Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராஜபக்ச அரசு எதிர்நோக்கும் மின்சக்தி நெருக்கடி மே மாதம் நிரம்பி வழிந்த நீரை திட்டமிட்ட முறையில் பயன்படுத்த தவறிய இலங்கை அரசு தற்போது பாரிய நெருக்கடியை சந்தித்து உள்ளது. ஜே.வி.பி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இலங்கையை ஆசியாவின் மின்சக்தி நிலையமாக மாற்றுவோம் என கூறிய ராஜபக்சவின் கூற்று என்னவாயிற்று எனகேள்வி எழுப்புகின்றார். ஜ.தே.கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நுரைச்சோலை மின் நிலையத்தை ஏன் ஆரம்பித்தனர். மின்சார விநியோகம் தடைப்படாமல் சீராக நடாத்துவதற்காக தானே ஆனால் இன்று நுலைச்சோலை மின் உபகரணங்கள் தொழில் நுட்பக் கோளாறை எதிர் நோக்கி உள்ளது எனக் கூறப்படுகின்றது. சீனாவிடம் நுரைச்சோலை நிறுவனத்திற்காக பட்ட கடனுக்கு என்ன ஆயிற்று என வினவுகின்றன…

  2. இலங்கையின் கொலைக்களம் என்ற போர்க்குற்ற காணொளியினை வெளியிட்ட சனல் 4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட சனல்-4 ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். . இந்த ஆவணப்படத்தில் தோன்றிய நபர்கள் தனிப்பட்ட ரீதியில் பிரிட்டன் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியுமே தவிர, அரசினால் வழக்குத் தொடர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தனிப்பட்ட நபர்கள் வழக்குத் தொடர முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் நட்ட ஈடு அல்லது …

  3. சட்ட விரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் நுழைந்த மூன்று இலங்கையர்களை அந்நாட்டுப் பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர் என ‘பாம் பீச் டெயிலி’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. . அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த மூவரும் பஹாமாவிலிருந்து சிறிய படகு ஒன்றின் மூலமே அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். . இவர்கள் கைது செய்யப்படும் போது இலங்கைச் சாரதி அனுமதிப்பத்திரங்களை மட்டுமே தம்மிடம் வைத்திருந்தனர். நனைந்த உடையுடன் காணப்பட்ட இவர்கள் ஓரளவு ஆங்கிலம் பேசக் கூடியவர்களாக இருந்தனர் என்றும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. . கைது செய்யப்பட்ட இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்…

    • 0 replies
    • 693 views
  4. சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவரென்று 15 பேரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். . இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை; யுத்தக்குற்றவாளியாக பிரகடனம் செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரியும் நுங்கம்பாக்கத்திலுள்ள ஸ்ரீலங்கன்ஸ் எயார்லைன் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. . இந்த ஆர்ப்பாட்டத்தினை முறியடிக்க முடியாத இந்திய அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீ…

    • 0 replies
    • 760 views
  5. சில புலம்பெயர் தமிழ் சக்திகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார் – ஜனாதிபதி : 10 ஜூலை 2011 சில புலம்பெயர் தமிழ் சக்திகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் ஒரு சிலர், அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுத்து வருவதாகவும் அதனை எதிர்நோக்க தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாடு அபிவிருத்தி நோக்கி தொடர்ச்சியாக நகர்ந்து செல்லும் என அவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மை நிலைமையை அறிந்து கொள்ளாது சில தரப்பினர் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். சில புலம்பெயர்…

    • 2 replies
    • 681 views
  6. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - பிரித்தானியா: 11 ஜூலை 2011 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் நிலைகளின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை மற்றும் சட்டவிரோத படுகொலைகள் போன்றன தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாதுகாப்புச் செயலளார் லியாம் பொக்ஸ் வலியுறுத்தியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் சர்வதேச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்…

  7. இலங்கைக்கு உதவும் நாடுகளில் முதலிடத்தில் சீனா – அமெரிக்கா கவலை ! Posted by சோபிதா on 11/07/2011 in செய்தி இலங்கையின் அபிவிருத்திக்கு பல நாடுகள் உதவி செய்கின்ற போதிலும் சீனாவே முதலிடத்தில் இருப்பதாக 2011 ஏப்ரல் மாதம் வரைக்குமான அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இலங்கைக்கு உதவி செய்த நாடுகளில் சீனாவே முதலிடத்தில் இருந்தது. தற்போது நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு இவ்வருடம் எப்ரல் மாதம் வரைக்குமான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டு நிதிகளில் 55 வீதமான உதவி சீனாவிடமிருந்து கிடைத்துள்ளது. அடுத்து 30 வீதமான உதவித் தொகை ஜப்பானிடமிருந்து கிடைத்துள்ளது. இவ்வாறு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை அமெரிக்காவின் கவனத்தை ஈர்த…

  8. வவுனியா சிறைச்சாலையில் ஐந்து தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம் [Monday, 2011-07-11 10:39:15] எவ்வித விசாரணைகளுமின்றித் தாம் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வவுனியா சிறைச்சாலையைச் சேர்ந்த ஐந்து தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம் நீண்டகாலமாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் தமது விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியபோதிலும் இதுவரையில் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் எனவே தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படு…

  9. வடக்கில் சில கட்சிகள் அடக்குமுறையை பிரயோகிக்கின்றன – ஜே.வி.பி. 11 ஜூலை 2011 வடக்கில் சில பலம்பொருந்திய அரசியல் கட்சிகள் அடக்முறையை பிரயோகிப்பதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் கடமைகளுக்கு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பை சில கட்சிகள் பெற்றுக்கொள்வதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்தி;ல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட தமது கட்சி உறுப்பினர்களுக்க பாதுகாப்பு தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்தாகவும், சில கட்சிகளே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் ஜனநாயக நெறி முறைகளுக்கு புறம்பான வகையில் பிரச்சாரங…

  10. ஆஸ்பத்திரி வீதியில் நேற்றிரவு இராணுவ வாகனம் மோதி விபத்து ஆஸ்பத்திரி ஊழியர் உட்பட இருவர் காயம் news இராணுவ கன்ரர் ரக வாகனம் மோதியதால் யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர் உட்பட இருவர் படு காயமடைந்த நிலையில் சிகிச்கைக்கென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது.இந்தச் சம்பவத்தில் யாழ். கந்தர் மடத்தைச் சேர்ந்த கோ.சுரேந்திரன் (வயது59) என்பவர் தலையிலும் காலிலும் படுகாயங்களுக்குள்ளானார். நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எச்.சிவசங்கர் (வயது34) என்பவர் காலில் படுகாயமடைந்தார். இவர் யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகத்தராவார். இதேவளை, விபத்து இடம்பெற்ற இடத்தில் பொத…

  11. இலங்கைக்கு மேலும் அவகாசம் வழங்க நிபந்தனையுடன் பான் கீ மூன் இணக்கம்: 'காலவரையறையற்றதாக இருக்கக்கூடாது' [Monday, 2011-07-11 09:30:18] சர்வதேச சமூகத்தின் கவலைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இலங்கைக்கு அதிகளவு கால அவகாசத்தைக் கொடுப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இணக்கம் தெரிவித்திருக்கின்ற போதிலும் இந்த விடயம் கால வரையறையற்றதாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனைக் கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் சந்தித்து அரசியல் இணக்கப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்தை அதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களை ஐ.நா. செயலாளர் நாயகம் …

  12. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பாரிய படகு கட்டுமானத்தளம் ஒன்றைத் தாம் கண்டு பிடித்துள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொன்நகர் பிரதேசத்திலேயே இந்தத் தளம் கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். . சிறிலங்கா பொலிஸாரின் விசேட செயலணியே இவற்றைக் கண்டு பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்ட படகுக் கட்டுமானத்தளத்தில் படகுகளை வடிவமைப்பதற்கான மாதிரிகள் கொண்ட அச்சு வடிவமைப்புகளை மீட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். . இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்து தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேலும் பல தளங்களைக் கண்டுபிடிக்க கூடியதாகவிருக்கும் என்றும் சிறிலங்கா அவர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி பொன்னகர் ப…

  13. இலங்கை ஊழியப்படையின் ஆயுட்காலம் குறைவடைந்து செல்கின்றது – ஆய்வு : 11 ஜூலை 2011 நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றினால் இலங்கை ஊழியப்படையின் ஆயுட்காலம் குறைவடைந்து செல்கின்றது – ஆய்வு : இலங்கை ஊழியப்படையின் ஆயுட் காலம் குறைவடைந்து செல்வதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலானவர்கள் உரிய முறையில் தமது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மோசமான வாழ்க்கை முறைமை மற்றும் சுகாதார பழக்க வழக்கங்களினால் இலங்கை ஊழியப்படையினர் தமது ஆயுட் காலத்தை சுருக்கிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகளவானவர்கள் இவ்வாறு உயிரிழப்பதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகளை உண்டு பண்ணும் என குறிப்பிடப்படுகிறது. தொற்றாத நோய்க…

  14. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் – ரணில் 10 ஜூலை 2011 அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும், அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் அமரர் வீ.ஏ.சுகததாச அவர்களின் நினைவு தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிகப்பதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு ஆதரவளிக்க பின்நிற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net…

    • 3 replies
    • 796 views
  15. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் - ஜே.வி.பி. 10 ஜூலை 2011 அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி வலியுறுத்தியுள்ளது. தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீhமானம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசி;ல் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வலு எரிசக்தி அமைச்சு பாரிய நட்டத்தை எதிர…

  16. பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படாது? வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்படவிருந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இந்த யோசனைத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதனால் தெரிவுக்குழு யோசனைத் திட்டம் கைவிடப்படலாம ;என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டத்தை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஏகமனதாக நிராகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனால், பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிடக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வகட்சிப் பேரவை பரி…

    • 0 replies
    • 402 views
  17. சர்வதேசத்திற்கு ஸ்ரீலங்கா பதிலளிக்க வேண்டும்- இல்லையேல் எதுவும் நடக்கலாம்- பான் கீ மூன்! பிரசுரித்தவர்: NILAA July 10, 2011 சிறிலங்கா பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி அட்டவணையிலிருந்தோ அல்லது உலக அரங்கிலிருந்தோ ‘காணாமற்’(will not disappear) ) போய்விடாது என்று ஐநா செயலாளர்நாயகம் பான் கிமூன் தெரிவித்தார். ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுடனான சந்திப்பின்போது ரணில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது மூன் இவ்வாறு தெரிவித்தார் என்று சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐநா நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்று ரணில் மூனைக் கேட்டார் என்றும் அதற்கு மூன் ‘ நான் இன்னும் அது பற்றி தீர்மானிக்கவி;ல்லை’ என்றும் பட்டும…

  18. இலங்கை விவகாரம்; பாரதீய ஜனதாவுடன் கரம் கோர்க்க தயாராகும் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கெதிராக ஐ.நா.வில் தீர்மானமொன்றை பிரேரிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கான கோரிக்கையை இந்தியப் பாராளுமன்றத்தில் விடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியும் கொள்கை ரீதியாக பரம எதிரியுமான பாரதீய ஜனதாவுடன் கரங்கோர்க்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தேசியமயப்படுத்துவதற்கு இதுவே தருணமாகும். தமிழக சட்டசபையில் ஏக மனதான இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தமிழக சட்டப் பேரவை உள்ளது. மாநிலத்தில் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு இல்லை. இந்த விடயத்தை தேசிய மட்டத்திற்குக் கொண்டு செல…

    • 1 reply
    • 691 views
  19. கடற்றொழிலுக்கான தடை முற்றாக நீக்கமாம் - பசிலின் தேர்தல் பரப்புரை சிறீலங்காவின் உள்ளுராட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழர் தாயகத்தில் பல்வேறு தேர்தல் பரப்புரை உத்திகளை சிறீலங்கா அரசாங்கமும், அதன் ஆதரவுக் கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக 61 கடற்றொழிலாளர் சங்கங்களின் 1000 வரையிலான பிரதிநிதிகளை யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு நேற்று (09-07-2011) அழைத்த சிறீலங்கா அரச அதிபரின் சகோதரரும், பொருண்மிய அபிவிருத்தி அமைச்சரமான பசில் ராஜபக்ச, யாழ் குடாநாட்டில் மீன்பிடித் தடை முற்றாக நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதேபோன்ற அறிவிப்பு உத்தியை பசில் ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும் கையாண்டதுடன், திருகோணமலையில் தடை நீக்கப்படும் என ப…

  20. சிறிலங்காவுக்காக காலஅவகாசம் கோரினார் ரணில் – வெளியாகும் சந்திப்பு இரகசியங்கள் ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011 19:17 அனைத்துலக சமூகத்தின் கவலைகளுக்கு பதிலளிப்பதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கென காலவரையறையற்ற காலத்தை வழங்க முடியாது என்றும் அவர் கண்டிப்பாகக் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போருக்குப் பிந்திய சூழலில் அரசியல் தீர்வு ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், எனவே மேலதிக கால அவக…

  21. கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற வேட்பாளர் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டார் [sunday, 2011-07-10 10:15:03] கிளிநொச்சி, தட்டுவன் கொட்டிப் பகுதிக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கனகரட்ணம் விநாயககுமார் (ரஞ்சன்) படையினரால் திருப்பி அனுப்பப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. தாம் தமது ஆதரவாளர்கள் சகிதம் பிரசார நடவடிக்கைக்காகச் சென்றபோது படையினர் மறித்து அங்கு செல்ல அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர் என விநாயககுமார் தெரிவித்தார்.இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். இதேவேளை அரசசார்பு வேட்பாளர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பி…

  22. சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசகரை கொழும்பில் இருந்து திருப்பி அழைக்கிறது அமெரிக்கா [ ஞாயிற்றுக்கிழமை, 10 யூலை 2011, 11:28 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியுயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு ஜுன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப்.கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர். அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடு…

  23. முல்லைத்தீவில் பெருந்தொகையான வெடி பொருட்கள்,மோட்டர் கண்டுகள் மீட்பு [sunday, 2011-07-10 18:40:03] முல்லைத்தீவு குமழ முனை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந் தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான சி.4 ரக வெடிப்பொருட்கள், மோட்டார் குணடுகள், 53 ஆர்.பி.ஜி குண்டுகளும் கண்டிபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை பல்வேறு வகையான மேலும் 19 குண்டுகளும், 14 ஆயிரத்து 159 ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=46266&category=TamilNews&language=tamil

  24. ஆனந்தகுமாரசாமி முகாம் மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 08.07.2011 ஆம் திகதி செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி புனர்வாழ்வு முகாமில் கல்வி கற்கும் மாணவர்களில் 244 மாணவ மாணவியர்களுக்கான கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தரம் 5இல் கற்கும் 120 மாணவ மாணவியருக்கும் , தரம் 11இல் கற்கும் 82 மாணவர்களுக்கும் , தரம் 12,13இல் கற்கும் 42மாணவர்களுக்கும் அப்பியாசக்கொப்பிகள் , பேனாக்கள் , கொம்பாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 1. தரம் 5இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள் (ஒருவருக்கு) - 3 (ஆ) பேனாக்கள்(ஒருவருக்கு) – 3 2.தரம் 11இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள்(ஒருவருக்கு) – 5 (ஆ) கொம்பாஸ் பெட்டி (ஒருவருக்கு) – 1 (இ…

    • 4 replies
    • 598 views
  25. யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி : 10 ஜூலை 2011 2009ம் ஆண்டு வாக்காளர் பட்டியலையும், 2010ம் ஆண்டு வாக்காளர் பட்டியலையும் ஒப்பீடு செய்யும் போது.. யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி : யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு வாக்காளர் பட்டியலையும், 2010ம் ஆண்டு வாக்காளர் பட்டியலையும் ஒப்பீடு செய்யும் போது இந்த உண்மை வெளிப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 2009ம் ஆண்டில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 696587 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் காணப்பட்டதா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.