின் புரிதல் அவ்வளவு தான், விளக்க முற்பட்டால் விளக்குபவனுக்கு மூளை அழற்சி வந்து விடும்😂!
    • இதே போன்ற கருத்து பொருளாதாரச் சரிவின் போதும் வெளிப்பட்டது. "வடக்கு, குறிப்பாக வன்னியில், தமிழர்கள் பெரிதாகப் பாதிக்கப் படவில்லை" என்று எழுதினார்கள். கிராமப் புற சிங்கள மக்களும் நிலத்தில் இருந்து உணவைப் பெற்றுக் கொண்டது (living off the land) போல வன்னியில், யாழ் குடா சில பகுதிகளில் நிகழ்ந்தது. ஆனால் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பது மூன்று வேளை சாப்பாடு மட்டுமா? கடந்த 3 வருடங்களில் வடக்கில் இருந்து அரச வேலை இருப்போர் கூட வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் நிலை எப்படி ஏற்பட்டதெனக் கருதுகிறீர்கள்? சாப்பாடு கிடைக்காமலா அல்லது குடும்பத்தைத் தரமாக வைத்துப் பாதுகாக்க வழி தேடியா? யாழில், 90/2000 களின் பொருளாதார தடையினுள் மண்ணெண்ணை லாம்பில் படித்து, பரீட்சை எழுதியோர் பலர் இங்கே இருக்கின்றனர். அது வேறு காலம். இன்று, மின்சாரம் சில மணி நேரங்கள் இல்லாமல் போனால் அவதிப் படும் நிலையில் வடக்கு மக்கள் இருக்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? காலம் மாறி விட்டது, மக்கள் தரமான வாழ்க்கை என்று நிர்ணயிக்கும் தர எல்லை உயர்ந்து விட்டது. நீங்களோ இன்னும் 90 களிலேயே உறைந்து போய் நிற்கிறீர்கள்😂. அந்த உறை நிலையில் இருந்த படியே, தாயக மக்கள் சில அடிப்படை வசதிகளை இழந்தாலும், "சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல" வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். விரும்பியோ, விரும்பாமலோ இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரமும், அரசியல் சமூக நிலையும் சீரழிந்தால் பாதிக்கப் படுவர் என மிக எளிமையாகப் புரியக் கூடிய உண்மையை நான் எழுதினால், சிங்கள அரசு தமிழர்களைத் தட்டில் வைத்துத் தாங்குவதாக நான் சொல்வது போல உங்களுக்கு விளங்குகிறது! எங்கேயிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?
    • முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது 11 MAY, 2024 | 04:29 PM   முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்றைய தினம் (11) முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதியில் மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.   https://www.virakesari.lk/article/183253
    • சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை 11 MAY, 2024 | 04:38 PM   (எம்.மனோசித்ரா) சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர், மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அது ஓரிலக்கம் வரை குறைக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் தமது சேமிப்புக்கான வட்டி வீதத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் சிரேஷ்ட பிரஜைகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், சேமிப்புக் கணக்குகளைப் பேணும் சகல சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அவர்கள் கோரும் வட்டி வீதத்தை வழங்கினால் வருடத்துக்கு 80 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இதற்கு முன்னர் செலுத்திய வட்டி வீதத்துக்காக திறைசேரிக்கு 105 பில்லியன் கடன் காணப்படுகிறது. எனவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் ஆழமாக மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எவ்வாறு இவ்விடயம் தொடர்பில் தீர்மானிப்பது என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்றார்.  https://www.virakesari.lk/article/183256
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.