Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: Vishnu 17 Oct, 2025 | 08:37 PM மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள், இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித…

  2. 17 Oct, 2025 | 03:58 PM (எம்.மனோசித்ரா) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களைப் பார்வையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர். இதன் போது, பிரதி அமைச்சர் வெடிமருந்து களஞ்சிய தொகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த வளாகத்தின் தற்போதைய செயற்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்தார். சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். இதன்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக…

  3. 17 Oct, 2025 | 04:13 PM யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி, மழைக்காலம் முடிவடைந்த பின்னர் மீள பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகமொன்று இடிந்து விழுந்தது. முன்னதாக, சேதமடைந்து காணப்பட்ட அப்பகுதி மேலும் இடிந்து விழாமல், அதனைக் காப்பாற்றுவதற்காக இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அந்த இரும்புக் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றமையால், பாதுகாப்பின்றி இருந்த …

  4. 17 Oct, 2025 | 05:02 PM தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், இன்று காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அடையாளத்தை பாதுகாக்க வேலணையில்…

  5. 17 Oct, 2025 | 03:34 PM பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். “தொட்டலங்க கன்னா” என்பவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி 39.99 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் “தொட்டலங்க கன்னா” என்பவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (10…

  6. ( இணையத்தள செய்திப் பிரிவு ) இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார். இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்தது. அப்படியானால் மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு எங்கே நேரம்…

  7. Published By: Digital Desk 3 17 Oct, 2025 | 04:38 PM பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/22801…

  8. வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் நேற்று (13) மாலை இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். சுமார் 30 பேர் வரை வருகை தந்துள்ளதோடு இன்று (14) குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கின்றனர். குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளை (15) நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmgq4g68g0101o29noeyxhu2f

  9. தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு! தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்தப் பொதிகளில் மொத்தம் 670 கிலோ ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்), 156 கிலோ ஹெராயின் மற்றும் 12 கிலோ ஹாஷிஸ் ஆகியவை இருந்ததாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தப் போதைப்பொருள் தொகை, ‘உனகுருவே சாந்த’ என்று அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவ…

      • Like
    • 4 replies
    • 252 views
  10. புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது. புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சி…

  11. தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை! இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக…

  12. தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி! அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து…

  13. Published By: Vishnu 17 Oct, 2025 | 03:52 AM கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 ப…

  14. 16 Oct, 2025 | 03:32 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மெதிரிகிரிய பகுதியில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாள குழுக்களை கைது செய்வதாகவும், போதைப்பொருட்களை கைப்பற்றுவதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை. அனைத்து குற்ற…

  15. வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை! இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து. இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த சந்தர்ப்பம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சுங்க பணிப்பாளர் ஜெனரலின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 1,867 பில்லியன் ரூபாவாகும். இதனால், சுங்கத்துறை அதன் வருடாந்திர இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டும் பாதையில் செலுத்துகிறது. இதற்கு வாகன இறக்குமதி வரிகள் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும், அவை சுங்க வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1450559

  16. யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல் 16 October 2025 எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். …

  17. கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா ; 1883 பட்டதாரிகளுக்கு பட்டங்கள், 155 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் 16 Oct, 2025 | 02:07 PM ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொது பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை (15) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) மற்றும் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர் வரவேற்றனர்…

  18. மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும். அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் ஏமாந்தனர். 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நாடு வங்குரோந்தடைந்தது. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூகமயப்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் ஏமாற்று பேச்சுக்களால் நாட்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு இன்று வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று (15) மாத்தளை நகரில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம…

  19. 16 Oct, 2025 | 12:20 PM நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் அமைச்சில் (15) அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, ' மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை வருடங்கள்? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் என ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாரம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்கின்றேன். இவ்வளவு நாள…

  20. 16 Oct, 2025 | 12:31 PM நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது எனவும் தேங்கி அழுகும் மரக்கறிகளை குப்பையில் கொட்டப்படுகிறது. இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை அதிகளவு குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையி…

  21. Published By: Vishnu 16 Oct, 2025 | 04:17 AM மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மாகாணசபைத்தேர்தல்கள் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரசாங்கத்தினால் பழைய முறைமையிலேயே தேர்தல்களை நடாத்தமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'எமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எனவே பழைய முறைமையில் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான சட்டத்திருத்தத்…

  22. 16 Oct, 2025 | 04:28 PM பதுளை - கெப்பெட்டிபொல பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “கெப்பெட்டிபொல பூதயா” என்பவருடன் மேலும் 18 பேர் கெப்பெட்டிபொல பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய கெப்பெட்டிபொல பொலிஸாரால் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளழனட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊவபரனகம மெதவெல பிரதேசத்தில் வசிக்கும் “கெப்பெட்டிபொல பூதயா” என்பவர் இரத்தினபுரியில் இருந்து ஹேரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வந்து ஈசி கேஸ் மூலம் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. “கெப்பெட்டிபொல பூதயா” எ…

  23. 16 Oct, 2025 | 04:55 PM போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவின‌ரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரௌடிகள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ் நிலை காணப்படுகிறது. பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன். பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினேன். இந்த விடயங்கள் தொடர்பாக ப…

  24. 16 Oct, 2025 | 05:05 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினமான இன்றையதினம் அதிகாலை சிறுமி வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். சிறுமியை தேடிய பெற்றோர் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயது …

  25. 15 Oct, 2025 | 03:07 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் எம்மை சந்தித்து எமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை. மாறாக நாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி மற்றும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக ஐ.நாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான வலிந்து காணாமலாக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.